வியாழன், 22 நவம்பர், 2007

உடலுறவுக்கான வேட்கை, திருமணம்,குடும்பம்,உறவுமுறைகள் மற்றும் சமூக அமைப்பு...

உங்களுக்கு அழ வேண்டும் என்கிற உணர்வு எழுகிறது என்று எடுத்துக்கொண்டால், அந்த உணர்வு எழுவதற்க்கான உடல் இயங்கியலில் ஏற்ப்பட்ட மாற்றங்கள், அதை வெளிப்படுத்துவதற்க்கு உடல் இயங்கியலின் செயற்ப்பாடுகள் இரண்டும் இயல்பானது. ஆனால் அந்த உணர்வை பாதிக்கும் புறக்காரணிகள் பல இருக்கின்றன. (உதாரணத்திற்க்கு 1. அழ வேண்டும் என்று தோன்றினாலும் "ஆண்ப்பிள்ளை அழக்கூடாது" என்கிற கட்டுமானம். 2. அழ வேண்டும் என்று தோன்றினாலும் பொது இடத்தில் அழக்கூடாது என்கிற கட்டுமானம்)

இவ்வாறு உணர்வுகள் உருவாக்கதிலிருந்து, அதை வெளிப்படுத்துவது வரை இயல்பான இயங்கியலை புறக்காரணிகள் பாதிக்கிறது. உணர்வுகளை வெளிப்படுத்துவதில் ஏற்ப்படும் இடர்ப்பாடுகளினால் உடலும், மனதும் அவதியுறுகின்றன. இதை உடல் ஓரளவுக்கு சமன் செய்யவே முயற்சிக்கிறது ( tolerance level ) தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் வரை.

இப்படி உணர்வுகள் உருவாக்கதிலும், வெளிப்படுத்துவதிலும் ஏற்ப்படுகிற சிக்கல்கள் உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை உருவாக்குகிறது. (இங்கே நான் சுட்டுகிற அளவுகோல் சமூகத்தின் இயல்பு நிலையை உள்வாங்க இயலா நிலையில் உள்ள உளவியல் பாதிப்பு.)

உடலுறவுக்கான வேட்கை என்பது உடலின் இயங்கியலில் ஏற்ப்படுகிற உணர்வு உருவாக்கம். அதை வெளிப்படுத்த சமூகத்தில் இருக்கிற தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் மிக அதிக அளவில் சமூகத்தில் உளவியல் பாதிப்படைந்த மனிதர்களை நாம் உருவாக்குகிறோம் என்றே பொருள். மாறாக அவ்வாறு நடக்கவில்லை என்பது நிகழ்வு! ஆகையால் எங்கோ உணர்வானது வெளிப்படுத்தபட்டுவிட்டது என்பது உட்ப்பொருள்.

இந்த உடலுறவுக்கான வேட்கையை வெளிப்படுத்துவதற்க்கு மனித சமூக அமைப்பின் வளர்ச்சியில் கண்டுக்கொண்ட ஓர் தீர்வு திருமணம் என்பது. ஜமாலன் அவர்களின் பார்வையில் திருமணம் எனும் உடல் ஒடுக்க எந்திரம் என்கிறார். ஏன் திருமணம் என்கிற அமைப்பு தேவைப்பட்டது?. மாறுப்பட்ட பார்வையாக (நன்றி : சுதாகர்) மனிதன் குழுவாக சமூகமாக வாழ தலைப்பட்டப்போது வலுவுள்ளவன் தனக்கு தேவையான இணையை கவர்ந்தான் (உதாரணத்திற்க்கு பழைய அரச அமைப்பில் தனக்கு பிடித்திருக்கிறது என்கிறபட்சத்தில் எந்த பெண்ணையும் அரண்மனைக்கு தூக்கி சென்றுவிடுகிற நிகழ்வுகள்). இதனால் சமூகத்தில் ஏற்ப்படுகிற நிலையற்ற தன்மையை போக்க வேண்டுமானால், இந்த பெண்ணும், ஆணும் கணவன், மனைவி என்கிற மாதிரியான அமைப்பு உருவாக்கப்பட்டது.
இப்படியிருப்பதால் வலுவுள்ளவன் பிறருடைய இணையை கவருதல் தடுக்கப்பட்டது. அது குற்றச்செயலாகவும் சமூகத்தில் அறிவிக்கப்பட்டது. அதுவே "கல்யாணமான பொண்ணுடா..." என்று சொல்லாடலாக சமூகத்தில் உலவுவதை காணலாம்.

