மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
மலேசிய தமிழர்களை பொருத்தவரை மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள் என்பது மிகவும் வேதனையான உண்மை. மலேசியாவில் போராட்டமும் அதன் காரணங்களும் இந்த பதிவில் மலேசியாவை சேர்ந்த பதிவர் .:: மை ஃபிரண்ட் ::. மஹாதீர் ரொம்ப நல்லவர், தொலைநோக்கு பார்வை உள்ளவர் அப்படியெல்லாம் புகழ்நது தள்ளியிருக்கிறார். உண்மையில் மஹாதீரின் குள்ளநரிதனத்தை புரிந்துக்கொள்ளமளவுக்கு கூட சிந்தனையற்ற மக்களாகவே மலேசிய தமிழர்கள் உள்ளனர்.
மலேசிய தமிழர்களின் வாழ்வியல் மோசமானதற்க்கு இன்றைக்கு படாவி பதவியில் இருப்பதால் வந்த பிரச்சினையா?
மலேசிய தமிழர்களின் வாழ்வியலை சிதைக்க மஹாதீர் காலத்தில் தான் திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஓர் இனத்தின் வாழ்வியலை சிதைப்பதற்க்கு முதலில் அந்த இனத்தின் மொழியில் தான் கைவைப்பார்கள், அதை தெளிவாக செய்தவர் மஹாதீர். ஆம்! அவருடைய ஆட்சி காலத்தில் தான் மலேசிய நாணயத்தில் (Currency) இருந்து தமிழ் நீக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக அரசின் அனைத்து தளங்களிலும் தமிழை நீக்கினார் (அ) இரண்டாம் நிலைக்கு தள்ளினார்.
இவருடைய ஆட்சி காலத்தில் தான் அதிகமான தமிழ் பள்ளிகள் மூடு விழா கண்டது.
ஓரு புறம் தமிழை அழித்துக்கொண்டே தமிழர்களை ஆட்டுமந்தைகளாக்க சாமிவேலு என்கிற கைக்கூலியை மிக நன்றாக வளர்த்தெடுத்தார். தமிழகத்தை விஞ்சம் அளவுக்கு சாமிவேலுக்கு பிறந்தநாள் விழாக்கள் கொண்டாப்பட்டது. கட்வுட்டுகள், பேனர்கள், முழு பத்திரிக்கை விளம்பரம் என்று சாமிவேலு வளர்த்தெடுக்கப்பட்டார். புதிதாக இன்னுமொரு கைக்கூலி கிடைத்தான் அவன் தான் பட்டுக்கோட்டை அருகேயுள்ள பொன்னவராயன்கோட்டை என்கிற கிராமத்தை சேர்ந்த 'பொன்னுசாமி' என்பவன். அவனுக்கு பதவிகள் வழங்கப்பட்டது (சபாநாயகர் பதவி என்று நினைவு! சரியாக நினைவில் இல்லை தெரிந்தவர்கள் மறுமொழியில் தெரியப்படுத்தவும்).
மலேசியாவில் பெரும்பான்மை தமிழர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஆனால் இவர்களுடைய அரசியல் நிர்வாகத்தை கையெடுத்திருப்பவர்கள் பிராமணர்கள், பிள்ளைமார்கள், அகமுடையார்கள். இந்த ஆதிக்க சாதியினர் அரசு இயந்திரத்துடன் சேர்ந்து தமிழர்களை அழிப்பதற்க்கு துணையாக நிற்கின்றனர்.
'பூமி புத்திரா' என்கிற திட்டத்தின் தொடக்கமே மஹாதீர் தான். இப்போதைய படாவி வேறொரு வகை சிக்கலில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார். மஹாதீர் தொடங்கி வைத்த மலாய் அல்லாத மாற்று இன ஓடுக்குமுறை செயல்திட்டத்தை இவரால் பின்னணியில் நகர்த்த இயலவில்லை. சிங்கப்பூரும், சீனாவும் சீனர்களின் மீதான ஓடுக்குமுறையை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டன.
இரண்டாவது அதிகாரம் படாவியிடம் இருந்தாலும் படாவியின் மருமகனே மலேசியாவில் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு உள்ளவராக இருக்கிறார்.
