ஞாயிறு, 9 டிசம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

கூலிகளாய் ஓடி வந்த தொழிலாள தமிழர்கள் அன்றைய சிங்கப்பூர் மற்றும் மலாக்கா தீவுகளில் கடினமாக உழைத்தனர். சிங்கப்பூர் மற்றும் மலாக்கா பகுதிக்கு இலங்கையிலிருந்தும் தமிழர்கள் கூலிகளாய் கொண்டுவரப்பட்டுள்ளனர்.




இவர்களுடைய போராட்டத்தையும், தங்களை நிலைநிறுத்திக்கொள்வதற்க்காக செய்த தியாகங்களையும் நாம் நிச்சயம் தலைவணங்கியே ஆக வேண்டும். சிங்கப்பூரில் தமிழர்கள் அமைத்திருக்கும் அடித்தளத்தில் தான் நான், என்னை மாதிரியானவர்கள் இன்றைக்கு இங்கே வந்து வேலை பார்க்கிறோம் என்றால் அதற்க்கு நாம் மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.




(இங்கே முன்னாள் சிங்கப்பூர் பிரதமர், தற்போதைய மதியுரை அமைச்சர் திரு லீ குறிப்பிடுவது போல இலங்கை தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாகயிருந்தாலும், அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. சிங்கப்பூர் நாட்டின் தந்தைகளில் ஓருவராக இலங்கை தமிழர் அமரர் திரு இராஜரத்தினம்(சிங்கையின் முதல் வெளியுறவுதுறை அமைச்சர்) இருக்கிறார். மலேசியா திடீரென சிங்கையை வெட்டிவிட்ட போது திரு லீ ஓரு வார காலம் மனமுடைந்து தலைமறைவாகி விட்டார். திரு இராஜரெத்தினம் அவர்களே முன்னின்று கட்சியையும், அரசியலையும் வழிநடத்தினார் என்கின்றனர். அந்தளவுக்கு இலங்கை தமிழர்கள் சிங்கையில் உழைத்திருக்கிறார்கள்).




அதே மாதிரி மலேசிய தமிழர்களும் தங்களுடைய கடுமையான உழைப்பால்,போராட்டத்தால் அரசியல் அமைப்பில் பங்குப்பெற்றுள்ளனர்.




ஆனால் தமிழகத்தில் சமூகக்கொடுமைகளிலும், வர்க்க கொடுமைகளிலனாலும் ஓடுக்கப்பட்ட தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியாவில் தங்களை எவ்வாறு முன்னிறுத்திக்கொள்கின்றனர்.? தங்களுடைய முன்னோர்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதை உணர்ந்து அதிலிருந்து தங்களை காத்துக்கொள்கின்றனரா? மலேசியவோ (அ) சிங்கப்பூரோ அது பிழைக்க வந்த இடம் நாளைக்கு பிரச்சினை என்றால் தாய் மண்ணின் உறவுகள் தான் கைக்கொடுப்பார்கள் என்பதை உணர்கின்றனரா? இப்படி கேள்விகள் இருக்கிறது.




இந்த இரண்டு நாட்டிலும் யாரும் தங்களை 'தமிழர்கள்' என்று சொல்லிக்கொள்வது கிடையாது 'இந்தியர்கள்' என்று பல்லிளிக்கின்றனர்.

தமிழர்கள் உழைத்து உருவாக்கிய அரசியல் பங்களிப்பை, அவர்களின் தோளின் மீது நடந்து வட இந்தியர்களும் மற்றவர்களும் எளிதாக உள்ளே புகுந்து விட்டார்கள். 18 பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் வட இந்தியர்கள்.தேர்தலுக்கு, தேர்தல் இது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்க்கு காரணம் தமிழர்களின் ஓற்றுமையின்மையை பயன்படுத்தி வடஇந்தியர்கள் எளிதாக வணிகம் மற்றும் அரசியலில் உள்ளே புகுந்ததே!




சிங்கப்பூராக இருந்தாலும் மலேசியாவாக இருந்தாலும்... எந்த சாதீய சமூகக்கொடுமையினால் இங்கே உழைப்பாளிகளாக வந்தார்களோ... அவர்களே மீண்டும் கோயில் கட்டி இந்த சாதீய சமூகத்தின் அடிதளமான பார்ப்பனர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்ப்படுத்தி தருகின்றனர்.




