ஞாயிறு, 18 நவம்பர், 2007

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

நண்பர் ஜமாலன் உடல் அரசியல் பகுதியை எழுதிக்கொண்டிருந்தபொழுது வாசிக்க ஆரம்பித்தவுடன் அப்பப்ப தலையில் ஓன்றொன்றாக விழுந்துக்கொண்டிருந்த முடி, மண்டை சூட்டில் கொத்துக்கொத்தாக விழ ஆரம்பித்தது :)) ( ஏன் இப்படி மொட்டை தலை மாதிரி முடிவெட்டி இருக்கிறீர்கள் என்று கேட்டீர்களே கோவி, ரகசியம் புரிகிறதா நீளமா இருந்தா முடி கனத்தில் மிஞ்சமிருக்கும் முடியும் கொட்டிவிடும்), சரி நமக்கு பிடித்த, ரசித்த வரிகளை தொகுத்து மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்பினால், அவர்கள் எனக்கு ஏதோ ஆகி விட்டதாக துக்கம் விசாரிக்கிறார்கள். அப்படி போயிட்டிருக்கு கதை... சரி! ஜமாலன் அவர்களாவது இந்த தோலை பற்றிய அரசியலை எழுதுவார் என்று பார்த்தால், ஓன்றும் நடக்கிற மாதிரி தெரியலை...

சரி! நமக்கு தெரிந்த அறிவியலை வைத்துக்கொண்டு, இது நிறமி செல் அப்படின்னு ஆரம்பிக்கலாம் என்றால்... வவ்வாலை நினைத்தால் பயமாகயிருக்கிறது, எங்கேயாவது தேடிப்பிடித்து படித்துவிட்டு, இங்கன வந்து தலைகீழாக தொங்குவார்.

அட நம்ம பைத்தியக்காரனாவது சிலருக்கு வைத்தியம் பார்ப்பார் என்றால், அவர் முகவரியை தொலைத்துவிட்டார் போலிருக்கு தமிழ்மணம் பக்கமே காணோம்.

அப்படியே யோசித்துக்கொண்டிருந்த வேளையில் தான், நமக்கு தெரிந்த தோல் அரசியலை நிகழ்வுகளாக சொல்லலாம் என்று நினைத்தேன்.

ராஜீவ்காந்தி ஓரு முறை அறந்தாங்கி வழியாக காரில் பயணம் செய்தபொழுது, சாலையோரத்தில் நின்ற ஓரு பெண்மணி சொல்லியது "என் ஓட்டு இந்தபுள்ளைக்கு தான், கையப்பாரேன் ரோசாப்பூ கலருல தகதகன்னு இருக்கு!" , இப்படியாக அன்றையிலிருந்து இன்றைய நாளது வரை முகத்தோற்றமும், உடல் தோலின் நிறமும் அரசியலில் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.

மஞ்சக்கலரு எம்.ஜி.ஆரும், சிவப்பு கலரு ஜெயலலிதாவும் இந்த தோலை வைத்துக்கொண்டு தமிழக அடிமட்ட மக்களை ஏமாற்றிய வரலாற்றை மீண்டும், மீண்டும் நாம் வாசித்துக்கொண்டு தான் காலில் விழுந்துக்கிடக்கிறோம்.

சிவப்பு தோலின் அரசியலை முருகன்-வள்ளி, தெய்வானை வரலாற்றின் ஊடாக மிகத்தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். சிவப்புகலரு தெய்வானை பொண்டாட்டி ஆகி, உண்மையான பொண்டாட்டி வள்ளி சின்ன வூடு ஆக்கப்பட்ட வரலாறு மட்டுமல்ல த்ராவிட மக்களின் சமூக, அரசியல் சிதைக்கப்பட்ட வரலாறு முழுக்க இந்த சிவப்பு கலரு கலந்தேக்கிடக்கிறது.

மிக ஆழமாக அரசியல் பேசுகிற நண்பர் ஓருவர், தான் சந்தித்த வெள்ளைக்காரனை பற்றிச்சொல்லும் போது, வெள்ளைக்காரன் ஏன் பொய் சொல்ல போறான் அப்படிங்கிறார்?வெள்ளை நிறம் கொண்ட யாரும் பொய் பேச மாட்டார்கள் என்கிற பிம்பம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

நம்ம பய புள்ளைக பொண்ணு பார்க்க போனாக்கூட அவனுக்கு இப்படிதான் சொல்கிறார்கள் "பொண்ணு சுண்டினா இரத்தம் வரும் அப்படி ஓரு கலரு", நம்ம பையன் சுண்டி,சுண்டி ப்ளட்பேங்க் வைக்க போறான என்ன? தெரியலையேப்பா...!

