புதன், 7 நவம்பர், 2007

அடுக்களை முனகல் அரசியலை விட்டொழி!

எழுத்தின் ஊடாக உள்ளடி அரசியல் செய்வது... குறிப்பாக ஓரு தளத்தில் நின்று அரசியல் பேசுகிறவரை எதிர்க்கொள்ளாமல், அப்புறமாக எங்கெல்லாம் சந்துக்கிடைக்கிறதோ அங்கெல்லாம் சிந்து பாடுவது. அயோக்கியதனத்தின் உச்சக்கட்டம் அங்கேதான் ஆரம்பமாகிறது. ஆண்டாண்டு காலமாக மனித சமூகத்தின் உரிமைகுரல்வளையை நசுக்குவதில், அதிகாரவர்க்கத்தின் அதிகாரத்தை விட உனக்காக பேசுகிறேன் என்று உறவாடி கெடுத்த கோடாரி கொம்புகள் பற்றி வரலாறு நெடுக நடந்தவற்றை வாசித்தது மட்டுமல்ல... வாழ்க்கையின் ஊடாக அனுபவத்தையும் சேகரித்தே வைத்திருக்கிறேன்.

எதையும் மறுப்பது என்பது நோக்கமல்ல! இந்த இயங்கியலின் மையம் என்ன? என்கிற வினாவின் விடை தேடும் முயற்சி. மையமின்றி பரபரப்பாய் இயங்கும் போதெல்லாம் இது எதற்க்கானது என்பதை அடையாளப்படுத்துதல்.

நன்றி

6 comments:

TBCD சொன்னது…

யார் முனங்கியது...

எங்கே முனங்கினார்கள்..

அடுக்களை என்றால்..பெண் சம்பந்தப்பட்டதா..

இல்லை..அடுக்களை என்றால் பெண் என்றால், பெண்ணியவாதிகள் சண்டைக்கு வருவார்களே...

அரசியல் என்றால்...உள்ளூர் அரசியலா..
தமிழ்மண அரசியலா...
இல்லை உலக அரசியலா..?

ஜமாலன் சொன்னது…

ஏன் இந்த கொலைவெறி? தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவர் போற்றட்டும். அதற்காக அடுக்களை முனகல் அரசியல் என்பதாக எழுத வேண்டியதில்லை. அது யாரைக்குறித்தாக இருந்தாலும்.

பாரி.அரசு சொன்னது…

அய்யா டிபிசிடி!

சிண்டு முடிதல் என்பார்கள், அதை நல்லாவே செய்கிறீர்கள் :((

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஜமாலன்!
ஃஃ
ஏன் இந்த கொலைவெறி? தூற்றுவார் தூற்றட்டும். போற்றுவர் போற்றட்டும். அதற்காக அடுக்களை முனகல் அரசியல் என்பதாக எழுத வேண்டியதில்லை. அது யாரைக்குறித்தாக இருந்தாலும்.

ஃஃ

தவிர்க்கவே நினைக்கிறேன்! நன்றி!

TBCD சொன்னது…

பாரி ஒரு வரி விட்டுப்போச்சு..

புரியல்ல. தயவு செய்து விளக்கவும்..

என்னப்பா இப்படி ஒரு பதிவு போட்டிருக்கு..இதுக்கு என்ன அர்த்தமின்னு கேட்டா சிண்டு முடிதலா...

நல்ல கதை...நீங்க சொல்ல நினைச்சதை சொல்லிட்டீங்க..

மற்றவர்கள் கேட்கவும், சிண்டு முடியாதீங்கன்னு சொல்லுறீங்க...

இது பாசிச வெளிபாடு...

(பி.கு :- இந்தப் பின்னுட்டம் வெளி வரவில்லையென்றால், வேறு வழியில், வஞ்சம் தீர்க்கப்படும்.. ;) )

//*பாரி.அரசு said...
அய்யா டிபிசிடி!

சிண்டு முடிதல் என்பார்கள், அதை நல்லாவே செய்கிறீர்கள் :((*//

ஜெகதீசன் சொன்னது…

எங்கள் தலைவர் டிபிசிடி பற்றி அவதூறு பேசும் பாசிச பாரி.அரசுவுக்கு கடும் கண்டனங்கள்...


(சாரி, பாரி.அரசு... இப்படி கமெண்ட் போடலைன்னா பினாங்கு வர்றப்ப விசம் வச்சுருவேன்னு டிபிசிடி மிரட்டுறார்...)

Related Posts with Thumbnails