ஞாயிறு, 30 டிசம்பர், 2007
எல்லோரும் இன்புற்றிருக்க...! (புத்தாண்டு வாழ்த்துக்கள்)
இது மகிழ்ச்சி, இது இன்பம் என்று கற்பிதம் செய்யப்பட்டவைகளுடனான சங்கமத்தில் சஞ்சரித்துக்கிடக்கிறது உலகம்!
ஆல்கஹால் திரவம் நிரம்பிய குவளைகளில் மிதக்கும் நீர்கட்டிகளை பார்த்து நீந்தி மகிழ்கிறது!
இரவு விடுதிகளின் மின்னும் விளக்கொளியில் மங்கையின் இடையில் கைக்கோர்த்து களைக்க நடனமாடி மகிழ்கிறது!
ஆண்டு இறுதியின் ஊக்கத்தொகையில் காதலனுக்கோ/காதலிக்கோ அன்பளிப்புடன் களிக்கிறது!
வானில் வெடித்து சிதறும் கந்தக தூள்களை கண்டு கண்கொள்ளாக்காட்சியென களிக்கிறது மக்கள் கூட்டம்!
விந்துக்கள் கழிக்கப்பட்டு, யோனிகள் நிரம்பி வழிகிறது விடுதிகளில்!
சிற்றின்பமோ! பேரின்பமோ! எங்கும் மகிழ்ச்சி என்று கற்பிதம் செய்யப்படுகிறது!
மத்தாப்புகள் வெடித்து சிதறுவதைக்கண்டு புன்னகைக்கும் மழலைகளை கண்டு மகிழ்வதா!
தாயின் காய்ந்த முலைகளை சூப்பி, சூப்பி கருகி போன மொட்டுகளை கண்டு கண்ணீர் வடிப்பதா!
கொழு,கொழு வென்று வளர வேண்டும் என்று ஊட்டி வளர்க்கப்படும் மழலைகளுக்கு மத்தியில்!
உண்ண உணவின்றி ஆண்டுக்கு 1.1 கோடி என்று மடிந்துப்போகும் மழலைகளை எண்ணி வேதனைப்படுவதா!
புத்தாண்டு விடுமுறை இனிப்புகளை வழங்கி மகிழ்ந்துக்கிடக்கிறோமே!
காய்ச்சிய இரும்பை சம்மட்டிக்கொண்டடிக்கும் என் சகோதரனுக்கு விடுமுறையில்லையே!
இடுப்பில் தூளியில் குழந்தை தூங்க தலையில் செங்கலை சுமக்கும் என் சகோதரிக்கு வீட்டில் உலை கொதிக்க வேண்டுமே!
எந்த நொடியில் உனக்கு வாழ்த்துச்சொல்ல வேண்டும் என்று அன்புக்கட்டளையிட்டயோ!
அந்த நொடியில் மனிதன் போட்ட நாடு என்ற எல்லைக்கோட்டில் தூப்பாக்கிகளும்,பீரங்கிகளும் பேசலாம்!
சிலர் மரணித்தும் போகலாம்!
புலியின் வேட்டையில் மானுக்கு மகிழ்ச்சி இருக்க வாய்ப்பேயில்லை!
புலியின் வேட்டையில் புலியே இறந்ததாக செய்தியில்லை!
மனிதனின் பொருள் வேட்கையில் மனிதனே வேட்டையாடப்படுவதே வேதனை!
எனக்குள் பரிணாமித்தவை உனக்கு வாழ்த்தாகயிருக்க வேண்டிய தேவையில்லை!
எல்லோரும் இன்புற்றிருக்கிறார்கள் என்று கற்பிதம் செய்துக்கொள்ள இயலவில்லை!
புத்தாண்டு வாழ்த்துக்களுடன்,
அன்புடன்,
அரசு.
வெள்ளி, 28 டிசம்பர், 2007
பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...! -2
திறமையானவர்கள், அறிவாளிகள் என்று ஓரு பிம்பத்தை கட்டமைக்க நடந்த, நடக்கிற போலித்தனத்தை பேசிய பிறகு... அவாள் அடிக்கிற தகுதி, திறமை என்கிற ஜல்லிய பத்தியும் பேசியாகணும்.
சமூக, அரசியல் பணி என்று எடுத்துக்கொள்வோம், ரொம்ப பழைய கதையெல்லாம் கிளற வேண்டியதில்லை. இருக்கிற எல்லா பார்ப்பான்க்கிட்ட பேசினாலும் அரசியல் பேசுவானுக... எவனுக்கும் திறமையில்லை என்று வாய் கிழிப்பார்கள். ஆனால் சமூக, அரசியல் போராட்டங்களில் கலந்துக்கொள்வது என்றால் பொழப்ப பார்க்கணும்! எதுக்கு வெட்டி வேலை என்று நடையை கட்டுவார்கள்!
'சோ' என்ற பார்ப்பானைப்பற்றி பார்ப்போம். நடிகராக தொழில் செய்தவர் என்பதை தவிர என்ன தகுதி, திறமை இருக்கிறது. இவர் செய்த மக்கள் பணி என்ன? இது வரை எத்தனை மக்கள் போராட்டங்களில் கலந்துக்கொண்டார்? சமூக, அரசியல் பணிகளில் இவர் செய்த தியாகம் என்ன?
நிறைய மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டு அதை தனக்கு ஏற்றவாறு வரலாற்றை திரித்து எழுதுவது என்பதை தவிர... சோ செய்த சாதனைகள் என்ன?
முன்னாள் நடிகர், அரைகுறையாக விற்கிற ஓரு பத்திரிக்கை நடத்துகிற 'சோ' எப்படி இவ்வளவு பொருளாதார பலத்துடன் வாழ்கிறார்?. இவருக்கு 'லா சாட்டிளின்' என்கிற பள்ளி எப்படி உடைமையானது.
அதே கேள்விகளை எஸ்.வி.சேகர், மைத்ரேயன் ஆகியோருக்கும் வைப்போம் இவர்கள் ஆற்றிய மக்கள் பணி என்ன? எப்படி இவர்களுக்கு எம்.எல்.ஏ பதவிகள் கிடைத்தன?
மதன், சுஜாதா போன்றவர்களும் செய்த சாதனைகள் என்ன? ஆங்கில புத்தகங்களை படிக்க வேண்டியது. நன்றாக மனப்பாடம் செய்துக்கொண்டு, அதை அப்படியே தமிழில் வாந்தி எடுக்க வேண்டியது.
தங்களுக்கு எல்லாம் தெரியும், அறிவாளிகள் என்பது மாதிரியான பிம்பங்களை கட்டமைத்து... பீடமேறி அமர்ந்துக்கொள்வது. அதிகாரத்தை கைப்பற்றிக்கொண்ட பிறகு, அதைப்பயன்படுத்தி மக்களை அறியாமையில் வைத்திருப்பது. இதையே இவர்களின் முக்கிய நோக்கம்.
தொழில்நுட்பம் பயிலும் மாணவர்களுக்கு இதை நன்றாக உணர முடியும். சில ஆசிரியர்கள் வெறும் 'DIR' கமெண்டை வைத்துக்கொண்டே மாணவர்களை ஆளுமை செய்துக்கொண்டிருப்பார்கள். வெகு சிலரே 'compiler' வகுப்பைக்கூட மிக அழகாக நடத்திவிட்டு எளிமையாக சென்றுக்கொண்டிருப்பார்கள்.
அந்த வகையில் இந்த திறமைசாலிகள் என்கிற பிம்பம் என்பது, வெற்று ஆரவார கூச்சலாக இருக்கிறது. முக்கிய வெகு மக்கள் ஊடகங்கள் பார்ப்பனர்களின் கையிலிருப்பதால், அந்த பிம்ப கட்டமைப்பும் மிக எளிதாகவேயிருக்கிறது!
சுஜாதா செய்த ஓரு கேலிக்கூத்தையும் இங்கே பகிர்ந்துக்கொள்ள வேண்டியிருக்கிறது... கணினி ஐ பற்றிய ஆங்கில புத்தகங்களை படித்துவிட்டு 1995 வாக்கில் அவர் எழுதிய நூல்களை முடிந்தால் படித்து பாருங்கள். எள் அளவுக்கூட அனுபவ அறிவும், பயிற்சியும் இன்றி ஓரு தொழில்நுட்பத்தை வெறும் ஆங்கில புத்தகங்களை படித்ததை வைத்துக்கொண்டு வியாபாரம் செய்திருப்பதை உணர முடியும்.
