செவ்வாய், 20 நவம்பர், 2007

விடுமுறை...4 (ஐடி பணியும், பணி சூழலும்...)

விடுமுறை...1

விடுமுறை...2 (கற்றது தமிழ் எம்.ஏ)

விடுமுறை ... 3 (ஐடி வேலைவாய்ப்பு)

முந்தைய இடுகையில் வேலைவாய்ப்பு எப்படிப்பட்டதாகயிருக்கிறது என்பதை பேசினேன்... அதைத்தொடர்ந்து நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். அவற்றின் உட்ப்பொருள் முக்கியமானது...

ஓரு மனிதனின் சமூக மதிப்பீடு பொருளியல் சார்ந்த சமூக அமைப்பில் அவனுடைய பொருளாதார நிலையை வைத்தேயிருக்கிறது. கடந்த காலக்கட்டங்களில் இவ்வாறான பொருளாதார பாதுகாப்புள்ள வேலைகளுக்கு சமூகத்தில் உயரிய மதிப்பு அளிக்கப்பட்டது. (உதாரணத்திற்க்கு மருத்துவர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அரசாங்க உயரதிகாரிகள், இன்ன பிற...), அதே தானய்யா, இப்ப ஐடி வேலை பார்க்கிறவனுக்கு பொருளாதார மதிப்பு உயரும் போது, சமூக மதிப்பும் உயருகிறது. அதனால் கீழ்நிலையில் உள்ளவர்கள் ஐடி வேலைவாய்ப்பை பார்த்து பொறாமை படுகிறார்கள்!.

நிற்க, நான் வேலைப்பார்க்கும் சிங்கை நாட்டில் இந்தப்பிரச்சினை எவ்வாறு இருக்கிறது? மற்ற நாடுகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் அந்த சமூக சூழலில் எவ்வாறு இருக்கிறார்கள்? பொருளாதாரம், சமூக மதிப்பு, ஓட்டு மொத்த சமூகத்தின் உறுதித்தன்மையை நிலைநிறுத்துதல் போன்றவற்றை மையமாக வைத்து பிறகு பேசுவோம்.

இந்த இடுகையில் பணி சூழலைப்பற்றிய உரையாடலை தொடங்குகிறேன். நான் முதலில் Fundamentals of Computer & C ஆகியவற்றை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆக CSC ல் வேலைபார்க்க ஆரம்பித்தேன். பிறகு Visual Basic Programmer ஆக மாறினேன். பிறகு JAVA Programmer, தொடர்ந்து J2ee, DB2. தற்பொழுது ORACLE & PLSQL server pages என்று கடந்த 8 ஆண்டுகளில் பலமுறை கற்றலும், தொடர்ந்து என்னை இந்த போட்டி நிறைந்த வேலையில் தக்கவைத்துக்கொள்ள தொடர்ந்து படித்துக்கொண்டும் இருக்கிறேன்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஓன்று இருக்கிறது C என்று எடுத்துக்கொண்டால் அது ஓரு குழுவால் BELL lab -ல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவில் உருவாக்கப்பட்டது. அது பல ஆண்டுகள் நீடித்த ஆராய்ச்சியின் வெளியீடு அதில் 10 சதவிகிதம் கற்று தேறுவதற்க்குள்ளே, மூச்சு திணற ஆரம்பித்துவிடும். இப்படி ஓவ்வொரு மென்பொருள் தொகுப்பும் VB,JAVA போன்றவை நிறுவனங்களில் பல நூறு ஆய்வாளர்களால் உருவாக்கப்படும் வெளியீட்டை தனிமனிதன் ஓருவன் கற்றுக்கொள்வது என்பது எவ்வளவு முயற்சியும், உழைப்பும் தேவை என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும். அப்படியும் அதில் முட்டி, மோதி 10சதவிகிதம் தான் கற்க இயலும். இதுல கொஞ்சம் தெரிந்த பயபுள்ளைகள "அவரு அதுல புலி, இவரு இதுல கரடி!" அப்படின்னு டைய இழுத்துவிட்டுக்கொண்டே திரியுறது தான் இங்கன வாழ்க்கை.

இதுல வாடிக்கையாளரின் (client) க்கு தேவையான மென்பொருள் தொகுப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடும் போதும், அந்த வாடிக்கையாளருடைய துறையின் அறிவை பெற வேண்டியது மிக மிக்கியமான வேலை (உதாரணத்திற்க்கு ஓரு வாடிக்கையாளர் வங்கி சேவையை சேர்ந்தவர் என்றால், வங்கி பற்றியும், வங்கி நடவடிக்கைகளை பற்றியும் வேறு படிக்க வேண்டும்). இதை Domain Knowledge என்பார்கள். அந்த க்ளையண்ட் -ன் துறையில் இளங்கலை பட்டம் வாங்கும் அளவுக்கு படிக்க வேண்டியதிருக்கிறது.

"புதுசு! கண்ணா! புதுசு!" அப்படின்னு தினந்தோறும் அச்சடித்த காகிதங்களை மேசை மீது நிரப்பி படி என்பார்கள். படித்து, படித்து நொள்ளை ஆன கண்ணோட வாழ்க்கையை தடவிப்பார்த்துக்கொண்டிருக்கும் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களின் மன அழுத்ததின் பீறிடல் தான் சனி/ஞாயிறு (Saturday/sunday fever) கொண்டாட்டங்கள்.

