ஓரு மொழி உருவாகிற வரலாறும், அதன் பரிணாம வளர்ச்சியும் பற்றி பேச நிறைய இருக்கிறது. ஓரு சமூகத்தின் தாய் மொழி என்பது அந்த சமூகத்தின் ஆணிவேர் அதுவே அந்த சமூகத்தை தாங்கி நிற்கிறது.
வெறும் ஓலிகளையும், ஓசைகளையும் எழுப்ப தெரிந்த விலங்காக இருந்த மனிதன் பேசுவதற்க்கான முயற்சியில் ஓலிகளை வேறுப்படுத்தவும் அதற்க்கான குறியீடுகளை அட்டவணைப்படுத்தவும், ஓலிக்குறியீடுகளுக்கான வரி வடிவங்களை கண்டறிந்ததும் தான் ஓரு மொழியின் அடிப்படை நிகழ்வு. இந்த பரிணாம வளர்ச்சி ஏதோ திடீரென்று நிகழவில்லை பலநூறு ஆண்டுகள் தொடர்ந்த வளர்ச்சியை நோக்கிய போராட்டம்.
இங்கே ஓலிகளானது, அந்த மனிதன் வாழும் சூழலின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக இருந்தது. (உதாரணத்திற்க்கு குளிர் பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன் எழுப்பிய ஓலிகள், வெப்ப பிரதேசங்களில் வாழ்ந்த மனிதன் எழுப்பிய ஓலிகளிலிருந்து மாறுப்பட்டிருந்தது).
அடுத்தக்கட்டமாக சொற்களின் உருவாக்கம் - ஓவ்வொரு சொல்லும் பல மாற்றங்களுக்கு உட்ப்பட்டு தொடர்ந்து பரிணாமம் அடைகிறது. அந்த சொற்க்கள் ஓரு குறிப்பிட்ட சமூகத்தின் வரலாற்றை, அறிவியலை, வாழ்வியலை, நிகழ்வுகளின் குறிப்புகளை, அனுபவ அறிவியலை உள்பொதிந்து வைத்துள்ளது.
அ - உயிரின் முதல் ஓலி
ம் - மெய்யின் கடைசி ஓலி
மா - விரி (அ) பரந்த
அம்மா - உயிர், மெய்யோடு விரிவாகும் உயிர். இப்படி ஓவ்வொரு சொல்லும் தனக்குள் பொருள் கொண்டிருக்கிறது.
குறுவை - குறுகிற காலத்தில் செய்யப்படும் விவசாயம். இங்கே காலத்தின் குறிப்பு.
குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல்,பாலை - நிலத்தின் தன்மைகள் பற்றிய குறிப்பு.
இப்படி எண்ணற்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
ஓரு சமூகம் பிற சமூகத்துடன் ஊடாடும் போது அந்த புதிய சமூகத்தில் தனக்கு தேவையானவற்றை வரித்துக்கொண்டு மேலும் பரிணாம வளர்ச்சி அடைகிறது.
இவ்வாறான வளர்ச்சியில் நிகழ்வுகளின் குறிப்புகள் மற்றும் அனுபவ சிதறல்கள் வழக்கு மொழிகளாகவும், பழ மொழிகளாகவும் அந்த மொழிக்கு வளம் சேர்க்கிறது.
உலகத்தின் மிகப்பெரிய நூலகமான லைப்ரரி ஆப் காங்கிரஸ், போயி உட்கார்ந்து அறிவை வளர்க்க முடியாது. அப்படி வாழ்நாளெல்லாம் படித்தாலும் தனி மனிதனால் பெறப்படுகிற அறிவு என்பது வெறும் ஏட்டுசுரைக்காய் தான்!
ஓவ்வொரு மனிதனும் பள்ளிகளில் கற்பதை விட தனது சமூகத்தில் இருந்து கற்பது அதிகம். அந்த சமூகம் தனது எதிர்கால வாரிசுகளுக்கு மொழியின் ஊடாகவே தனது நிலத்தை பற்றிய, வாழ்வியலை பற்றிய, தனது அனுபவங்களை சேகரித்து வைக்கிறது.
ஓரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அதன் தாய் மொழி வளர்ச்சியில் உள்ளடங்கி இருக்கிறது. அதைக்கொண்டே அந்த சமூகத்தின் அறிவு திறன், கற்றல் திறன், அறிவு சுற்றுப்பாதை ஓட்டத்தின் புள்ளிகள் என பலவற்றை குறிப்பிட முடியும்.
தொடரும்...
செவ்வாய், 18 டிசம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 comments:
//
தொடரும்...
//
தொடருங்கள்!!!...
////
ஜெகதீசன் said...
தொடரும்...
