திங்கள், 23 ஜூன், 2008

தசாவதாரம் - அமெரிக்காவின் கோவணத்தை உருவிய கமல்...!

படத்தின் பார்ப்பானீய அரசியலை ஏற்கனவே நண்பர் பைத்தியகாரன் தசாவதாரம்: பாசிச, பார்ப்பனிய மலம் நார், நாராக கிழித்துவிட்டார்... தசாவதார விமர்சனம் எழுதாவிட்டால் தமிழ் வலையுலகின் பொது நீரோட்டத்தில் விலகிவிட்டதாக வரும் பழியிலிருந்து எப்படி தப்பிப்பது :)

குறுக்காலும், நெடுக்காலும் நடந்து... குப்புறப்படுத்து, மல்லாக்க விட்டத்தை பார்த்து யோசித்து, கழிப்பறையில் கக்கா போகும்போது கன்னம் தேய்த்து... கடைசியாக இந்த பதிவை எழுதுகிறேன்....

அன்றைய சோவியத் ரஷ்யாவையும், கொரியாவையும், கியூபாவையும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளையும் மனித இனத்தின் எதிரிகளாக சித்தரித்தும்... அங்கே உயிரி ஆயுதங்கள் (Bio Weapons) தயாரிக்கப்படுவதாகவும், வேதி ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகவும் இடையறாது தனது ஊடகங்களின் வழியாகவும், ஹாலிவுட் படங்கள் வழியாகவும், நாவல்களின் வழியாகவும், இன்னும் பல்வேறு முறையிலும் பிரச்சாரம் செய்கிற அமெரிக்கா மற்றம் அதன் ஆதரவு ஏகாதிபத்தியங்கள். அதை அப்படியே உண்டு செரிக்காமல் வாந்தி எடுக்கிற முதலாளித்துவ கைக்கூலிகள் என்கிற நிலையிலிருந்து...

அமெரிக்காவின் அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்துவதில் படம் முக்கிய திசையில் பயணம் செய்கிறது. எய்ட்ஸ் கிருமி உருவாக்கத்திலிருந்து, இன்றைக்கு உயிரி ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் அமெரிக்கா, அதற்கு புஷ் அரசாங்கம் நிதி ஓதுக்கீடு செய்வது வரைக்கும்... அமெரிக்க அரசாங்கத்தின் மனித இன அழிப்பு வேலைகளை... மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்!

பலராம நாயுடு என்கிற கதாபாத்திரத்தின் வழியாக விசாரணை என்று இரண்டு முறை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை பட்டியலிட்டு நம்முடைய பொதுப்புத்தி சார்ந்த தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களின் செயல் என்பதை எள்ளி நகையாடி இருக்கிறது படம்.

தனது சொந்தங்கள் சாகும் போது கோபப்படுகிற சராசரி மனிதர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி சித்தரவதை செய்கிற அரசு... மனித இனத்தை அழிக்க கூடிய உயிரி ஆயுதத்தை தயாரிக்கிற அமெரிக்காவையும், அது இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விட்டது என்கிற பொழுதிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாலைப்போட்டு, இளநீர் கொடுத்து வரவேற்கிற நமது அரசு அதிகார அமைப்பையும் இதைவிட சிறப்பாக எப்படி காட்சிப்படுத்த முடியும்!

புஷ்-ஐ இதைவிட மோசமான கோமாளியாக சித்தரிக்க முடியுமா?

அமெரிக்கா மனித இனத்திற்கு எதிரான ஆய்வுகளில் ஈடுப்பட்டிருக்கிறது என்கிற கதையை திரைப்படமாக எடுத்து அதை அமெரிக்காவின் 50 திரையரங்களில் வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிற கமலுக்கு நிச்சயமாக பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும்!

படம் ஆரிய கதையாடல்களின் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற காரணத்திற்காக... கமலை விமர்சிக்கலாம்!

கடைசியாக நந்தாவுக்காக... அவருடைய பதிவில் கமல் கடவுள் எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்கிறார்... அதனால் பார்ப்பானீயவாதி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்....

நாத்திகம் என்கிற ஆயுதம் பார்ப்பானீயத்தை எதிர்க்க பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. அதனால் ஊரில் இருக்கிற அத்தனை நாத்திகவாதிகளும் பார்ப்பானீய எதிர்ப்பாளர்கள் அல்ல!

நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)

நன்றி!

15 comments:

பெயரில்லா சொன்னது…

அருமை ...

கோவி.கண்ணன் சொன்னது…

அரசு,

பதிவு முழுவதுமே உள்குத்தாகவே இருக்கிறது. 'உட்கார்ந்து' யோசித்தேன் என்று நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

மாறுபட்ட விமர்சனம்...அமெரிக்கா - விசக்கிருமிகளின் தோற்றுவாய், தொற்று நோய் அந்த கோணத்தில் யாருமே எழுதவில்லை. கண்டு புடுச்சிட்டிங்க...இதைப் படிச்சுட்டு எப்பிஐ வரபோகுது இந்தியாவுக்கு.

:)

பெயரில்லா சொன்னது…

அருமை ...

கோவி.கண்ணன் சொன்னது…

//"தசாவதாரம் - அமெரிக்காவின் கோவணத்தை உருவிய கமல்...!"//

எக்ஸ்க்யூச்சுமி அரசு,

அமெரிக்கர்கள் லங்கோடு அணிவதில்லை. ஜட்டிதான் !

