புதன், 4 ஜூன், 2008

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (மனிதர்களை கூறுக்கட்டுதல்)

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (முகமிலிக்கு மட்டுமல்ல...)
மனிதர்களை கூறுக்கட்டுதல் அல்லது வகைப்படுத்துதல் என்பது ஆரிய இனத்தின் அடிநாதமாக இருக்கிறது! அதுவே அவர்களின் தத்துவமாக இருக்கிறது! ஆரம்பத்தில் ஆரிய இனத்தின் தத்துவமாக... பின்னர் வைணவ தத்துவமாக.... விடுதலை போராட்ட காலத்திற்க்கு பிறகு இந்துத்துவ தத்துவமாக மாறி நிற்கிற மனித வகைப்படுத்துதல் தத்துவம்!

அப்படியென்ன வகைப்படுத்துதல் தத்துவம் என்கிறீர்களா? இன்றைய பிறப்பினடிப்படையிலான சாதி முறையின் அடிதளமாகயிருக்கிற நான்கு வகையான மனிதர்கள்! அதாங்க வர்ணம்! அதாங்க மனுதர்மம்! இன்னும் ஏகப்பட்ட வார்த்தைகளில் விளிக்கப்படுகிற இந்த கூறுக்கட்டுதலை எதிர்ப்பதே நமது பார்ப்பானீய எதிர்ப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!

பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் வேதங்கள் தொடங்கி, மனு நூல்,கீதை ஈறாக... உள்ளூர் குச்சுப்புடி பார்ப்பான் எழுதும் நூல் வரை இந்த நான்கு வர்ணத்தை பற்றி பேசுகிறது!

மனு முதலாக... ஆதி சங்கரர் தொடங்கி, இராமகிருஷ்ணர், விவேகானந்தர் உட்பட... இன்றைய கொலைகார கேடி சங்கராச்சாரியார் வரையும்...
அதிகார அத்வானி, குருதி குடிக்கும் மோ(கே)டி, இணையத்தில் சில்லறை தேத்தும் மாமாக்கள் உள்ளாக கடைக்கோடி சவண்டி பார்ப்பான் வரைக்கும் இந்த நான்கு வர்ணத்தை பற்றிய விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்!

பிறப்பினடிப்படையில், தொழிலின் அடிப்படையில், குணத்தின் அடிப்படையில், செயலின் அடிப்படையில் என்று இந்த கூறுக்கட்டலை எவ்வளவு தூரம் சப்பைக்கட்டு கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் விளக்கிக்கொண்டிருக்கிறார்கள்!

இதில் இவர்களின் கேடி துறவி விவேகானந்தர் வர்ணத்துக்கு ஒன்று என்று தனி,தனியாக நூல் வேறு எழுதியிருக்கிறார்:( இவர் தனியாக புதுவிளக்கம் கொடுக்கிறார் யோகம் என்று!

ஆரிய பூமியில் பிறந்ததாக சொல்லும் பாரதி என்ன செய்கிறார் என்றால்... வர்ணத்தை நீக்க அவர் பூணூலை கழட்டவில்லை.. மற்றவர்களுக்கு பூணூல் மாட்டுகிறார்!

ஆனால் யாரும் மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதே கிடையாது!. இதை ஏன் பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்றால்... இந்த வகைப்பாட்டில் அவர்கள் மேலே இருக்கிறார்கள்... ஆகையால் அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ... அதையே வலிந்து செய்கிறார்கள்.. அதையே பிரச்சாரம் செய்கிறார்கள்...

நான் உயர்ந்தவன் என்று பூணூலை மாட்டிக்கொண்டு திரிகிறவர்களை சராசரி மனிதனாக பூணூலை கழற்றி எறிய சொன்னால் செய்ய தயராக இல்லை! ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூத்திரன் என்று சொல்லி ஒடுக்கப்பட்டவன் தன்னுடைய சாதியை சொல்லி உரிமை கோருவதால்... இவர்களுக்கு எங்கோ மிளகாய் சொருகியது போல் எரிகிறது!

மனிதர்களில் நான்கு வர்ணம் என்று கூறுக்கட்டுகிற பார்ப்பானீய தத்துவத்தை தூக்கி எறிய சொன்னால்... அய்யோ! சாதி சான்றிதழ் கொடுத்து உரிமை கேட்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!

அன்றைய சீக்கிய போராளி ! "மேல் சட்டையின் உள்ளே அணிந்த பூணூல் என்கிற ஆயுதத்துடன் இந்திய மக்களை அடக்கி ஆள நாடாளுமன்றம் வர அனுமதியிருக்கும்போது! எங்களின் மத சின்னமான குறுவாளுடன் நாடாளுமன்றம் நுழைய தடையா?" என்று முழங்கினான் அல்வா!

இந்தநாட்டில் பூணூல் அணிந்துக்கொண்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்கிற வரைக்கும்... சாதி சான்றிதழ்கள் தேவைப்படும் உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள!

