வெள்ளி, 30 நவம்பர், 2007

மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!

சமீபத்தில் மலேசிய தமிழர்கள் தாக்கப்பட்டதற்க்கு தமிழக தலைவர்கள் கண்டணம் தெரிவித்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து நண்பர் பசிலன் உடன் ஓர் உரையாடல் நிகழ்ந்தது அதன் தொகுப்பாக இங்கே எழுதுகிறேன்.

முதலில் சிங்கப்பூர், மலேசியா, பர்மா, மியன்மார், மலாய் தீவுகள், தென்னாப்ரிக்கா, பிஜி தீவுகள், இலங்கை மலையகத்தமிழர்கள் மற்றும் ஆங்கிலேய, பிரெஞ்சு காலணிகளில் குடியேற்றப்பட்ட தமிழர்கள் யார்? அவர்கள் ஏன் தமிழகத்தை விட்டு ஓட வேண்டும்? அவர்கள் ஏன் கூலித்தொழிலாளர்களாக இடம்(புலம்) பெயர்ந்தார்கள்? போன்ற கேள்விகளுக்கு தேடல் தொடங்கினால் மட்டுமே... சில அடிப்படை உண்மைகளை உணர முடியும்...

பார்ப்பானீயம் த்ராவிட சமூகத்தை சிதைத்து தனது பரவலை அதிகரித்து கொண்டே வந்துக்கொண்டேயிருக்கிறது, வடக்கிலிருந்து தெற்க்கு நோக்கிய பரவலில் தமிழர்களும், அதன் அரசியல் அமைப்பான மன்னாராட்சிகளும் அடிமைப்பட்டனர். ஆரிய வலையில் தமிழர்கள் வீழ்ந்து சின்னாபின்னமான ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் தமிழர்களில் மிகக்கடுமையான சமூக ஏற்றத்தாழ்வுகள் ஏற்ப்பட்டிருந்தது. பிறப்பால் ஓருவனை உயர்ந்தவன் என்றும் மற்றொருவனை தாழ்ந்தவன் (சூத்திரன்) என்றும் உரிமையற்ற, சுதந்திரமற்ற மனிதர்களாக(அடிமைகளாக) நடத்துக்கிற வாழ்வியல் தமிழர்களிடம் ஆரியர்களால் புகுத்தப்பட்டிருந்தது.

காலம், காலமாக அடிமைப்பட்டு கிடந்த, உரிமையற்று கிடந்த, தங்கள் உணர்வுகளை வெளியிட முடியாமல் வாடிய தாழ்த்தப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட மக்களே ஆங்கிலேயர்கள் தங்களுடைய காலணிகளுக்கு தொழிலாளர்கள் தேவை எனும் போது ஓடியவர்கள்!

சமூகக்கொடுமைகளிலிருந்தும், முதலாளிகளின் வர்க்க ஓடுக்கு முறையிலிருந்தும் தங்களை காத்துக்கொள்ளவே ஆங்கிலேய காலணிகளுக்கு ஓடினார்கள்.

ஓடுக்கப்பட்ட இம்மக்கள் உழைப்பால் எதையும் உருவாக்கும் வல்லமை படைத்த தமிழர்கள், தங்களின் ஓற்றுமையின்மையால் அழிகிற வரலாறு தமிழர்களுக்கு புதிதல்ல :( , கருங்காலிக்களுக்கும், துரோகிகளுக்கும் பஞ்சமே இருப்பதில்லை தமிழினத்தில்!.

தமிழர்களின் உழைப்பாற்றலை கண்டுக்கொண்ட ஆங்கிலேயர்கள் தங்களுடைய காலணி நாடுகளுக்கெல்லாம் தமிழர்களை கூலிகளாக அழைத்துச்சென்றான். காடு திருத்தி கழனி அமைத்து, கோட்டை அமைத்து கொடுத்தவன் கொத்தடிமைகளாகவே வாழ்ந்தான். பொன் விளையும் மண் உருவாக்கி கொடுத்தவன், மண்ணாகி அழிவதை என்றென்று சொல்வது :( அவன் விழிக்கவேயில்லை. அவனுக்கு விடுதலை என்பது வரலாற்றில் மறுக்கப்பட்டது. (சரி! பழங்கதை பேசி பாழாய் போவதை நிறுத்தடா! என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது).


கொஞ்சம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள்... இவர்களிடம் சில கேள்விகளை வலையேற்றுகிறேன்...