சரி! இப்படியெல்லாம் கடினமாக உழைக்கிற சூழலில் வேலையிடம் எப்படியிருக்கிறது. Ergonomics முறையில் அமைந்த இருக்கைகளோ, மேசைகளோ வழங்கப்படுகிறதா? இல்லையே! இதனால் முதுகெலும்பில் வலி என்று வாழ்க்கையை பறிக்கொடுக்கிற இளைஞர்கள் எத்தனை பேர்! (தற்பொழுது தான் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்ட நிலையில் HP மட்டும் எர்கானமிக்ஸ் முறையில் பிஸியோதெரபிஸ்ட்களை நியமித்து இருக்கைகள் வழங்க ஆரம்பித்து இருப்பதாக செய்திகள் வருகின்றன).

"Are you fucking there?"
"Do you have balls with you?"

இதெல்லாம் என்னவென்று கேட்கிறீர்களா? இவையெல்லாம் சர்வசாதரணமாக மேனேஜர் என்பவர்களால் கேட்கப்படுகிற கேள்விகள். அப்ப உள்ளறை சந்திப்புகள் (closed door meetings) எப்படி திட்டுவார்கள் என்பதை நீங்களே கற்பனை செய்துக்கொள்ளுங்கள். நாக்கை புடுங்கிக்கொண்டு சாகலாம் அவ்வளவு கேவலமாக பேசுவார்கள். இதில் சிலசமயம் பெண்கள் தப்பித்து விடுவார்கள். ஆண்கள் கதி அந்தோ பரிதாபம் :((

மேற்கத்திய நாடுகளின் வாடிக்கையாளர்கள் மிக மோசம், ஜப்பானியர்களும், கெரியா போன்ற நாடுகளின் வாடிக்கையாளர்கள் கொஞ்சம் பரவாயில்லை என்பது என்னுடைய அனுபவம். மற்றவர்கள் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

மன அழுத்ததால் கடந்த ஆண்டு 100-க்கு மேற்ப்பட்ட தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள் தற்கொலை செய்துள்ளார்கள். பலருக்கு மன உளைச்சல் இருப்பதாக ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. வேலை பளுக்காரணமாக விவாகரத்து வழக்குகள் அதிகரித்துள்ளன.

நீங்கள் அதிகம் சம்பளம் வாங்குவதால் சமூகத்ததை சீரழிப்பதாக சொல்கிற ஐடி காரர்களின் பெரும்பாலோருக்கு பேருக்கு கிட்டப்பார்வை (அ) எட்டப்பார்வை கண்ணாடி மாட்டிய நொள்ளை கண்ணும். 20 சதவிகித பேருக்கு முதுகு வலியும். இரவு நேர (ஆன்டி கிளாக்) வேலை பார்ப்பதால் உயிர்மை கடிகார சிதைவு(Bio-clock disorder) , நரம்பியல் நோயும் வருகிறது. இதற்க்கான மருத்துவ செலவுகளின் தொகை அவர்களுக்கு யார்க்கொடுப்பது.

15 ஆண்டுகள் ஆட்டோகேட் - ல் வேலைபார்த்த எனது சகோதரரின் சேமிப்பு வெறும் 20 லட்சம். அவருக்கு நடந்த தண்டவட அறுவை சகிச்சைக்கு ஆன செலவு 3 லட்சம். அதை தொடர்ந்து இனிமேல் அவர் அந்த வேலையை தொடர இயலாது. அவரின் இனிமேல் ஆகக்கூடிய மருத்துவ பராமரிப்பை எவ்வாறு கவனிப்பது.

நிறைய சம்பாதிக்கிறார்கள் என்பதை மட்டுமே பார்க்கிற மக்களே, உள்ளே இருப்பவனின் இழப்புகளை (உடலளவிலும், மன அளவிலும்) கணக்கு பார்த்தால். எதிர்க்காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை எவ்வளவு இருள் நிறைந்திருக்கிறது என்பது புரியும்.

தொடரும்...

23 comments:

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

பின்னூட்ட கயமைதனம் :((

karthik subbaraj சொன்னது…

//"Are you fucking there?"
"Do you have balls with you?"//

I think u have exaggerated it, bit too much.I dont think any of the managers throw these words on thier peers, in software companies..

TBCD சொன்னது…

ஏம்ப்பா...அலுவலகத்திலே, ஆபாசமாப் பேசினா, ஓம்பட்ஸ் ஆளு இருப்பான் அவன்க் கிட்ட சொல்லுன்னு சொல்லியிருக்காங்களே...சொல்ல வேண்டியது தானே....

இது எல்லாம்..சும்மா பேத்தல்...

யோவ் ஐடியில மட்டும் தான் பிரஷர் அதிகமின்னு நினைக்கிறீங்களா.

எல்லா வேலையிலேயும்..அழுத்தம் அதிகம் தான்...

உங்க வேலையிலே, அதிக பணமும் கிடைக்கிறதாலே, அழுத்தத்தைக் குறைக்கிறோமின்னு சொல்லி ஆடுறீங்க..(றாங்க..)..

ஆட்டோமொபையல் பீல்டு..அழுத்ததிலே, குறைச்சல் கிடையாது..

ஷிப்ட் அவுட்புட் வரவில்லையென்றால், ப்பான்ட்டைக் கழட்டிடுவானுங்க...

வாடிக்கையாளருக்கு குடுக்க வேண்டிய, மாதிரி பொருட்கள் சரியான தேதிக்கு குடுக்கவில்லையென்றால், ஒரு இயந்திரவியல் பொறியாளன் ஆளாக வேண்டிய அழுத்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியும்மா...

அவனுக்கு, இது போல, சாப்பிட வகை வகையான சாப்பாடு கிடையாது...கேன்டின்...சோறு தான்..