ஓரு தமிழ் கூலித்தொழிலாளியின் தினசரி கூலி 14-18 வெள்ளி ஆனால் ஓரு கோயில் பார்ப்பனரின் ஊதியம் 1000 வெள்ளி அது மட்டுமல்லாமல் தங்குமிடம், கோயிலுக்கு வருவோர் தருகிற தட்சணை என்று உழைக்காமல் உண்டுக்கொழுக்கும் பன்றிக்கூட்டமான பார்ப்பனர்களை தமிழர்கள் இங்கேயும் வளர்த்துக்கொண்டுயிருக்கிறார்கள்.


யார் தங்களை அடிமைகளாய், உரிமையற்றவர்களாய் ஆக்கி சொந்த மண்ணை விட்டு வெளியேற காரணமாகயிருந்தார்களோ அவர்களுக்கு இவர்கள் இங்கே கோயில்க்கட்டி கொடுத்துக்கொண்டிருக்கின்றனர்.




தங்களுடைய சொந்த மண்ணில் வளமிருக்கிறது, தங்களுடைய வாழ்வியல் ஏன் பறிப்போனது என்பதை பற்றி சிந்திக்கவும் இல்லை! அதற்க்காவும் போராடவும் இல்லை!




இவர்களில் பலர் சிங்கப்பூர், மலேசியாவின் சுக,போக வாழ்வில் மூழ்கி விட்டார்கள். சொந்த ஊர் எதுவென்றே தெரியாது. தெரிந்துக்கொள்ளவும் விருப்பமில்லை!


என்னுடைய கேள்வியெல்லாம் தமிழகத்தின் பிரச்சினைகளில் இருந்து தங்களை தற்க்காத்துக்கொள்ள ஓடி வேறொருயிடத்தில் போராடி தங்களின் வாழ்வியல் மேம்பட்டப்பிறகு சொந்த மண்ணை திரும்பிக்கூட பார்க்காத இவர்களுக்காக, காலம், காலமாக தமிழகத்தின் சாதீய, வர்க்க சமூகத்தில் போராடிக்கொண்டிருப்பவர்கள் ஏன் குரல் கொடுக்க வேண்டும்?




வெறும் தமிழர் என்கிற அடையாளம் போதுமா? தாய் தமிழ் மண்ணின் முன்னேற்றத்தில் இவர்களின் பங்களிப்பு என்ன? ( கோடம்பாக்கத்து நடிகைகளுக்கு இவர்கள் கொட்டிக்கொடுப்பதை தவிர! வேறென்ன கிழித்தார்கள்?)


இவர்களுக்கு பிரச்சினை என்றால் உணர்வால் ஓன்றுப்படுகிற தாய் தமிழ் மண்ணின் மக்களை. இவர்கள் எவ்வாறு நடத்துகிறார்கள். (ஊர்க்காரன் என்று நக்கலும், நகைத்தலும் செய்கிறார்களே!)




சிங்கப்பூர் தமிழர்களை விட மலேசிய தமிழர்கள் இன்னும் ஓரு படி மேலே போய் சினிமாவையும், பக்தியையும் தவிர வேறெதுவும் பற்றி சிந்திக்க கூடயில்லையே!.


சிங்கப்பூர், மலேசிய தமிழர்களுக்கு என்னுடைய வேண்டுக்கோள் எல்லாம் ஓன்றே ஓன்று தான்... நீங்கள் எவ்வளவு வளமான வாழ்வியலை கொண்டிருந்தாலும் நாளை பிரச்சினை என்று வரும் போது உங்களுக்கான அரண் உங்களுடைய தாய் தமிழ் மண்ணே. அதுவே வரலாறு அன்றைக்கு பர்மாவில் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போது குறைந்தபட்சம் பர்மா காலணி என்று அமைத்துக்கொடுத்தது தமிழ் மண் தான்.


இப்படியிருக்கும் பட்சத்தில் உங்களுடைய சிந்தனையில் தாய் தமிழ் மண்ணின் முன்னேற்றம் உள்ளடங்கியிருக்க வேண்டும்.




