ஞாயிறு, 11 நவம்பர், 2007

விடுமுறை...1

விடுமுறை என்பது மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது. அதுவும் மிகவும் அளவெடுத்த ஆண்டுக்கு 8 அல்லது 9 நாட்களே அரசு விடுமுறை என்கிற நாட்டில், விடுமுறைக்கான காரணத்தில் நமக்கு முரண் இருந்தாலும் (தமிழர்களே இந்தியாவின் அடையாளமாகயிருக்கிற, தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிற நாட்டில், தமிழர்களின் விழா பொங்கலுக்கு விடுமுறை கிடையாது ஆனால் ஆரிய விழாவான தீபாவளிக்கு விடுமுறை இதுவே முரண்).

விடுமுறை கிடைத்ததே என்கிற மகிழ்ச்சியில் காரணத்தை மறந்து விட்டோம். அதிரும் அதிகாலை நேர எச்சரிக்கை ஓலிகள் கிடையாது (அறையில் விடியற்காலை 6 மணியிலிருந்து அடிக்கும், ஆனாலும் விழிப்பிற்க்கு மட்டும் 7.30 க்கு மேல் தான் மனம் இடம் கொடுக்கும், அப்படியும் நாள்தோறும் நேரக்காட்டிகளை அமைப்பதற்க்கு தவறுவது கிடையாது.). விரைவான காலை நேர ஆயத்தங்கள், தவற விடுகிற மின்சார ரயில்கள் எதுவும் கிடையாது. இதயம் மென்மையாக துடிக்கிறது, இன்றைக்கு விடுமுறை. அதிகாலை 11 மணிக்கு மேலாக எழுந்தால் நலம் என்கிறது மனது.

சென்னையில் இருந்த காலத்திலிருந்தே விழாக்கள், விடுமுறைகள் என்றால் நண்பர்கள் எல்லோரும் அறையில் ஓன்றுக்கூடி கொண்டாடுவது தான் வழக்கம். அதிலும் குறிப்பாக தொலைக்காட்சி, சிடி (தற்பொழுது டிவிடி) இருக்கும். பார்க்காத படங்கள், பார்க்க வேண்டும் என்று குறித்து வைத்த படங்கள் என்று எல்லாம் வந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன்பு அது நான்கு, ஐந்து நாட்கள் வரை நீளும்.

எந்த கேள்வியுமற்று வேண்டியதை உண்டுக்கொண்டும், விரும்பியதை பார்த்துக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும் சில நாட்கள் பூட்டிய அறைக்குள்ளே வாழ்வது ஓரு மயக்கமான வாழ்க்கை, அது மிகவும் மனதுக்கு நெருக்கமானது.

இந்த ஆண்டும் அப்படித்தான், ஆனால் பழைய நண்பர்களில் சிலருக்கு புதிதாய் திருமணமாகி இருந்தது. அவர்கள் தங்களுடைய துணைவியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருவதற்க்கே மதியம் 3 மணி ஆக்கிவிட்டார்கள். ஓருவர் நான் வரலையப்பா என்றார் (பாவம் அவருக்கு என்ன துன்பமோ!:))). அந்த சகோதரிகள் எனக்கு நிறைய புகழ்மாலைகள் தந்திருப்பார்கள், ஆனாலும் நானென்ன புகழுக்காக அலைபவனா! இல்லை அதற்க்காக கடமை மறப்பவனா!