நினைச்சப்ப சாப்பிட கூல்டிரிங்க் கிடையாது, ஒரு நாளைக்கு இரண்டு தடவை கேன்ல வர டீ தான்.

சவுகர்யமா உக்கார குளிருட்டப்பட்ட அறை கிடையாது..ஏன்...இருக்கையே இருக்காது...

இது போல இன்னும் பல...

எனவே, நாங்க் ரொம்ப ஏழை...எங்க விட்டு, வேலைக்காரனை, சிவிஸ் அனுப்ப முடியாது..பாரிஸ் தான் அனுப்புவோமின்னு சொல்லுற மாதிரி...

வேலை அழுத்தம்..ஐடி இளைஞர்களுக்கு மட்டுமே உரித்தானது என்று சப்பைக் கட்டு கட்ட வேண்டாம்..

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கார்த்திக்!

முதன்முதலாக பதிவு பக்கத்திற்க்கு வந்திருக்கிறீர்கள்! வருகைக்கு நன்றி!

ஃஃ
I think u have exaggerated it, bit too much.I dont think any of the managers throw these words on thier peers, in software companies..
ஃஃ
அதிகபடியாக இல்லை கார்த்திக்! மிகவும் குறைத்தே சொல்லியிருக்கிறேன்.

உங்களுடைய சூழல் நன்றாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்த்த நிறுவனத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் ஓருவரிடம், அவருடைய திட்ட அதிகாரி கொடுக்கப்பட்ட Requirement - ஐ புரிந்துக்கொள்ளவில்லை என்று அந்த பேப்பரையெல்லாம் அவருடைய முகத்தில் அப்படியே விட்டெறிந்தார்.
நாள் முழுவதும் அந்த பெண் அழுதுக்கொண்டேயிருந்தார்.

நான் இந்த மாதிரியான அராஜக வார்த்தை பிரயோகத்திற்க்காக, சென்னையில் இரண்டு நிறுவனங்களிலிருந்து வெளியேறியிருக்கிறேன்.

தேடி, தேடி இந்த மாதிரியான தரக்குறைவான நடவடிக்கைகளை தவிர்ப்பதற்க்காவே ஜப்பானியர்களின் நிறுவனத்தில் இப்போது வேலை பார்க்கிறேன்.

இங்கேயே பதிவில் கொஞ்ச நாளைக்கு முன்பு ஆன்சைட், ஆப்ஃஷோர் பற்றிய விவாதம் நடந்த போது, நிறையபேர் வெளிநாட்டில் போயி உட்கார்ந்துக்கிட்டு மானாவாரிய பேசுறத பற்றி குற்றச்சாட்டுகளை வைத்தார்களே! படிக்கலைய நீங்க!

அந்த லிங்க் தேடிப்பிடித்து தருகிறேன் படியுங்கள்.

இப்போதைக்கு மனித வள பற்றாக்குறை நிலவுவதால் பல இடங்களில் அடக்கி வாசிக்கிறார்கள். கொஞ்சம் ஓவரா பேசினால் நம்ம பயபுள்ளைக உடனே பேப்பர (Letter of Resignation) நீட்டி விடுகிறார்கள். அதனால் கொஞ்சம் எல்லாமே நர்மலாக தான் இருக்கு.

அப்புறம் ஐடி நிறுவனங்களில் உதிரிகள் என்று பலரை வைத்திருப்பார்கள், அதாவது வெறும் மனித வள கணக்கிற்க்கு மட்டும் (only for man hour account), இவர்கள் பெரும்பாலும் க்ளையண்ட்-க்கு கணக்கு காட்டி காசு பார்க்க மட்டுமே. அப்படியிருக்கிற உதிரிகளுக்கு பெரும்பாலும் பெரிய வேலை அழுத்தமோ அல்லது மேலதிகாரிகளின் அழுத்தமோ இருக்காது.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாங்க டிபிசிடி!

ஃஃ
ஆட்டோமொபையல் பீல்டு..அழுத்ததிலே, குறைச்சல் கிடையாது..

ஷிப்ட் அவுட்புட் வரவில்லையென்றால், ப்பான்ட்டைக் கழட்டிடுவானுங்க...

வாடிக்கையாளருக்கு குடுக்க வேண்டிய, மாதிரி பொருட்கள் சரியான தேதிக்கு குடுக்கவில்லையென்றால், ஒரு இயந்திரவியல் பொறியாளன் ஆளாக வேண்டிய அழுத்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியும்மா...
ஃஃ

பொறியியல் துறையில அதிகமா ஆடியது யாருன்னு கேட்டா நான் மெக்கானிகல் துறை தான் சொல்வேன்.

அப்படியே 15 பின்னாடி போயி பாருங்க! படிக்கிற கல்லூரியிலிருந்து வேலை வாய்ப்பு வரை மெக்கானிக்கல் துறை தான் கொடிக்கட்டி பறந்தது. நீங்க ஆடாத ஆட்டமா :)) யாரைவது இன்ஜினியர் என்று மதிப்பீர்களா? அவ்வளவும் மண்டகனம் பிடித்தவர்கள்.

யோவ் கல்லூரியில படித்த பிறகு எப்பவாது புத்தகம் எடுத்து விடிய, விடிய படித்திருக்கிறீர்களா நீங்கள்!