சுஜாதா தமிழ் கணினி உலகில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்த அயோக்கியத்தனங்கள் எடுப்படாமல் போனதற்க்கு காரணம், இலங்கை தமிழர்களும், சிங்கை,மலேசிய தமிழர்களும் இணையத்தில் வெகு வேகமாக முன்னேறியதே! இது நடக்காமல் போயிருந்தால் இன்னேரம் சுஜாதா வெற்று பிம்பக்கட்டமைப்பின் மூலம் தமிழ் கணினியின் டெக்னாலஜி குரு வாக உயர்ந்திருப்பார். இன்றைக்கும் அவருடைய 'ழ' கணினி என்பது தமிழ் லினக்ஸ்-ல் இருந்து திருடியது என்பதை ஆதாரங்களுடன் நிருப்பிக்கிறார்கள்.
தகுதி,திறமை பற்றிய கூச்சல் எழுவதற்க்கு முக்கிய காரணம், அதிகாரத்தின் மீதான பற்று!. அது பார்ப்பானீய, பனியா கும்பலின் உடைமை என்கிற பிம்பம்.
அது உடைத்தெறியப்பட வேண்டும். தேவையெழுமெனில் பார்ப்பானீய, பனியா கும்பலே துடைத்தெறியப்பட வேண்டும்!
புதன், 26 டிசம்பர், 2007
பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!
செய்தியை பகிர்ந்துக்கொண்டேன், இந்திய பார்ப்பானீய, பனியா அரசியல் அமைப்பும், அதனால் மக்களுக்கு நிகழுகிற கொடுமைகளை சொன்னேன்.
"ஆமாம்! உனக்கு வேற வேலையேயில்ல எதுக்கெடுத்தாலும் அவனுகள திட்டலைன்னா! உனக்கு பொழுது போகாது...! இதே பொழப்பா வைத்திரு..!"
"எனக்கென்ன எதுவும் அங்காளி, பங்காளி சண்டையா... அவனுகள திட்டணுமுன்னு...!, பிரச்சினையின் அடித்தளம் அவனுக... அதான் பேசுறேன்...!"
"அவனுக இயல்பா கொஞ்சம் புத்திசாலிகளாக இருக்காணுக... நல்லா பொழைக்க தெரிஞ்சியிருக்காணுக..., அவ்வளவுதான்!"
எனக்கு சுரீரென்ற கோவம் வந்தது... திட்டிவிட்டு... சில கேள்விகளை முன் வைத்தேன். பார்ப்பனர்கள்,பனியாக்கள் அறிவாளிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிற, பிம்பத்தை சுமந்துக்கொண்டிருக்கிற எல்லா மூடர்களுக்கும் உள்ளடங்கியதே... இந்த செய்தி...
கடந்த 60 ஆண்டுகளில் தங்களை அறிவாளிகள் என்று அறிவித்துக்கொண்டு இந்தியாவின் அனைத்து உயர்நிலை தொழில்நுட்ப கல்விக்கூடங்களிலும் (ஐஐடி உள்பட ..) ஆக்கிரமித்திருக்கிற இந்த பார்ப்பன, பனியாக்கள் செய்த சாதனைகள் என்ன? ஏதாவது பட்டியலிருக்கா?
மேற்கத்திய நாடுகளில் நடைபெறும் ஆய்வுகளை வாசித்துவிட்டு அதை மனப்பாடம் செய்து கட்டுரைகள் எழுதியதை தவிர, ஏதாவது ஆய்வு செயல்திட்டங்கள் நிறைவேற்றியிருக்கிறார்களா?
அப்துல்கலாம் என்கிற சாதராண கல்வி பயின்ற கடைநிலை மனிதர் தான் ஏவுகணை செயல்திட்டத்தை முன்நின்று செயல்படுத்தினார். இந்த அறிவாளி கொழுந்துகள் என்ன செய்துக்கொண்டிருந்தன, செய்துக்கொண்டிருக்கின்ற...(கலாம் அரசியல் வேறு, அதை இங்கே விமர்சிக்க வேண்டாம்.)
பட்டுக்கோட்டை எனக்கும், அந்த நண்பருக்கும் சொந்த ஊர் அங்கேயிருக்கிற எல்லோருக்கும் தெரிந்த உண்மை மக்களுக்காக சேவை செய்தவர் அஞ்சா நெஞ்சன் அழகிரி, நகரதந்தை சாமுவேலு பிள்ளை, நகர தந்தை சீனிவாசன் ஆகியோர். பட்டுக்கோட்டையில் பிறந்த சிறந்த கல்வி, கேள்விகளில் சிறந்தவர் நாவலர் நெடுஞ்செழியன் ஆனால் எந்தவிதமான மக்கள் சேவை ஆற்றாத, இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டை நகர மக்களுக்கு முகம் கூட தெரியாத, தனிப்பட்ட திறமைகளோ அற்ற... பட்டுக்கோட்டை சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் எப்படி மத்திய அமைச்சரில் இருந்து, இரண்டு முறை குடியரசு தலைவர் பதவி வரை அமர்ந்தார். (திறமையை பற்றி பேசுகிற பன்னாடைகள்... ஏன்! வெங்கட்ராமனுக்கு பதவி என்பதை கேள்விக்கேட்க வேண்டாமா?)
இந்திய அளவில் கல்விக்கு யார் சேவை செய்தது என்றுக்கேட்டால் உடனடியாக தெரிகிற தலைவர் காமராஜர், ஆனால் கல்விக்கு சேவை செய்ததாக சி.சுப்பரமணியன் என்பவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அப்படி என்ன சேவை செய்தார் தெரியுமா! "கரும்பலகை திட்டம் (Black Board Scheme)" இந்த திட்டத்தில் ஓதுக்கப்பட்ட நிதியில் 60க்கும் மேற்ப்பட்ட வெளி நாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று, அந்தநாட்டில் கல்வி எப்படியிருக்குன்னு ஆய்வு செய்தாராம். அப்புறமா இந்தியாவுக்கு வந்து அதைப்பற்றி ஓரு தலையணை அளவில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதினார். அந்தபுத்தகத்தின் பிரதிகள் எல்லா தலைமையாசிரியருக்கும் அனுப்பட்டது. ஓரு தலைமையாசிரியர் வேடிக்கையாக சொன்னது இதுல என்ன எழுதியிருக்குன்னு எவனுக்கும் புரியாது! "ஓய்வு நேரத்தில் தலைக்கு முட்டுக்கொடுக்க உதவும்!"
இப்ப தெரியுதா கல்விக்கு சேவை செய்தது காமராஜரா! சி.சுப்பரமணியமா! யாருக்கு பாரத ரத்னா? இந்திய பார்ப்பானீய அரசியலின் உண்மை முகம் கோரமாக பல்லிளிக்கவில்லை!
பெரிய அறிவாளி கொழுந்து என்று சொல்கிற இவர்கள் மருத்துவதுறையில் என்ன செய்திருக்கிறார்கள். இன்றைக்கு சென்னையில் இருக்கிற மருத்துவர்களில் ஆர்த்தோவில் சிறந்த மருத்துவர் மயில்வாகனன், முன்பு இவரது தந்தை (இவர்கள் இலங்கை தமிழர்கள் என்று தகவல்!) இருதய மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்தது மருத்துவர் செரியன். இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்...!
இந்த அறிவாளிகள் எல்லாம் கூடி அப்போலோவில் கொள்ளையடிப்பதை தவிர, மருத்துவ சாதனைகள், கண்டுப்பிடிப்புகள் என்று பட்டியல் தர முடியுமா!
நண்பர்களே! பிறப்பால் யாரும் அறிவாளிகள் கிடையாது!.
உயர்ந்தவனும் கிடையாது!
போலித்தனமான சொல்லாடல்களையும், பிம்பங்களையும் உடைத்தெறியுங்கள்!
நன்றி!
இணைய தொழில்நுட்ப அரசியல்...!