13 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//சமூகக்கொடுமைகளிலிருந்தும், முதலாளிகளின் வர்க்க ஓடுக்கு முறையிலிருந்தும் தங்களை காத்துக்கொள்ளவே ஆங்கிலேய காலணிகளுக்கு ஓடினார்கள்.//

உண்மைகள் மறைக்கப்பட்டு, குடியேறுபவர்களும் ( வந்தேறிகளும்), கொண்டு சென்று விட்டவர்களும் (அடிமைகளும்) ஒன்று என்பது போல் வரலாறுகள் பன்னெடும் காலமாக திரிக்கப்படுகிறது.

உங்கள் தெளிவான பதிவுக்கு பாராட்டுக்கள்

TBCD சொன்னது…

என் கருத்துடன் உங்கள் கருத்தும் ஒத்துப் போகின்றது...

ஏன்னா...சரித்தரம்....அது தானே.... :)

பெயரில்லா சொன்னது…

ஆ இவ்வளவு கேவலமான முண்டங்களா தமிழர்கள்?

பெயரில்லா சொன்னது…

அப்ப கோவி.முண்டம்.கண்ணன்,சொறி.அரசு ஏன் சிங்கப்பூருக்கு ஓடிப் போனதுகளாம்?

TBCD சொன்னது…

நிறைய பதிவுலே விரிவா எழுதுறேன்..சீக்கிரம் எழுதுறேன்னு சொல்லுறீங்க..ஆனா..எழுதவே மாட்டேங்கிறீங்க...
படம் போட்ட 10 நிமிடத்திலே இடைவேளையா....
சீக்கிரம் எழுதுங்க...அட அட்லீஸ்ட்..விடுமுறை வருது...(கிறிதுமஸ்) அப்பயாச்சும் எழுதிப் போடுங்க...

வெற்றி சொன்னது…

பாரி,
பதிவுக்கு மிக்க நன்றி.

19ம் நூற்றாண்டில் தாய்த் தமிழகத்திலிருந்து பல இலட்சம் தமிழர்கள் வெளியேறி/வெளியேற்றப்பட்டு 40 க்கு மேற்பட்ட நாடுகளில் குடியேற்றப்பட்டனர் என்றும் இவர்களைப் பற்றி எந்த ஒரு தமிழ் அறிவுஜீவிகளும் ஒரு சரியான ஆய்வுகள் செய்து எமது சோக வரலாற்றைப் பதியவில்லை எனவும் ஈழத்து பேராசிரியர் க.அருனாசலம் அவர்கள் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அவரும் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல சாதிக் கொடுமைகள் தாங்காதுதான் பல இலட்சம் தமிழர்கள் கண்ணீர் மல்க தமது தாய் மண்ணைப் பிரிய மனமின்றிப் பிரிந்தனர் என சொல்லியிருந்தார்.

அவரின் நூலில் இருந்து சில பகுதிகள் கீழே:
--------------------------------
"காகம் இல்லாத ஊரும் கிடையாது; தமிழன் இல்லாத நாடும் கிடையாது" என்பது பழமொழியாகவோ, அன்றிப் புதுமொழியாகவோ வழங்கப்படுகின்றது.
சிலர் இதனைப் பெருமையுடனும் கூறிக்கொள்வர். எவரும் இதில் பெருமைப்படுவதற்கு எதுவுமில்லை.

மாறாக, வேதனையும் சோகமுமே மேலோங்கிக் காணப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் சென்று அங்கு அரசியல் பொருளாதாரத் துறைகளில் ஆதிக்கம் செலுத்திய பிரித்தானியரைப் போன்று தமிழர்களும் செய்திருந்தாலாவது, ஏகாதிபத்தியப் பெருமை பேசிக்கொள்பவர்கள் பெருமிதப்படலாம்.