அதையே வள்ளுவர்

"பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு."

என்கிறார்.

வல்லவனுக்கு போக எஞ்சியதே மற்றவர்களுக்கு என்பதை தவிர்க்கவே திருமணம் என்கிற கட்டமைப்பியல் உருவாக்கப்பட்டது. அது மனிதனை உடலறவு வேட்கையை வெளிப்படுத்துவதற்க்கான தளமாகவும் வைத்துள்ளது. ஆக மனித சமூகம் தனக்கான ஓழுங்கை தொடர்ந்த பரிணாமத்தின் மூலமே அடைகிறது.

உடலுறவுக்கான வேட்கையை மறுத்தல் (அ) அதை புறக்கணித்து விட்டு வாழ்தல் என்பதை பேசும்பொழுது, (உதாரணமாக விவேகானந்தரை காட்டுவார்கள்...)
இங்கே இயல்பாக சில கேள்விகள் எழுகின்றன...
1. இயல்பான உடல் இயங்கியல் விவேகானந்தருக்கு இருந்ததா (any Physiology disorder)?
2. அவருக்கு ஏதேனும் உயிர்-வேதி சீரற்ற தன்மையிருந்ததா (any bio-chemical disorder)?
3. தன்னுடைய உடல் இயங்கியலை கட்டுப்படுத்த மருந்துகள் உட்க்கொண்டாரா?
இந்த கேள்விகளுக்கு விடைதெரியாமல், அவர் உடலுறவுக்கான வேட்கையை மறுத்துள்ளார் என்பதை மட்டும் முன்னிறுத்துவது தவறான வழிக்காட்டுதல்...

சமூக ஓழுங்கை கட்டமைக்கிற திருமணம் என்பதை மறுத்தால், வலுத்தவனுக்கோ (அ) வலுத்தவளுக்கோ மட்டுமே வாய்ப்பு என்கிற சமூக சமநிலையற்ற தன்மையை அடைவோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

9 comments:

TBCD சொன்னது…

இப்ப என்னைய விட்டுட்டு..நீங்க இந்துத்துவா வியாதிங்க கூட சண்டைப் போட முயற்சிக்கிறீங்களா...

கோவி.கண்ணன் சொன்னது…

//இந்த கேள்விகளுக்கு விடைதெரியாமல், அவர் உடலுறவுக்கான வேட்கையை மறுத்துள்ளார் என்பதை மட்டும் முன்னிறுத்துவது தவறான வழிக்காட்டுதல்...
//
உடலுறவு இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படி இருக்கிறவர்களை மன நோய் பாதிக்கும் என்று சொல்வதையும் ஏற்கமாட்டேன். அதில் ஈடுபடவில்லை என்றால் வேறு விசயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.


//சமூக ஓழுங்கை கட்டமைக்கிற திருமணம் என்பதை மறுத்தால், வலுத்தவனுக்கோ (அ) வலுத்தவளுக்கோ மட்டுமே வாய்ப்பு என்கிற சமூக சமநிலையற்ற தன்மையை அடைவோம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.//

உடலுறவு முறைப்படுத்துதல் (இன்னார் இன்னாருடன் மட்டுமே) என்பதே அந்த வேட்கைக்கான தடைதானே ? திருமணம் என்பதன் முதற்காரணம் ஒரு பாதுகாப்புக்குத் தானேயன்றி, உடலுறவு முதற்காரணம் அல்ல, திருமணத்தில் பாலுறவு ஒரு அமைப்பு.