//
தொடருங்கள்!!!...////
நாங்களும் பின் தொடருகிறோம்
//ஓரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது அதன் தாய் மொழி வளர்ச்சியில் உள்ளடங்கி //
அய்யோ, அப்படி பாத்தா தமிழர்கள்,தாடிக்கார தீவிரவாதி சொன்னது போல் கேவலமான காட்டுமிராண்டி கும்பல் என்பது போல் வருகிறதே?
//ஓவ்வொரு மனிதனும் பள்ளிகளில் கற்பதை விட தனது சமூகத்தில் இருந்து கற்பது அதிகம். //
பாரி.அரசு ஐயா,
மஞ்ச துண்டு ஐயாவும், கருப்புத்துண்டு ஐயாவும் தெலுங்கு சமூக தாடிக்கார ஐயாவிடம் பாடம் படிச்சு தன் சொத்துகளை உயர்த்திக் கொண்டார்களாம்
தொடருங்கப்பா,
இதைப்பத்தி எனக்கு என்று சில எண்ணங்கள் உண்டு, தேவைப்படும் இடத்தில் தேவைப்பட்டால் எழுதுகிறேன்.
பாலா!
உங்களின் இரண்டு பின்னூட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த பதிவின் நோக்கம் திசை மாறும் என்பதால் தொடர்ந்து உங்களின் பின்னூட்டங்கள் வெளியிட இயலாது. மன்னிக்கவும்!
உங்க திராவிட மொழியை எங்காத்துல பேசினால் அதற்கும் குத்தம் சொல்லுவீர் என்று தெரிந்துதான் நாங்கல்லாம் எங்களவாவுக்குன்னு தனி பாஷை வெச்சுண்டோம்.
இந்தி படிக்க வேனாம்னு சொல்லிட்டு உங்க பேத்திகளை மேட்டர்டேயில் படிக்க வெச்சு புளகாங்கிதம் அடையுங்கோ!
தொடர்ந்து எழுதுங்கள் . மொழியை, அதன் கலாச்சாரத் தாக்கத்தை அறிய ஆவல் . மொழியை, ஒரு ஊடக இயந்திரமாகவே நினைத்திருந்த எனக்கு உங்கள் மற்றும் பலரின் கருத்துக்கள் ஒரு தாக்கத்தை , மாற்றத்தை உருவாக்குகின்றன.
//உலகத்தின் மிகப்பெரிய நூலகமான லைப்ரரி ஆப் காங்கிரஸ், போயி உட்கார்ந்து அறிவை வளர்க்க முடியாது. அப்படி வாழ்நாளெல்லாம் படித்தாலும் தனி மனிதனால் பெறப்படுகிற அறிவு என்பது வெறும் ஏட்டுசுரைக்காய் தான்!
ஓவ்வொரு மனிதனும் பள்ளிகளில் கற்பதை விட தனது சமூகத்தில் இருந்து கற்பது அதிகம். அந்த சமூகம் தனது எதிர்கால வாரிசுகளுக்கு மொழியின் ஊடாகவே தனது நிலத்தை பற்றிய, வாழ்வியலை பற்றிய, தனது அனுபவங்களை சேகரித்து வைக்கிறது.//
சரியான கருத்து நானும் ஆமோதிக்கிறேன்.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி...
//உங்க திராவிட மொழியை எங்காத்துல பேசினால் அதற்கும் குத்தம் சொல்லுவீர் என்று தெரிந்துதான் நாங்கல்லாம் எங்களவாவுக்குன்னு தனி பாஷை வெச்சுண்டோம்.//
உங்கவா எல்லாம் அடையாளத்தையெல்லாம் மறைச்சுட்டு வாழறதா ஒரு அக்கா ஜல்லி அடிச்சிண்டிருக்கா. அவா கிட்ட போய் சொல்லுங்க ஓய்.
வாருங்கள் ஜெகதீசன் மற்றும் கோவி!
வாசிப்பிற்க்கும், ஊக்கத்திற்க்கும் மிக்க நன்றி!
வாருங்கள் மோகன்தாஸ்!
உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளுங்கள்... மேலும் பல பரிமாணங்கள் கிடைக்கலாம்!
ஊக்கத்திற்க்கு நன்றி!
நல்ல முயற்சி வாழ்த்துக்கள். கட்டாயம் தொடருங்கள்.
மற்றபடி.. வரும் பாலா, அனானி பின்னூட்டங்களைப் பார்த்தால் அவர்களுக்கு
http://masivakumar.blogspot.com/2007/12/blog-post.html - ல் வந்த இந்த பின்னூட்டம் தான் எனக்கு பொருத்தமாகத் தோன்றுகிறது..
Vajra said...
வயித்தெரிச்சலுக்குச் சிறந்த மருந்து எது ?
அ. ஜெலூசில்
ஆ. ஈனோ
இ. புதீன் ஹரா
ஈ. டைஜீன்
உ. தற்கொலை
கருத்துரையிடுக