மலேசியாவில் வெளிப்படையாக மக்களாட்சி ஜனநாயகம் என்று சொன்னாலும். மலேசியாவின் ஓவ்வொரு மாநிலத்திற்க்கும் இன்றைக்கும் மன்னராட்சி தான் நடைபெறுகிறது. உதாரணத்திற்ககு ஜொகூர் பாரு என்றால் அதற்க்கு ஜொகூர் மன்னர் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கிறார். அதே போல கோலாலம்பூர் இருக்கிற சிலாங்கூர் மாநிலத்திற்க்கு சிலாங்கூர் மன்னர் இருக்கிறார். இந்த சிலாங்கூர் மன்னர் தனது பிறந்த நாளுக்கு தனக்கு வாலாட்டுகிற கைக்கூலிகளுக்கு தருகிற பட்டம் தான் 'டத்தோ' என்கிற பட்டம்.
அப்போ 'டத்தோ சாமிவேலு' எவ்வளவு தூரம் கைக்கூலியாக இந்த மன்னர்களுக்கு இருக்கிறார் என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.
இன்னும் கொஞ்சம் வரும்...
செவ்வாய், 11 டிசம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
10 comments:
போட்டுத் தாக்கு....முகத்திரைகள் கிழியுதுப் போட்டுத் தாக்கு....
போட்டுத் தாக்கு....உன்மைகள் வெளிவருது போட்டுத் தாக்கு....
பாரி அரசு,
மைபிரண்டு உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தன்னை கைது செய்து குடியுரிமையை பறித்து விடுவார்களோ என்று அஞ்சி அவ்வாறு பொய்யாக பதிவு எழுதி இருக்கிறார். பாவம் அவரை விட்டு விடுங்கள்.
மலாய் மற்றும் முஸ்லின் இனவெறி கொண்டவர்களில் முதன்மையானவர் மஹாதீர். அதற்கடுத்து அன்வர் இப்ராஹிம். அவரும் சளைத்தவர் இல்லை. இப்போதுள்ள படுபாவி சாரி படாவி பினாங்கு மாநிலத்தில் இருந்து வந்தவர். பினாங்கில் மலாய்க்காரர்களின் ப(ரு)ப்பு வேகாது. அங்கே எப்போதுமே சீனர்களின் கைதான் மேலோங்கி நிற்கும். தற்போதைய முதலைச்சர்கூட சீனர்தான். மஹாதீரின் அம்மா இந்து முஸ்லிம் என்று படித்து இருக்கிறேன். அப்படி இருந்தும் அவரின் புத்தி மலாய் முஸ்லிம்களை முன்னேற்றுவதிலேயே இருந்தது. அவரின் மகன்கள் புரோட்டோன் காரின் பார்ட்னர்.
படாவியின் மகன் டிஜி, மேக்ஜிஸ், செல்காம் போன்ற கைபேசி நிறுவனங்களின் பார்ட்னர்.
தலித் டத்தோ சாமிவேலுவின் மகன் மைக்கா ஹோல்டிங்சில் டைரடக்கர். இதில் காசு போட்ட மக்கள் அப்பணத்தை கேட்கப்போக ஆள் வைத்து அடித்தார் சாமிவேலு. மைக்காவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று பச்சப் பொய்யைச் சொன்னார் இந்த தலித்.
இப்படி பெரிய பதவிகளில் இருந்து கொண்டு லஞ்சம் வாங்கி அரசு சொத்தை ஏமாற்றி சந்தர்ப்ப வாத பிழைப்பு நடத்துபவர்கள்தான் இவர்கள்.
சமீபத்தில் சிவாஜி படத்தினை பிரமிட் நடராஜனுடன் சேர்ந்து வாங்கி மலேசியா முழுவதும் விநியோகம் செய்தது டத்தோ சாமிவேலுவும் அவர் மகன் வேல்பாரியும்தான்.
சமீபத்தில் கொலையான சுஜாதா என்ற தொலைக்காட்சி நடிகை மேட்டர் தெரியுமா? அவர் இந்த வேல்பாரி என்ற ரவுடிக்கு அந்தரங்க காரியதரியாக வேலை பார்த்தார். அப்பெண்ணை மேட்டருக்கு கூப்பிட அவர் முடியாது என்று சொல்ல, பானத்தில் மயக்க மருந்தைக் கொடுத்து தூக்கிச் சென்று வேலையை முடித்து நீல வண்ணப்படமும் எடுத்து அவரை கொலையே செய்து விட்டான் இந்த பாவி. அக்கொலையை மூடி மறைக்க அரசாங்கமும் அவனுக்கு உதவி செய்கிறது இன்னும்!