Mohandoss சொன்னது…

விவேகானந்தர் இந்திரியத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், கடைசி காலத்தில் அதுவே அவருக்கு பெரிய சங்கடமானது என்றும் அதனால் தான் அவர் சீக்கிரமே இறந்துபோனார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆனால் மருத்துவ உலகம், அப்படியிருப்பதை மறுக்கிறது எவ்வளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும் தூக்கத்திலோ(கெட்ட கனவு காணாமலும் கூட) இல்லை தூங்காமல் இருக்கும் பொழுது ஒரு நிலையில் இந்திரியம் வெளிப்படும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

-----------------

//உடலுறவு இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படி இருக்கிறவர்களை மன நோய் பாதிக்கும் என்று சொல்வதையும் ஏற்கமாட்டேன். //

கண்ணன் மனநோய் என்பதை நீங்கள் சரியாக எடுத்துக்கொண்டீர்களா தெரியவில்லை, சாதாரண வாழ்க்கையில் இருந்து மாறியிருப்பதைக் கூட மனநோய் என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு.

சாதாரணமாய் நடக்காத ஒன்றை கட்டுப்பாட்டுடன் செய்யும் பொழுது அதைப் பற்றிய ஒரு கில்டி கான்ஸியஸோ இல்லை கான்ஸியஸோ வருகிறது இல்லையா? அதுவுமே கூட மனநல மருத்துவர்களால் மனநோய் என்று குறிப்படப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பெட்டர் ஏதாவது டாக்டர் மக்கள் எழுதினால் நன்றாகயிருக்கும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//சாதாரண வாழ்க்கையில் இருந்து மாறியிருப்பதைக் கூட மனநோய் என்று மருத்துவர்கள் கூறுவதுண்டு.

சாதாரணமாய் நடக்காத ஒன்றை கட்டுப்பாட்டுடன் செய்யும் பொழுது அதைப் பற்றிய ஒரு கில்டி கான்ஸியஸோ இல்லை கான்ஸியஸோ வருகிறது இல்லையா? அதுவுமே கூட மனநல மருத்துவர்களால் மனநோய் என்று குறிப்படப்படுவதைப் பார்த்திருக்கிறேன். பெட்டர் ஏதாவது டாக்டர் மக்கள் எழுதினால் நன்றாகயிருக்கும்.
//

இளம் பெண்ணின் கணவன் திடிரென்று விபத்தில் இறந்து போனது ஒரு இளம்பெண்ணின் சாராண வாழ்க்கையில் இருந்து மாறிப்போவது தான்.

இன்றைய தேதியில் கைம்பெண் மறுமணங்கள் நடக்கிறது, ஆனால் சென்ற நூற்றாண்டுகள் வரையில் எண்ணிப்பாருங்கள், அதற்காக தமிழ் திரைப்படங்களில் காட்டப்படுவது போல் விரக தாபத்தல் நடு இரவில் தலையில் பக்கெட் பக்கெட்டாக தண்ணீரை கொட்டிக் கொள்வார்கள் என்று அபத்தமாகவும் நினைக்க முடியாது.

குழந்தைகளை வளர்த்தெடுப்பது, வேலைக்கு செல்வது என்று வேறு சிந்தனையில் மனதை புகுத்திக் கொள்வார்கள். இத்தகைய வாழ்க்கை முறை இருந்ததை மனநோய் என்று கொள்ளமுடியுமா ?

விவேகநந்தரை குறித்து சொல்லாவிட்டாலும் அவரின் குருவான இராமகிருஷ்ணர் திருமணம் ஆகியும் உறவு கொள்ளாமல் மனைவியை தெய்வமாக போற்றி வந்தார்

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

ஃஃ
இப்ப என்னைய விட்டுட்டு..நீங்க இந்துத்துவா வியாதிங்க கூட சண்டைப் போட முயற்சிக்கிறீங்களா...

ஃஃ
வாருங்கள் டிபிசிடி!

யாருடனும் சண்டை போடுவதல்ல நோக்கம்! பதிவுலகம் ஓரு தளம் நம்முடைய சிந்தனைகளை பகிர்ந்துக்கொள்ள அவ்வளவே! :))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!