"இதெல்லாம் உனக்கு புரியாது..." என்கிற மேட்டிமை தனமான வார்த்தைகள் அல்லது "இதில் ஏதோ உள்ளே வேறொன்றிருக்கிறது..." என்கிற கட்டமைப்பு மக்களை தொழில்நுட்பத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது.
அறியாமையை விளைவித்தலில் தான் அதிகாரம்(ஆளுமை) கட்டமைக்கப்படுகிறது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதத்தில்,உபநிடத்தில் சொல்லியிருக்கிறது என்று கட்டுக்கதைகளையும், புரட்டுகளையும் பேசிக்கொண்டிருந்த குள்ளநரி கூட்டத்தை சிந்தனையாளர்களும், தந்தை பெரியாரும் கேள்விகள் எழுப்பி வேதத்தில் எதுவும் இல்லை எல்லாம் புரட்டுகளும், புனைக்கதைகளும் தான் என்பதை மக்களிடம் கொண்டுச்சேர்த்தனர். குள்ளநரிக்கூட்டம் மீண்டும் கிளம்பியது அப்படியெல்லாம் நேரிடையாக மொழிப்பெயர்த்துச்சொன்னால் விளங்காது. மறைப்பொருள் இருப்பதாக புலம்பித்திரிந்தார்கள். புதிய புனைவுகளை புலம்பித்திரியும் கூட்டம் இன்றைக்கும் இருக்கதான் செய்கிறது.
அப்படியாக இன்றைக்கு இணையத்தொழில்நுட்பங்களில் ஏதோ உள்ளிருந்து இயங்குவது போல கற்பிதம் செய்வித்தலிலும், வலைப்பதிவுகள் மிக கடினமான தொழில்நுட்பம் "அதெல்லாம் உங்களுக்கு எளிதாக விளங்காது..." என்று கட்டமைப்பதிலும்... தொழில்நுட்ப அந்நியப்படுத்துதல் தொடங்கியிருக்கிறது....
மக்களிடமிருந்து தொழில்நுட்பங்களை அந்நியப்படுத்தி தொழில்நுட்ப அதிகார மையங்களாக மாறுவது. அது வணிக நோக்கமா? அல்லது சேவை நோக்கமா? என்பதல்ல கேள்வி!
கற்றல், ஆய்வுக்குட்ப்படுத்துதல், முடிவுகளை வரிசைப்படுத்துதல், நிகழ்தகவுகளை அட்டவணைப்படுத்துதல் இப்படி அறிவியல் முறைகள் கைக்கொண்டு எதையும் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம்!
நன்றி!
வியாழன், 20 டிசம்பர், 2007
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -6
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
தமிழ் இசுலாமியர்களை பற்றிய ஓரு பார்வையை இங்கு பதிவுச்செய்ய விழைகிறேன். நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது. பன்முகத்தன்மைக்கொண்ட ஓரு பிரச்சினையை தட்டையாக அணுக முயற்சிப்போம்...
மலேசியாவில் உள்ள சிறுபான்மையினர் (இந்தியர்கள்(தமிழர்கள், பிற இனத்தவர்கள்), சீனர்கள், இலங்கை(தமிழர்கள், சிங்களர்கள்) மற்றும் பிற நாட்டவர்கள் அனைவரும் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இதை மறுப்பதற்க்கோ அல்லது அப்படியெல்லாம் இல்லை என்று படாவி மாதிரி கூச்சல் போடுவதோ வெறும் போலிதனம்.
இரண்டாம் தர சமூகமாக சீனர்கள் நடத்தப்படுவதை கண்டுக்கொண்ட சிங்கப்பூர் மற்றும் சீனா அதற்க்கான அழுத்ததை அதிகாரத்தின் வாயிலாக மலேசியாவிடம் பகிர்ந்துக்கொண்டப்போது... சில முட்டல்கள், மோதல்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது...
ஆனால் மாற்று நடவடிக்கையாக மலேசிய சீனர்கள் பலர் சிங்கையில் நிரந்தரவாசி (PR) எடுத்துக்கொண்டு சிங்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர். இதனால் சிங்கப்பூர் அரசுக்கு நிரந்தர வைப்பு நிதியில் (CPF) சில சிக்கல்கள் ஏற்ப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பிரச்சினையை சமாளிக்க நிரந்தர வைப்புநிதியை மலேசியர்கள் சிங்கையிலிருந்து எடுத்துச்செல்ல இயலாத வகையில் சட்டத்திட்டங்களை மாற்றினர், தொடர்ந்து மாற்றங்கள் வந்துக்கொண்டேயிருக்கிறது...
நான் இங்கே இதைக்குறிப்பிடுவதற்க்கு காரணம் மலேசியாவில் சிறுபான்மையினருக்கான பிரச்சினை திடீரென்று முளைக்கவில்லை கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை உணர்த்துவதற்க்காகவே!
ஓராண்டிற்க்கு முன்பு நண்பர் பசிலன் வேலை காரணமாக கோலாலம்பூரில் தங்கிவிட்டு வந்து, தமிழர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுவதை மிகுந்த வருத்ததுடன் பகிர்ந்துக்கொண்டார். அவர் தற்போது மிகுந்த அலுவலில் இருப்பதால்.. அவருடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தாமதமாகிறது.
பதிவுலகிற்க்கு வந்தவுடன் நண்பர் டிபிசிடி மலேசியாவில் இருக்கிறார்... என்றவுடன், அவருடன் உரையாடிய உடனடி நிகழ்வே மலேசிய தமிழர்களின் நிலையை பற்றியது தான். மீண்டும் ஓரு ரங்கூனோ அல்லது ஈழமோ இங்கே ஏற்ப்பட்டு விடக்கூடாது என்கிற கவலையிருந்தது. அப்போது அவர் வேடிக்கையாக சொன்ன செய்தி "யோவ்! சும்மாயிருங்கய்யா! எதையாவது சொறிந்து விட்டு புண்ணாக்கி விட்டுராதீங்க...!" அப்படின்னார்.
சரி! பிரச்சினை இருக்கிறதை புரிந்துக்கொள்கிற நீ! ஏன்டா! HINDRAF ஐ கண்டிக்கிறாய் என்று கேட்டால்! மிகத்தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்த அமைப்பின் நோக்கம் சிறுப்பான்மையினர் நலனை பாதுகாப்பதல்ல! குறிப்பாக தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்ய போவதில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகிகளை பற்றிய அனைத்து தகவல்களை சேகரித்த பிறகே, இந்த முடிவிற்க்கு வர வேண்டியதாயிற்று.
இசுலாமியர்களை பொருத்தவரை தமிழகத்திலிருக்கிற வரை அவர்களுக்கு தமிழர்கள் என்கிற இனமாக தங்களை அடையாளம் காண்பது கிடையாது. உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் எல்லாம் இவர்களின் உறவுக்காரர்கள் மாதிரி நினைத்துக்கொண்டு வறட்டுத்தனமாக இசுலாமிய நாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கிறது.
இது தமிழகத்தில் அவர்கள் இருக்கிற வரைதான். அதே இசுலாமியர்கள் சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நகரும் போது தான் தங்களுடைய இசுலாமியம் என்பது தங்களை புறக்கணிப்பிலிருந்து காப்பாற்றவில்லை என்பதை உணருகின்றனர். எந்த அரேபிய ஷேக் கும் வா! என் இசுலாமிய சகோதரா! என்று வாரிக்கொடுப்பதில்லை:( எந்த மலாய் இசுலாமியனும் வா! என் சகோதரனே! என்று வாரியணைப்பதில்லை!
தமிழ் இசுலாமியர்கள் தங்களுடைய மொழி, இனம் என்பதை தமிழகத்தை விட்டு வெளியில் வரும்போது தான் தெளிவாக உணருகின்றனர். அதனால் தான் சிங்கையிலிருக்கிற முக்கிய தமிழ் அமைப்புகள் அனைத்தும் இசுலாமியர்களால் நடத்தப்படுவதை காணலாம். இதுவே மலேசியாவிலும் தமிழ் அமைப்புகள் தமிழ் இசுலாமியர்களால் நடத்தப்படுகிறது. அமீரகத்தில் சொல்ல தேவையில்லை!
