மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -4
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -3
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -2
மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...!
தமிழ் இசுலாமியர்களை பற்றிய ஓரு பார்வையை இங்கு பதிவுச்செய்ய விழைகிறேன். நிறைய மாற்றுக்கருத்துக்கள் இருக்கிறது. பன்முகத்தன்மைக்கொண்ட ஓரு பிரச்சினையை தட்டையாக அணுக முயற்சிப்போம்...
மலேசியாவில் உள்ள சிறுபான்மையினர் (இந்தியர்கள்(தமிழர்கள், பிற இனத்தவர்கள்), சீனர்கள், இலங்கை(தமிழர்கள், சிங்களர்கள்) மற்றும் பிற நாட்டவர்கள் அனைவரும் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இதை மறுப்பதற்க்கோ அல்லது அப்படியெல்லாம் இல்லை என்று படாவி மாதிரி கூச்சல் போடுவதோ வெறும் போலிதனம்.
இரண்டாம் தர சமூகமாக சீனர்கள் நடத்தப்படுவதை கண்டுக்கொண்ட சிங்கப்பூர் மற்றும் சீனா அதற்க்கான அழுத்ததை அதிகாரத்தின் வாயிலாக மலேசியாவிடம் பகிர்ந்துக்கொண்டப்போது... சில முட்டல்கள், மோதல்கள் நிகழ்ந்தன, நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது...
ஆனால் மாற்று நடவடிக்கையாக மலேசிய சீனர்கள் பலர் சிங்கையில் நிரந்தரவாசி (PR) எடுத்துக்கொண்டு சிங்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர். இதனால் சிங்கப்பூர் அரசுக்கு நிரந்தர வைப்பு நிதியில் (CPF) சில சிக்கல்கள் ஏற்ப்பட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் இந்த பிரச்சினையை சமாளிக்க நிரந்தர வைப்புநிதியை மலேசியர்கள் சிங்கையிலிருந்து எடுத்துச்செல்ல இயலாத வகையில் சட்டத்திட்டங்களை மாற்றினர், தொடர்ந்து மாற்றங்கள் வந்துக்கொண்டேயிருக்கிறது...
நான் இங்கே இதைக்குறிப்பிடுவதற்க்கு காரணம் மலேசியாவில் சிறுபான்மையினருக்கான பிரச்சினை திடீரென்று முளைக்கவில்லை கிட்டத்தட்ட கடந்த 50 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பதை உணர்த்துவதற்க்காகவே!
ஓராண்டிற்க்கு முன்பு நண்பர் பசிலன் வேலை காரணமாக கோலாலம்பூரில் தங்கிவிட்டு வந்து, தமிழர்கள் இரண்டாம் தரக்குடிமக்களாக நடத்தப்படுவதை மிகுந்த வருத்ததுடன் பகிர்ந்துக்கொண்டார். அவர் தற்போது மிகுந்த அலுவலில் இருப்பதால்.. அவருடைய அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள தாமதமாகிறது.
பதிவுலகிற்க்கு வந்தவுடன் நண்பர் டிபிசிடி மலேசியாவில் இருக்கிறார்... என்றவுடன், அவருடன் உரையாடிய உடனடி நிகழ்வே மலேசிய தமிழர்களின் நிலையை பற்றியது தான். மீண்டும் ஓரு ரங்கூனோ அல்லது ஈழமோ இங்கே ஏற்ப்பட்டு விடக்கூடாது என்கிற கவலையிருந்தது. அப்போது அவர் வேடிக்கையாக சொன்ன செய்தி "யோவ்! சும்மாயிருங்கய்யா! எதையாவது சொறிந்து விட்டு புண்ணாக்கி விட்டுராதீங்க...!" அப்படின்னார்.
சரி! பிரச்சினை இருக்கிறதை புரிந்துக்கொள்கிற நீ! ஏன்டா! HINDRAF ஐ கண்டிக்கிறாய் என்று கேட்டால்! மிகத்தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்த அமைப்பின் நோக்கம் சிறுப்பான்மையினர் நலனை பாதுகாப்பதல்ல! குறிப்பாக தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்ய போவதில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகிகளை பற்றிய அனைத்து தகவல்களை சேகரித்த பிறகே, இந்த முடிவிற்க்கு வர வேண்டியதாயிற்று.
