புதன், 26 டிசம்பர், 2007

இணைய தொழில்நுட்ப அரசியல்...!

இணையம் (Internet) என்பது கடந்த பத்தாண்டுகளில் அதீத வளர்ச்சிக் கண்டுக்கொண்டிருக்கிற சூழலில்... தொழில்நுட்பங்களை பற்றிய கற்பனை வாதங்கள் மக்களை அந்த தொழில்நுட்பத்தில் அந்நியப்படுத்தி வைக்கிறது.

"இதெல்லாம் உனக்கு புரியாது..." என்கிற மேட்டிமை தனமான வார்த்தைகள் அல்லது "இதில் ஏதோ உள்ளே வேறொன்றிருக்கிறது..." என்கிற கட்டமைப்பு மக்களை தொழில்நுட்பத்திலிருந்து அந்நியப்படுத்துகிறது.

அறியாமையை விளைவித்தலில் தான் அதிகாரம்(ஆளுமை) கட்டமைக்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதத்தில்,உபநிடத்தில் சொல்லியிருக்கிறது என்று கட்டுக்கதைகளையும், புரட்டுகளையும் பேசிக்கொண்டிருந்த குள்ளநரி கூட்டத்தை சிந்தனையாளர்களும், தந்தை பெரியாரும் கேள்விகள் எழுப்பி வேதத்தில் எதுவும் இல்லை எல்லாம் புரட்டுகளும், புனைக்கதைகளும் தான் என்பதை மக்களிடம் கொண்டுச்சேர்த்தனர். குள்ளநரிக்கூட்டம் மீண்டும் கிளம்பியது அப்படியெல்லாம் நேரிடையாக மொழிப்பெயர்த்துச்சொன்னால் விளங்காது. மறைப்பொருள் இருப்பதாக புலம்பித்திரிந்தார்கள். புதிய புனைவுகளை புலம்பித்திரியும் கூட்டம் இன்றைக்கும் இருக்கதான் செய்கிறது.

அப்படியாக இன்றைக்கு இணையத்தொழில்நுட்பங்களில் ஏதோ உள்ளிருந்து இயங்குவது போல கற்பிதம் செய்வித்தலிலும், வலைப்பதிவுகள் மிக கடினமான தொழில்நுட்பம் "அதெல்லாம் உங்களுக்கு எளிதாக விளங்காது..." என்று கட்டமைப்பதிலும்... தொழில்நுட்ப அந்நியப்படுத்துதல் தொடங்கியிருக்கிறது....

மக்களிடமிருந்து தொழில்நுட்பங்களை அந்நியப்படுத்தி தொழில்நுட்ப அதிகார மையங்களாக மாறுவது. அது வணிக நோக்கமா? அல்லது சேவை நோக்கமா? என்பதல்ல கேள்வி!

கற்றல், ஆய்வுக்குட்ப்படுத்துதல், முடிவுகளை வரிசைப்படுத்துதல், நிகழ்தகவுகளை அட்டவணைப்படுத்துதல் இப்படி அறிவியல் முறைகள் கைக்கொண்டு எதையும் தெரிந்துக்கொள்ள முயற்சிப்போம்!

நன்றி!

7 comments:

ஜெகதீசன் சொன்னது…

புதுசா ஏதோ ஒரு பிரச்சனைய ஆரம்பிக்கப் போறீங்க போல தெரியுது..
நடத்துங்க...
அடுத்த பகுதிக்குக் காத்திருக்கிறேன்
:))

பெயரில்லா சொன்னது…

//ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேதத்தில்,உபநிடத்தில் சொல்லியிருக்கிறது என்று கட்டுக்கதைகளையும், புரட்டுகளையும் பேசிக்கொண்டிருந்த குள்ளநரி கூட்டத்தை சிந்தனையாளர்களும், தந்தை பெரியாரும் கேள்விகள் எழுப்பி வேதத்தில் எதுவும் இல்லை எல்லாம் புரட்டுகளும், புனைக்கதைகளும் தான் என்பதை மக்களிடம் கொண்டுச்சேர்த்தனர்.//

பாரி ஐயா,

தாடிக்கார தந்தை சொல்லிக் கொடுக்கலேன்னா நம்ம மஞ்ச துண்டு ஐயாவும், கருப்பு துண்டு ஐயாவும் சொத்து சேர்த்திருக்க முடியாது. எல்லாத்தையும் குல்லுக பட்டர் இராஜாஜியே வலைச்சு இருப்பார்.

பெயரில்லா சொன்னது…

தலைப்பை பார்த்தவுடனே இதிலாவது பார்பனரை பற்றி பேசியிருக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.
ஹூம்!! :-(
நல்லா இருங்க.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஜெகதீசன்!

அடுத்த பகுதியா!
புதுப்பிரச்சினையெல்லாம் இல்லை!
இருக்கிற பிரச்சினையை கொஞ்சம் ஜல்லி கரண்டி போட்டு வறுத்திருக்கிறேன்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அனானி!
ஃஃ
தலைப்பை பார்த்தவுடனே இதிலாவது பார்பனரை பற்றி பேசியிருக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன் வந்தேன்.
ஹூம்!! :-(
நல்லா இருங்க.
ஃஃஃ

நான் நல்லாதானேயிருக்கேன்! மக்கள் நல்லாயிருக்கனுமுன்னு தானே அயோக்கியதனங்களை கண்டிக்கிறோம்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் பாலா!
ரொம்ப போரடிக்குது உங்க டிரேட் மார்க் மஞ்ச துண்டு, கருப்பு துண்டு! எல்லாம்! புதுசா எதுவும் சரக்கு கைவசமில்லையா! உங்க சேக்காளிக்கிட்ட கேளுங்க :(

பெயரில்லா சொன்னது…

ஓன்னுமே புரியல்ல... தயவு செய்து விளக்கவும்...!

Related Posts with Thumbnails