சிங்கையில் முக்கிய வணிக தளமான லிட்டில் இன்டியாவில் 60சதவிகித வணிகம் தமிழ் இசுலாமியர்களிடம் தான் உள்ளது. அதே போல் மலேசியாவில் லிட்டில் இன்டியாவில் 40 சதவிகித வணிகதளம் தமிழ் இசுலாமியர்களிடம் தான் இருக்கிறது.
மலேசியாவில் இருக்கிற தமிழ் இசுலாமியர்கள், மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை! ஆனால் தமிழக இசுலாமியர்கள் ஆதரிப்பது எனக்கு கேலிக்கூத்தாக தெரிகிறது.
மலேசிய அரசாங்கத்தின் சிறுபான்மையினர் விரோதப்போக்கால் மலேசியாவில் இருக்கிற தமிழ் இசுலாமியர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தாங்கள் புறக்கணிக்கபடுவதை தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர். ஆனால் கொஞ்சம் வலுவான வணிக தளம் இருப்பதால் சமாளிக்கின்றனர் அவ்வளவுதான்:(
சிங்கப்பூர் மலேசிய போராட்டத்தை பற்றிய கருத்து தெரிவிக்கும் போது "மலேசிய அரசாங்கம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், அதே நேரத்தில் மதம் சார்ந்த போராட்டங்களை வன்மையாக கண்டிப்பதாக!" குறிப்பிட்டது.
மலேசிய தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளை சிறுபான்மையினர் நலன் (அல்லது) மனித உரிமைகள் என்கிற தளத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுகிற நேரத்தில்... இ(ஐ)ந்து என்று நகர்வதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் அதே வேளையில் தமிழகத்தில் இருக்கிற இசுலாமியர்கள் மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ளாமல், மலேசியா ஓரு இசுலாமிய நாடு என்பதற்க்காக அந்த அரசின் செயல்பாட்டிற்க்கு ஆதரவாக செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.
செவ்வாய், 18 டிசம்பர், 2007
தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!)
வெறும் ஓலிகளையும், ஓசைகளையும் எழுப்ப தெரிந்த விலங்காக இருந்த மனிதன் பேசுவதற்க்கான முயற்சியில் ஓலிகளை வேறுப்படுத்தவும் அதற்க்கான குறியீடுகளை அட்டவணைப்படுத்தவும், ஓலிக்குறியீடுகளுக்கான வரி வடிவங்களை கண்டறிந்ததும் தான் ஓரு மொழியின் அடிப்படை நிகழ்வு. இந்த பரிணாம வளர்ச்சி ஏதோ திடீரென்று நிகழவில்லை பலநூறு ஆண்டுகள் தொடர்ந்த வளர்ச்சியை நோக்கிய போராட்டம்.
இங்கே ஓலிகளானது, அந்த மனிதன் வாழும் சூழலின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது. (உதாரணத்திற்க்கு குளிர் பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன் எழுப்பிய ஓலிகள், வெப்ப பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன் எழுப்பிய ஓலிகளிலிருந்து மாறுப்பட்டிருந்தது).
அடுத்தக்கட்டமாக சொற்களின் உருவாக்கம் - ஓவ்வொரு சொல்லும் பல மாற்றங்களுக்கு உட்ப்பட்டு தொடர்ந்து பரிணாமம் அடைகிறது. அந்த சொற்க்கள் ஓரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றை, அறிவியலை, வாழ்வியலை, நிகழ்வுகளின் குறிப்புகளை, அனுபவ அறிவியலை உள்பொதிந்து வைத்துள்ளது.
அ - உயிரின் முதல் ஓலி
ம் - மெய்யின் கடைசி ஓலி
மா - விரி (அ) பரந்த
அம்மா - உயிர், மெய்யோடு விரிவாகும் உயிர். இப்படி ஓவ்வொரு சொல்லும் தனக்குள் பொருள் கொண்டிருக்கிறது.
குறுவை - குறுகிற காலத்தில் செய்யப்படும் விவசாயம். இங்கே காலத்தின் குறிப்பு.
குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல்,பாலை - நிலத்தின் தன்மைகள் பற்றிய குறிப்பு.
இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஓரு சமூகம் பிற சமூகத்துடன் ஊடாடும் போது அந்த புதிய சமூகத்தில் தனக்கு தேவையானவற்றை வரித்துக்கொண்டு மேலும் பரிணாம வளர்ச்சி அடைகிறது.
இவ்வாறான வளர்ச்சியில் நிகழ்வுகளின் குறிப்புகள் மற்றும் அனுபவ சிதறல்கள் வழக்கு மொழிகளாகவும், பழ மொழிகளாகவும் அந்த மொழிக்கு வளம் சேர்க்கிறது.
உலகத்தின் மிகப்பெரிய நூலகமான லைப்ரரி ஆப் காங்கிரஸ், போயி உட்கார்ந்து அறிவை வளர்க்க முடியாது. அப்படி வாழ்நாளெல்லாம் படித்தாலும் தனி மனிதனால் பெறப்படுகிற அறிவு என்பது வெறும் ஏட்டுசுரைக்காய் தான்!
ஓவ்வொரு மனிதனும் பள்ளிகளில் கற்பதை விட தனது சமூகத்தில் இருந்து கற்பது அதிகம். அந்த சமூகம் தனது எதிர்கால வாரிசுகளுக்கு மொழியின் ஊடாகவே தனது நிலத்தை பற்றிய, வாழ்வியலை பற்றிய, தனது அனுபவங்களை சேகரித்து வைக்கிறது.
ஓரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அதன் தாய் மொழி வளர்ச்சியில் உள்ளடங்கி இருக்கிறது. அதைக்கொண்டே அந்த சமூகத்தின் அறிவு திறன், கற்றல் திறன், அறிவு சுற்றுப்பாதை ஓட்டத்தின் புள்ளிகள் என பலவற்றை குறிப்பிட முடியும்.
தொடரும்...
புதன், 12 டிசம்பர், 2007
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
கடந்த 50 ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மலேசிய தமிழர்கள். தற்போது போராட்டக்களத்திற்க்கு வரவேண்டிய அவசியமென்ன?
திடீரென்று இரண்டாண்டுகளுக்கு முன்பு முளைத்த HINDRAF என்கிற அமைப்பு ஏன் ஏற்ப்பட்டது? அதன் பின்னணி என்ன?
மஹாதீர் தமிழ் மொழியை நாணயத்திலிருந்து நீக்கிய போது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்? தமிழ் பள்ளிகள் மூடப்பட்டபோது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்!வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டபோது போராட்டக்களத்திற்க்கு வராத தமிழர்கள்! 'பூமி புத்தரா' என்கிற சட்டமியற்றப்பட்ட போது போராட்ட களத்திற்க்கு வராத தமிழர்கள்!
கோயில்கள் இடிக்கப்பட்ட போது ஏன் போராட ஓன்று திரள்கிறார்கள்?
ஓடுக்கப்பட்ட மலேசிய தமிழ் மக்களின் உரிமைகளுக்காக எந்த போராட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால்! கடந்த சில ஆண்டுகளில் இடிக்கப்பட்ட கோயில்களில் வேலைபார்த்த (மணி ஆட்டி தமிழர்களை சுரண்டிக்கொண்டிருந்த) பார்ப்பனர்களின் வாழ்க்கை கேள்வி குறியானதே இந்த போராட்டத்தின் வடிவம்!
இந்த பார்ப்பனர்களுக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினரும் ஓன்று கூடுகின்றனர்.
இங்கே மிகுந்த வேதனையை தருகிற நிகழ்வு, எந்த பார்ப்பானீய சாதிக்கொடுமைகளால், வர்க்க ஓடுக்கு முறையால் தமிழ் மண்ணை விட்டு மலேசிய தமிழர்கள் விரட்டப்பட்டார்களோ, அதே பார்ப்பானீய சாதிக்கொடுமையை தாங்கி பிடிக்கிற, அதன் ஊற்றுக்கண்ணாகயிருக்கிற கோயில்களை காப்பதற்க்காக மலேசிய தமிழர்கள் இன்றைக்கு வீதிக்கு வந்திருக்கிறார்கள்.