இங்கன வருசத்துல பாதி நாள் எதையாவது புதுசு! புதுசா! படிச்சிட்டேயிருக்கணும்! இல்லையின்னா பீல்ட் அவுட் அப்படின்னு வூட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

அப்புறம் நீங்க வேலை பார்க்கிற மலேசியா, நான் வேலை பார்க்கிற சிங்கை போன்ற நாடுகளில் ஐடி துறைக்கும் மற்ற பொறியியல் துறைக்குமான ஊதிய வித்தியாசம் மிகவும் குறைவு.

அதனால இந்தியாவில் ஊதிய வித்தியாசத்தை பற்றி பிறகு பேசுவோம் :))

உங்களுக்கு கிட்டதட்ட ஐடி காரன் சம்பளம் மலேசியாவுல கிடைக்குதில்ல! அப்புறம் ஏன்னய்யா ஐடி காரன வம்புக்கிழுக்கிறீர்கள்!

ஜமாலன் சொன்னது…

நாட்டமைகள் தீர்ப்பு வாதம் பிரதிவாதம் எல்லாம் முடிந்து பக்கவாதம் வரும்போதுதான்.

உரையாடலை சாந்தமாக்கத்தான் இந்த மொக்கை...

தொடருங்கள்..

TBCD சொன்னது…

முனை மழுங்கிய வாதம் பாரி..

நான் என் சம்பளத்தைப் பற்றி பேச வரவில்லை....ஐடிக்காரன் மட்டுமே மன அழுத்ததினால் அவதி படுறான்னு சொல்லுறீங்க...அப்படி இல்லை என்று தான் சொல்லுகிறேன்..

மெக்கானிக்கல்..துறை என்னைக்கும் கொடி கட்டவில்லை..அது ஒரு சீரான வளர்ச்சியயைத் தான்..தந்திருக்கிறது...ஒரே தேர்வில்..100 இயந்திரவியல்..பொறியியல் வல்லுனர்களை வேலைக்கு எடுத்ததாக என்றாவது நீங்கள் பார்த்ததுண்டா..சும்மா ஒப்பேத்தாதீங்க...

நீங்க..படிக்கிறீங்க...நாங்க படிச்சதை வச்சி உருவாக்குறோம்மய்யா...ஒரு வேலையும்..இன்னோரு வேலைக்கு குறைச்சலில்லை...அது அதுக்கு இருக்கிற தொந்திரவு...இருந்துட்டே தான் ..இருக்குது...

என் வாதத்தின் மைக் கருத்தை பிடிக்க..எதுக்கும் இன்னொரு தபா படிச்சிடுங்க..

ஒரு உதாரணத்திற்கு இயந்திரவியல் பிரிவைச் சொன்னேன்..நான்..ஆட்டோமொபையல் ஃபீல்டு விட்டு வருசம் மூனு ஆச்சி..

எனக்கு சம்பளம் கம்மி என்றோ..உங்க சம்பளத்தை கம்மி பண்ணுங்கன்னோ நான் சொல்ல வரவில்லை...

ஐடிக்காரன்...மன அழுத்தத்தினாலே...என்ன செய்தாலும் சரியின்னு நீங்க நியாயப்படுத்த வேண்டாம்...

//*பாரி.அரசு said...
வாங்க டிபிசிடி!

பொறியியல் துறையில அதிகமா ஆடியது யாருன்னு கேட்டா நான் மெக்கானிகல் துறை தான் சொல்வேன்.

அப்படியே 15 பின்னாடி போயி பாருங்க! படிக்கிற கல்லூரியிலிருந்து வேலை வாய்ப்பு வரை மெக்கானிக்கல் துறை தான் கொடிக்கட்டி பறந்தது. நீங்க ஆடாத ஆட்டமா :)) யாரைவது இன்ஜினியர் என்று மதிப்பீர்களா? அவ்வளவும் மண்டகனம் பிடித்தவர்கள்.

யோவ் கல்லூரியில படித்த பிறகு எப்பவாது புத்தகம் எடுத்து விடிய, விடிய படித்திருக்கிறீர்களா நீங்கள்!

இங்கன வருசத்துல பாதி நாள் எதையாவது புதுசு! புதுசா! படிச்சிட்டேயிருக்கணும்! இல்லையின்னா பீல்ட் அவுட் அப்படின்னு வூட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள்.

அப்புறம் நீங்க வேலை பார்க்கிற மலேசியா, நான் வேலை பார்க்கிற சிங்கை போன்ற நாடுகளில் ஐடி துறைக்கும் மற்ற பொறியியல் துறைக்குமான ஊதிய வித்தியாசம் மிகவும் குறைவு.

அதனால இந்தியாவில் ஊதிய வித்தியாசத்தை பற்றி பிறகு பேசுவோம் :))

உங்களுக்கு கிட்டதட்ட ஐடி காரன் சம்பளம் மலேசியாவுல கிடைக்குதில்ல! அப்புறம் ஏன்னய்யா ஐடி காரன வம்புக்கிழுக்கிறீர்கள்!*//

TBCD சொன்னது…

மன்னிக்கவும்...நாங்க ஏற்கனவே இரண்டு கட்டப்பஞ்சாயத்து தலைவருங்க வச்சியிருக்கோம்...

கோவி.கண்ணன், மற்றும்..ம.எ.ஏ.தி.க தலைவர் ஜெகதீசன்..

பாரி..மன அழுத்தத்தினாலே..பொங்குவார்...
..சாந்தமாக்குங்கய்யா...சாந்தமாக்குங்க..

//*ஜமாலன் said...
நாட்டமைகள் தீர்ப்பு வாதம் பிரதிவாதம் எல்லாம் முடிந்து பக்கவாதம் வரும்போதுதான்.