ஆயின் தமிழ்த் தொழிலாளர்களோ பல நூற்றாண்டுகளாகத் தமது தாயகத்திலேயே தமது இனத்தவராலேயே சாதி, குலம், சமயம், சாத்திரம், தெய்வம் முதலியவற்றின் பெயராலே தயை தாட்சண்யமின்றிச் சுரண்டப்பட்டும், வஞ்சிக்கப்பட்டும் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டும் வாழ்வு பறிக்கப்பட்ட, வேறு வழியின்றித் தமது வயிற்றுத் தீயைத் தணித்தற் பொருட்டு, இதயக் குமுறலுடனும் கலங்கிய கண்களுடனும் தாயகத்தை விட்டு வெளியேறினர் வெளியேற்றப்பட்டனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில், உலகின் பல்வேறு பாகங்களுக்கும் பூரண அடிமைகளாகவும், அரை அடிமைகளாகவும், கூலிகளாகவும் தமிழ்த் தொழிலாளர்கள் பண்டங்களைப் போன்றோ, மந்தைகளைப் போன்றோ கப்பலில் ஏற்றப்பட்டும், கொண்டு செல்லப்பட்டும் குடியமர்த்தப்பட்டனர். அக்காலப்பகுதியில், உலக அரங்கில் ஆதிக்கப் போட்டியிலே தீவிரமாக ஈடுபட்ட பிரித்தானியரினதும் பிரான்சியரினதும் ஆதிக்கத்திருந்த நாடுகளிலும் தீவுகளிலுமே, தமிழ்த் தொழிலாளர்கள் அதிக அளவிற் குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு குடியமர்த்தப்பட்ட நாடுகளும், தீவுகளும் நாற்பதுக்கும் மேற்பட்டவை எனக் கூறுவர். எனினும் இதுவரை யாரும் சரியான முறையில் கணக்கிட்டுள்ளதாகத் தெரியவில்லை. இவ்விடங்களிலே குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்களின் அன்றைய அவலங்கள் இன்றைய நிலை முதலியன பற்றி வரலாற்று ரீதியாகவும் விரிவாகவும் இதுவரை ஆராயப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. எனினும், இவ் வகையில் தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார், உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கப் பொதுச் செயலாளர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் முதலியோர், இனப்பற்றுதலினால் உந்தப்பெற்று மேற்கொண்ட பணிகள் பாராட்டத்தக்கவை.

தமிழக வரலாற்றின் முன்னைய காலகட்டங்களிற் காணப்படாத அளவிற்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலட்சோபலட்சம் தமிழ்த் தொழிலாளர்கள் தமிழகத்திற்கு மிக அண்மையிலுள்ள இலங்கையில் மட்டுமன்றி, நூற்றுக்கணக்கான பல்லாயிரக் கணக்கான மைல்களுக்கப்பாலுள்ள நாடுகளுக்கும் தீவுகளுக்கும் கொண்டு சென்று குடியமர்த்தப்பட்டனர். அவற்றுள் முக்கியமான சில இடங்கள் வருமாறு. நேவிஸ், அன்ரீல்ஸ், தாஹித்த, நியூ கலிடோனியா, கிரனிடா, சென்ட்குறோக்ஸ்,பிஜி, டேமாறா, மொறீசியஸ், ரிறினிடாட், றயூனியன், தென் ஆபிரிக்கா, வியட்னாம், அந்தமான், சுமாத்திரா, சிசெல்ஸ், ஜமெய்க்கா, சுரினாம், பிரிட்டிஷ் கயானா, குவாட்லோப், மாட்னிக், சென்ட் வின்சன்ற், சென்ட் கிறஸ், சென்ற் லூசியா, பர்மா, சிங்கப்பூர், மலேசியா. அவர்கள் அங்கு அனுபவித்த கொடுமைகள் அளப்பில. அவர்களது வரலாறு சோகம் மிகுந்து, துயரங் கவிந்து, இருள்படிந்து குருதி நிறைந்து வேதனைகள் மலிந்து காணப்படுகிறது.
...
இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலேயே தமிழ்த் தொழிலாளர்கள் தொடர்ந்தும் தொழிலாளர்களாகவும், அதே சமயம் தமிழர்களாகவும் வாழ்ந்து வருகின்றமையும், அத்தகைய சில நாடுகளில் இலங்கையே முதன்மையானதாகவும் இலட்சோபலட்சம் தமிழ்த் தொழிலாளர்களைக் கொண்டுள்ளதாகவும் விளங்குகின்றமை கவனத்திற் கொள்ளப்படவேண்டிய ஒன்றாகும்.
இலங்கை தமிழகத்திற்கு மிக அண்மையில் இருப்பதாலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழகம் பல்வேறு துறைகளிலும் இலங்கையுடன் உறவு பூண்டிருப்பதாலும் வரலாற்றின் ஆரம்ப காலந் தொட்டே, இலங்கையில் தமிழர்கள் கணிசமான தொகையினராக வாழ்ந்து வருவதாலும், இந் நிலமை சாத்தியமாயிற்று எனலாம். எனினும் இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளிலே காலம் காலமாக வாழ்ந்து வரும் தமிழர்களின் வாழ்க்கை நிலமைகளிலிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் வேறுபட்ட வாழ்க்கை நிலைமைகளையும், பிரச்சனைகளையும் கொண்டவர்களாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டிற் குடியேற்றப்பட்ட தமிழ்த் தொழிலாளர்கள் விளங்குகின்றனர்.

--------------------------------
நன்றி:

பேராசிரியர் க. அருனாசலம்
பேராதனைப் பல்கலைக்கழகம்
இலங்கை
-----------------------------------

அருண்மொழி சொன்னது…

/சமீபத்தில் மலேசிய தமிழர்கள் தாக்கப்பட்டதற்க்கு //

அவங்க தமிழர்கள் இல்லீங்கோ. இந்துக்கள். அதனால்தானே hindraf என்ற பெயர் வந்தது.

