திங்கள், 12 நவம்பர், 2007

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை...1

கற்றது தமிழ் எம்.ஏ. பற்றிய விவாதம் தொடங்கியது என்பதை விட அதில் சுட்டப்பட்ட தொழில்நுட்ப துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கும் மனிதர்கள் என்கிற நிலையில் எங்களுடைய விவாதம் மையம் கொண்டது.

படத்தை பொறுத்த வரை கரு என்பது பன்முகத்தன்மையுடன் இருந்தது. படத்தின் மைய கதாபாத்திரம் உளவியல் பாதிப்படைந்த நபராக கட்டமைக்கப்பட்டதுபோல் ஓரு வகை தன்மையும். சமூகத்தின் வர்க்க ஏற்றதாழ்வுகளால் பாதிப்படையும் மனிதனாக இன்னொரு தன்மையும் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

கதையின் கரு பல மையங்களில் சுழன்றதாலே, கடுமையான விமர்சனத்திற்க்கு உள்ளதான எடுத்துக்கொள்ளலாம். கடந்த காலங்களில் இயக்குநர் விஜயன், தற்போது இயக்குநர் பாலா போன்றோர்... உளவியல் சார்ந்த திரைப்படங்களை வெற்றிகரமான படைப்பாக செய்திருக்கிறார்கள். அப்படி இந்த படமும் உளவியல் சார்ந்த படமாக அன்புக்கு ஏங்கும் ஓரு இளைஞன் என்கிற மாதிரியாக பயணப்படுகிறது... ஆனால் ஆங்காங்கே இந்த மையத்தில் இருந்து விலகி நன்கு படிக்கும் மாணவன் தமிழ் படிக்கிறான், அவன் மீதான சமூக தாக்கங்கள் என்று வேறு மையத்திற்க்கு தாவி பயணப்படுகிறது... அங்கேயும் தொடராமல்... திடீரென தகவல் தொழில்நுட்ப துறையால் ஏற்ப்பட்ட வர்க்க வேறுப்பாட்டை மையமாக கொண்டு சிறிது நேரம் சுழல்கிறது... இப்படி ஓரே களத்தில் பல்வேறு மையங்களில் கதையை சுழலவிட்டதால் என்னதான்ய்யா சொல்ல வருகிறார் இயக்குநர் என்று பார்ப்பவர்களுக்கு எரிச்சலை தருகிறார்.

ஊடகத்தின் வழியாக நாயகன் கொலைகளுக்கு விளக்கம் கொடுப்பதும், அதைப்பற்றிய பொதுமக்களின் கருத்துகளும் ஓற்றை வரி குற்றச்சாட்டாக தகவல் தொழில்நுட்ப துறையை நோக்கி நீண்டது இயக்குநரின் தெளிவற்ற தன்மையை காட்டுகிறது.

இயக்குநரின் சிந்தனையில் சமூக அக்கறையும், மனிதர்களை பற்றிய உளவியல் பார்வையும் இருக்கிறது, ஆனால் படைப்பு வெளியில் வரும்போது திடீர், திடீரென வேறு, வேறு மையங்களில் நகரும் போது பார்வையாளனை தேவையற்ற வெறுப்புக்குள்ளாக்குகிறார்.

நல்ல படைப்பிற்க்கான முயற்சி...

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கள் துறைச்சார்ந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் விவாதித்தோம்... அதன் தொகுப்பு அடுத்து....

7 comments:

குசும்பன் சொன்னது…

இந்த திரைப்படத்தை தொடர்ந்து எங்கள் துறைச்சார்ந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் விவாதித்தோம்... அதன் தொகுப்பு அடுத்து....//

வாங்க வாங்க சீக்கிரம் விவாதிக்கலாம்.

ஆடுமாடு சொன்னது…

பாஸூ...அப்படியே இங்க ஒரு லுக்கை விடுங்க.
http://aadumaadu.blogspot.com/2007/10/blog-post_5477.html

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் குசும்பன்!

ஃஃ
வாங்க வாங்க சீக்கிரம் விவாதிக்கலாம்.
ஃஃ
எங்கே போகிறீர்! இருந்து பேசிட்டுதான் போகணும்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாங்க ஆடுமாடு!
வருகைக்கு நன்றி! உங்களுடைய இடுகை முன்பே வாசித்து விட்டேன்.

நமக்கு இந்த கோடம்பாக்கத்துல 2 வருடம் குப்பைக்கொட்டியதால்! காட்சியமைப்பு, பாத்திரபடைப்புகளை பற்றிய விமர்சனத்தில் அவ்வளவு ஈடுபாடு இல்லை :( அதற்க்கான காரணம் பின்னாளில் விளக்குகிறேன்.

ஓரு அறிமுக இயக்குநரின் கதை களம் என்கிற தளத்தில் மட்டும் இங்கே நிறுத்திக்கொள்கிறேன்.

வருகைக்கு நன்றி!

ஆதிபகவன் சொன்னது…

திரைப்படங்கள் " நல்ல படங்கள்", "மோசமான படங்கள்" என்று இரண்டு வகைப்படும்.

இது நல்லபடமென்ற பெயரில் வந்திருக்கும் இரண்டாவது வகைப்படம் என்று இந்தியா டுடே குறிப்பிட்டது சரியாக இருக்கிறது.

சமீப காலங்களில் மிகவும் எரிச்சலூட்டிய படம்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் ஜமாலன்!

சுட்டிக்கு நன்றி! ஏற்கனவே பாதி வாசித்தேன் ரொம்ப நீளமான பதிவு அப்புறம் வாசிக்கலாம் என்று விட்டு வைத்திருக்கிறேன்.

நன்றி

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஆதிபகவன்!

ஃஃ
திரைப்படங்கள் " நல்ல படங்கள்", "மோசமான படங்கள்" என்று இரண்டு வகைப்படும்.

இது நல்லபடமென்ற பெயரில் வந்திருக்கும் இரண்டாவது வகைப்படம் என்று இந்தியா டுடே குறிப்பிட்டது சரியாக இருக்கிறது.

சமீப காலங்களில் மிகவும் எரிச்சலூட்டிய படம்.

ஃஃ
இருக்கலாம்! பார்வைகள் வேறுபடுமே! நன்றி!

Related Posts with Thumbnails