உரையாடலை சாந்தமாக்கத்தான் இந்த மொக்கை...

தொடருங்கள்..*//

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

டிபிசிடி!
//
ஐடிக்காரன்...மன அழுத்தத்தினாலே...என்ன செய்தாலும் சரியின்னு நீங்க நியாயப்படுத்த வேண்டாம்...
//

ஐடிக்காரர்கள் மன அழுத்ததினால் என்ன செய்கிறார்கள். அது சமூகத்தை எப்படி பாதிக்கிறது என்று கொஞ்சம் விளக்குங்களேன்.

மிஞ்சி போனால் குடிக்கிற மக்களாக இருந்தால் சனி, ஞாயிறு தண்ணியடிப்பார்கள். பார்ட்டி என்று எங்கேயாவது ஹோட்டலுக்கு அழைத்துப்போவார்கள், இதில் என்ன சமூக சீரழிவு என்று சொல்லுங்கள்.

மற்ற துறைகளை விட இங்கே முழு வேலையும் மூளை சார்ந்தது. அதனால் மனஉளைச்சல் அதிகம்.

மற்ற துறையில் இருப்பவர்களுக்கு இல்லை என்பது என் வாதமல்ல.

ஐடியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கு என்பது கண்கூடான உண்மை!

TBCD சொன்னது…

உங்க வாதம் ஆரம்பித்த இடம் கற்றது தமிழ்..அதிலே..சில பிரச்சனைகளுக்கு ஐடிக்காரவங்களை குறை சொல்லுறாங்க...நீங்க..ஐடிக்காரன்..பரிதாபமானவன்...20லட்சம்.தான் சேர்க்க முடியுது...1 வீடு தான் வாங்க முடியுதுன்னு..சொல்லுறீங்க...
ஐய்யா..ஆக்குபேஷனல் சேஃப்டி அன்ட் கெல்த் என்று ஒரு பிரிவு இருக்கு..அது எல்லா..வேலையிலும்..இருக்கிற பக்க விளைவுகளுக்கு தீர்வு சொல்லும்...ஐடிக்கு மட்டும் தான்..அந்தப் பிரச்சனை இருக்கா..

நீங்க சொல்ல வரது...இத்தகைய பரிதாபத்துக்குரிய ஐடி பிரிவினரை..நீங்கள்..எப்படி கண்டிக்கலாம்..என்ற தொனியில் இருந்ததால்..நான்..அவ்வாறு சொன்னேன்...என் விவாதத்தின்..மையக்கருத்து...

ஐடி பிரிவினர்..சற்றே மேம்பட்ட நிலையில் இருக்கிறார்கள்...மற்றவர்களை விட...

அதன் பொருட்டு...அவர்கள் மற்றவர்களை பாதிக்கும் வகையிலே..பணத்தை இறைத்து ஒரு பொய்யான விலையேற்றத்தை தோற்றுவிக்கிறார்கள்..இதை நீங்களே..உங்க பதிவிலும்..சொல்லீட்டீங்க...(விடு வாடகை...3ஆயிரம் ரூ..வில் இருந்து..5 ஆயிரம்..ஆனது...)

//*மற்ற துறைகளை விட இங்கே முழு வேலையும் மூளை சார்ந்தது. அதனால் மனஉளைச்சல் அதிகம்.*//

யாமறிந்த மொழிகளிலே..என்று பாரதி சொல்ல பல மொழி கற்றாராம்..நீங்க எப்படி...

சரி..அப்படியே..மனஊளைச்சல் அதிகமாயிருக்குன்னே வச்சிக்கலாம்..அதுக்கு என்ன இப்போ...

கம்பூயூட்ட்ரை விழித்து பார்பதினலே...மூளைக்கு அதிகமான வேலை என்று சொல்ல வேண்டாம்..வக்காலத்து வாங்க சரியான கருத்தோட வாஙக்..காத்திருக்கிறேன்..

//*ஐடியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கு என்பது கண்கூடான உண்மை!*//

ஐடிக்காரனுக்கு மூளை இருக்கு இல்லை என்பதா பிரச்சனை....

ஐடிக்காரவங்களுக்கு மட்டுமே மன உளைச்சல் என்று கதை சொல்லாதீங்க

ஜெகதீசன் சொன்னது…

//
கோவி.கண்ணன், மற்றும்..ம.எ.ஏ.தி.க தலைவர் ஜெகதீசன்..
//
என்ன ஏன்யா இழுக்குறீங்க.... நான் அமைதியா உங்க விவாதத்தை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கேன்.. என்னால பஞ்சாயத்தெல்லாம் பண்ண முடியாது...

இன்னோரு விசயம்... நான் கட்சியக் கலைச்சுட்டு அரசியல்ல இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்..... :)))))
*************
அடுத்து பதிவைப் பற்றி....
அரசு சொல்வதில் எனக்கு 100% உடன்பாடு....

இந்தப் பதிவில் எங்குமே மற்ற துறையினரைப் பற்றிக் குறை கூறவில்லை.. எங்கள் துறையைப் பற்றி மற்றவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை மறுப்பதும் எங்கள் பக்கத்து நியாயங்களைச் சொல்வதும் என்ன தவறு?

பெயரில்லா சொன்னது…

Dear Sirs,

I am a mechanical design engineer in a automobile parts company. I have only one day (sunday) holiday and even I work on that day. Many days I goto job at 7.30 and returing from the office at 11 p.m. Many days I left in the early morning 5 am from office and after taking a bath returnd to office by 9 a.m. There is no flexi timings. If I punch my card 1 min late 2 hours salary is being deducted. And if the first sample that we make doesnt give the intend function , the pressure that we get from every one will make us to think of suicide. I will not make my son to study Mech. Engg.