மதத்தை இவர்களது பிரச்சனையில் நுழைத்தது ஒரு பெரும் தவறு. மலேசியர்களாக போராடி இருக்கவேண்டும். அல்லது இந்திய வம்சாவழியினராக போராடி இருக்கவேண்டும்.

இவர்கள் அடித்த கூத்தில் "உள்ளதும் போச்சுடா ....." என்பது போல தமிழர்கள் தங்களின் உரிமை அனைத்தும் இழந்துவிட்டு நிற்க போகின்றார்கள்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!

ஃஃ
உண்மைகள் மறைக்கப்பட்டு, குடியேறுபவர்களும் ( வந்தேறிகளும்), கொண்டு சென்று விட்டவர்களும் (அடிமைகளும்) ஒன்று என்பது போல் வரலாறுகள் பன்னெடும் காலமாக திரிக்கப்படுகிறது.
ஃஃ

திரித்தலும், புரட்டும் கொண்டே வாழ்தல் சிலருக்கு இயல்பு!

நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் டிபிசிடி!

ஃஃ
என் கருத்துடன் உங்கள் கருத்தும் ஒத்துப் போகின்றது...

ஏன்னா...சரித்தரம்....அது தானே.... :)

ஃஃ

உண்மை! நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

ஃஃ
நிறைய பதிவுலே விரிவா எழுதுறேன்..சீக்கிரம் எழுதுறேன்னு சொல்லுறீங்க..ஆனா..எழுதவே மாட்டேங்கிறீங்க...
படம் போட்ட 10 நிமிடத்திலே இடைவேளையா....
சீக்கிரம் எழுதுங்க...அட அட்லீஸ்ட்..விடுமுறை வருது...(கிறிதுமஸ்) அப்பயாச்சும் எழுதிப் போடுங்க...
ஃஃ

:))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் வெற்றி!

ஃஃ
பாரி,
பதிவுக்கு மிக்க நன்றி.

19ம் நூற்றாண்டில் தாய்த் தமிழகத்திலிருந்து பல இலட்சம் தமிழர்கள் வெளியேறி/வெளியேற்றப்பட்டு 40 க்கு மேற்பட்ட நாடுகளில் குடியேற்றப்பட்டனர் என்றும் இவர்களைப் பற்றி எந்த ஒரு தமிழ் அறிவுஜீவிகளும் ஒரு சரியான ஆய்வுகள் செய்து எமது சோக வரலாற்றைப் பதியவில்லை எனவும் ஈழத்து பேராசிரியர் க.அருனாசலம் அவர்கள் தனது நூலொன்றில் குறிப்பிட்டிருந்தார்.

அவரும் நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளது போல சாதிக் கொடுமைகள் தாங்காதுதான் பல இலட்சம் தமிழர்கள் கண்ணீர் மல்க தமது தாய் மண்ணைப் பிரிய மனமின்றிப் பிரிந்தனர் என சொல்லியிருந்தார்.
ஃஃ

தமிழன் பழையவற்றை எளிதாக மறந்து போகிறான்! அதுதான் மற்றவர்களுக்கு அவன் கிள்ளுகீரையாகி போகிறான்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் அருண்மொழி!

ஃஃ
அவங்க தமிழர்கள் இல்லீங்கோ. இந்துக்கள். அதனால்தானே hindraf என்ற பெயர் வந்தது.

மதத்தை இவர்களது பிரச்சனையில் நுழைத்தது ஒரு பெரும் தவறு. மலேசியர்களாக போராடி இருக்கவேண்டும். அல்லது இந்திய வம்சாவழியினராக போராடி இருக்கவேண்டும்.

இவர்கள் அடித்த கூத்தில் "உள்ளதும் போச்சுடா ....." என்பது போல தமிழர்கள் தங்களின் உரிமை அனைத்தும் இழந்துவிட்டு நிற்க போகின்றார்கள்.
ஃஃ

மலேசிய தமிழர்களின் அறியாமையை பயன்படுத்தி சில அயோக்ககியர்கள் செய்கிற கேலிக்கூத்துகள்!

Unknown சொன்னது…

பாரி,

(வெற்றி
காகம் இல்லாத ஊரும் கிடையாது தமிழன் இல்லாத நாடும் கிடையாது)

காகம் சிங்கப்பூருல சுட்டு கொடுத்தா
காசு டாலர்ல கொடுக்கும் சிங்கப்பூரு அரசு! தெரிந்துகொள்க!

மனிதன்!

Related Posts with Thumbnails