தலித் பதவி பதவிகளில் இருக்கும் பெரிய பெரிய மலாய்க்காரர்கள், சுல்தான், பிரதமர், அமைச்சர்களுக்கு அடிவருடுபவர்களுக்கும் ()()தாங்குபவர்களுக்கும் கொடுக்கப்படும் பதவி.
டத்தோ பதவிகளில் இருப்பவர்கள் பல சலுகைகளை அனுபவிக்கின்றார்கள். ஏலங்கள், உரிமங்கள், அனுமதிகள் போன்றவற்றில் சிறப்பு கவனிப்பு கிடைக்கிறது இவர்களுக்கு!
எனது சொந்தக்காரர் ஒருவர் டத்தோவாக இருக்கிறார்!!!
வீட்டுக்கு வீடு மசூதி கட்டிக் கொடுக்கும் மலாய்க்கார இனவாத அரசு சொந்த நிலத்தில் அனுமதியுடன் கட்டப்பட்டிருக்கும் கோயில்களை எந்தவித காரணமும் இன்றி இடித்துத் தள்ளுகிறது. அது கண்களுக்கு தெரியவில்லையாமா மைபிரண்டுக்கு? அவர் மை பிரண்டு இல்லை, மை எனிமி.
//தலித் பதவி பதவிகளில் இருக்கும் பெரிய பெரிய மலாய்க்காரர்கள், சுல்தான், பிரதமர், அமைச்சர்களுக்கு அடிவருடுபவர்களுக்கும் ()()தாங்குபவர்களுக்கும் கொடுக்கப்படும் பதவி.//
டத்தோ பதவி என திருத்தி வாசிக்கவும்.
தமிழர்கள்/இந்தியர்கள் பின் தங்கிய நிலையை பற்றி விவாதிக்கும் போது ஏன் சிலர் கோயிலை இடித்துவிட்டார்கள் என்று புலம்புகின்றார்களோ தெரியவில்லை. 7000 கோயிலை இடித்துவிட்டார்களாம். 7000 சாமிகளில் ஒரு சாமிக்கு கூடவா தன் கோயிலை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை?
தன் கோயிலையே காப்பாற்றிகொள்ள முடியாத சாமிகளா இந்த ஆசாமிகளை காப்பாற்றபோகின்றது? பத்துமலைக்கும், பினாங்கிற்கும் காவடி எடுக்கும் நேரத்தையும், பணத்தையும் - படிப்பிற்கும், ஈடுபட்டு இருக்கும் தொழிலிற்கும் பயன் படுத்துங்கள். உங்கள் முன்னேற்றத்தை எவராலும் தடுக்க முடியாது.
சாதிகள், சமயம், அரசியல், ஒற்றுமையின்மை ஆகியவைகளே தமிழர்களின் பின் தங்கிய நிலைமைக்கு காரணம்.
மலேசியாவில் வெளிப்படையாக மக்களாட்சி ஜனநாயகம் என்று சொன்னாலும். மலேசியாவின் ஓவ்வொரு மாநிலத்திற்க்கும் இன்றைக்கும் மன்னராட்சி தான் நடைபெறுகிறது. உதாரணத்திற்ககு ஜொகூர் பாரு என்றால் அதற்க்கு ஜொகூர் மன்னர் தான் முக்கியமான முடிவுகள் எடுக்கிறார்- பாரி அரசு
இது உண்மையல்ல!
மலேசிய மாநில மன்னர்கள் எல்ல்லாம் 'ரப்பர் ஸ்டாம்ப்' - பல் பிடுங்கப்பட்ட பாம்புகள் மாதிரிதான்.
மலேசிய பிரதமரின் ஆசிர்வாதம் இல்லையென்றால் மன்னர்கள் ஒன்றும் 'புடுங்க' முடியாது. உதாரணமாக, மஹாதீ(ர)ரை எதிர்த்த சாலைவிதிகளை மீறி பயணம் செய்து கொண்டிருந்த ஜொஹூர் மன்னரின் கார் டயரிலிருந்து - போக்குவரத்து போலீசார் பலமுறை காற்றை பிடுங்கிவிட்டிருக்கிறார்களாம் -- அதை எதிர்த்து ஜொஹர் மன்னர் ஒன்றும் புடுங்க மூடியவில்லை என்பது வரலாற்று உண்மை..
