வெள்ளி, 20 ஜூன், 2008

இராமாணயம் - செந்தழல் ரவி - முகவை மைந்தன்

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

செந்தழல் ரவி said...

இராமாயணம் முதலில் தமிழனின் புராணமா ?

தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?

அதனை வெறுத்து ஒதுக்குவதே சாலச்சிறந்தது....

முகவை மைந்தன் said...

வாங்க ரவி. இராமாயணம் தமிழரால் எழுதப் பட்ட கதை இல்லை. அவர்களுக்கு தென் பகுதி காட்டில் வாழ்ந்த குரங்குகளைத் தாண்டிச் சிந்திக்க முடியலையோ என்னவோ. ஜாம்பவான் ஒரு கரடி!

முன்பு அரசுத் துறை வண்டிகளின் ஊர்வலம் மாவட்டங்களின் அகர வரிசைப்படி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் முதலில் வந்தது. நிருபர்கள், அமைச்சர் தமிழ்குடிமகனிடம் 'உங்கள் மாவட்டம் முதலில் வரணும்னுங்கிறது தானே உங்கள் நோக்கம்?'னு கேட்டாங்க. அமைச்சர் 'எனக்கு தமிழ் முதலில் வரணும், அய்யா' என்றார். இந்த மறுமொழி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

நான் ஆயத்தமாத் தான் இருக்கேன். வேணும்னா, இராவண காவியத்தை வலையில் பிரிச்சு வேயலாம், வாங்க.

இங்கே ரவி சொன்ன கருத்தை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று எண்ணுகிறேன்...

மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்த முற்படுகிற ஓர் இனமோ, நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ நேரிடையாக போர் மட்டும் புரிவது கிடையாது.... தனது சமூகத்திடம் எதிரி சமூகத்தை பற்றிய தவறான கருத்துகளை உருவாக்கும், இழிவுபடுத்தலை செய்யும். அப்பதான் இந்த சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது கோவம் கொள்வார்கள்...

தன்னுடைய மக்களிடம் எப்படி பிரச்சாரம் செய்வது... கலை, படைப்புகள், ஊடகம் அனைத்தின் வாயிலாகவும் எதிரியை பற்றிய பிம்பத்தை கட்டமைப்பார்கள்... இந்த அரசியல் பிரச்சாரம் சில சமயங்களில் எதிரி மக்களிடமே அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்யப்படும்!

சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்...

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா குதிக்க வேண்டும் என்றால் அமெரிக்க மக்கள் ஆதரவு வேண்டும்... என்ன செய்வது யோசித்த அமெரிக்கா அரசாங்கம் அமெரிக்க மக்கள் பயணம் செய்த ஒரு பயணிகப்பலை மூழ்கடிக்கிறது! பல நூறு மக்கள் இறக்கிறார்கள்... அதை ஹிட்லர் செய்தார் என்று பிரச்சாரம் செய்து அமெரிக்க மக்களிடம் ஜெர்மனுக்கு எதிரான மனநிலையை உளவியல் ரீதியாக உருவாக்கினார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பனிபோரில் அமெரிக்கா ஈடுப்பட்டிருக்கும் போது ரஷ்யா வை பற்றிய தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறது எப்படி?

அமெரிக்க படங்கள் ரஷ்யா உலக மக்களுக்கு எதிரான செயலில் ஈடுப்பட்டிருப்பது போல படமெடுக்கப்பட்டது!

அந்த காலக்கட்ட புதினங்கள் பல ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளன.

பின்னர் அது கொரியாவுக்கு எதிரானதாகவும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரானதாகவும் அந்த பிரச்சாரம் இருக்கிறது.

மிக எளிமையாக நம்மூர் ஊடகங்களும், சினிமாக்காரர்களும் பாகிஸ்தானில் இருப்பவன் எல்லாம் தீவிரவாதி என்று சித்தரிப்பது போன்ற பிரச்சாரம்!

இங்கே ஊடகமும், படைப்புகளும் ஒரு அரசியல் அதிகாரத்தை சார்ந்து இயங்குகின்றன! அவர்களிடம் சொன்று எப்படி சார்ந்தியங்கலாம் என்று கேள்வியெழுப்ப இயலாது!

நாம் நம்முடைய படைப்புகளை மக்களுக்காக என்ற தளத்தில் நகரலாமே!

ஆரிய இனம் 'த்ராவிட' இனத்தின் மீது ஆளுமை செலுத்த முற்பட்ட நேரத்தில் எழுதப்பட்டவைகளே இந்த புராணங்களும், ஆரிய கதைகளும்...
அவற்றில் மற்ற இனங்களை பற்றிய மதிப்பீடு உயர்வாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பது மடமை!

ஆனால் அதே நேரத்தில் தமிழ் மொழியில் வந்த படைப்புகள் திருக்குறள், சிலப்பதிகாரம்... போன்றவை அரசியல் அதிகார சார்பின்மையை பேணியிருக்கின்றன.