இந்த அரசியலின் நீட்சி இன்றைக்கு பெண்களுக்கு அழகு என்பது வெள்ளை/மஞ்சள்/சிவப்பு நிறத்தோலே என்கிற பிம்பம் கட்டுமானமாக சமூகத்தில் நிலவுகிறது.

ட்ாரிக் முல்லா ஓரு மலேசியன், சில கோடிகள் அளவுக்கு மனித வள (manpower) வணிகத்தில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பங்களா தேஷ் போன்ற இடங்களில் ஏமாற்றியவன். இவனை மலேசியாவிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்து, தான் ஏமாந்துப்போன பணத்தை திரும்ப வாங்க நண்பர் ஓருவர் முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அப்போது இவனுக்கு பாதுகாப்பிற்க்காக பட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்தார் நண்பர். அங்கே ஓர் அறையில் தங்க வைத்திருந்தோம். அதுவொரு விடுதி. அதன் கீழே ஓரு பெட்டிக்டை இருந்தது.

ஓரளவுக்கு பிரச்சினை தீர்ந்தவுடன் சென்னைக்கு கிளம்பிய போது அந்த கடைக்காரர் வந்து நின்றார். கிட்டதட்ட 900 ரூபாய்க்கு மேலாக கடனாக இவனுக்கு சிகரெட் கொடுத்துள்ளார். நான் கேட்டேன் ஏன்னய்யா 25 வருடங்களாக இதே ஊரில் இருக்கிற நான் 1 ரூபாய் அப்புறம் தருகிறேன் என்றால் முகத்தை காட்டுகிற நீ! எப்படிய்யா! இவனுக்கு இவ்வளவு ரூபாய்க்கு சிகரெட் கொடுத்த என்றால், வெளியூரு வெள்ளைக்காரர் ஏமாற்றமாட்டார் என்கிற நம்பிக்கை என்றார்!

நான் இப்படித்தான் சொல்லிவிட்டு வந்தேன்! அப்படியாங்க! அவன் ஏற்கனவே பல கோடி பல பேருக்கு கொடுக்கணும், எல்லா பயபுள்ளைகளும் வெறியோடயிருக்காங்கய்க! நீயும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துக்க!

தோலின் நிறத்தால் நடக்கிற சமூக, அரசியலை பெரிய தலைகள் யாராவது எழுதுவார்கள், நமக்கு தெரிந்ததை நான் மொக்கை போட்டிருக்கேன். நான் ரெடி அடுத்த படத்துல இன்னும் கொஞ்சம் சிவப்பான கதாநாயகியின் மீதான தேடலை தொடர...!

9 comments:

TBCD சொன்னது…

நிறம் என்று சொன்னதும் நினைவுக்கு வருது...மற்ற மொழி நாயகர்கள் தமிழ் நாட்டிலே கலக்கோ கலக்குன்னு கலக்குவதற்கு இதுவும் ஒரு காரணமோ..

உதாரணமாக

1.எம்.ஜி.ஆர்-(இவர் காலத்திலே கலர் வித்தியாசம் திரையிலே தெரியும் முன்னே புகழைடைந்துவிட்டார் )
2.மம்முட்டி- (இவர் பல படம் நடிக்கவில்லை என்றாலும், இவர்க்கு இங்கே படம் கொடுக்க ஆள் உண்டு)
3.அப்பாஸ்-தமிழ் நாட்டிலே, பசங்களே இல்லை என்று...இவரை கதிர் இழுத்துட்டு வந்தார்
4.குணாள்- இவனையெல்லாம், ஒரு ஏழை மாணாக்கனாக காட்டத் துணிந்த இயக்குநரை எதால் அடிக்கலாம்
5.வினெய்- இதுவும் அதே...தமிழ் நாட்டிலே. அழகானா (சிவப்பான என்று படிக்கவும் )
6.மோகன் - இவர் எப்படியே உள்ள வந்து..எப்படியே செட்டில் அயிட்டாரு..
7.முரளி -அனேகமாக இவரின் தந்தை ஒரு தயாரிப்பாளர் என்பதலே வாய்ப்புக் கொடுக்கப்பட்டு..வளர்த்துவிடப்பட்டார்
8.அர்ஜுன் சலுஜா - இவர் கதை எனக்கு தெரியாது..
9.பிரகாஷ் ராஜ்- இது பாலசந்தர் கை வண்ணம்.
10.ரஜினி காந்து- இவரும் பால சந்தர் கை வண்ணம்...
11.வினித்
12.அஜித்

(தமிழ் நாட்டிலே பிறந்து வளர்ந்து பிற மொழி பேசும் நடிகர்களை இதிலே சொல்ல வில்லை..)..நிற்க !!