இங்கே இலங்கையின் யாழ்ப்பாண தமிழர்களுக்கு ஓர் அறிவுறுத்தலும் இருக்கிறது. தமிழினத்தின் இன்னொரு வாழ்விடமான தமிழீழம் தான் உங்களுடைய தாய் மண். நீங்கள் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்திருக்கலாம். ஆனால் உங்களின் தாய் மண்ணை மீட்டெடுப்பதிலும், அதன் முன்னேற்றத்திலும் மட்டுமே உங்களின் வாழ்வியல் உள்ளடங்கியிருக்கிறது. புலத்தில் சுகம் கண்டு உறங்கிப்போனால் நாளை வரலாற்றில் நாடற்ற அனாதைகளாக ஆக நேரிடலாம்!

24 comments:

ஜெகதீசன் சொன்னது…

நல்ல, தெளிவான பதிவு...
வாழ்த்துக்கள்!!

TBCD சொன்னது…

பாரி அனல் பறக்கிறது...கங்கு தெரிக்கிறது...

கீழே விழுந்துக் கிடப்பவனை பார்த்து பரிகாசிக்கும் நோக்கிலே இது எழுதப்படவில்லை என்று அனைவரும் அறிய வேண்டும்...

அனைவருமே இன்றைய நிலைக்கு காரணம் யார் என்பதை அறிந்து, உணர்ந்து, இருக்க வேண்டும்

ஆனால், மலேசியாவைப் பொறுத்த மட்டில் மக்கள் இன்னும் அடித்தட்டு நிலையில் தான் வைக்கப்பட்டுள்ளார்கள்..அவர்களின் நமக்கு என்ன செய்தார்கள் என்று கேட்பதை விட, நாம் அவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்...

பெயரில்லா சொன்னது…

சொறி.பன்னி. பாரி.அரசு,

நீ வேண்டுமானால் இந்தியன் என்று சொல்லிக்காம இரு;மத்தவங்க சொல்லிகொண்டா உம்மூஞ்சிக்கு என்ன?வேலை இல்லாத ஜென்மமா நீ முண்டம்?

ஜெகதீசன் சொன்னது…

//
Anonymous said...

சொறி.பன்னி. பாரி.அரசு,

நீ வேண்டுமானால் இந்தியன் என்று சொல்லிக்காம இரு;மத்தவங்க சொல்லிகொண்டா உம்மூஞ்சிக்கு என்ன?வேலை இல்லாத ஜென்மமா நீ முண்டம்?
//
ஏன்டா அம்பி, நோக்கு வேற வேலையே இல்லையா? தைரியம் இருந்தாப் பேரோட வந்து பேசு....
:(((

கருப்பு சொன்னது…

அன்புள்ள பாரி.அரசு,

நன்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள். சிங்கப்பூரில் இந்தியரின் நிலை நன்றாகவே உள்ளது. பிரதமர் மட்டுமே ஆகமுடியாது. ஆனால் அதிபர் பதவிவரை கொடுக்கின்றனர். சொத்து வாங்குவதில்கூட எந்த பாரபட்சமும் இல்லை.

ஆனால் மலேசியாவில் பூமி பு(லு)த்திரா என்ற பெயரில் மலாய்க்காரர்கள் எதை வாங்கினாலும் விலைக்கழிவு உண்டு. மற்றபடி அதிபர், பிரதமர் என்ன நல்ல கேபினட் அமைச்சர்கூட ஆக முடியாது. ஏதோ போனால் போகட்டும் என வாலாட்டிக் கொண்டிருக்கும் சாமிவாலுக்கு பதவி கொடுத்துள்ளனர். அதைக்கூட அவரால் சுதந்திரமாக செய்ய முடியாத நிலை! ஆமாம் சாமி போடுவதில் ஒன்னாம் நம்பர் அவர்.

பிகு:- சற்றுமேலே ஏதோ ஒரு பாப்பார பரதேசி உங்களை வந்து திட்டிச் சென்றுள்ளது(அஃறினை). அதனை பொருட்படுத்த வேண்டாம். துணிந்து செல்லுங்கள், நிமிர்ந்து நில்லுங்கள்.

வாழ்த்துக்கள்.

ஜெகதீசன் சொன்னது…

மலேசியத் தமிழர்கள் "இந்தி"யர்கள் என ஒருங்கினைவதில் சில நண்மைகளும் இருக்கிறது.....
அவர்கள் "தமிழர்கள்" என்று கூறிக்கொண்டால், "இந்தி"ய அரசு இப்போது தரும் ஆதரவைக்கூடத் தராதே??(ஈழப் பிரச்சணையில் எப்படி எதிர்த் தரப்பை ஆதரிக்கிறதோ அது போல் நடந்திருக்கும்..)