சென்னை வரை நமக்கு அறிமுகமின்றி இருந்த மது, சிங்கைக்கு வந்த பிறகு ஓன்று கூடல் நிகழ்ச்சிகளில் சிறிது சிறிதாக அறிமுகமாகி, இன்றைக்கு தவிர்க்க இயலாத வாழ்வியலாக மாறியிருக்கிறது. அப்படியாக பார்லியில் வடித்த நீர் சில டஜன்களுடன் இந்த விடுமுறையும் தொடங்கியது.
புதிதாய் சந்தைக்கு வந்த சில மொக்கை படங்கள் இரவெல்லாம் ஓடிய பிறகு, தீபாவளி மதியம் "கற்றது தமிழ் எம்.ஏ..." பார்க்க தொடங்கினோம். அதன் தொடர்ச்சியாக சன் தொலைகாட்சி பட்டிமன்றம். தொடர்ச்சியாக வேறு சில நிழற்படங்கள் என்று முழு நீளமாக ஓடிக்கொண்டேயிருந்தது... விடுமுறை நாட்கள்.

இதில் மிகப்பெரிய விவாதமாக பட்டிமன்றமும், கற்றது தமிழ் எம்.ஏ வும் பல மணி நேரங்கள் நீடித்தது...
தொடரும்...

6 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//அவர்கள் தங்களுடைய துணைவியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு வருவதற்க்கே மதியம் 3 மணி ஆக்கிவிட்டார்கள். ஓருவர் நான் வரலையப்பா என்றார் (பாவம் அவருக்கு என்ன துன்பமோ!:))). //

மணமான நண்பர்களைக் கண்டால் உங்களுக்கு நக்கலா ?

எங்கே ஓடிட போறிங்க ? எங்க சுற்றினாலும் மாடு நுகத்தடியில் நின்றுதான் ஆகவேண்டும்.

ஒரு நாள் உங்கள் கழுத்தில் மாலை விழும்போது நாங்கள் பார்த்து ரசிப்போம் !
:))

ஜெகதீசன் சொன்னது…

//
(தமிழர்களே இந்தியாவின் அடையாளமாகயிருக்கிற, தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிற நாட்டில், தமிழர்களின் விழா பொங்கலுக்கு விடுமுறை கிடையாது ஆனால் ஆரிய விழாவான தீபாவளிக்கு விடுமுறை இதுவே முரண்).
//
உண்மைதான்.....


முதல் 3 நாட்கள் நிம்மதியாக வீட்டில் இருந்தேன்...
நேற்று குடும்பத்துடன் ஜுராங் பறவைப் பூங்காவுக்குச் சென்றோம்....
:)))

TBCD சொன்னது…

விடுமுறை நாட்கள் என்பது பிரம்மச்சாரியாக இருக்கும் காலக் கட்டத்தில், பெரிய நிகழ்வுகள் இல்லாமலே கழியும்..தீபாவளி, பொங்கல், என்றால், குடும்பத்தினருடன் காலைப் பொழுதையும், மாலைப் பொழுதில், நன்பர்களுடன், அன்று வெளியாகும் படமொன்றைப் பார்ப்பது வழக்கம்..அதன் பொருட்டு, பல மொக்கைத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன்..

இந்த தீபாவளி வித்தியாசமான அனுபவம்...
திரைப்படத்தை, படம் இயக்கியிலே (பிளேயர் என்பதன் தமிழ் பதம்...:) ...) பார்ப்பதாயிருந்தாலுமே, பத்து நிமிடத்திற்கு மேல் பாக்க முடியவில்லை..காரணம் என் குழந்தை...அவளைப் பார்ப்பதிலே, இந்த தீபாவளி விடுமுறைகள் ஓடிவிட்டது....

பாரி.அரசு சொன்னது…

வணக்கம் கோவி!

ஃஃ
எங்கே ஓடிட போறிங்க ? எங்க சுற்றினாலும் மாடு நுகத்தடியில் நின்றுதான் ஆகவேண்டும்.

ஒரு நாள் உங்கள் கழுத்தில் மாலை விழும்போது நாங்கள் பார்த்து ரசிப்போம் !
:))
ஃஃ

அவ்வளவும் நல்ல எண்ணம் :((

பாரி.அரசு சொன்னது…

வருகைக்கு நன்றி ஜெகதீசன்!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அர்விந்த்!

வருகைக்கு நன்றி!

Related Posts with Thumbnails