செவ்வாய், 31 மார்ச், 2009

கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...!

அதிகாரம் : உடல், உயிர் மற்றும் உள்இயங்கியலின்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) இயல்பான, தடைகளற்ற, விடுதலையடைந்த இயக்கத்தை மறுக்கும் எதையும் அதிகாரம் என வகைப்படுத்தலாம்.


உடல், உயிர் மற்றும் உள்இயங்கியலின்(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) மீது இந்த சூழலும், வாழ்வும் ஏற்படுத்தும் தாக்கங்களின் வெளிப்பாடுகளே உணர்ச்சியாக அறியப்படுகின்றன.

உடல், உயிர் மற்றும் உள்இயங்கியலின் மீதான தாக்கத்தை இன்பம்(நேர்மறை) அல்லது துன்பம்(எதிர்மறை) என்று இரண்டு எதிரெதிர் புள்ளிகளில் வைத்தால்... எல்லா உணர்ச்சிகளும் இந்த இரண்டு புள்ளிகளை ஒட்டியே அமைவதை உணரலாம்.

குழந்தை தாயின் உடலை விட்டு சூழலுக்கு வந்தவுடன்... சூழலால் உடலில் ஏற்ப்படும் மாற்றங்களை இன்பம்(நேர்மறை) - ஆக உணர்ந்து புன்னகைக்கலாம்... அல்லது துன்பம்(எதிர்மறை) - ஆக உணர்ந்து அழலாம். (பெரும்பான்மை குழந்தைகள் அழுவதாகவும், மிக சிறிய அளவில் குழந்தைகள் புன்னகைப்பதாகவும், எந்தவிதமான மாற்றத்தை உணர்வில் வெளிப்படுத்தாத குழந்தைகள் இருப்பதையும் மருத்துவர்கள் அவதானித்திருக்கிறார்கள்)

(அழுவது - எதிர்மறை(துன்பம்) என்றும்... புன்னகைப்பது - நேர்மறை(இன்பம்) என்றும்... கற்பிக்கப்பட்டவையே)

ஆக இரண்டு எதிரெதிர் புள்ளிகளும், அதன் மையமாக உணர்ச்சியற்ற தன்மையும் அமைகிறது.

ஆனால்... நடைமுறை வாழ்வியலில் நம்மை பண்படுத்திக்கொள்ளவும், சமூகமாக வாழ்வதற்காகவும் ஏகப்பட்ட உணர்ச்சிகளை நாம் கற்பித்துக்கொள்கிறோம்...

அன்பு, பாசம், நட்பு, நன்றி,... இப்படி ஏகப்பட்ட உணர்ச்சிகளை கற்பிக்கப்பட்டும், கற்பித்துக்கொண்டும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். இந்த உணர்ச்சிகள் எல்லாமும் உடல், உயிர், உள்இயங்கியல் நேர் அல்லது எதிர் அல்லது எதுவுமற்ற தாக்கங்களை கொண்டவை.

தொடரும்...

9 comments:

ஜோ/Joe சொன்னது…

//தொடரும்...//

இங்கிருந்து தான் ஏதாவது புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோ / Joe கூறியது...
//தொடரும்...//

இங்கிருந்து தான் ஏதாவது புரிந்துகொள்ள முடியுமென நினைக்கிறேன்.
//

சொல்லி வச்சாப் போல பின்னூட்டம் போட்டால் நான் என்னத்த போடுவது ?

ஜமாலன் சொன்னது…

எளிமையாகவும் செறிவுடனும் துவங்கி உள்ளீர்கள்... தொடர வாழ்த்துக்கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...!//


அதிகாரத்திற்கும், உணர்ச்சிகளுக்கும் நெருங்கிய உறவு உண்டுதான்!
அதை எப்படிப் பயன் படுத்துகிறோம் என்பது தான் ஆளுமை!

கே.என்.சிவராமன் சொன்னது…

பாரி,

செறிவா இருக்கு. அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்

தோழமையுடன்
பைத்தியக்காரன்

கோவி.கண்ணன் சொன்னது…

//கற்பிக்கப்பட்ட உணர்ச்சிகளின் ஊடாக கட்டமைக்கப்படும் அதிகாரம்...! //
சென்டிமெண்ட் டார்ச்சர் என்று சொல்வது தானே இது ?

கோவி.கண்ணன் சொன்னது…

ஜமாலனும், பைத்தியக்காரனும் பின்னூட்டம் இருப்பதை வைத்து பின்னவினத்துவ பதிவு என்று ஊகிக்க முடிகிறது. ஜோவின் முதல் பின்னோட்டத்திற்கான காரணம் லேசா வெளங்குது

ஜமாலன் சொன்னது…

கோவி.. ஆரம்பிச்சிட்டீங்களா? பின்நவினத்துவம் முன்நவீனத்துவம் என்று.

முற்போக்கு பிற்போக்குபோல இதுவும் வாந்தி பேதி சம்பந்தப்பட்டதுதான். )))

நண்பர் பைத்தியக்காரன் இன்னுமா பதிவுகளில் சுத்திக்கொண்டு உள்ளார்? ))))

கே.என்.சிவராமன் சொன்னது…

//நண்பர் பைத்தியக்காரன் இன்னுமா பதிவுகளில் சுத்திக்கொண்டு உள்ளார்? ))))//

பின்னூட்டங்களில் மட்டும் ஜமாலன் :-(

Related Posts with Thumbnails