பெயரில்லா சொன்னது…

பாரி.அரசு,

உன்னை மாதிரி சொறி நாய்களெல்ல்லாம் தமிழன் என்று சொல்லிக் கொண்டு திரியும் போது,உண்மையான தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப் படுகிறார்கள்.

ஜெகதீசன் சொன்னது…

//
Anonymous said...

பாரி.அரசு,

உன்னை மாதிரி சொறி நாய்களெல்ல்லாம் தமிழன் என்று சொல்லிக் கொண்டு திரியும் போது,உண்மையான தமிழர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிக்கொள்ளவே வெட்கப் படுகிறார்கள்.
//
ஏங்கானும், நீங்க யாரப் பத்திச் சொல்றேள்ன்னு புரியலையே... ஒரு வேளை கைபர் போலன் கணவாய் வழியா வந்த வந்தேறிகளப் பத்தி சொல்றேளோ?? அவா எல்லாம் தமிழர் இல்லவோய்...அவா "இந்தி"யர்கள்..

புரட்சி தமிழன் சொன்னது…

மலேசிய தமிழ்மக்கள் மக்களாக போராடியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கும் hidraf என்ற மதச்சாயம் பூசிக்கொண்டு முகமதியர் அதிகம் வாழும் நாட்டில் போராட்டம் செய்தால் இவர்களே பிரிவினையை உண்டுபன்னும் முதல் ஆட்க்கலாய் இருக்கிறார்கள் உண்ண உணவும் உடுக்கௌடையும் படுக்க வீடும் படிப்பு வேலை இவை கிடைத்தால் போதும் இவற்றில் ஒன்று குறைவு என்றாலும் போராடலாம் நியாயம் இவர்கள் ஏன் இன்னும் மதச்சாயத்தை பூசிக்கொண்டு பின்னுக்கு செல்கிறார்கள் என்று தெறியவில்லை ஒரு வேலை இது மதக்கலவரமாக மாறினால் நஷ்ட்டம் யாருக்கு சிந்திக்காதவன் புத்திக்கெட்டு போனால் அதில் நம் தலை ஏன் உருளவேண்டும் ஏன் இந்தியர்கள் என்ற போர்வையில் புகுந்துகொண்டு போராடுகிறீர்கள் நீகொவிலுக்கு போகாமலும் உன் ஜாதி மத அடையாளங்களும் இல்லாமல் வாழ்ந்தால் உனக்கு என்ன பிரச்சினை இருக்கப்போகிறது ஜாதி மதம் சாமி இதை பின்பற்றவில்லை என்றால் நீ செத்தாவிடுவாய் அப்படியென்றால் நீ அவற்றை பின்பற்றினால் இப்போதே செத்துவிடுவாயே வன்முறை பாதுகாப்பு கருதி சுட்டுத்தள்ளினால் என்ன செய்யமுடியும் பரலோகத்தில் இருந்து சிவன் உன் உயிரை திருப்பி அனுப்புவானா இல்லை பிரம்மா புத்துயிர் கொடுப்பாரா ஆக்ரோஷப்படாமல் அடைதியாக சிந்தித்தால் தெறியும்

புரட்சி தமிழன் சொன்னது…

//ஜெகதீசன் said...
மலேசியத் தமிழர்கள் "இந்தி"யர்கள் என ஒருங்கினைவதில் சில நண்மைகளும் இருக்கிறது.....
அவர்கள் "தமிழர்கள்" என்று கூறிக்கொண்டால், "இந்தி"ய அரசு இப்போது தரும் ஆதரவைக்கூடத் தராதே??(ஈழப் பிரச்சணையில் எப்படி எதிர்த் தரப்பை ஆதரிக்கிறதோ அது போல் நடந்திருக்கும்..)//

இப்படி யெல்லாம் ஒரு யாசக வாழ்வுதேவையா மலேசியாவில் இருக்கும் உனக்கு நரேந்திரமோடியா வந்து உதவப்போகிறான் இந்தியன் என்பதால் சிறு நன்மையும் எவறுக்கும் கிடைக்கவாய்ப்பே இல்லை ஏன் பாக்கிஸ்த்தானில் போய் hindraf ஆரம்பிக்கவேண்டியது தானே.