Udhayakumar சொன்னது…

//"தசாவதாரம் - அமெரிக்காவின் கோவணத்தை உருவிய கமல்...!"//

படம் போகிற போக்கில் உருவிய மற்ற அம்சங்களையும் பட்டியல் இட்டுள்ளீர்கள். நல்ல விமர்சனம். நீங்கள் சொல்லாமல் விட்ட இன்னொன்று. முஸ்லீம் அல்லாவால்தான் எல்லாம் என சொல்லுவதும், சர்ச் கோபுரத்தில் மாட்டிக் கொண்ட படகினால் உயிர் தப்பும் கோவிந்த் என கடவுள் புராணம் இருந்தாலும் இந்துக் கடவுள்களை மட்டும் நொட்டை சொல்லிக் கொண்டிருக்கிறாரே என நினைத்தேன். மூலவரை கடற்கரையில் நிறுத்தியதன் மூலம் அதையும் சரி செய்து விட்டார். மொத்ததில் கமல் லேட்டாக "வசூல்" செய்வது எப்படி என தெரிந்து கொண்ட ராஜா!!!

TBCD சொன்னது…

பட்டாசு...பட்டாசு...

அதுவும் இந்தப் படத்தை புஷ்க்குப் போட்டுக் காட்டி, அவர் தலையில் அழகாக மிளகாய் அரைத்திருக்கிறார்கள்...ஓகோன்னன்னா..

ஃஃஃ
நுண்ணியமாக யோசிக்க சரியான இடம் என்று சொல்லிக்கொடுத்துவீட்டீரா..போச்சு...இனிமே எல்லாரும், அங்கேயே போய் பழியா கிடக்கப் போறாங்க..

Me சொன்னது…

உருவப்பட்ட கோவணத்தை மாறுபட்ட கோணத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.

//நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)//

சுருங்க சொல்லி விளங்க வைப்பது என்பது இதுதானோ! அருமை.

முகவை மைந்தன் சொன்னது…

உருவரதுக்கு நீங்கள்லாம் இருக்கீங்கன்னு தான் நான் படத்தை மட்டும் பாத்துட்டு வந்துட்டேன் ;-)

இன்னும் ஏதாவது 'இடம்' யோசிக்காம இருந்தா அங்கன இருந்து யோசிக்கணும். அப்பத் தான் இது மாதிரி எழுத முடியும்.

கே.என்.சிவராமன் சொன்னது…

//நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)//

நச்!

சிறில் அலெக்ஸ் சொன்னது…

நல்ல பாயிண்ட்.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

தல... நான் இன்னும் கூட படம்.. பார்க்கவில்லை. அதனால்.. ஏதும் சொல்ல முடியாதவனாக இருக்கிறேன்.

உங்கள் விமர்சனம்/ தலைப்பு எனக்கு ஒரு சம்பவத்தை நினைவு படுத்துகிறது.., “அமெரிக்காவுக்குள் நுழைபவர்களின் கைரேகை,கால் ரேகை எடுத்தது போக.. விழிப்படலத்தின் ரேகையையும் எடுக்கத்தொடங்கிய நிகழ்வை சென்னையில் திரு.கமல் தான் விழி கொடுத்து ஆரம்பித்து வைத்தார்” ஏனோ இப்போ நினைவு வந்தது.”

கடைசியாக..

///நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)//

நச்!//

பைத்தியக்காரன் சொன்னதற்கு ரிப்பீட்டே! (பல நாள் ஆச்சு.. இப்படி சொல்லி!) :)

rapp சொன்னது…

எனக்கும், என் தங்கமணிக்கும் இந்த காரணத்தாலயே படம் நெம்ப பிடிச்சிப் போச்சுங்க. சூப்பரான பார்வை.

புருனோ Bruno சொன்னது…

//புஷ்-ஐ இதைவிட மோசமான கோமாளியாக சித்தரிக்க முடியுமா?//

கஷ்டம் தான் :) :)

//அமெரிக்காவின் அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்துவதில் படம் முக்கிய திசையில் பயணம் செய்கிறது.!//

http://payanangal.blogspot.com/2008/06/blog-post_19.html

ஜமாலன் சொன்னது…

தசாவதாரம் குறித்து வந்த பல விமர்சனங்களில் உங்களது கோணம் மிகமுக்கியமான ஒரு அரசியலை வெளிப்படுத்தியுள்ளது. இதே கோணத்தை இரஸ்வரி பாலசுப்ரமணியம் "பதிவகள்” இணைய இதழில் வெளியிட்டுள்ளார்.

http://www.geotamil.com/pathivukal/cinema_thasavathaaram_rajes_bala.htm

மற்றபடி நான் படம் பார்க்கவில்லை.

//நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)//

இன்னாதிது? கொலைவெறி தாக்குதலாக உள்ளது. இப்படி ஒரு கட்சி இருப்பதை சொல்லவே இல்லை. :)

ஜமாலன் சொன்னது…

சொல்ல மறந்துட்டேன்.

எல்லோரும் கமலின் கோவணத்தை உருவ நீங்கள் அவரி உருவிய கோவணத்தை பறக்க விட்டுள்ளீர்கள். வாழத்துக்கள்.

Related Posts with Thumbnails