கோவியின் அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்புள்ள வீடு... !
பழைய நிகழ்வு ஒன்றை நினைவுக்கொண்டு வர வேண்டும்... ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, முதல்வராக இல்லாதபொழுது சிங்கை வருகை தந்தபொழுது... முன்னாள் முதல்வர் என்கிற அடிப்படையில் சிங்கை அரசாங்கம் அவருக்கு ஒரு உயர்ரக மகிழ்வுந்து வழங்கியிருந்தார்கள் சிங்கையை சுற்றிப்பார்க்க மற்றும் அலுவல் பணிகளுக்காக... அந்தபயணம் முடிந்து கிளம்புகிற தருணத்தில் அதுவரை தனக்கு வாகன ஓட்டியாக இருந்தவருக்கு சந்திரபாபு அவர்கள் சிங்கை டாலர் நோட்டை வெகுமதிப்பாக அளித்துள்ளார்... அப்போது அந்த வாகன ஓட்டி வாங்க மறுத்து சொன்னது " நான் என்னுடைய வேலையை செய்கிறேன்... அதற்க்கு உரிய ஊதியத்தை அரசாங்கம் எனக்களிக்கிறது... சிறப்பான வாழ்வியலுக்கு என்னுடைய நாடு எனக்கு எல்லா வசதிகளையும் வழங்கியிருக்கிறது, அதனால் உங்களிடம் இருந்து எந்தவிதமான வெகுமதியும் எனக்கு தேவையில்லை!" என்று சொன்னதாக சந்திரபாபு அவர்கள் ஆந்திராவில் வந்து குறிப்பிட்டுள்ளார்.
எந்தவொரு தொழிலாளியும் அல்லது உழைப்பை மூலதனமாக கொண்ட மனிதனும் தன்னுடைய உழைப்புக்கு தகுந்த ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்கிறபொழுது எந்தவொரு வெகுமதியையும் இரந்து பெறுவதை விரும்புவதில்லை என்பதை இந்த நிகழ்வு நமக்கு பாடமாக தருகிறது.
தமிழகத்தில் ஏழை புரோகிதர்களை தட்டேந்த வைப்பது அரசு தான் என்கிறவர்களுக்கு...
ஆனால்! முறையான அனுமதி (வொர்க் பர்மிட்) பெற்று... நல்ல தங்குமிட வசதிகள், மற்றும் சிறப்பான இலவச உணவு வசதிகளுடன் சிங்கையில் கோயில்களில் புரோகிதம் செய்கிற பார்ப்பனர்கள் ஏன் தட்டேந்தி தட்சணை என்கிற பெயரில் பிச்சை வாங்குகிறார்கள்....
வொர்க் பர்மிட்-ல் வருகிறவர்கள் அந்த வேலையை தவிர வேறு வேலை செய்யக்கூடாது என்பது சிங்கையில் சட்டம்! ஆனால் இந்த கோயில் புரோகிதர்கள் வெளியில் வீடுகளுக்கு சென்று பூஜைகள் செய்து வேறு சம்பாதிக்கிறார்கள்!
சிங்கை, மலேசியா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கிற இடங்களில் புரோகித பார்ப்பனர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட முடியுமா?
ஏற்கனவே மலேசிய போராட்டத்தை மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5 பற்றிய பதிவில் ஏன்? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க போன்றவை மலேசிய கோயில் இடிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பை காண்பிக்கின்ற என்று சொல்லியிருந்தேன்... அங்கே வேலைப்பார்க்கிற பார்ப்பனர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்கிற காரணமேயன்றி மலேசிய தமிழர்களின் மீதான அக்கறையல்ல!
உழைக்காமல் கடவுளின் பெயரைச்செல்லி ஏமாற்றி பிழைக்கிற புரோகிதர்களுக்கு வக்காலத்து வாங்குவதைவிட அயோக்கியதனம் வேறெதாவது உண்டா? வக்காலத்து வாங்குபவர்களின் சாதி பாசமா?
வீட்டு நிகழ்வுகளுக்கு புரோகிதர்களை அழைக்கும்பொழுது எவ்வளவு ரேட் என்று பேசி அழைத்து வந்தால் அந்த காசுக்கு மேலே வாங்குவதில்லை புரோகிதர்கள் என்று புளுகி தள்ளுகிறார்கள்...
சாமிக்கு தட்சணை வைத்தல் என்று கடைசியாக ஒரு நிகழ்வு வைத்திருப்பார்கள்... அதில் தனியாக பணம் வைக்க வேண்டும்...
இவர்களை சொல்லி எதுவும் நடக்கபோவதில்லை...