பிறைநதிபுரத்தான் சொன்னது…

பாரி! மிகவும் மாறுபட்ட முறையில் பிரச்சினையை அலசியிருக்கிறீர்கள்!

எனக்கு தெரிந்த சில உண்மைகளை பகிர்ந்துகொள்கிறேன்"
தமிழகத்திலிருந்து தோட்டத்தொழிளாலர்களாக பிரிட்டிஷாரால் கொண்டுசெல்லப்பட்ட 'ஒன்றுமில்லாத' அப்பாவி தமிழர்கள் சாதியை தங்களோடு கொண்டு சென்றதன் விளைவுதான் - தற்போது மலேசிய இந்தியர்கள் சாதி அடிப்படையில் பிரிந்து வாழ்கிறார்கள் என்பது உண்மை..
மலேசிய இந்திய கங்கிரஸை (ம.இ.கா) - மலேசிய சாதி இந்துக்கள் 'பறையன் கட்சி' என்றுதான் அழைகின்றனர்.
ம.இ.கா விற்கு போட்டியாக டத்தோ பண்டிதனால் துவங்கப்பட்ட 'இந்திய மக்கள் முன்னனி (Indian People Front) ம.இ.கா வில் புறக்கணிக்கப்பட்ட பள்ளர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

மலேசிய இந்தியர்களின் அரசியல் சக்தியாக விளங்கும் மேற்கண்ட இரண்டு கட்சிகளும் தாழ்த்தப்பட்டவர்களின் ஆதிக்கத்தில் உள்ளதால் - சாதி இந்துக்கள் (குறிப்பாக கவுண்டர்கள் - பிள்ளைமார்கள்) இவர்களின் தலைமையை ஏற்க மறுத்து - பலர் சீனர்களை பிரதிநிதிக்கும் கட்சிகளில் கூட ஐக்கியமாகியிருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மலேசியவில் உள்ள தமிழர்கள் நிரந்தரவாசம்பெற்றவர்கள்தான் (Permanant Resident) - மலாய் இனத்தவரைப்போல குடியுரிமை (citizenship) பெற்றவர்கள் அல்ல. அதனால் மலாய் இனத்தவருக்கு கிடைக்கும் சலுகைகளை அங்கு வசிக்கும் தமிழர்கள்/இந்தியர்கள் எதிர்பார்ப்பது சரியா என்று தெரியவில்லை.
மலேசிய தமிழர்களின் பொருளாதர நிலைமை - அங்குள்ள இந்தியர்களைப்போன்று நிரந்தர வாசம் பெற்ற சிறுபான்மை சீனர்களின் பொருளாதர நிலையைவிட பன்மடங்கு - குறைவு.
அதற்கு காரணம் மலேசிய - மலாய் இன அரசின் பாரபட்ச போக்கும் - அதை தட்டிக்கேட்க - சுட்டிக்காட்ட தவறிய கூட்டனியில் அங்கம் வகிக்கும் மலேசிய இந்தியர்களின் தலைமையும்தான் (ம.இ.க).

மஹாதீர் பிரதமரக இருந்தபொழுது - இந்தியர்களின் பொருளாதரம் உயர வேலை அரசிடமிருந்து வாய்ப்பு - தொழிற்கடன் போன்ற சலுகைகளை கேட்காமல் நிறைய கோவில்கள் கட்டிக்கொள்ள அனுமதி கேட்டவர் மான்புமிகு டத்தோ சாமிவேலு.
கோவில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா? வன்முறையில் - குழுச்சண்டையில் - குடிபோதையில் சிக்கித்தவிக்கும் மலேசிய இந்தியர்களை - ஆண்மீகத்தின் மூலம் சிறந்த குடிமகனாக
உருவாக்க முடியும் என்பதால். அதன் விளைவு என்ன தெரியுமா? 8 சதவிகிதம் உள்ள மலேசிய இந்தியர்களுக்காக 17000 கோவில்களாம்.(ஆனால் 60 சதவிகித உள்ள மலாய் இனத்தவருக்கு -4000 பள்ளிவாசல்கள் -http://www.tmmkonline.org/tml/others/108796.htm).
இறக்குமதி செய்யப்பட்ட இந்து(த்வ) பூசாரிகளுக்கு - இத்தகைய கோவில்கள்தான் அடைக்கலம் கொடுத்து வாழவைத்தது.

