செவ்வாய், 6 நவம்பர், 2007

இறந்துக்கொண்டிருக்கிறாய்...!

மனிதன் வரையறை செய்த கால அட்டவணையில் நாழிகள் நாட்களாகி, வருடங்களாய் முடிவுற்று இறந்து போகின்றன... நான் இறந்துக்கொண்டிருப்பதை எனக்கு அறிவித்துக்கொண்டேயிருக்கின்றன நாட்காட்டிகள். கடிகாரத்தின் முள் துடித்து நகருகிறது... ஆம்! என் இதயத்தின் துடிப்பும் கடக்கிறது கொஞ்சம் உயிராற்றலை செலவழித்து!. ஓவ்வொரு உறக்கத்தின் போதும் கொஞ்சமாய் ஓய்வெடுக்கிறது இந்த உயிராற்றல் மையம், ஓவ்வொரு விழிப்பின் போதும் விரைகிறது ஆற்றலை செலவழிக்க உடல். ஆனால் என்னையறியாமலேயே தானாக இயங்கும் உடல் உறுப்புகள் ஆற்றலை செலவழித்துக்கொண்டேயிருக்கின்றன... கடைசியில் இந்த உயிராற்றல் மையம் முடிந்து போகும் வெற்றுடலாய்... எரித்தோ (அ) புதைத்தோ இந்த அண்டத்தின் நிலையாற்றல் உள்ள பொருளாய் மாறி போவோம்.

11 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

பாரி,

இந்த இடுகை கீழ்கண்ட திருக்குறளுக்கு விளக்கம் போல் இருக்கிறது.
_______________________

நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
(334)
விளக்கம்:

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

தீபாவளிக்கு முதல் நாள் இப்படி ஒரு வாழ்த்துத் த(லை)ப்பு தேவையா ?
:)

குசும்பன் சொன்னது…

எல்லா யோகிகளும்(சாமியார்கள் அல்ல) சொல்லவருவதை சுருக்கமாக சொல்லிட்டீங்க.அருமை பாரி

TBCD சொன்னது…

நேத்து தண்ணி கொஞ்சம் அதிகமோ....

ஜெகதீசன் சொன்னது…

:)

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!
குறள் அறிய தந்தமைக்கு நன்றி!

நாள் என்கிற அடையாளம் நாம் கொடுத்தது, அது தீபாவளிக்கு முதல் நாள் என்பது இன்னும் முரணாக இல்லையா! :))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

ஃஃ
எல்லா யோகிகளும்(சாமியார்கள் அல்ல) சொல்லவருவதை சுருக்கமாக சொல்லிட்டீங்க.அருமை பாரி
ஃஃ
குசும்பன்,

ஏற்கனவே நமக்கு ஓரு மாதிரியான கட்டம், வட்டம், சதுரம் போட்டுட்டு அதில் இருந்து தான் உரையாடுகிறார்கள் :))

நீங்க வேற புதுசா சாமியார் கண்ணாடி போட்டுட்டு வந்திருக்கீக! நடந்துங்க!

நன்றி

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் TBCD!
//
நேத்து தண்ணி கொஞ்சம் அதிகமோ....
//

நாந்தான் உங்களிடம் நேற்று சொன்னேன் "குளிர்ந்த பானை தண்ணீர் இருந்தால் இரண்டு குவளை குடியுங்கள். தலைச்சுற்றுவது நிற்கும்"

எனக்கே திருப்பியடிக்கிறீர்களே :))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

தம்பி ஜெகதீசா!

ஃஃ
:)
ஃஃ

இப்படி சிரித்தால்! எப்படியப்பா!

ஜமாலன் சொன்னது…

நீங்களும் physics ஆ...

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
நீங்களும் physics ஆ...

//
வணக்கம் ஜமாலன்!

காதலித்தென்னவோ இயற்பியல்! கட்டிக்கிட்டது கணிதவியல்!
பொழப்போட்டறது கணினியில்!
வாழ்க்கை என்னவோ எல்லா இயல்களின் பின்னலாகவே இருக்கிறது!

Related Posts with Thumbnails