TBCD சொன்னது…

ஜெகதீசன்..பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்தும்..விலகி விட்டீர்களெ.... :(

சரி விசயத்து வர்ரேன்..

எல்லாத் துறைகளுமே அதற்கான சிரமங்களுடனேயிருக்கிறது..

பாரி சொல்லியது போல் ஐடி துறையினர் மட்டும் சிரமப்படுகிறார்கள்..என்று சொல்வதை மறுக்கிறேன்...

கருத்துச் சுதந்திரம்..எனக்குமிருக்கு..உங்களுக்குமிருக்கு.. :)

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

டிபிசிடி,
ஃஃ
ஐய்யா..ஆக்குபேஷனல் சேஃப்டி அன்ட் கெல்த் என்று ஒரு பிரிவு இருக்கு..அது எல்லா..வேலையிலும்..இருக்கிற பக்க விளைவுகளுக்கு தீர்வு சொல்லும்...ஐடிக்கு மட்டும் தான்..அந்தப் பிரச்சனை இருக்கா..
ஃஃ

இது வரைக்கும் எழுதியவற்றில்...

ஐடி துறையின் வேலை நிரந்தரமில்லாதது என்பதை விளக்கியிருக்கிறேன்...

மற்றும் உடல், மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை பற்றி பேசியிருக்கிறேன்.

அதுக்கு புத்தகத்தில் தீர்வுயிருக்கிருக்கிறது என்று சொல்கிறீர்கள். நடைமுறையில் என்ன என்று நான் பேசுகிறேன்! புரிகிறதா!

ஃஃ
சரி..அப்படியே..மனஊளைச்சல் அதிகமாயிருக்குன்னே வச்சிக்கலாம்..அதுக்கு என்ன இப்போ...

கம்பூயூட்ட்ரை விழித்து பார்பதினலே...மூளைக்கு அதிகமான வேலை என்று சொல்ல வேண்டாம்..வக்காலத்து வாங்க சரியான கருத்தோட வாஙக்..காத்திருக்கிறேன்..

//*ஐடியில் வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கு என்பது கண்கூடான உண்மை!*//

ஐடிக்காரனுக்கு மூளை இருக்கு இல்லை என்பதா பிரச்சனை....

ஐடிக்காரவங்களுக்கு மட்டுமே மன உளைச்சல் என்று கதை சொல்லாதீங்க
ஃஃ

இந்த வரைமுறையற்ற வார்த்தை பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஜமாலன்!

ஃஃ
நாட்டமைகள் தீர்ப்பு வாதம் பிரதிவாதம் எல்லாம் முடிந்து பக்கவாதம் வரும்போதுதான்.

உரையாடலை சாந்தமாக்கத்தான் இந்த மொக்கை...

தொடருங்கள்..

ஃஃ

தொடர்ந்து கவனிக்கின்றீர்கள் போலிருக்குதே! கொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோன்னு தோணுது!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் ஜெகதீசன்!
ஃஃ
//
கோவி.கண்ணன், மற்றும்..ம.எ.ஏ.தி.க தலைவர் ஜெகதீசன்..
//
என்ன ஏன்யா இழுக்குறீங்க.... நான் அமைதியா உங்க விவாதத்தை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கேன்.. என்னால பஞ்சாயத்தெல்லாம் பண்ண முடியாது...

இன்னோரு விசயம்... நான் கட்சியக் கலைச்சுட்டு அரசியல்ல இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்..... :)))))
*************
ஃஃ

நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் படித்தவன்!
ஃஃ
Dear Sirs,

I am a mechanical design engineer in a automobile parts company. I have only one day (sunday) holiday and even I work on that day. Many days I goto job at 7.30 and returing from the office at 11 p.m. Many days I left in the early morning 5 am from office and after taking a bath returnd to office by 9 a.m. There is no flexi timings. If I punch my card 1 min late 2 hours salary is being deducted. And if the first sample that we make doesnt give the intend function , the pressure that we get from every one will make us to think of suicide. I will not make my son to study Mech. Engg.
ஃஃ

விதிவிலக்கு என்பது எல்லாதுறைகளிலும் இருப்பது தான். ஐடி யிலும் 24x7 வேலைபார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம்.

இங்கே பேசப்பொருள் ஐடி துறையின் பிரச்சினைகளை பற்றி மட்டுமே. மற்ற துறையின் பிரச்சினைகளை பற்றிய ஆய்வு இங்கே கருத்தியல் அல்ல!

TBCD சொன்னது…

பாரி.புத்தகத்திலே விவரம் இருக்குன்னு சொல்லவில்லை..அப்படி ஒரு பிரிவே இருக்கு..எந்த ஒரு தொழிலிலும் இந்த மாதிரி தொழில் சார்ந்த உடல் உபாதைகள் இருக்கின்றது. அதனாலே தான்.,அப்படி ஒரு பிரிவே இருக்கிறது...மற்றும், நீங்கள் பார்க்கும் தொழிலிலே உடல் உபாதைகள் இருப்பின் அதை மேம்படுத்த வேண்டியது நிர்வாகிகளின் கடமை.