வீட்டுக்கு வீடு மசூதிபட்டிக் கொடுக்கும் மலாய்க்கார இனவாத அரசு - பாஸ்கார்..
HINDRAF ஆல் சுட்டிக்காட்டப்படும் சிலாங்கூர் மாநில பாடாங் ஜாவா கோவில் இடிப்பு தினத்தன்று - அனுமதி பெறத பள்ளிவாசல் ஒன்றும் - 32 குடீயிருப்புகளும் இடிக்கப்பட்டதாம்.
HINDRAF - பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடாக எதிர்பார்ப்பது மொத்தம் 4 ட்ரில்லியன் டாலர்-
மலேசியா வாழ் இந்து தலை ஒவ்வொன்றுக்கும் - பத்து மில்லியன் டாலர் தருவதாக கூறியிருக்கிறதாம்.
(கணக்கில் 'வீக்'கானவர்களுக்கு: ஒரு ட்ரில்லியன் - 1 க்கு பக்கத்தில் 12 பூஜ்ஜியங்கள் போட்டுக்கொள்ள்ளுங்கள்)
நீங்க சொல்வதில் சிலவற்றைத் தான் ஒத்துக் கொள்ள முடிகிறது.
1. மஹாதிர் காலத்திலே நாங்க பேசக் கூட வாய்ப்பில்லாமல் இருந்தது. யாரும் பேச முற்பட்டாலும், அமைதியாக்கப்பட்டர்கள்.
2.மலேசிய இந்தியர்களில் பெரும்பாலோர்க்கு படிப்பறிவு இல்லை. படிக்காத பாமரன், கோவிலை இடிக்கும் போது கொதித்துத் தான் போகிறான். மலேசிய அரசின் அரசியல் தந்திரங்கள் அவர்களுக்கு புரிவதில்லை. அதனாலே அவர்கள் கோவிலுக்காக போராடுகிறார்கள்.
மதத்திற்காகவாவது போராடுகிறார்களே என்று நான் மகிழ்கிறேன்.
இதற்கிடையில், மக்கள் தங்கள் மேலும் கல்வி, பல பிரச்சனைகளை வெளிக் கொணர ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்னாடி, யாரும் பேசியதே இல்லை.
இது ஒரு ஆரம்பம் என்றே சொல்ல முடியும். இன்னும் தெளிவு வரும் என்றே நான் நினைக்கிறேன். இதற்கடுத்த போரட்டத்தை எடுத்துச் செல்கிறவர்கள் மக்களுக்கு இன்றியமையாத கல்வி போன்ற விசயங்களை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன். ஹிந்துராஃ இது போன்ற பிரச்சனைகளையும் எடுத்துரைத்திருக்கிறது. ஆனால், அது ஏனோ, தவறான பாதையில் எப்படியோ போனது போல் ஒரு தோற்றம் தருகிறது.
அப்பாவிகளாக இருந்ததற்கு மக்களை குறைச் சொல்ல முடியாது. காலம் மாறும், மக்களும், மாறுவார்கள் என்றே நான் நம்புகிறேன்.
பி.பு,
இது அனைத்துலக கவணத்தை ஈர்க்க போடப்பட்ட வழக்கு. இதில் அவர்கள் பணம் வரும் என்று எண்ணி இறங்கவில்லை, என்றே எல்லோரும் சொல்லுகிறார்கள்.
மலேசிய அரசும் நீங்கள் சொன்னது போல சொல்லி தான் எள்ளி நகையாடுகிறது... :(
/*பிறைநதிபுரத்தான் said...
HINDRAF - பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இழப்பீடாக எதிர்பார்ப்பது மொத்தம் 4 ட்ரில்லியன் டாலர்-
மலேசியா வாழ் இந்து தலை ஒவ்வொன்றுக்கும் - பத்து மில்லியன் டாலர் தருவதாக கூறியிருக்கிறதாம்.
(கணக்கில் 'வீக்'கானவர்களுக்கு: ஒரு ட்ரில்லியன் - 1 க்கு பக்கத்தில் 12 பூஜ்ஜியங்கள் போட்டுக்கொள்ள்ளுங்கள்)*//
கருத்துரையிடுக