திங்கள், 19 நவம்பர், 2007

வறட்டு தன்மானமும்.... சமூக அமைப்பும்...

அரச மரத்தடியில் கோயிந்தன் எள்ளும்,கொள்ளும் வெடிக்க உட்கார்ந்திருந்தான். காலையில கடைத்தெரு பக்கம் போனவன் மேலவூட்டு சின்னசாமி க்கிட்ட வாக்குவாதம் ஆகி கைகலப்பு வரைக்கும் போயி, சின்னசாமி நல்லா மொங்கி எடுத்துட்டான். அதனால கோயிந்தன் தன் காயம்ப்பட்ட முதுகை தடவிக்கொண்டே எரிச்சலில் வூட்டு பக்கம் போகமா இங்கனயே கிடந்தான். நல்லா வெயில் ஏறிக்கிட்டேயிருந்தது. ஊருல கொஞ்சம் விவரமான ஆளு நம்ம இராமசாமி அந்த பக்கமா வர...

"ஏம்பி! கோயிந்தா! என்னப்பா காலையில கடைத்தெருவுல தகராறாமே! என்ன விவகாரம்" என்றார்.

தன் காயம்பட்ட முதுகை காண்பித்து...
"ஓன்னுமில்லைண்ணே! இந்த சாமி பயல! ஏதாவது பண்ணணுமுண்ணே! " அப்படின்னு புலம்பினான்.

"இது என்னல கண்ணை கசக்கிட்டு! இப்ப டவுனுக்கு வண்டி வரும் நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு போ! அவன் மேல கேசு குடு, இடுப்புக்கு மேல காயமுல்ல பட்டிருக்கு நிச்சயம் 307 போட்டு நான்பெயிலப்புல்ல உள்ளற போட்டுருவனுக! உள்ளற கிடந்ததா தான் அவனுக்கு புத்தி வரும்" என்றார்.

"அப்படியாண்ணே நிச்சயமா உள்ளற போட்டுருவாய்ங்களா...?"

"ஆமாப்பா! கொலை முயற்சின்னு அடிச்சுச்சொல்லு என்ன!"

டவுனுக்கு பஸ் பிடித்து பயவுள்ள போலீஸ் ஸ்டேசனுக்கு நடந்தான். கூட வந்தவர் சொன்னான்.

வேண்டாமுண்ணே ஊருல நாலு பேரக்கூட்டி என்ன ஏதுன்னு கேட்டுக்கலாம், இவிங்க கிட்ட போன ஊருவிக்கிட்டு விட்டுவுறுவானுவ... சொல்லுறதக்கேளு!

சும்மா வாப்பா! இராமசாமி சொன்னப்படி அவன உள்ளறப்போட்டாத்தான் மனசு ஆறும்.

உள்ளே நுழைகிறார் கோயிந்தன். வாசலில் ஏட்டய்யா மறிக்கிறார். சட்டை கிழிந்து கொஞ்சம் ரத்தக்கறையோட வந்தா என்ன விவகாரம் என்பதை மோம்பம் பிடித்துவிட்டார்.

"வாய்யா என்ன விவாகரம்! இதே பொழப்பா போச்சு உங்க ஊருக்காரனுவகளுக்கு, என்னய்யா நினைச்சிட்டிருக்கீங்க... இங்கேயிருந்து 30 கி.மீட்டருல்ல ஊரு, நாங்கென்ன இன்ஸ்பெக்டரா வண்டி வச்சிருக்க, இருக்கிற சைக்கிள்ல இங்கேயெல்லாம் எத்தனவாட்டி வரது...!"
அவரு பிரச்சினையை அவர் கொட்டித்தீர்த்தார்.

"யோவ்! ஏட்டு இன்னய்யா சத்தம்!" என்று வந்தார் ரைட்டர்

"முதுகுல அடிப்பட்டதுக்கெல்லாம் 307 போட முடியாதுய்யா! கூப்புட்டு ரெண்டு சாத்து சாத்தி அனுப்பி வுடு!"

நம்ம கோயிந்தன் விடாப்புடியா கொலைமுயற்சியில் நிற்க...
ஏட்டும், ரைட்டரும் கலந்து பேசி...

"சரி! சரி! ஓரு 2000 த்த கொடு நான் ரைட்டருக்கிட்ட பேசி! எப்.ஐ.ஆர் போடச்சொல்றேன்!"
"ஏட்டய்யா! எதுக்கு 2000"

"யோவ்! இங்கேயிருந்து உங்க ஊருக்கு எப்படி போறது காரு எடுக்கணும்!

அப்புறம் ரைட்டர கவனித்தால் தான் 307 போடுவார் அப்புறம் பார்த்துக்கப்பா!"

இரண்டாயிரத்த கொடுத்து ரைட்டர் 307 கேசு எழுதின பிறகு, கார் எடுத்து ஏட்டய்யா கூட்டிக்கினு ஊருக்கு வந்தால்...

சின்னசாமி வூட்ல இல்லை... ஏட்டய்யா அவன் பெண்டாட்டிய மிரட்டி வந்தவுடன் ஸ்டேசனுக்கு வரணும் அப்படின்னு சொல்லிட்டு கிளம்பிட்டார்...

கோயிந்தனுக்கு இருப்புக்கொள்ளவில்லை, அப்பாடி சின்னசாமி உள்ளற போனாத்தான் தன்னோட மானமே காப்பாற்றப்பட்டதாக கனவு காண ஆரம்பித்தான்.

தொடரும்...

நன்றி கரு : சுதாகரன்

3 comments:

ஜெகதீசன் சொன்னது…

:))
நல்லா இருக்கு... தொடருங்கள்.....

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு...

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நன்றி ஜெகதீசன்!

TBCD சொன்னது…

//*
ஜெகதீசன் said...

புது டெம்ப்ளேட் நல்லா இருக்கு...*//

யோவ் உனக்கு இலை நிறத்திலே இருக்கிறது எல்லாமே நல்லா இருக்கும்மே.....

பாரி..கண்ணுல டாலடிக்குதுப்பா...ஏற்கனவே எழுத்து அளவு சின்னது..இதுல..இந்த புது நிறம் வேற...டெம்பிளேட் நல்லா இருக்கு...கலர் தான். கொஞ்சம் கேரிங்கா இருக்கு..

என்ன ஆகுமின்னு நானும் ஆவலோட பாத்துட்டு இருக்கேன்...அவன் சொத்து பத்து எல்லாம்..அம்புட்டுத் தானா...

Related Posts with Thumbnails