ஃஃ
உடலுறவு இல்லாமல் இருக்க முடியுமா ? அப்படி இருக்கிறவர்களை மன நோய் பாதிக்கும் என்று சொல்வதையும் ஏற்கமாட்டேன். அதில் ஈடுபடவில்லை என்றால் வேறு விசயங்களில் அவர்கள் கவனம் செலுத்துவார்கள்.
ஃஃ

உடலின் இயங்கியலை மறுத்தல் என்பது மன பிறழ்வு என்றே உளவியல் குறிக்கிறது.

ஃஃ

உடலுறவு முறைப்படுத்துதல் (இன்னார் இன்னாருடன் மட்டுமே) என்பதே அந்த வேட்கைக்கான தடைதானே ? திருமணம் என்பதன் முதற்காரணம் ஒரு பாதுகாப்புக்குத் தானேயன்றி, உடலுறவு முதற்காரணம் அல்ல, திருமணத்தில் பாலுறவு ஒரு அமைப்பு.
ஃஃ

உடலறவை முறைப்படுத்துதல் என்பது நாகரிக முறையாக கொள்ளலாம். அதன் மூலமே நாம் குடும்பம் என்கிற சமூக அலகை அடைந்திருக்கிறோம்.

பாலுறவு என்பது இல்லையென்றால் திருமணம் என்பது கேலிப்பொருளாகிப்போகியிருக்கும்.

திருமணம் என்பது சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாலுறவு.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் மோகன்தாஸ்!

ஃஃ
விவேகானந்தர் இந்திரியத்தைக் கட்டுப்படுத்தியிருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன், கடைசி காலத்தில் அதுவே அவருக்கு பெரிய சங்கடமானது என்றும் அதனால் தான் அவர் சீக்கிரமே இறந்துபோனார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஃஃ

இன்றைக்கும் இந்த மாதிரியான அறிவியலுக்கு முரணான கட்டுக்கதைகள் இருக்கதான் செய்கிறது.

குசும்பன் சொன்னது…

"இன்றைக்கும் இந்த மாதிரியான அறிவியலுக்கு முரணான கட்டுக்கதைகள் இருக்கதான் செய்கிறது."

எல்லாவற்றையும் அறிவியலோடு, ஆய்வுக்கு உட்படுத்தினால் விடை கிடைக்காது, வீண் வாதமே கிடைக்கும்!

இந்திரியத்தை கட்டுபடுத்தி வாழ்வது என்பது ஒரு யோக கலை அதுக்கு பல யோகாசனங்கள் இருக்கின்றன, அதை முறையாக கற்றால் எபொழுதும் வெளியேறாது.அது போல் செய்தவர்கள் யோகிகள்.

திருமணம் என்பது நம் சமூகம் பல விசயங்களுக்காக ஏற்படுத்த பட்டது அதன் அடுப்படை காரணம் அல்லது ஒரு காரணமாக உடலுறவு என்பது ஆகும். உடலுறவுக்காக மட்டும் திருமணம் அல்ல.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

அய்யா குசும்பரே!
ஃஃ
இந்திரியத்தை கட்டுபடுத்தி வாழ்வது என்பது ஒரு யோக கலை அதுக்கு பல யோகாசனங்கள் இருக்கின்றன, அதை முறையாக கற்றால் எபொழுதும் வெளியேறாது.அது போல் செய்தவர்கள் யோகிகள்.
ஃஃ

எந்த யோகி எவ்வளவு கட்டுப்படுத்தினார்கள்? எங்கே நடந்தது அது? எதையாவது புத்தகத்தில் படித்து கதையளக்க கூடாது!

யோகாசனம் பத்து ஆண்டுகளாக செய்கிறேன்! வேறு யாரிடமாவது உங்கள் புரட்டுகளை அள்ளி விடுங்கள். காதில் பூ வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

சுயமாக சிந்திக்கிறீர்களா நீங்களெல்லாம் என்றே சந்தேகம் வருகிறது! எவனாவது அவர் செய்திருக்கிறார்! இவர் கிழித்திருக்கிறார்கள் என்று சொன்னால் கேட்டுக்கொண்டு ஆட்டு மந்தை போல தலையாட்டிக்கொண்டு இங்கே வந்து யோகிகள் கிழித்திருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.

எனக்கு நிறுவிக்காட்ட முடியுமா?
நன்றி

Related Posts with Thumbnails