வந்தேறி பூசாரிகளோ சாமிக்கு மணியடிப்பதை விட்டுவிட்டு -தங்களை 'வாழ வைத்த தெய்வமான' டத்தோ சாமிவேலின் அரசியல் வாழ்விற்கு சாவு மணி அடிக்க
ஆர்வமாக உள்ளனர் என்பது சாமிவேலுக்கு இப்பொழுதுதான் புரிய அரம்பித்திருக்கிறது.

இறுதியாக ஒரு வினா? சாதிவெறியில் சிக்கியிருக்கும் மலேசிய தமிழர்களை ஒரே அமைப்பின் கீழ் ஒன்றினைப்பதற்காக அனைவருக்கும் 'இந்து' என்ற முத்திரை - குத்தியது HINDRAF அமைப்பினர் செய்த தந்திரமா அல்லது தவறா?

தமிழ் குரல் சொன்னது…

அருமையான பதிவு...

இன்னொரு செய்தி... சிங்கபூரில் இருக்கும் மூன்றாம் தலைமுறை தமிழர்கள்... தமிழக தமிழர்களை இழிவாக பார்க்கும் நிலையும் உள்ளது... மேலும் சிங்கபூரில் உள்ள மூன்றாம் தலைமுறை தமிழர்கள்... ஒழுங்காக படிக்கவும் செய்ய மாட்டார்கள்... கார் ஒட்டிவது போன்ற எளிய வேலை பார்ப்பவர்கள் கூட தமிழக தமிழர்களை இழிவாக பார்ப்பார்கள்... அதே நேரம் நன்கு படித்தவர்கள்... சிங்கபூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் போன்றவர்கள்... பார்ப்பனர்களை வேலைக்கு எடுக்க வேண்டாம் எனவும்... பார்ப்பனர்கள்... பிரிவினையை உண்டாக்குவார்கள் எனவும்... அறிவுறுத்துவார்களாம்...

உண்மை என்னவென்றால்... சிங்கபூரில் உள்ள இரண்டாம்... மூன்றாம் தலைமுறை அரைகுறைகள்... மூடர்கள்.... கடவுளின் பெயரை சொல்லிக் கொண்டு... பார்ப்பனர்களின் அடிமையாக இருப்பதை பெருமையாக நினைப்பவர்கள்...

இக்பால் சொன்னது…

சிறந்த பதிவு.

bala சொன்னது…

அரை டிக்கெட் ஜெகதீசன்,

நீ இந்தியன்/இந்து இல்லை என்றால் வேறு யார்?பாகிஸ்தனிய துலுக்கனா?முண்டம் .முதலில் நீ யார் என்பதை உணர்ந்து கொள்.பிரிவினை பேசியே வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான போக்கை விட்டு விடு.அல்ப்பம்.

பாலா

பெயரில்லா சொன்னது…

மலேசியாவிற்கு தமிழகத் தமிழர்கள் எப்படிப் போனார்கள் என்பதல்ல கேள்வி. அங்கு வாழுகின்ற தமிழர்களின் சாதாரண வாழ்வு இன்று கேள்விக்குறியாகிவிட்டது என்பது அடிப்படை உண்மை. கனடாவில் குடியேறியே பிரஞ்சு மக்களின் நல்வாழ்விற்காக பிரஞ்சு மக்கள் மட்டுமல்ல, முன்னாள் அதிபர் பொம்பிடோ பகிரங்கமாக குரல் கொடுத்தார். சோவியத்தில் வாழ்ந்த /வாழுகின்ற ஜேர்மன் தலைமுறையினரை நெருக்கடியில் இருந்து மீட்க ஜேர்மன் அதிபர் ஹெல்முட் ஹோல் கோர்பச்சோவுடன் அரசியல் பேரம் பேசினார். ஏன்?, இந்திய வம்சாவளி பிஜிக்கு அதிபராகத் தேர்ந்தெடுத்ததை அடுத்து ஏற்பட்ட நெருக்கடியில் இந்தியா ஆதரவை வெளிப்படுத்தியது.