நாடு, நாடாக கூலியாய், அடிமையாய், அகதியாய் ஓடி, ஓடி உழைத்து... கோயில் கட்டி சாமிக்கு மணியடிக்க பார்ப்பானை அழைத்து, அவனை தேரில் உட்கார வைத்து தோளில் சூத்திரனாய் தூக்கி நடக்க கூமுட்டை தமிழன் இருக்கும்வரை... இவர்களுக்கு பிழைப்பு நடக்கும்! :(
ஞாயிறு, 8 ஜூன், 2008
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
13 comments:
சரவெடி அருமை.
இந்தக் கேள்விக்கெல்லாம் வாய் அடைத்துக் கொள்ளும்.
கேள்வி எல்லாம் சரிதான்... ஆனா பதில் தான் வராது....
சிங்கையில் அர்ச்சகர்கள் அவ்வாறு செய்வது தவறுதான், உங்களிடம் தீர்வு ரெடிமேடாக இருக்கிறது. சம்பந்தப்பட்ட அர்ச்சகரை பற்றி சிங்கை அரசுக்கு எழுத்தில் புகார் தந்தால் நிச்சயம் ஆக்ஷன் எடுப்பார்கள். இந்தியாவுக்கே திரும்ப அனுப்பப்படுவார்கள். சட்டத்தை மீறும் எல்லோருக்கும் இது பாடமாக இருக்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்பு பாரி, தமிழ் விசைப் பலகை ஒட்டிகள் கொண்டு வருகிறீர்களா, இது வரையில் பெறாதவர்களுக்காக? இந்த ஒட்டிகள் தாயாரிப்பில் உங்களுக்கு ஏற்பட்ட பாடுகளை(அனுபவம்?)யும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
பதிவுக்கு தொடர்பற்ற ஒரு பின்னூட்டம். மன்னிக்கவும்.
இங்கு பார்ப்பனரை குற்றம் காண்வது எங்கனம் தம்பீ!
இவர்களாக அவர்களிடம் போய் எதுவும் கேட்கவில்லை. அவர்களாக எங்கள் வீட்டுக்கு வந்து பண்ணிவிட்டுப் போ, எனழைத்து கூலி பேசி கொடுக்கும்போது, பார்ப்பனர் இங்கு எப்படி பலிகடா ஆகுவார் தம்பீ?
விரும்பியவர் அழைக்கிறார். விரும்பாவதவரை இவர் வைவதில்லை. அப்படியிருக்க இவரை மட்டும் குற்றம் காண்பது சரியா தம்பீ?
இந்து மதம் ஒரு சடங்குகள் நிறைந்த மதம். அச்சடங்குகளைச் செய்ய ஒருவன் வேண்டுமல்லவா? அவனாகவே அதை எடுத்துக் கொண்டான் என்பது சரியா. ஆதிகாலத்திலிருந்து தொடர்வதாகையால், இவர் தொடர்கிறார்; அவர் அழைக்கிறார். எப்படி தவறாகும் தம்பீ?
பார்டைம் வொர்க் பண்ணி சம்பாதிக்கிறார். யார்தான் அதைச் செய்யவில்லை. எல்லாரும் அப்படிக் கிடைத்தால் விடுவரா? இவருக்கு தெரிந்ததை வைத்து இவர் பார்டைம் பண்ணுகிறார். அவருக்குத் தெரிந்ததை வைத்து அவர் பண்ணுவார். இரண்டும் தற்செயல்களே. இவரை மட்டும் குறை சொல்வது எங்கனம் சரியாகும் தம்பீ?
அன்பு முகவை மைந்தன்!
தமிழ்99 ஒட்டிகள் கொண்டு வருகிறேன்!
///உழைக்காமல் கடவுளின் பெயரைச்செல்லி ஏமாற்றி பிழைக்கிற புரோகிதர்களுக்கு வக்காலத்து வாங்குவதைவிட அயோக்கியதனம் வேறெதாவது உண்டா?///
உண்டே!, தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது.
//
///உழைக்காமல் கடவுளின் பெயரைச்செல்லி ஏமாற்றி பிழைக்கிற புரோகிதர்களுக்கு வக்காலத்து வாங்குவதைவிட அயோக்கியதனம் வேறெதாவது உண்டா?///
உண்டே!, தாழ்த்தப்பட்டவர்களுக்கு நீலிக்கண்ணீர் வடிப்பது.
//
மோகன் அண்ணே! எப்படியண்ணே!
//ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க போன்றவை மலேசிய கோயில் இடிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பை காண்பிக்கின்ற என்று சொல்லியிருந்தேன்... அங்கே வேலைப்பார்க்கிற பார்ப்பனர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்கிற காரணமேயன்றி மலேசிய தமிழர்களின் மீதான அக்கறையல்ல!
//
என்ன ஒரு சேணக் குதிரைப் பார்வை !
