நேற்றைக்கு நண்பர் குசும்பன் இந்த இடுகையை எழுதியவுடனேயே இணைய உரையாடலில் அவரை அழைத்து கொஞ்சம் பேசினேன்!. இருப்பீனும் கொஞ்சம் எழுதுவோம் என்ற எண்ணவோட்டம் எழுந்த காரணத்தால் இங்கே பதிவு செய்கிறேன்.
சில மாதங்களுக்கு முன்பு இதே மாதிரியான தலைப்பில் 'அரசின் இலவச அறிவிப்பால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை' என்று தினமலத்தில் ஓர் செய்தி வந்திருந்தது. அதை மீண்டும் நினைவுக்கூர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன்.
இந்த சொல்லாடலின் பின்னணியில் உள்ள அரசியலை புரிந்துக்கொள்ளாமலேயே, நாம் இலவச அறிவிப்புகளை எதிர்த்து நிற்கிறோம்.
விவசாய தொழிலாளர்களை பார்த்துக் கேள்வி எழுப்புவதற்க்கு முன்பு ஓரு சுய பரிசோதனை செய்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
விவசாய தொழிலாளர் உழைக்காமல் சோம்பேறிகளாக இருக்கிறார்கள் என்று எழுதுவதை படிக்கும் போது உடல் உழைப்பு என்பதன் பொருள் இந்த கேவலமான நாய்களுக்கு தெரியுமா என்கிற கோபம் தான் மனதில் எழுகிறது.
சேம்பேறியாய் இருப்பவன் முதலில் ஓரு தொழிலாளியாய் இருக்க முடியாது. இந்த அடிப்படை விளங்காமல் போனதற்க்கு இவர்களை என்ன செய்யலாம் என்று எனக்கு தெரியவில்லை!
விவசாயம் ஏன் நலிந்துக்கொண்டிருக்கிறது என்பதற்க்கு பல்வேறு விவாதங்கள் இணையத்திலும், ஊடகத்திலும் இன்னும் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை இங்கே விவாதிப்பது நோக்கமல்ல!
இவர்கள் சொல்கிற 2 ரூபாய் அரிசி வாங்கி சாப்பிடுகிற தொழிலாளி என்ன செய்துக்கொண்டிருக்கிறான். ஓவ்வொரு கிராமத்திலும் ஓவ்வொரு வீட்டிற்க்கும் குடி பார்க்கும் தொழிலாளியாக இருக்கிறான். இவனுடைய நிலை என்னவென்று தெரியுமா இவர்களுக்கு? ஓரு குடி பார்க்கும் தொழிலாளி வருடத்தின் 365 நாட்களும் அவன், அவனுடைய மனைவி, இன்னும் வேலை பார்க்க முடிகிற மகனோ, மகளோ இருந்தால் அனைவரும் எந்த குடும்பத்திற்க்கு குடி பார்க்கிறார்களோ அவர்களுக்கு வேலை பார்க்க வேண்டும்.
ஓரு கிராமத்தில் சேரியாக இருக்கிற தொழிலாளர்கள் யாரும் வேலைக்கு வரவில்லை என்று சொல்வது கிடையாது. ஆனால் அவர்களுக்கான ஊதியம் வாழ்க்கைக்கு பற்றாக்குறையாக இருப்பதால் வேறு வேலையை நாடிச்செல்ல தொடங்கியிருக்கிறார்கள். பெரும்பாலான விவசாய கூலி தொழிலாளர்கள் கட்டிட கூலி தொழிலாளர்களாக மாறியிருக்கிறார்கள். (இங்கேயும் அவர்கள் உழைக்கிறார்கள் மாறாக படுத்துறங்கவில்லை).
தமிழகத்தின் ஓவ்வொரு கிராமத்திலும் இருக்கிற பல்வேறு தொழிலாளர்கள் முடிவெட்டுவோர், துணி துவைப்போர், இரும்பு காய்ச்சி அடிக்கிறவர்கள், தச்சு வேலை பார்க்கிறவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என அனைவரும் ஆண்டின் பெரும்பாலான நாட்கள் வேலை பார்த்துக் கொண்டேயிருக்கின்றனர்.
நான் இங்கே ஓரு கேள்வி வைக்க விரும்புகிறேன்!. ஏ! படித்த கூறுக்கெட்ட முண்டங்களா ஓரு வேலைக்கான உத்தரவு கிடைத்தவுடன் வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, வருடத்தில் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு, வருடாந்திர விடுப்பு எத்தனை நாட்கள் என்று கணக்கு பார்க்கிற நீங்கள். இந்த தொழிலாளர்கள் என்றைக்காவது ஓய்வு எடுத்தால் உங்களுக்கு சேம்பேறிகளாக தெரிகிறார்களா?
லட்சக்கணக்கில் ஊதியம் வழங்குகிற மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிற மனிதர்களாகிய நீங்கள் எப்பொழுதாவது உங்கள் அலுவலகத்தின் துப்புரவு பணியாளருக்கு ஊதியம் என்னவென்று தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
நான் ஓரு சென்னையில் சந்தித்த ஐரோப்பியன் என்ன வேலை செய்கிறான் தெரியுமா தச்சு வேலை, ஆனால் அவனால் 6 மாதம் வேலை பார்த்து விட்டு 6 மாதம் உலகத்தை சுற்றிப்பார்க்க முடியும். உலகத்தின் மற்ற நாடுகளில் எல்லாம் எந்த வேலை செய்தாலும் எல்லோருக்கும் ஓரளவுக்கு வாழ்வியலுக்கு தேவையான பொருளீட்டலுக்கு உத்திரவாதம் இருக்கிறது.