இன்று மனித உரிமை குறித்து குரல் எழுப்பப்படும் காலம். இதில் நதி மூலம், ரிஷி மூலம் தேடுவதைத் தவிர்த்து அடிப்படை மனித உரிமைகளை மலேசியத் தமிழர்கள் பெற இந்திய குரல் கொடுப்பதில் தவறில்லை. இந்த விதி உலகத்தில் வாழும் அனைத்து உரிமை இழந்த மனிதர்களுக்கும் பொருந்தும்.


ஒரு ஈழத்தமிழன்

Eswarvaddam சொன்னது…

I wish to clarify one aspect of this article.Ceylon Tamil brought
by Britishers to Malysia & Singapore as coolies and clerical servants but not as slave like Indians.

ஜெகதீசன் சொன்னது…

//
bala said...

அரை டிக்கெட் ஜெகதீசன்,

நீ இந்தியன்/இந்து இல்லை என்றால் வேறு யார்?பாகிஸ்தனிய துலுக்கனா?முண்டம் .முதலில் நீ யார் என்பதை உணர்ந்து கொள்.பிரிவினை பேசியே வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான போக்கை விட்டு விடு.அல்ப்பம்.

பாலா
//
தரை டிக்கட் பாலா,
நீ போடும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரியும் யார் அல்பம் என்று....
நான் இந்தியனும் இல்லை. இந்துவும் இல்லை.... தமிழன் மட்டுமே...

ஜெகதீசன் சொன்னது…

அரசு,
நீங்களும் கோட்டா வைத்துக்கொள்ளலாமே பாலா போன்ற பைத்தியங்களின் பின்னூட்டங்களுக்கு(கோவி.கண்ணன் செய்வது போல ஒன்று அல்லது இரண்டு மட்டும் வெளியிடலாமே..)
:P

TBCD சொன்னது…

அதையெல்லாம்..விடுங்க பாலா...

குறுக்க ஓடுறதை எப்ப கழட்டுறீங்க...நாள் தேதி சொல்லுங்க,...விழா எடுப்போம்..

மறுபடியும் நினைவுறுத்துறேன்...நீங்கள் நலம் பெற....

1. மருத்துவரைப் பார்க்கவும்..
2. குறுக்கே இருப்பாதை கழட்டவும்...

//*bala said...
அரை டிக்கெட் ஜெகதீசன்,

நீ இந்தியன்/இந்து இல்லை என்றால் வேறு யார்?பாகிஸ்தனிய துலுக்கனா?முண்டம் .முதலில் நீ யார் என்பதை உணர்ந்து கொள்.பிரிவினை பேசியே வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான போக்கை விட்டு விடு.அல்ப்பம்.

பாலா*//

கருப்பு சொன்னது…

//குறுக்க ஓடுறதை எப்ப கழட்டுறீங்க...நாள் தேதி சொல்லுங்க,...விழா எடுப்போம்..
//

ஜெகதீசன்,

பாலா போன்ற பாப்பார பரதேசிகள் குறுக்கே ஓடுறதை கழட்டிட்டா பின் எப்படி பார்த்தவுடனே பிரம்மா மூஞ்சிலேருந்து பிறந்த ஜந்துன்னு கண்டு பிடிப்பது? எனவே அவா கழட்ட மாட்டா!!!

பெயரில்லா சொன்னது…

அரை டிக்கெட் பாலா என்ற பெயரில் எழுதுவது கி.அ.அ.அ அனானி புகழ் பம்புடன் பாலா, சல்மா அயூப் காமக்கதை புகழ் ஜெயராமன் மற்றும் வலையுலக நோண்டுல்கர் புரளி மனோஹர் இந்த மூவரும்தான்!!!

பெயரில்லா சொன்னது…

//மலேசியவில் உள்ள தமிழர்கள் நிரந்தரவாசம்பெற்றவர்கள்தான் (Permanant Resident) - மலாய் இனத்தவரைப்போல குடியுரிமை (citizenship) பெற்றவர்கள் அல்ல. அதனால் மலாய் இனத்தவருக்கு கிடைக்கும் சலுகைகளை அங்கு வசிக்கும் தமிழர்கள்/இந்தியர்கள் எதிர்பார்ப்பது சரியா என்று தெரியவில்லை.//

பிறநதி புரத்தான் ஒரு இஸ்லாமியர் என்று நினைக்கிறேன். அதான் படாவி அரசுக்கு ஆதரவாக பரிந்து பேசி இருக்கிறார்.