எங்க ஊரிலே, பழம் பெருச்சாளிகள் கூட ஜெ.ஜெ வரும் போது..என்ன நிறம்..எழுமிச்சைப் பழம் போல இருக்குதுய்யா அந்தம்மா என்று புகழாராம் சூட்டுவர்..இதில் திமுக ஆதரவாளர்களும் உண்டு..

கோவி.கண்ணன் சொன்னது…

கருப்பு நிறத்தை அவமானப்படுத்தவே 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' போன்ற பழமொழிகளே இருக்கிறது

என்னத்தச் சொல்ல.

ஒரு ஆப்ரிக்க கருப்பர் வெள்ளையரைப் பார்த்து உனது உடலின் நிறம் எனது விந்தின் நிறம் தான் என்றாராம்.

ஜமாலன் சொன்னது…

நிறம் என்பதும் நிறவெறி என்பதும் உடல் அரசியலில் பேச வேண்டிய பிரச்சனைத்தான். பேசுவோம். பொதுவாக உலகில் கருப்பு என்பது கீழானவை இழிவானவை ஒதுக்கப்ட்டவற்றையே குறிக்கும் வண்ணம் கட்டமைக்கபட்டுள்ளது. கருப்பு பணம், black magic இப்படி. வெள்ளை என்பது ஆதிக்கத்தின் குறி அது அழகியலின் குறி என்பதாக நமது அழகுணர்வுகள் அப்படித்தான் கட்டப்பட்டுள்ளது. அது மேற்கத்தியக் கட்டுமானத்துடன் உறவு கொண்டது. இது குறித்து எனது நூலில் "கலாச்சார அரசியலில் கவனத்தில் இருத்த வேண்டிய புள்ளிகள்" என்கிற தலைப்பில் ஒரு நீண்...........ட கட்டுரை உள்ளது. எழதியவற்றை எல்லாம் மீள்பதிவு செய்யவில்லை. உடல் அரசியல் என்கிற தலைப்பிலும் ஒரு சிறுநூல் அளவிற்கு ஒரு கட்டுரை எனது நூலில் உள்ளது. அதையும் மீள்பதிவு செய்யவில்லை. அதில் நிறம் குறித்த அரசியல் விரிவாக இல்லாவிட்டாலும் தொடப் பட்டுள்ளது. இதற்கே நீங்கள் மொட்டை போடும் நிலை என்றால்.. அதற்கெல்லாம்...

உடல் அரசியல் PDF-ல் உள்ளது தேவையேனில் அஞ்சலில் அனுப்பலாம். ஆனால் முடிக்கு நான் உத்தரவாதம் தரமுடியாது.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

என்னப்பா ஜெகதீசா!
ஃஃ
:)
ஃஃ
புன்னகையின் மர்மம் என்ன?என்ன??

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
எங்க ஊரிலே, பழம் பெருச்சாளிகள் கூட ஜெ.ஜெ வரும் போது..என்ன நிறம்..எழுமிச்சைப் பழம் போல இருக்குதுய்யா அந்தம்மா என்று புகழாராம் சூட்டுவர்..இதில் திமுக ஆதரவாளர்களும் உண்டு..
//

வாங்க டிபிசிடி,
நீங்களுமா...?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாங்க கோவி!

//
ஒரு ஆப்ரிக்க கருப்பர் வெள்ளையரைப் பார்த்து உனது உடலின் நிறம் எனது விந்தின் நிறம் தான் என்றாராம்.
//

என்னது புது மேட்டராயிருக்கே!
கொஞ்சம் விளக்கலாமில்லையா?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வணக்கம் ஜமாலன்!

எழுதுவீர்கள் என்கிற நம்பிக்கையிருக்கு!

PDF ஜ அனுப்புங்கள் முடி போனாலும், சிலவற்றை வாசித்துவிடுவது என்ற முடிவோடுதான் இருக்கிறேன் :))

TBCD சொன்னது…

நான் இது வரைக்கும் எந்த தமிழ் (?!) நடிகையயையும் பார்த்ததில்லை..

//*பாரி.அரசு said...
//
எங்க ஊரிலே, பழம் பெருச்சாளிகள் கூட ஜெ.ஜெ வரும் போது..என்ன நிறம்..எழுமிச்சைப் பழம் போல இருக்குதுய்யா அந்தம்மா என்று புகழாராம் சூட்டுவர்..இதில் திமுக ஆதரவாளர்களும் உண்டு..
//

வாங்க டிபிசிடி,
நீங்களுமா...?*//

TBCD சொன்னது…

இதற்கிடையிலே, தமிழ் திரையுலகில், நமது மக்களின் நிறத்தை இழிவுபடுத்தாமல், இயல்பான தமிழ் பெண்களை கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் போக்கு ஆரம்பித்து இருக்கிறது. உதா: தூத்துக்குடி, வீரமும் ஈரமும் போன்ற படங்கள்..

Related Posts with Thumbnails