அட! தமிழர்களே! இந்த கோயிலும்(சாமியும்), அதில் உண்டுக்கொழுத்த பார்ப்பானும் தான் உனது முன்னோரை தமிழ் மண்ணை விட்டு வெளியேற காரணமாக இருந்தனர் என்பதை ஏன் உணர மறுக்கின்றீர்!
மலேசிய தமிழர்கள் தமது மொழிக்காக, கல்விக்காக, வேலைவாய்ப்பிற்காக போராட முன் வந்தால், அவர்களின் உரிமைகளை பற்றி பேசலாம்...
ஆனால் கோயில் இடிக்கப்பட்டது என்கிற பல்லவியை பாடிக்கொண்டிருக்கிற இந்த கேடுக்கெட்ட மடையர்களுக்காக தமிழகமும், அதன் தலைவர்களும் கண்டணம் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை!
ஆம்! மலேசிய தமிழர்களே! உங்களை சூத்திரனாக, இழிந்தவனாக சித்தரிக்கிற இந்து மதத்தையும், அதன் கோயில்களை காக்க நீங்கள் போராடுவது ஏற்புடைதன்று!
உங்களை சாதியில் தாழ்ந்தவனாக, தன்னை பிறப்பால் உயர்ந்தவன் என்று அறிவித்துக்கொண்டு கோயிலின் உள்ளே அமர்ந்துக்கொண்டு உங்களை சுரண்டிக்கொழுக்கும் பார்ப்பன பன்றிகளுக்காக நீங்கள போராடுவதை ஏற்றுக்கொள்ள இயலாது!
நாளை பிரச்சினை தீவிரமாகும் போது இந்த பார்ப்பனர்கள் இந்தியாவிற்க்கோ (அ) உலகத்தில் எங்காவது முட்டாள் தமிழன் கட்டி வைத்த கோயிலுக்கோ மணியாட்ட சென்று விடுவான். அவனுக்கு ஆதரவாக இந்திய பார்ப்பானீய,பனியா அரசும் இருக்கும், ஆனால் உங்களுக்காக குரல் கொடுக்க எவரும் இருக்க மாட்டார்கள்!
இன்றைக்கு இந்திய பார்ப்பானீய,பனியா அரசாங்கம் இந்த பிரச்சினையில் அக்கறை காட்டுவதே இந்த பார்ப்பன குடும்பங்களுக்காக தான்! உங்களுக்காக இல்லை என்பதை உணருங்கள்!
உங்கள் தமிழ் மொழிக்காக, உங்களின் உரிமைக்காக போராடுங்கள்.... அதை விடுத்து உங்களை அடிமையாக்கும் பார்ப்பானீயத்திற்க்கு விலை போகாதீர்கள்!
இன்னும் வரும்...!
செவ்வாய், 11 டிசம்பர், 2007
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
இந்திய அரசியல் விடுதலை என்பதும், இந்திய தேசிய கூட்டமைப்பு என்பதும் தமிழர்களின் நலனில் அக்கறையுள்ள அமைப்பாக இதுவரை இருந்ததில்லை. அது எப்போதும் பார்ப்பானீய,பனியா அரசாகவே இருந்தது, இருக்கிறது, இனிமேலும் இப்படி இருக்கும்...இந்த இடத்தில் சில வரலாற்று நிகழ்வுகளை நினைவுக்கொள்ள வேண்டியிருக்கிறது...
உகாண்டாவில் குஜராத்தின் பனியாக்கள் மாட்டிக்கொண்ட போது உடனடியாக அன்றைய அரசு விமானங்களை அனுப்பி மீட்டெடுத்தது.
Polaris என்கிற IT நிறுவனத்தின் தலைவர் (குஜராத் சேர்ந்த பார்ப்பனர்) இந்தோனிசியாவின் அரசை ஏமாற்றிய குற்றத்திற்காக கைதுச்செய்யப்பட்ட போது இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சரே அவரை விடுதலைச்செய்ய சொல்லி நேரிடையாக அங்கே சென்றார்.
ஆனால் எந்த குற்றமும் செய்யாத அப்பாவி தமிழ் மீனவர்கள் 400க்கு மேற்ப்பட்டவர்கள் இலங்கை அரசாங்கத்தால் சுட்டுக்கொல்லப்பட்டப்போதும். பல மீனவர்கள் கைதுச்செய்யப்பட்டபோதும். இந்திய அரசாங்கம் என்பது என்ன செய்துக்கொண்டிருக்கிறது என்பதை நான் விளக்க தேவையில்லை என்றே நினைக்கிறேன்!
யாழ்ப்பாணத்தில் ஓரு முருகன் கோயிலில் ஓர் பார்ப்பனர் கொல்லப்பட்டதற்க்காக குரல் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க இயக்கங்கள். அந்த நிகழ்வின் போது கண்டனம் தெரிவித்த இந்திய அரசாங்கம். ஆயிரகணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கள்ள மெளனமே சாதிப்பது ஏன்?
அட! இலங்கை யாழ்ப்பாணத்தமிழர்கள் வேண்டுமானால் உங்களுக்கு வேறு நாட்டினர். ஆனால் இலங்கையின் மலையகத்தமிழர்கள் தமிழகத்தில் இருந்து ஆங்கிலேயர்களால் கொண்டுச்செல்லப்பட்டவர்கள். அவர்களுக்கு சமீபத்தில் மிகக்கடுமையான சித்ரவதைக்குள்ளான போது ஏன் கண்டணம் தெரிவிக்கவில்லை?
இந்தியாவின் அடித்தட்டு மக்களின் வரி பணத்தில் ஐஐடி, ஐஐஎம், மருத்துவம் என்று படித்த பார்ப்பன,பனியா பன்றிகள் இந்தியாவில் வேலைப்பார்க்காமல் வெளியேறி அமெரிக்காவிலும், மேற்கத்திய நாடுகளிலும் வேலைப்பார்க்கின்றனர். அங்கே அவர்கள் வளமான வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்களுக்கு எதிர்காலத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்து என்று யோசித்து பார்ப்பானீய பன்றிகள் அமைத்த பா.ஜ.க ஆட்சியில் இரட்டை குடியுரிமை என்ற சட்டத்தை நிறைவேற்றினார்கள்.
ஆனால் ஆங்கிலேயர்களால் பல நாடுகளுக்கு கொத்தடிமைகளாக கொண்டுச்செல்லப்பட்ட தமிழர்களை பற்றி யோசிப்பது யார்?
அவர்களுக்கு பிரச்சினை எனும்போது அவர்களுக்கு இந்த அரசியல் அமைப்பு என்ன செய்யும்.
பார்ப்பானீய சாதிக்கொடுமைகளாலும், வர்க்க ஓடுக்கு முறையாலும் சொந்த மண்ணை விட்டு ஓடிய இந்த தமிழ் மக்களுக்கு யார் ஆதரவு தருவது?இவர்களைப்பற்றி இந்த அரசாங்கம் சிந்தித்திருக்கிறதா?
இந்தியாவில் படித்து, வெளிநாட்டில் வசதியாக வாழும் இந்திய பார்ப்பானீய, பனியா வம்சாவளி குடும்பத்தின் வரிசுகள் செய்கிற சாதனைகளுக்கு விழா எடுக்கும் அரசாங்கம்.
விவாசயம் மற்றும் கிராமபுறத்தொழில்கள் நசிந்து அரேபியாவிற்க்கும், சிங்கை மற்றும் மலேசியாவிற்க்கும் கூலித்தொழிலாளர்களாக ஓடுகிற தமிழர்களை பற்றி கவலைப்படுகிறதா?
சிங்கை, மலேசியா சிறைகளில் வாடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா?
பர்மாவின் கலவரத்தில் ஓடி வந்த தமிழர்கள் பலர் திரிபுரா, நாகலாந்து பகுதிகளில் தங்கி விட்டனர். அவர்களை அங்கே போராடிக்கொண்டிருக்கும் நக்சல்பாரி இயக்கங்கள் தாக்கும் போது. அவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள் தமிழீழ விடுதலை புலிகள். இந்தியாவில் எந்த அரசியல் அமைப்பும் அந்த தமிழ்மக்களை பற்றி கவலையே கொள்ளவில்லை.
