ஞாயிறு, 28 மார்ச், 2010

பதிவர், பதிவர்கள், குழு, குழுமம்... இன்னபிற...

வெள்ளிகிழமை Buzz ல்
Arasu Paari - - Public - Muted
பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதின் அரசியல் என்ன?Edit
Jamalan Jahir - வேறென்ன கும்பலாக மாறுவதுதான் அரசியலின் முதற்படி பாரி...))

ஜமாலன் ஒற்றை சொல்லில் பல விளக்கங்களை தந்தார்.

எது படைப்பு? யார் படைப்பாளி? எதற்காக கலை, இலக்கியம்? இப்படி எந்த விழிப்பும், வினவும் அற்ற நிலையில் உள்ள மக்கள் சமூகத்தில் இருந்து வருகிற பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதன் ஊடாக...

இப்போதைக்கு...
காசு இருக்கிறவன் அல்லது பதிப்பகத்தை/பதிப்பாளரை காக்காய் பிடிக்க தெரிந்த சிலர் எதையாவது எழுதி இது தான் 'எலக்கியம்' என்று.. விற்கலாம்.
நாமெல்லாம் பதிவர்கள் என்று இன்னொரு பதிவரை ஊக்கப்படுத்த வேண்டும் கும்பல் கூட்டி விற்கலாம்.

ஆனால் நாளை...

தனிமனித உளவியல் என்பது வேறு, கும்பலின் உளவியல் என்பது வேறு.

விடுதலையடைந்த தனிமனித பார்வைகள்... மாற்றப்பட்டு, கும்பலின் ஒற்றைப்பார்வையாக முன்வைக்கப்படும்.

வலைப்பூக்களின் விடுதலை தன்மையானது புறக்கணிப்பட்டு, ஒரு கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும், அதன் அதிகாரமே தமிழ் வலைப்பூக்களின் இயங்கியலை தீர்மானிக்கும் காரணியாகி விடும்.

இந்திய(பார்ப்பனி,பனியா) தேசியத்தின் ஊடகங்கள் மக்களின் அரசியலை, மக்களின் கலை, இலக்கியத்தை மறுத்தும்,நசுக்கியும் வருகின்றபொழுது... அதற்கு மாபெரும் மாற்றாக உருவாகிக்கொண்டிருக்கும் வலைப்பூக்கள்... கும்பல் அதன் அதிகார மையம் என்பது வலைப்பூக்கள் என்கிற ஊடகத்தை நசுக்கி தேசியத்தின் இன்னொரு ஊதுகுழலாக மாற்றப்படலாம்.

இங்கே கடந்து போன சில நிகழ்வுகளை புரட்டுவதன் மூலம்... கும்பலின் உளவியல் என்பது எத்தகையதாக இருக்கும் என்பதை உணரலாம்.

தமிழ்மணத்தை/வினவை புறக்கணி என்பது தனிமனித பார்வையாக/கருத்தாக இல்லாமல் கும்பலின் பார்வையாக மாற்றப்படும்.

மேப்படியான், குழு, குழுமம், அமைப்பு, அரசியல்... பற்றி எழுத வேண்டும் என்கிற நினைப்பு நீண்ட நாட்களாக இருக்கிறது. சூழல் அமைந்தால் இன்னொரு நாளில்...


நன்றி
அரசு.

6 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

தனியாக எழுதி என்ன சாதிக்கப் போகிறீர்கள், குழுவாக இணைந்தாலும் சமூகத்திற்கு பயன்படும் என்று இன்னொரு கருத்தும் வைத்திருப்பீர்களே. யாராவது குழு அரசியல் வேண்டாம் என்று எழுதினால் அப்படி எழுதுவீர்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

ஒத்த சிந்தனையாளர்கள் அல்லது ஒரு தளத்தில் இயங்குபவர்கள் குழுவாக மாறுவது பரிணாமம் தானே.

Thekkikattan|தெகா சொன்னது…

பாரி, பதிவுகளைக் கண்டு பல மாதங்களாகிவிட்டது உங்களிடமிருந்து. நலமா?

//விடுதலையடைந்த தனிமனித பார்வைகள்... மாற்றப்பட்டு, கும்பலின் ஒற்றைப்பார்வையாக முன்வைக்கப்படும்.//

இது பலத்த இழப்பு. சமரசம் செய்து கொள்ள வைக்கும் ஒரு வடிகலாகக் கூட அமைந்து விடக் கூடிய அபாயமுண்டு.

பெயரில்லா சொன்னது…

பாரி, பதிவுகளைக் கண்டு பல மாதங்களாகிவிட்டது உங்களிடமிருந்து. நலமா?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

கோவி,
குழு(team) என்பது ஏதாவது ஒரு வேலைத்திட்டத்தில் இணைவது. பதிவர்களாக இருந்துக்கொண்டே
சென்னை பதிவர் பட்டறை, தமிழ்99 குழுமம், சற்றுமுன் அப்புறம் தமிழ்மணம் கூட குழு முயற்சி தான்.

//ஒத்த சிந்தனையாளர்கள் அல்லது ஒரு தளத்தில் இயங்குபவர்கள் குழுவாக மாறுவது பரிணாமம் தானே.//
சிந்தனையாளன்... சிலவற்றை மக்களிடம் கடத்திவிட்டு கடந்து போயிட்டிருப்பன். சிந்தனையாளர்கள் குழுவாக இயங்கியதாக எனக்கு தெரிந்து இல்லை. ஏதேனும் குறிப்புகள் இருந்தால் கொடுங்கள் அறிந்துக்கொள்கிறேன்.

TBCD சொன்னது…

முந்தைய குழு முயற்சிகளை மறைத்தோ/மறந்தோ முதன் முதலில் என்று ஆரம்பிப்பதுக் குறித்து உங்கள் பார்வை என்ன..?

இந்த குழுமம், சங்கம் குறித்து ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பார்வை,ஆசை, கோணம் இருக்கலாம்.

சங்கத்தின் உறுப்பினர்கள் வெறும் பதிவர்களை இணைக்கும் புள்ளியாகவும், அதை முன்னெடுப்பவர்கள் இன்ன பிற வசதிகளுக்காகவும் ஆசைப்படலாம்.

இதுக்குறித்தும் எழுதுங்க ஐயா !

Related Posts with Thumbnails