8 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆரிய பூமியில் பிறந்ததாக சொல்லும் பாரதி என்ன செய்கிறார் என்றால்... வர்ணத்தை நீக்க அவர் பூணூலை கழட்டவில்லை.. மற்றவர்களுக்கு பூணூல் மாட்டுகிறார்!//

'நந்தனைப் போல் ஒரு பாப்பான் நானிலத்தில் இல்லை' என்று பாரதியா பூணூல் அணிந்திருந்தார் ?

பெயரில்லா சொன்னது…

சிறப்பாக இருக்கிறது. ஆதாரங்களுடன் தொடர்ந்து எழுதுங்கள்.

திரு

பெயரில்லா சொன்னது…

'நந்தனைப் போல் ஒரு பாப்பான் நானிலத்தில் இல்லை' என்று பாரதியா பூணூல் அணிந்திருந்தார் ?//

கோவி கண்ணன்!

முதலில் நந்தன் ஒரு பார்ப்பான் என்று ஏன் பாரதி சொல்லவேண்டும்?

நந்தன் ஒரு சிவ பக்தன். அப்பக்தர்களிடையே, உன்னத இறைத்தன்மையை அடைந்து நாயன்மாராக ஆனவன். அவனை இவர் பார்ப்பன் என்கிறார்? ஏன்?

இதைப்போல, ஒரு தலித்துக்கு பூணூல் போட்டு பார்ப்பனர் ஆக்குகிறார்.

பாரதி, ஏற்கனவே பிறப்பால், பார்ப்பனர். அதை நம்பி, பார்ப்பனனத்தன்மையானது, இறைத்தன்மையை விட உயர்ந்தது என்ற கொள்கையைக் கடைபிடித்து, இப்படி மற்றவரைத் தூக்கிவிடுகிறாராம்!

ஜாதிகளை நம்பிய்வர் மட்டுமல்ல. எது உயர்ந்தது அதில் என்று அசையா நம்பிக்கை கொண்டவர்தான் இந்த பாரதி!

இதற்கு உங்கள் விளக்கத்தை உங்கள் பிலாக்கிலோ அல்லது இங்கேயோ போட்டால் நலம்.

பெயரில்லா சொன்னது…

டேய்...நீங்கலேலாம் திருந்தவே இல்லையா டா ???

அதுக்குள்ள என் உடன்புல பூணுல் நெளியுது னு அரம்பிசிடதீங்க பா !!!

செயேற வேலையே ஒழுங்ககா செஞ்சாலே தானவே உயர்திடலம் டா !

- சுப்பு

பெயரில்லா சொன்னது…

விவேகானந்தர் எழுதியது நால்வகை யோகம் பற்றி.அவர் என்றும் பிறப்பின் அடிப்படையில் உயர்வு-தாழ்வு செய்வதை ஆதரிக்கவில்லை.
கடுமையாக எதிர்த்தார்.அவர் உருவாக்கிய ராமகிருஷ்ண மடத்தில்
யாரும் சேரலாம், துறவியாகலாம்.
பெண் துறவிகளும் உண்டு. மூடனே
முதலில் விவேகானந்தர் என்ன
எழுதினார், என்ன செய்தார் என்று
படி. பெயரைத் தெரிந்து கொண்டு திட்டும் அறிவிலியே உனக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் என்ற
மகான் என்ன செய்தார், எப்படி வாழ்ந்தார் என்று தெரியும்.பார்ப்பானைத் திட்டி
எழுதும் நேரத்தில் உருப்படியாக
படி.

தேவன் சொன்னது…

சாதீயவாத பாகுபாட்டை உயர்த்திப் பிடிக்கின்ற இயல்பு எங்கே குடியிருக்கிறது? பிராமணர்களிடம் மட்டும்தானா?
இதை குறுகிய மனம் படைத்தவர்களிடம் இருக்கக் கூடிய பொதுவான வியாதிகளில் ஒன்று என்றுதான் சொல்லப்படலாம்.
பொருளாதாரத்தின் பலம் ஒன்றுதான் இதை அத்திவாரத்துடன் நொருக்கக் கூடிய சக்தி!
நான் ஒன்றும் சோ போன்ற நரிகளை ஆதரிக்கின்றேன் என்று கருத வேண்டாம், இவர்கள் போன்ற நரிகள் எல்லா வகுப்புக்குள்ளும் இருப்பது உண்மை! இது வெறும் பிழைப்புக்கு கொடி பிடிப்பதைப் போன்றதே!

பெயரில்லா சொன்னது…

Today, the violence against Dalit's are by "Caste Indu's" like devar, vanniyar, nadar, vellalar, etc and not by brahmin's. Even for reservation we can simply have 3 categories, cat-1, cat-2 and cat-3 and classify everyone into one of these categories and remvoe the caste name. But casteism is encouraged and nurtured by so called students of periyar because their real intent is suppress dalits.

tamilsangami சொன்னது…

சிறப்பாக இருக்கிறது...! www.tamilsangami.blogspot.com

Related Posts with Thumbnails