எங்கள் மண்ணில் குடகு மலையிருக்கிறது என்று தண்ணீர் தர மறுக்கிற கர்நாடகத்திற்க்கு, தமிழ் மண்ணில் இருந்து எடுக்கப்படும் நெய்வேலி நிலக்கரி மின்சாரம் தான் பெங்களுருக்கு சென்றுக்கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கம் தனது அதிகாரத்தால் மின்சாரத்தை பகிர்ந்துக்கொடுக்கிறது. ஆனால் தண்ணீரை பகிர்ந்துக்கொடுக்க வக்கில்லை!அதிகாரம் தமிழகத்தில் தமிழனிடமிருந்திருந்தால் தண்ணீர் தந்தால், மின்சாரம் தருகிறோம் என்று விலை பேசலாம். அப்படியில்லையென்றால் மின்சாரத்தை விற்று அதில் வரும் பணத்தில் தண்ணீரை விலைக்கு வாங்கியிக்கலாம் (சிங்கப்பூர், சவுதி அரேபியா மாதிரி..)
வரலாற்று நிகழ்வுகளிலும், நிகழ்காலத்திலும் இந்திய தேசியம் என்பது தமிழர் நலன் என்பதை பாதுகாக்கவில்லை. அப்படி பாதுகாக்கவில்லை என்று சொல்லிவிட்டு ஓடி பதுங்கி வாழ முடியாது.
வரலாற்றில் ஓட, ஓட அடிக்கப்பட்ட இஸ்ரேலின் யூதர்கள் தான் நின்று எதிர்த்து இன்றைக்கு உலகத்தின் முக்கிய முடிவுகளை எடுக்கும் சக்தியாக மாறினார்கள். குட்ட, குட்ட குனிய முடியாது. எதிர்த்து நின்று தமிழ், தமிழரின் நலனை முன்னிறுத்தும் அரசியலை, அமைப்பை கட்டமைப்பது என்பது இன்றைய வரலாற்று தேவை. அதற்க்காக சிந்திப்போம்...
இன்னும் வரும்...
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
மலேசிய தமிழர்களை பொருத்தவரை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை. மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும் இந்த பதிவில் மலேசியாவை சேர்ந்த பதிவர் .:: மை ஃபிரண்ட் ::. மஹாதீர் ரொம்ப நல்லவர், தொலைநோக்கு பார்வை உள்ளவர் அப்படியெல்லாம் புகழ்நது தள்ளியிருக்கிறார். உண்மையில் மஹாதீரின் குள்ளநரிதனத்தை புரிந்துக்கொள்ளமளவுக்கு கூட சிந்தனையற்ற மக்களாகவே மலேசிய தமிழர்கள் உள்ளனர்.
மலேசிய தமிழர்களின் வாழ்வியல் மோசமானதற்க்கு இன்றைக்கு படாவி பதவியில் இருப்பதால் வந்த பிரச்சினையா?
மலேசிய தமிழர்களின் வாழ்வியலை சிதைக்க மஹாதீர் காலத்தில் தான் திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஓர் இனத்தின் வாழ்வியலை சிதைப்பதற்க்கு முதலில் அந்த இனத்தின் மொழியில் தான் கைவைப்பார்கள், அதை தெளிவாக செய்தவர் மஹாதீர். ஆம்! அவருடைய ஆட்சி காலத்தில் தான் மலேசிய நாணயத்தில் (Currency) இருந்து தமிழ் நீக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக அரசின் அனைத்து தளங்களிலும் தமிழை நீக்கினார் (அ) இரண்டாம் நிலைக்கு தள்ளினார்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான் அதிகமான தமிழ் பள்ளிகள் மூடு விழா கண்டது.
ஓரு புறம் தமிழை அழித்துக்கொண்டே தமிழர்களை ஆட்டுமந்தைகளாக்க சாமிவேலு என்கிற கைக்கூலியை மிக நன்றாக வளர்த்தெடுத்தார். தமிழகத்தை விஞ்சம் அளவுக்கு சாமிவேலுக்கு பிறந்தநாள் விழாக்கள் கொண்டாப்பட்டது. கட்வுட்டுகள், பேனர்கள், முழு பத்திரிக்கை விளம்பரம் என்று சாமிவேலு வளர்த்தெடுக்கப்பட்டார். புதிதாக இன்னுமொரு கைக்கூலி கிடைத்தான் அவன் தான் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன்கோட்டை என்கிற கிராமத்தை சேர்ந்த 'பொன்னுசாமி' என்பவன். அவனுக்கு பதவிகள் வழங்கப்பட்டது (சபாநாயகர் பதவி என்று நினைவு! சரியாக நினைவில் இல்லை தெரிந்தவர்கள் மறுமொழியில் தெரியப்படுத்தவும்).
மலேசியாவில் பெரும்பான்மை தமிழர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனால் இவர்களுடைய அரசியல் நிர்வாகத்தை கையெடுத்திருப்பவர்கள் பிராமணர்கள், பிள்ளைமார்கள், அகமுடையார்கள். இந்த ஆதிக்க சாதியினர் அரசு இயந்திரத்துடன் சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்க்கு துணையாக நிற்கின்றனர்.
'பூமி புத்திரா' என்கிற திட்டத்தின் தொடக்கமே மஹாதீர் தான். இப்போதைய படாவி வேறொரு வகை சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். மஹாதீர் தொடங்கி வைத்த மலாய் அல்லாத மாற்று இன ஓடுக்குமுறை செயல்திட்டத்தை இவரால் பின்னணியில் நகர்த்த இயலவில்லை. சிங்கப்பூரும், சீனாவும் சீனர்களின் மீதான ஓடுக்குமுறையை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டன.
இரண்டாவது அதிகாரம் படாவியிடம் இருந்தாலும் படாவியின் மருமகனே மலேசியாவில் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார்.
மலேசியாவில் வெளிப்படையாக மக்களாட்சி ஜனநாயகம் என்று சொன்னாலும். மலேசியாவின் ஓவ்வொரு மாநிலத்திற்க்கும் இன்றைக்கும் மன்னராட்சி தான் நடைபெறுகிறது. உதாரணத்திற்ககு ஜொகூர் பாரு என்றால் அதற்க்கு ஜொகூர் மன்னர் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கிறார். அதே போல கோலாலம்பூர் இருக்கிற சிலாங்கூர் மாநிலத்திற்க்கு சிலாங்கூர் மன்னர் இருக்கிறார். இந்த சிலாங்கூர் மன்னர் தனது பிறந்த நாளுக்கு தனக்கு வாலாட்டுகிற கைக்கூலிகளுக்கு தருகிற பட்டம் தான் 'டத்தோ' என்கிற பட்டம்.
அப்போ 'டத்தோ சாமிவேலு' எவ்வளவு தூரம் கைக்கூலியாக இந்த மன்னர்களுக்கு இருக்கிறார் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்னும் கொஞ்சம் வரும்...
திங்கள், 10 டிசம்பர், 2007
தமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா? - குசும்பனுக்கு விளக்கங்கள்!
சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான தலைப்பில் 'அரசின் இலவச அறிவிப்பால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை' என்று தினமலத்தில் ஓர் செய்தி வந்திருந்தது. அதை மீண்டும் நினைவுக்கூர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
இந்த சொல்லாடலின் பின்னணியில் உள்ள அரசியலை புரிந்துக்கொள்ளாமலேயே, நாம் இலவச அறிவிப்புகளை எதிர்த்து நிற்கிறோம்.
விவசாய தொழிலாளர்களை பார்த்துக் கேள்வி எழுப்புவதற்க்கு முன்பு ஓரு சுய பரிசோதனை செய்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
விவசாய தொழிலாளர் உழைக்காமல் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று எழுதுவதை படிக்கும் போது உடல் உழைப்பு என்பதன் பொருள் இந்த கேவலமான நாய்களுக்கு தெரியுமா என்கிற கோபம் தான் மனதில் எழுகிறது.
சேம்பேறியாய் இருப்பவன் முதலில் ஓரு தொழிலாளியாய் இருக்க முடியாது. இந்த அடிப்படை விளங்காமல் போனதற்க்கு இவர்களை என்ன செய்யலாம் என்று எனக்கு தெரியவில்லை!