இசுலாமியர்களை பொருத்தவரை தமிழகத்திலிருக்கிற வரை அவர்களுக்கு தமிழர்கள் என்கிற இனமாக தங்களை அடையாளம் காண்பது கிடையாது. உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் எல்லாம் இவர்களின் உறவுக்காரர்கள் மாதிரி நினைத்துக்கொண்டு வறட்டுத்தனமாக இசுலாமிய நாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கிறது.
இது தமிழகத்தில் அவர்கள் இருக்கிற வரைதான். அதே இசுலாமியர்கள் சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு நகரும் போது தான் தங்களுடைய இசுலாமியம் என்பது தங்களை புறக்கணிப்பிலிருந்து காப்பாற்றவில்லை என்பதை உணருகின்றனர். எந்த அரேபிய ஷேக் கும் வா! என் இசுலாமிய சகோதரா! என்று வாரிக்கொடுப்பதில்லை:( எந்த மலாய் இசுலாமியனும் வா! என் சகோதரனே! என்று வாரியணைப்பதில்லை!
தமிழ் இசுலாமியர்கள் தங்களுடைய மொழி, இனம் என்பதை தமிழகத்தை விட்டு வெளியில் வரும்போது தான் தெளிவாக உணருகின்றனர். அதனால் தான் சிங்கையிலிருக்கிற முக்கிய தமிழ் அமைப்புகள் அனைத்தும் இசுலாமியர்களால் நடத்தப்படுவதை காணலாம். இதுவே மலேசியாவிலும் தமிழ் அமைப்புகள் தமிழ் இசுலாமியர்களால் நடத்தப்படுகிறது. அமீரகத்தில் சொல்ல தேவையில்லை!
சிங்கையில் முக்கிய வணிக தளமான லிட்டில் இன்டியாவில் 60சதவிகித வணிகம் தமிழ் இசுலாமியர்களிடம் தான் உள்ளது. அதே போல் மலேசியாவில் லிட்டில் இன்டியாவில் 40 சதவிகித வணிகதளம் தமிழ் இசுலாமியர்களிடம் தான் இருக்கிறது.
மலேசியாவில் இருக்கிற தமிழ் இசுலாமியர்கள், மலேசிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை! ஆனால் தமிழக இசுலாமியர்கள் ஆதரிப்பது எனக்கு கேலிக்கூத்தாக தெரிகிறது.
மலேசிய அரசாங்கத்தின் சிறுபான்மையினர் விரோதப்போக்கால் மலேசியாவில் இருக்கிற தமிழ் இசுலாமியர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தாங்கள் புறக்கணிக்கபடுவதை தெளிவாகவே உணர்ந்திருக்கின்றனர். ஆனால் கொஞ்சம் வலுவான வணிக தளம் இருப்பதால் சமாளிக்கின்றனர் அவ்வளவுதான்:(
சிங்கப்பூர் மலேசிய போராட்டத்தை பற்றிய கருத்து தெரிவிக்கும் போது "மலேசிய அரசாங்கம் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும், அதே நேரத்தில் மதம் சார்ந்த போராட்டங்களை வன்மையாக கண்டிப்பதாக!" குறிப்பிட்டது.
மலேசிய தமிழர்கள் தங்களுடைய பிரச்சினைகளை சிறுபான்மையினர் நலன் (அல்லது) மனித உரிமைகள் என்கிற தளத்தில் நகர வேண்டும் என்று ஆசைப்படுகிற நேரத்தில்... இ(ஐ)ந்து என்று நகர்வதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆனால் அதே வேளையில் தமிழகத்தில் இருக்கிற இசுலாமியர்கள் மலேசிய தமிழர்களின் பிரச்சினைகளை புரிந்துக்கொள்ளாமல், மலேசியா ஓரு இசுலாமிய நாடு என்பதற்க்காக அந்த அரசின் செயல்பாட்டிற்க்கு ஆதரவாக செயல்படுவதையும் வன்மையாக கண்டிக்க வேண்டியுள்ளது.