உதா. விமானம் கட்டுப்பாடு பிரிவு..மிகவும் அதிகமான மன அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று கூறுவார்கள்..அங்கே..வேலை நேரத்தை குறைத்து மன அழுத்தத்தை குறைக்க வகை செய்தனர்..அது போல ஒவ்வொரு தொழிலுக்கும், அந்த நிர்வாகம் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்..ஊருக்கு மரம் நடுகிற வேலையயை கார்புரேட் பப்ளிக் கேர், என்று செலவழிப்பவர்கள்..இதையும்..செய்யலாம்..இல்லையின்னா..நீங்க கேட்கலாம்..அது உங்கள் உரிமை..

மற்ற தொழில் பற்றி பேசவில்லை என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்..

இறுதியாக,

ஒரு ஐடி கடை நிலை ஊழியனின் நிலை கூட, மற்ற தொழிகளில் மேல் நிலை ஊழியர்களை விட மேம்பட்டு இருக்கிறது.. இதை நீங்கள் மறுக்கின்றீர்களா...


//*இந்த வரைமுறையற்ற வார்த்தை பிரயோகத்தை வன்மையாக கண்டிக்கிறேன்!*//

எதைச் சொல்லுறீங்கன்னு தெரியவில்லை...தெளிவுபடுத்தினால், வரைமுறையற்ற வார்த்தை என்று நான் நினைத்தால் , பின்னுட்டத்தை நீக்கிவிடுகிறேன்..

ஜெகதீசன் சொன்னது…

////////////////
வாருங்கள் ஜெகதீசன்!
ஃஃ
//
கோவி.கண்ணன், மற்றும்..ம.எ.ஏ.தி.க தலைவர் ஜெகதீசன்..
//
என்ன ஏன்யா இழுக்குறீங்க.... நான் அமைதியா உங்க விவாதத்தை மட்டும் பாத்துக்கிட்டு இருக்கேன்.. என்னால பஞ்சாயத்தெல்லாம் பண்ண முடியாது...

இன்னோரு விசயம்... நான் கட்சியக் கலைச்சுட்டு அரசியல்ல இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன்..... :)))))
*************
ஃஃ

நன்றி!
////////////////

நன்றி எதுக்கு... கட்சியக் கலைச்சதுக்கா? :P

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

டிபிசிடி,

மீண்டும்,மீண்டும் வேலை நிரதரமற்றது என்பதை தெரிந்து அதை படித்து, கையெழுத்துப்போட்டுக்கொடுத்து விட்டுதான் வேலைக்கு சேருகிறோம்.

இந்த வேலையில் இருக்கிற பிரச்சினையின் அளவு அதிகமாகயிருப்பதாலேயே ஊதியமும் அதிகமாகயிருக்கிறது.

இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இவ்வளவு பிரச்சினைகளை தாங்கிக்கொண்டு பணம் கிடைக்கிறதே! என்கிற ஓரே காரணத்திற்க்காக ஐடியில் இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள்.

இன்னொன்று நிறுவனங்கள் போட்டிப்போட்டு முன்னேறு என்று கட்டமைக்கிற பிம்பத்தில் விழுகிற இளைஞர்கள், தாங்களின் வாழ்வியல் அழிக்கப்படுகிறது என்பது புரியாமலேயே... நேரக்கட்டுபாடில்லாமல் உழைக்கிறார்கள். ஐடியில் வேலைப்பார்க்கிற பலருக்கு சுயமரியாதை, வாழ்வியல் பற்றிய கவலையெல்லாம் பணம் என்கிற ஓன்றால் சமன் செய்யப்படுகிறது.

முதலில் உள்ளே வேலைப்பார்க்கும் பலருக்கு தாங்கள் ஓரு டைக்கட்டிய ஓப்பந்த கூலி என்பதே புரிவதில்லை! அப்புறம் வேலை நிரந்தரம், மற்ற பிரச்சினைகளை பற்றி எப்போது போராட போகிறார்கள்.

ஏதோ கிடைத்தவரை அள்ளு என்கிற மனோபாவத்தில் போட்டிப்போட்டுக்கொண்டு முதலாளித்துவ நாடுகளின் உழைப்புச்சுரண்டலுக்கு அடிமை கூலிகளாய் இருக்கிறார்கள்!

TBCD சொன்னது…

எங்குமே பணி நிரந்திரம் என்பது இல்லை...நீங்கள் மாற்றத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும் ..அது எந்த துறையாக இருந்தாலும்..

//*மீண்டும்,மீண்டும் வேலை நிரதரமற்றது என்பதை தெரிந்து அதை படித்து, கையெழுத்துப்போட்டுக்கொடுத்து விட்டுதான் வேலைக்கு சேருகிறோம்.*//


//*இந்த வேலையில் இருக்கிற பிரச்சினையின் அளவு அதிகமாகயிருப்பதாலேயே ஊதியமும் அதிகமாகயிருக்கிறது.*//

தவறான வாதம்..இந்திய பொறியியலாளரின் ஊதியம்...மேலை நாடுகளை விட கம்மி..என்பதாலே..நீங்கள் பணியமர்த்தப்படுகிறீர்கள்..இந்தத் துறையிலே, நிர்வாகம் கமிஷ்ன் ஏஜென்டுகளாகவே இருக்கின்றனர்.

நீங்கள் சொல்வது சரியென்றால், சிங்கையிலும்..உங்களுக்கு, ஐடி பிரிவினர் பிரிமியம் ஊழியராக இருக்க வேண்டும்..

ஆனால் அப்படி இல்லை என்று தெரிகிறது..இந்தியவில், மனித உழைப்பின் விலை உலகளவில் குறைந்தது...அதானாலே..தான் வருகிறார்கள்.

மனித உடல் உழைப்பு..இங்கே விலை கம்மி...