மலேசிய இந்துக்களின் ஐசி(கார்டு) வாங்கி பாருங்கள். அது குடியுரிமைக் கார்டுதான். நிரந்தரவாசத் தகுதி அல்ல. முழுக் குடியுரிமைதான். அதனாலேயே தேர்தலில் பங்கேற்க முடிகிறது. பி.ஆர் தேர்தலில் பங்கேற்க முடியாது.

அடுத்து மக்கள் தொகை வாரியாக மசூதி கணக்கெடுப்பு எல்லாம் எடுத்திருக்கிறார் பிரைநதி. தன்னுடைய இஸ்ல்காமிய மட்த வெறியை இங்கும் நுழைத்து இருக்கிறார். இவர் சொன்ன மக்கள் தொகை கணக்கெடுப்பும் தவறு.

அடுத்து மசூதியை அரசே தெருவுக்கு தெரு கட்டிக் கொடுக்கிறது. ஆனால் ஊருக்கு ஊர் அல்லாமல் நகருக்கு ஒன்றாக தமிழர்கள் தங்கள் காசு போட்டு சொந்த நிலங்களில் கட்டினால்கூட அதனை இடித்துத் தள்ளுகிறது இந்த பாசிச வெறி பிடித்த இனவாத அரசு.

பாப்பாந்தான் ஜாதி சார்பா எழுதுறான்னா இந்த இஸ்லாமியப் பசங்களையும் நம்ப முடியலை. இந்தியன், த்ஹமிழன் அடிபடுறானே என்று எங்காச்சும் கண்ணீர் வடிச்சு எழுதி இருக்கானா பாருங்க!!!

பெயரில்லா சொன்னது…

சாரு அருமை.நான் முன்ன மலேசியாவுல வேலை பாத்தேன்.அங்க உள்ள தமிழர்கள் நம்ம தமிழக தொழிலாளர்களை படுத்துற கொடுமை சொல்லிமாளாது.அடித்து உதைத்து சூடு போட்டு அய்யோ,சொல்லமுடியாத கொடுமைக்குள்ளாக்கினார்கள்.காந்தி யார் என்றே தெரியாதவர்கள் இன்று காந்தி படத்தை கையில் ஏந்துவதுதான் வேடிக்கை.மலேசிய தமிழ்பெயர் தாங்கிகள் அடிவாங்கியது உண்மையிலேயே மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு நொந்துவந்த தமிழக மக்களுக்கு மகிழ்சி தான்.இது தெரியாமல் இங்கே அழுதுகொண்டிருக்கும் தமிழக அரசியல் வியாதிகளை நினைத்து வெட்கப்படுகிறேன்.

TBCD சொன்னது…

அய்யா நீங்க சொல்லுறவங்க எல்லாம் வசதியானவங்களா இருப்பாங்க. ஆனா, இப்ப பிரச்சனைக்குள்ளாகியிருப்பது, கடை நிலை ஊழியம் பார்ப்பவர்கள். அவர்கள் இங்கே பெயருக்கு மலேசியர்கள் மற்ற விதத்திலே அவர்கள் உரிமை மறுக்கப்பட்டவர்கள். பிறந்த நாட்டிலே அடிமையானவர்கள்.

//நிஜாம் கான். said...

சாரு அருமை.நான் முன்ன மலேசியாவுல வேலை பாத்தேன்.அங்க உள்ள தமிழர்கள் நம்ம தமிழக தொழிலாளர்களை படுத்துற கொடுமை சொல்லிமாளாது.அடித்து உதைத்து சூடு போட்டு அய்யோ,சொல்லமுடியாத கொடுமைக்குள்ளாக்கினார்கள்.காந்தி யார் என்றே தெரியாதவர்கள் இன்று காந்தி படத்தை கையில் ஏந்துவதுதான் வேடிக்கை.மலேசிய தமிழ்பெயர் தாங்கிகள் அடிவாங்கியது உண்மையிலேயே மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு நொந்துவந்த தமிழக மக்களுக்கு மகிழ்சி தான்.இது தெரியாமல் இங்கே அழுதுகொண்டிருக்கும் தமிழக அரசியல் வியாதிகளை நினைத்து வெட்கப்படுகிறே//

Related Posts with Thumbnails