வியாழன், 20 டிசம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
8 comments:
காத்திருக்கிறேன்...அடுத்தப் பதிவுக்கு...
இன்னும் ஹிந்துராஃ பின்னனியயை விளக்கினால் தேவலை...
இந்தப் பதிவில் உங்கள் கருத்துக்கள் உண்மையானவை.
தமிழக முஸ்லீம்கள் மட்டுமல்ல,பொதுவாக இந்தியாவின் முஸ்லீம்களுக்கு உலகின் முஸ்லீம் நாடுகள் அனைத்தும் நம் சொந்த நாடுகள்,இந்தியா நமக்கு பிழைக்கவந்த நாடு என்ற கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள்.
//உலகம் முழுவதும் உள்ள இசுலாமியர்கள் எல்லாம் இவர்களின் உறவுக்காரர்கள் மாதிரி நினைத்துக்கொண்டு வறட்டுத்தனமாக இசுலாமிய நாடுகளுக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது தொடர்கிறது.
//
சரிதான் வெளிநாடுகளுக்கு குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு செல்லும் போதுதான் தாம் ஒரு முஸ்லிம் என்பதைவிட தாம் ஒரு இந்தியன் என்பதை புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் என்பதால் இந்தியருக்கு எதிலும் பிரதிநித்துவம் கிடைக்காது, மசூதியில் தொழுகையின் போது அனுமதித்தால் அதுவே பெரிய விசயம் தான்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் அரசு.
//
காத்திருக்கிறேன்...அடுத்தப் பதிவுக்கு...
//
ரிப்பீட்டேய்ய்....
நன்றாக எழுதியிருக்கீங்க....
சரி! பிரச்சினை இருக்கிறதை புரிந்துக்கொள்கிற நீ! ஏன்டா! HINDRAF ஐ கண்டிக்கிறாய் என்று கேட்டால்! மிகத்தெளிவாக சொல்ல வேண்டுமானால் இந்த அமைப்பின் நோக்கம் சிறுப்பான்மையினர் நலனை பாதுகாப்பதல்ல! குறிப்பாக தமிழர்களுக்கு எந்தவிதமான நன்மையும் செய்ய போவதில்லை என்று அந்த அமைப்பின் நிர்வாகிகளை பற்றிய அனைத்து தகவல்களை சேகரித்த பிறகே, இந்த முடிவிற்க்கு வர வேண்டியதாயிற்று.
புரியவில்லை , எதன் அடிப்படை நீங்கள் , கூறுகின்றீர்கள்.......
உங்க பதிவுகள் எல்லாம் ரொம்ப அருமை. பிரமாதம். இன்னும் நிறைய இதுபோல் எழுதுங்க.உங்கள் தமிழ் உணர்வுக்கு என் வணக்கங்கள்.
HINDRAF அமைப்பைப் புரிந்துகொள்ள:
18 points demand to Prime Minister
http://rockinsince86.com/2007/12/23/18-points-demand-to-pm/
பாரி,
தெளிவாக எழுதியிருக்கிறீர்கள்.
தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுவது நாற்பது ஆண்டுகளாக நடந்து வரும்போது, கோயிலை இடித்தபின் தமிழர்கள் திரளுவது, அதுவும் இந்து அமைப்பின் பெயரால் திரளுவது என்பது முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம். கருணாநிதி உலகத் தமிழர்களின் தலைவர் என்று சிலரால் பொய்யாகப் புகழ்வதைக் கேட்டுக்கொண்டு நிலைமை தெரியாமல் பேசிவிட்டார். இப்போது மலேசிய அரசு, குருக்களுக்கு உள்ள விசாவை குறைந்த நாட்களுக்கு ரினிவல் செய்ய உத்தரவிட்டுள்ளது. குருக்கள் எல்லாம் இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்தியாவில் செய்யும் அதே இந்து/முஸ்லிம் கலவரத்தை தூண்டிவிடும் வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
முடிந்தால் ஹிண்ட்ராஃப் அமைப்பினரின் கடந்த காலத்தைப் பற்றி விசாரித்து எழுதுங்களேன். அந்த ஆட்கள் மேல் சந்தேகமாகவே இருக்கிறது.
கருத்துரையிடுக