விவசாயம் ஏன் நலிந்துக்கொண்டிருக்கிறது என்பதற்க்கு பல்வேறு விவாதங்கள் இணையத்திலும், ஊடகத்திலும் இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை இங்கே விவாதிப்பது நோக்கமல்ல!
இவர்கள் சொல்கிற 2 ரூபாய் அரிசி வாங்கி சாப்பிடுகிற தொழிலாளி என்ன செய்துக்கொண்டிருக்கிறான். ஓவ்வொரு கிராமத்திலும் ஓவ்வொரு வீட்டிற்க்கும் குடி பார்க்கும் தொழிலாளியாக இருக்கிறான். இவனுடைய நிலை என்னவென்று தெரியுமா இவர்களுக்கு? ஓரு குடி பார்க்கும் தொழிலாளி வருடத்தின் 365 நாட்களும் அவன், அவனுடைய மனைவி, இன்னும் வேலை பார்க்க முடிகிற மகனோ, மகளோ இருந்தால் அனைவரும் எந்த குடும்பத்திற்க்கு குடி பார்க்கிறார்களோ அவர்களுக்கு வேலை பார்க்க வேண்டும்.
ஓரு கிராமத்தில் சேரியாக இருக்கிற தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை என்று சொல்வது கிடையாது. ஆனால் அவர்களுக்கான ஊதியம் வாழ்க்கைக்கு பற்றாக்குறையாக இருப்பதால் வேறு வேலையை நாடிச்செல்ல தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான விவசாய கூலி தொழிலாளர்கள் கட்டிட கூலி தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள். (இங்கேயும் அவர்கள் உழைக்கிறார்கள் மாறாக படுத்துறங்கவில்லை).
தமிழகத்தின் ஓவ்வொரு கிராமத்திலும் இருக்கிற பல்வேறு தொழிலாளர்கள் முடிவெட்டுவோர், துணி துவைப்போர், இரும்பு காய்ச்சி அடிக்கிறவர்கள், தச்சு வேலை பார்க்கிறவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் வேலை பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.
நான் இங்கே ஓரு கேள்வி வைக்க விரும்புகிறேன்!. ஏ! படித்த கூறுக்கெட்ட முண்டங்களா ஓரு வேலைக்கான உத்தரவு கிடைத்தவுடன் வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, வருடத்தில் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு, வருடாந்திர விடுப்பு எத்தனை நாட்கள் என்று கணக்கு பார்க்கிற நீங்கள். இந்த தொழிலாளர்கள் என்றைக்காவது ஓய்வு எடுத்தால் உங்களுக்கு சேம்பேறிகளாக தெரிகிறார்களா?
லட்சக்கணக்கில் ஊதியம் வழங்குகிற மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற மனிதர்களாகிய நீங்கள் எப்பொழுதாவது உங்கள் அலுவலகத்தின் துப்புரவு பணியாளருக்கு ஊதியம் என்னவென்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
நான் ஓரு சென்னையில் சந்தித்த ஐரோப்பியன் என்ன வேலை செய்கிறான் தெரியுமா தச்சு வேலை, ஆனால் அவனால் 6 மாதம் வேலை பார்த்து விட்டு 6 மாதம் உலகத்தை சுற்றிப்பார்க்க முடியும். உலகத்தின் மற்ற நாடுகளில் எல்லாம் எந்த வேலை செய்தாலும் எல்லோருக்கும் ஓரளவுக்கு வாழ்வியலுக்கு தேவையான பொருளீட்டலுக்கு உத்திரவாதம் இருக்கிறது.
நம்முடைய சமூகத்தில் ஓரு சிலரை தவிர மற்றவர்களுக்கெல்லாம் குறிப்பாக தொழிலாளர்களுக்கு என்ன வாழ்வியல் மிச்சமிருக்கிறது!
இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகளில் இந்திய ரயில்வே கோடை விடுமுறை கால முன்பதிவு அட்டவணையை எடுத்துப்பாருங்கள் தெரியும், யார் வாழ்க்கை அனுபவிக்கிறார்கள் என்று!. என்றைக்குயாவது வாழ்க்கையில் விடுமுறை கால சுற்றுலா என்று இந்த தொழிலாளர்கள் செல்ல முடியுமா?
வார விடுமுறை, வருடாந்திர விடுமுறை என்று கொழிக்கிற நீங்கள் உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனுக்கோ, வேலைக்காரிக்கோ வார விடுமுறை (அ) வருடாந்திர விடுமுறை இத்தனை நாட்கள் என்று இதுவரை கொடுத்திருக்கிறீர்களா?
உலகத்தில் வளர்ந்த நாடுகள் என்று பட்டியலிடுகிற இடங்களில் கூட சமூகத்தில் பாதிக்கப்படுகிற குடும்பங்களுக்கு இலவசமாக உதவித்தொகை வழங்கப்படுகிறதே!என்ன இந்தியாவில் 60 சதவிகித குடும்பங்கள் இந்த பார்ப்பானீய, வர்க்க கட்டமைப்பில் பாதிக்கப்படுகிறது, அதனால் நிறைய குடும்பங்களுக்கு இலவசமாக நிறைய கொடுக்க வேண்டியிருக்கிறது.
பெங்களுரில் Internationl Technical Park, Whitefield என்று ஓரிடம் உள்ளது அந்த கட்டிடம் 80 சதவிகித வேலையை 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்த போது அதில் அது வரை இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 47 பேர், மீதம் 20 சதவிகித பணியில் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்! (கடைசி வேலைகள் தான் மிகவும் ஆபத்து நிறைந்தது).
அந்த அலுவலகத்தின் உள்ளே இன்றைக்கு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருக்கும் மென்ப்பொருள் வல்லுநர்கள் யாரும் கட்டிட தொழிலாளர்களை விட கடின உழைப்பாளிகள் கிடையாது!
ஆனால் வாழ்வியல் யாருக்கு இன்றைக்கு வளமாக இருக்கிறது?
இன்றைக்கு சிங்கப்பூரில் சராசரியாக தொழிலாளர்களின் மாத வருவாய் 1000 வெள்ளி. இங்கே ஓரு தொலைகாட்சி பெட்டி 200 வெள்ளி, ஓரு கணினி 400 வெள்ளி, ஓரு சலவை இயந்திரம் 250 வெள்ளி. ஆகையால் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை இந்த தொழிலாளர்கள் தாங்களே சம்பாதித்து வாங்கிக்கொள்ள முடியும்.
இந்தியாவில் எந்த தொழிலாளியும் 1000ரூ லிருந்து 5000ரூ வரை சம்பாதித்து எப்போது அவன் தொலைகாட்சி பெட்டி வாங்குவது. தொழிலாளர்களுடைய உழைப்பை சுரண்டிய மற்றவர்களிடமிருந்து தான் நிதியை பெற்று அரசு திரும்ப அவர்களுக்கு தொலைகாட்சி பெட்டியை இலவசமாக வழங்குகிறதே தவிர! அரசோ (அ) நீங்களோ எந்த தொழிலாளிக்கும் யாசகமாக தரவில்லை.
1999 -ம் ஆண்டு சென்னையில் ஓரு சதுர அடி கட்டிடம் கட்ட 400ரூபாய் கேட்டார்கள், ஆனால் இன்றைக்கு 800ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கேட்கிறார்கள். ஆனால் கட்டிட தொழிலாளர்களின் ஊதியம் அன்றைக்கும், இன்றைக்கும் பெரிய மாற்றம் ஏற்ப்படவில்லை!
எந்த உழைப்பாளியும் இரந்து வாழ்வதை விரும்புவதில்லை!ஆனால் அவனுடைய உழைப்பை சுரண்டுகிற, அவனுக்கு சமூக பாதுகாப்பை தராத சமூகத்திலிருந்து பிடுங்கி தான் அவனுக்கு திரும்ப தர வேண்டியிருக்கிறது!
நன்றி!