கடைசியாக முகவை மைந்தன் உங்களுடைய வெண்பா எழுத வேண்டும் என்கிற முயற்சியை பாராட்டுகிற நேரத்தில்...
ஒர் இனத்தின் மீதான இழிவுப்படுத்தலை மையமாக கொண்ட புராணத்தை எடுத்துக்கொண்டு அதை செய்ய வேண்டாமே!

7 comments:

Maximus சொன்னது…

சரியான சிந்தனை...!!!

வரிக்கு வரி செதுக்கியுள்ளீர்கள்...!!

நன்றி !!!!!!

ஜெகதீசன் சொன்னது…

:)
வாழ்த்துக்கள்!

முகவை மைந்தன் சொன்னது…

தமிழ்மணம் முகப்புல இடுகையப் பாத்ததுமே கண்ணைக் கட்டிருச்சு. மக்கள்லாம் என்ன சொல்றாங்கன்னு பாத்துட்டு அப்புறமா வர்றேன்.

ஜேக், எதெதுக்கு சிரிக்கிறதுன்னு வகை,தொகையே இல்லையா? யாரை வாழ்த்துறீங்கன்னு சொல்லிட்டு வாழ்த்துங்க.

பெயரில்லா சொன்னது…

Ref your last para.

Exactly.

If Mugavai Mainthan desires to practice venbaa writing, why Iramaayanam? Didnt he find a story within Tamil cutlure? Do we lack such stories here?

Why to go to North India; and about a king, who invaded and killed a south Indian king, using south Indians, treacherously?

Do the Tamils lack knowledge of Iramaayanam, and so, our friend wants to remind us about it? All of us know it.

What is the intention of Mainthan? Is it to propogate such a mythology here, or to show his poetry writing?

Mainthan may first reveal his intentions so that we can find where his heart lies - in TN or in North India?

கிரி சொன்னது…

//இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா குதிக்க வேண்டும் என்றால் அமெரிக்க மக்கள் ஆதரவு வேண்டும்... என்ன செய்வது யோசித்த அமெரிக்கா அரசாங்கம் அமெரிக்க மக்கள் பயணம் செய்த ஒரு பயணிகப்பலை மூழ்கடிக்கிறது! பல நூறு மக்கள் இறக்கிறார்கள்... அதை ஹிட்லர் செய்தார் என்று பிரச்சாரம் செய்து அமெரிக்க மக்களிடம் ஜெர்மனுக்கு எதிரான மனநிலையை உளவியல் ரீதியாக உருவாக்கினார்கள்//

அட! பாவிகளா. நீங்கள் சொல்வது உண்மையா?

பெயரில்லா சொன்னது…

//தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?//

என்னது இப்புடி விளக்கமில்லாதவங்களா இருக்கிறீங்க!? அவங்க படைக்கு தலமைதாங்கினவ்ங்களுக்கு பேர் ஆஞ்சனேயர்,

அவங்க குரூப்புக்கு பேர்தான் குரங்குப் படை.

அதுக்காக அவங்க எல்லாம் நிஜமான குரங்குக இல்ல.

எவனோ என்னமோ சொல்லுறான்னு,

நீங்களும் விளக்கமில்லாம இப்புடி குதிக்கிறீங்களே!!

கொஞ்சமாச்சும் சுயமா சிந்தீங்கப்பா!!!!

பெயரில்லா சொன்னது…

ராமாயணம் ஆரியர்-திராவிடர் போராட்டமே என்று பண்டித ஜவ்ஹர்லால் நேரு தன் மகளுக்கு எழுதியதிலேயே சொல்லிவிட்டார்.அவர் பொய் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
வால்மீஹி எழுதியுள்ளதைத் தமிழில் அப்படியே எழுதினால் அசிங்கம் ஆகிவிடும்(ராமனின் பிறப்பே அசிங்கம்!) என்று கம்பர் அங்கங்கே மாற்றி எழுதினார்.அதிலேயும் அசிங்கம் நிறைய இருக்கிறது என்பதை அறிஞர் அண்ணா அன்றைய தலை சிறந்த சொல்லின் செல்வர் பேராசிரியர் ரா.பி. சேதுப் பிள்ளை அவரிடமே வாதாடி வென்று,ராமாயணம் எரிக்கப் படவேண்டும் என்று "தீ பரவட்டும்" என்ற நூலாகவும்,"கம்ப ரசம்" கம்ப ராமாயணத்தின் ஆபாசங்களை அம்பலப் படுத்தும் நூலாகவும் உள்ளன்.

தமிழ்நாட்டில் பிள்ளையார் போல வட நாட்டில் காலை எழுந்த முதல் இரவு படுக்கும் வரை ராம் ராம் தான்.

அதைப் பயன் படுத்திப் பிஜேபி ஒரு முறை வென்றது.இந்த முறை பணத்திற்காக எது வேண்டுமானாலும் செய்வோரை வலைக்கப் பார்க்கிறது.
சன் தொலைக் காட்ச்சிக்குப் பணம் கொடுத்திருந்தாலும் ஆச்சரியப் பட முடியாது.பணத்திற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

Related Posts with Thumbnails