நீங்கள் செய்யும் வேலையயை ஒரு மேலை நாட்டு பொறியியலாளர் செய்ய உங்களை விட 10 மடங்கு அதிக செலவு ஆகும்..

தங்கம்..விலை எங்கே வாங்கினாலும் ஒரளவுக்கு ஒன்னு தான்..இரும்பு எங்கே வாங்கினாலும் ஓரளவுக்கு ஒன்னு தான்...அதுனாலே, தான்..மற்ற பிரிவுகளிலே, ஏற்றுமதி பண்ணினாலும், இந்த அளவு பணம் சேர்வதில்லை...


//*இன்னும் தெளிவாக சொல்லப்போனால் இவ்வளவு பிரச்சினைகளை தாங்கிக்கொண்டு பணம் கிடைக்கிறதே! என்கிற ஓரே காரணத்திற்க்காக ஐடியில் இளைஞர்கள் வேலை பார்க்கிறார்கள்.*//

நிங்கள் சொல்லும் பிரச்சனைகள் பிரச்சனைகளே இல்லை என்பது என் வாதம்...

//*இன்னொன்று நிறுவனங்கள் போட்டிப்போட்டு முன்னேறு என்று கட்டமைக்கிற பிம்பத்தில் விழுகிற இளைஞர்கள், தாங்களின் வாழ்வியல் அழிக்கப்படுகிறது *//

இது எப்படி என்று புரியவில்லை...

//*முதலில் உள்ளே வேலைப்பார்க்கும் பலருக்கு தாங்கள் ஓரு டைக்கட்டிய ஓப்பந்த கூலி என்பதே புரிவதில்லை! அப்புறம் வேலை நிரந்தரம், மற்ற பிரச்சினைகளை பற்றி எப்போது போராட போகிறார்கள்.*//

எல்லாருமே அப்படி தாங்க...கை நீட்டி சம்பளம் வாங்குறவன் எல்லாமே..அதே நிலை தானே...

ஜெகதீசன் சொன்னது…

//
எங்குமே பணி நிரந்திரம் என்பது இல்லை...நீங்கள் மாற்றத்தை எதிர் கொண்டே ஆக வேண்டும் ..அது எந்த துறையாக இருந்தாலும்..
//
இன்று நினைத்தாலும், என் முதலாளி என்னை ஒரு மாத கால நோட்டீஸ் கொடுத்து வேலையை விட்டு நீக்க முடியும் எந்தக் காரணமும் சொல்லாமல்...
மற்ற துறைகளில் அப்படியா? ஒருவரை நீக்கினால் எத்தனை போராட்டங்கள் & வேலைநிறுத்தங்கள் நடக்கும்...
சில ஆண்டுகளுக்கு முன் மார்க்கெட் டவுன் ஆனபோது பல ஆயிரக்கனக்கானோர் வேலை இழந்தனர். அது மற்ற துறைகளில் நடக்குமா?

:((((((((

TBCD சொன்னது…

தனியார் துறைகளிலே, யூனியனைச் சார்ந்தவர்கள் மட்டுமே பாதுகாக்கப்படுவார்கள்...வேலை நீக்கம் சிரமம்..மற்றபடி..வேலை திருப்தியளிக்கவில்லை என்றால், 1 மாதத் தவனையோ- 3 மாதத் தவனையோ சொல்லி தூக்கிவிடுவார்கள்..அல்லாது..தூக்க அவர்களுக்கு உரிமையிருக்கிறது...

ஐடியில் இது போன்று எத்தனை முறை நடந்திருக்கிறது...2000ல் நடந்த நிகழ்விலே..வலையிலே சமைச்சு சாப்பிடலாம்..என்று நினைத்து சில் டாட்காம் வகை நிறுவனங்கள் தானே வெடித்தது...இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படவில்லையே...அதாவது சேவை வழங்கும் பெரிய நிறுவனங்கள்..சிறு நிறுவனங்கள், உன்மையான வேலை செய்த தந்த நிறுவனங்களும் தப்பி பிழைத்தனவே..

வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் மற்ற பொறியியல் வல்லுனர்களின்/ மற்றும் கலைத்துறையினரின்.. நிலை பரிதாபத்துக்குரியது..

நிரந்தரமற்றது என்று இருப்பின்..இருக்கின்ற வேலையயை விட்டுச் செல்ல ஐடி ப்ரிவினர் யோசிப்பர்..ஆனால், நீங்களே சொன்னது போல், சும்மா ஏதாச்சும் சொன்னாக் கூட பேப்பர் போட்றுனுங்க..(அதெப்படி..அபுயூஸ் பண்ணுறாங்கன்னு சொல்லுறீங்க..அதுக்கெல்லாம்..பேப்பர் போட மாட்டாங்க)

உங்கள் புளிச்ச ஏப்பம்...கண்ணக்கட்டுதுங்கோ...


//*இன்று நினைத்தாலும், என் முதலாளி என்னை ஒரு மாத கால நோட்டீஸ் கொடுத்து வேலையை விட்டு நீக்க முடியும் எந்தக் காரணமும் சொல்லாமல்...
மற்ற துறைகளில் அப்படியா? ஒருவரை நீக்கினால் எத்தனை போராட்டங்கள் & வேலைநிறுத்தங்கள் நடக்கும்...
சில ஆண்டுகளுக்கு முன் மார்க்கெட் டவுன் ஆனபோது பல ஆயிரக்கனக்கானோர் வேலை இழந்தனர். அது மற்ற துறைகளில் நடக்குமா?*//

Related Posts with Thumbnails