உங்கள் வாதப் படி மலேசிய சிங்கை கோவில்கள் பிராமனர்களின் வருமானத்திற்கு மட்டுமே உள்ளன.பின் ஏன் மலேசியாவில் இருக்கும் இந்தியர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தினார்கள்?
ஏன தேர்தலில் மலேசிய அரசில் மாற்றம் வந்தது?
ஒருவேளை அவர்கள் அனைவரும் பார்ப்பனர்/பாஜக வினராக இருந்ததாலா?
நாயை எங்கே அடித்தாலும் அது காலைத் தான் நொண்டும் என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது !
//
என்ன ஒரு சேணக் குதிரைப் பார்வை !
உங்கள் வாதப் படி மலேசிய சிங்கை கோவில்கள் பிராமனர்களின் வருமானத்திற்கு மட்டுமே உள்ளன.பின் ஏன் மலேசியாவில் இருக்கும் இந்தியர்கள் கொந்தளித்து போராட்டம் நடத்தினார்கள்?
ஏன தேர்தலில் மலேசிய அரசில் மாற்றம் வந்தது?
ஒருவேளை அவர்கள் அனைவரும் பார்ப்பனர்/பாஜக வினராக இருந்ததாலா?
நாயை எங்கே அடித்தாலும் அது காலைத் தான் நொண்டும் என்ற சொலவடைதான் நினைவுக்கு வருகிறது !
//
வாருங்கள் வாசிப்பவன்!
மலேசியாவை பற்றிய பதிவிலேயே விளக்கங்கள் தந்திருக்கிறேன்!
மலேசிய தமிழர்களின் மிக முக்கிய பிரச்சினை கல்வி, வேலைவாய்ப்பு ஆனால் ஹிண்ட்ராப் முன்னெடுத்துச்சென்ற பிரச்சினையோ கோயில்கள் இடித்தது!
இங்கே தான் மலேசிய தமிழர்களின் அறியாமையை பார்ப்பனர்களும், அதன் தலைமைகளும் பயன்படுத்திக்கொண்டன!
மலேசிய அரசாங்கத்திற்க்கு எதிராக கோபத்துடன் இருந்த மலேசிய தமிழர்களின் உணர்வலைகளை பயன்படுத்தி பார்ப்பனர்கள் மீண்டும் கோயில்களை எழுப்பிக்கொண்டனர்.
அரசாங்கம் கோயில் கட்டுவதற்க்கும், இடிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் அமைப்பதற்க்கும் அனுமதி வழங்கிவிட்டது!
ஆனால் மலேசிய தமிழர்களின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு பக்தி என்கிற போர்வையில் மறக்கடிக்கப்பட்டிருக்கிறது!
உங்களுடைய பிரச்சினை பார்பனர்கள் இன்னும் உலகில்
இருப்பதுதான்.வேறொன்றுமில்லை.
ஆனால் இந்தப் பிரச்சினை தீரவே தீராது.ஏனெனில் பார்ப்பனர்களில் 1000த்தில் ஒருவர் கூட புரோகிதர்/அர்ச்சகர் கிடையாது.
பெரும்பாலோர் மத்திய தர வர்க்க
வெள்ளைக் காலர் ஊழியர்கள்.ஆகையால் அனைத்து
புரோகித/அர்ச்சக வேலைகளை
பிற சாதியினர் எடுத்துக் கொண்டாலும்
பார்பனர்கள் அழிந்து விட மாட்டார்கள்.
சின்மயா மிஷன் சார்பில் புரோகித
வேலைக்கு பயிற்சி தருகிறார்கள்.
அறிவித்திருக்கிறார்கள்.இந்து ஆண்களுக்கான பயிற்சி.நீங்களும்
கோவி.கண்ணனும் இதில் சேர்ந்து
விரைவில் கோடிக்கணக்கில்
சம்பாதிக்க வாழ்த்துகிறேன்.
//கோவி.கண்ணனும் இதில் சேர்ந்து
விரைவில் கோடிக்கணக்கில்
சம்பாதிக்க வாழ்த்துகிறேன்.//
பிச்சை எடுப்பதில் விருப்பம் இல்லை.
:)
//கோவி.கண்ணனும் இதில் சேர்ந்து
விரைவில் கோடிக்கணக்கில்
சம்பாதிக்க வாழ்த்துகிறேன்.//
பிச்சை எடுப்பதில் விருப்பம் இல்லை.
:)
//
பிச்சையும் எடுக்க மாட்டீங்க,ஆனா பிச்சைக்காரனைப் பார்த்து இப்பிடி சம்பாதிக்கிரான்னு ஏன் அடிச்சுக்கணும்?????
கருத்துரையிடுக