ஞாயிறு, 9 டிசம்பர், 2007
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
கூலிகளாய் ஓடி வந்த தொழிலாள தமிழர்கள் அன்றைய சிங்கப்பூர் மற்றும் மலாக்கா தீவுகளில் கடினமாக உழைத்தனர். சிங்கப்பூர் மற்றும் மலாக்கா பகுதிக்கு இலங்கையிலிருந்தும் தமிழர்கள் கூலிகளாய் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இவர்களுடைய போராட்டத்தையும், தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்க்காக செய்த தியாகங்களையும் நாம் நிச்சயம் தலைவணங்கியே ஆக வேண்டும். சிங்கப்பூரில் தமிழர்கள் அமைத்திருக்கும் அடித்தளத்தில் தான் நான், என்னை மாதிரியானவர்கள் இன்றைக்கு இங்கே வந்து வேலை பார்க்கிறோம் என்றால் அதற்க்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
(இங்கே முன்னாள் சிங்கப்பூர் பிரதமர், தற்போதைய மதியுரை அமைச்சர் திரு லீ குறிப்பிடுவது போல இலங்கை தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும், அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சிங்கப்பூர் நாட்டின் தந்தைகளில் ஓருவராக இலங்கை தமிழர் அமரர் திரு இராஜரத்தினம்(சிங்கையின் முதல் வெளியுறவுதுறை அமைச்சர்) இருக்கிறார். மலேசியா திடீரென சிங்கையை வெட்டிவிட்ட போது திரு லீ ஓரு வார காலம் மனமுடைந்து தலைமறைவாகி விட்டார். திரு இராஜரெத்தினம் அவர்களே முன்னின்று கட்சியையும், அரசியலையும் வழிநடத்தினார் என்கின்றனர். அந்தளவுக்கு இலங்கை தமிழர்கள் சிங்கையில் உழைத்திருக்கிறார்கள்).
அதே மாதிரி மலேசிய தமிழர்களும் தங்களுடைய கடுமையான உழைப்பால்,போராட்டத்தால் அரசியல் அமைப்பில் பங்குப்பெற்றுள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் சமூகக்கொடுமைகளிலும், வர்க்க கொடுமைகளிலனாலும் ஓடுக்கப்பட்ட தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியாவில் தங்களை எவ்வாறு முன்னிறுத்திக்கொள்கின்றனர்.? தங்களுடைய முன்னோர்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து தங்களை காத்துக்கொள்கின்றனரா? மலேசியவோ (அ) சிங்கப்பூரோ அது பிழைக்க வந்த இடம் நாளைக்கு பிரச்சினை என்றால் தாய் மண்ணின் உறவுகள் தான் கைக்கொடுப்பார்கள் என்பதை உணர்கின்றனரா? இப்படி கேள்விகள் இருக்கிறது.
இந்த இரண்டு நாட்டிலும் யாரும் தங்களை 'தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்வது கிடையாது 'இந்தியர்கள்' என்று பல்லிளிக்கின்றனர்.
தமிழர்கள் உழைத்து உருவாக்கிய அரசியல் பங்களிப்பை, அவர்களின் தோளின் மீது நடந்து வட இந்தியர்களும் மற்றவர்களும் எளிதாக உள்ளே புகுந்து விட்டார்கள். 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் வட இந்தியர்கள்.தேர்தலுக்கு, தேர்தல் இது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்க்கு காரணம் தமிழர்களின் ஓற்றுமையின்மையை பயன்படுத்தி வடஇந்தியர்கள் எளிதாக வணிகம் மற்றும் அரசியலில் உள்ளே புகுந்ததே!
சிங்கப்பூராக இருந்தாலும் மலேசியாவாக இருந்தாலும்... எந்த சாதீய சமூகக்கொடுமையினால் இங்கே உழைப்பாளிகளாக வந்தார்களோ... அவர்களே மீண்டும் கோயில் கட்டி இந்த சாதீய சமூகத்தின் அடிதளமான பார்ப்பனர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்ப்படுத்தி தருகின்றனர்.
ஓரு தமிழ் கூலித்தொழிலாளியின் தினசரி கூலி 14-18 வெள்ளி ஆனால் ஓரு கோயில் பார்ப்பனரின் ஊதியம் 1000 வெள்ளி அது மட்டுமல்லாமல் தங்குமிடம், கோயிலுக்கு வருவோர் தருகிற தட்சணை என்று உழைக்காமல் உண்டுக்கொழுக்கும் பன்றிக்கூட்டமான பார்ப்பனர்களை தமிழர்கள் இங்கேயும் வளர்த்துக்கொண்டுயிருக்கிறார்கள்.
யார் தங்களை அடிமைகளாய், உரிமையற்றவர்களாய் ஆக்கி சொந்த மண்ணை விட்டு வெளியேற காரணமாகயிருந்தார்களோ அவர்களுக்கு இவர்கள் இங்கே கோயில்க்கட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
தங்களுடைய சொந்த மண்ணில் வளமிருக்கிறது, தங்களுடைய வாழ்வியல் ஏன் பறிப்போனது என்பதை பற்றி சிந்திக்கவும் இல்லை! அதற்க்காவும் போராடவும் இல்லை!
இவர்களில் பலர் சிங்கப்பூர், மலேசியாவின் சுக,போக வாழ்வில் மூழ்கி விட்டார்கள். சொந்த ஊர் எதுவென்றே தெரியாது. தெரிந்துக்கொள்ளவும் விருப்பமில்லை!
என்னுடைய கேள்வியெல்லாம் தமிழகத்தின் பிரச்சினைகளில் இருந்து தங்களை தற்க்காத்துக்கொள்ள ஓடி வேறொருயிடத்தில் போராடி தங்களின் வாழ்வியல் மேம்பட்டப்பிறகு சொந்த மண்ணை திரும்பிக்கூட பார்க்காத இவர்களுக்காக, காலம், காலமாக தமிழகத்தின் சாதீய, வர்க்க சமூகத்தில் போராடிக்கொண்டிருப்பவர்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும்?
வெறும் தமிழர் என்கிற அடையாளம் போதுமா? தாய் தமிழ் மண்ணின் முன்னேற்றத்தில் இவர்களின் பங்களிப்பு என்ன? ( கோடம்பாக்கத்து நடிகைகளுக்கு இவர்கள் கொட்டிக்கொடுப்பதை தவிர! வேறென்ன கிழித்தார்கள்?)
இவர்களுக்கு பிரச்சினை என்றால் உணர்வால் ஓன்றுப்படுகிற தாய் தமிழ் மண்ணின் மக்களை. இவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள். (ஊர்க்காரன் என்று நக்கலும், நகைத்தலும் செய்கிறார்களே!)
சிங்கப்பூர் தமிழர்களை விட மலேசிய தமிழர்கள் இன்னும் ஓரு படி மேலே போய் சினிமாவையும், பக்தியையும் தவிர வேறெதுவும் பற்றி சிந்திக்க கூடயில்லையே!.
சிங்கப்பூர், மலேசிய தமிழர்களுக்கு என்னுடைய வேண்டுக்கோள் எல்லாம் ஓன்றே ஓன்று தான்... நீங்கள் எவ்வளவு வளமான வாழ்வியலை கொண்டிருந்தாலும் நாளை பிரச்சினை என்று வரும் போது உங்களுக்கான அரண் உங்களுடைய தாய் தமிழ் மண்ணே. அதுவே வரலாறு அன்றைக்கு பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போது குறைந்தபட்சம் பர்மா காலணி என்று அமைத்துக்கொடுத்தது தமிழ் மண் தான்.
இப்படியிருக்கும் பட்சத்தில் உங்களுடைய சிந்தனையில் தாய் தமிழ் மண்ணின் முன்னேற்றம் உள்ளடங்கியிருக்க வேண்டும்.
இங்கே இலங்கையின் யாழ்ப்பாண தமிழர்களுக்கு ஓர் அறிவுறுத்தலும் இருக்கிறது. தமிழினத்தின் இன்னொரு வாழ்விடமான தமிழீழம் தான் உங்களுடைய தாய் மண். நீங்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் உங்களின் தாய் மண்ணை மீட்டெடுப்பதிலும், அதன் முன்னேற்றத்திலும் மட்டுமே உங்களின் வாழ்வியல் உள்ளடங்கியிருக்கிறது. புலத்தில் சுகம் கண்டு உறங்கிப்போனால் நாளை வரலாற்றில் நாடற்ற அனாதைகளாக ஆக நேரிடலாம்!