நம்முடைய சமூகத்தில் ஓரு சிலரை தவிர மற்றவர்களுக்கெல்லாம் குறிப்பாக தொழிலாளர்களுக்கு என்ன வாழ்வியல் மிச்சமிருக்கிறது!
இந்தியாவின் கடந்த 60 ஆண்டுகளில் இந்திய ரயில்வே கோடை விடுமுறை கால முன்பதிவு அட்டவணையை எடுத்துப்பாருங்கள் தெரியும், யார் வாழ்க்கை அனுபவிக்கிறார்கள் என்று!. என்றைக்குயாவது வாழ்க்கையில் விடுமுறை கால சுற்றுலா என்று இந்த தொழிலாளர்கள் செல்ல முடியுமா?
வார விடுமுறை, வருடாந்திர விடுமுறை என்று கொழிக்கிற நீங்கள் உங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வேலைக்காரனுக்கோ, வேலைக்காரிக்கோ வார விடுமுறை (அ) வருடாந்திர விடுமுறை இத்தனை நாட்கள் என்று இதுவரை கொடுத்திருக்கிறீர்களா?
உலகத்தில் வளர்ந்த நாடுகள் என்று பட்டியலிடுகிற இடங்களில் கூட சமூகத்தில் பாதிக்கப்படுகிற குடும்பங்களுக்கு இலவசமாக உதவித்தொகை வழங்கப்படுகிறதே!என்ன இந்தியாவில் 60 சதவிகித குடும்பங்கள் இந்த பார்ப்பானீய, வர்க்க கட்டமைப்பில் பாதிக்கப்படுகிறது, அதனால் நிறைய குடும்பங்களுக்கு இலவசமாக நிறைய கொடுக்க வேண்டியிருக்கிறது.
பெங்களுரில் Internationl Technical Park, Whitefield என்று ஓரிடம் உள்ளது அந்த கட்டிடம் 80 சதவிகித வேலையை 1997ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முடித்த போது அதில் அது வரை இறந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 47 பேர், மீதம் 20 சதவிகித பணியில் எவ்வளவு பேர் இறந்திருப்பார்கள் என்று நினைத்துப்பாருங்கள்! (கடைசி வேலைகள் தான் மிகவும் ஆபத்து நிறைந்தது).
அந்த அலுவலகத்தின் உள்ளே இன்றைக்கு குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்திருக்கும் மென்ப்பொருள் வல்லுநர்கள் யாரும் கட்டிட தொழிலாளர்களை விட கடின உழைப்பாளிகள் கிடையாது!
ஆனால் வாழ்வியல் யாருக்கு இன்றைக்கு வளமாக இருக்கிறது?
இன்றைக்கு சிங்கப்பூரில் சராசரியாக தொழிலாளர்களின் மாத வருவாய் 1000 வெள்ளி. இங்கே ஓரு தொலைகாட்சி பெட்டி 200 வெள்ளி, ஓரு கணினி 400 வெள்ளி, ஓரு சலவை இயந்திரம் 250 வெள்ளி. ஆகையால் தங்கள் வாழ்க்கைக்கு தேவையானதை இந்த தொழிலாளர்கள் தாங்களே சம்பாதித்து வாங்கிக்கொள்ள முடியும்.
இந்தியாவில் எந்த தொழிலாளியும் 1000ரூ லிருந்து 5000ரூ வரை சம்பாதித்து எப்போது அவன் தொலைகாட்சி பெட்டி வாங்குவது. தொழிலாளர்களுடைய உழைப்பை சுரண்டிய மற்றவர்களிடமிருந்து தான் நிதியை பெற்று அரசு திரும்ப அவர்களுக்கு தொலைகாட்சி பெட்டியை இலவசமாக வழங்குகிறதே தவிர! அரசோ (அ) நீங்களோ எந்த தொழிலாளிக்கும் யாசகமாக தரவில்லை.
1999 -ம் ஆண்டு சென்னையில் ஓரு சதுர அடி கட்டிடம் கட்ட 400ரூபாய் கேட்டார்கள், ஆனால் இன்றைக்கு 800ரூபாயிலிருந்து 1000 ரூபாய் கேட்கிறார்கள். ஆனால் கட்டிட தொழிலாளர்களின் ஊதியம் அன்றைக்கும், இன்றைக்கும் பெரிய மாற்றம் ஏற்ப்படவில்லை!
எந்த உழைப்பாளியும் இரந்து வாழ்வதை விரும்புவதில்லை!ஆனால் அவனுடைய உழைப்பை சுரண்டுகிற, அவனுக்கு சமூக பாதுகாப்பை தராத சமூகத்திலிருந்து பிடுங்கி தான் அவனுக்கு திரும்ப தர வேண்டியிருக்கிறது!
நன்றி!
திங்கள், 10 டிசம்பர், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
15 comments:
நானும் இது பற்றி எழுத நினைத்திருந்தேன்(எங்கள் பகுதியில் விவசாயத்தின் நிலை குறித்தும்
பட்டாசு & அச்சுத் தொழிற்சாலைகள் குறித்தும்)...நேரம் கிடைக்கவில்லை....
விவசாயத்தைக் காப்பதற்குத்தேவை விளைபொருட்களுக்கு நியாயமான விலையும், பணிபுரிபவர்களுக்கான நியாயமான ஊதியமுமே.....
பாரி,
உழைக்கும் வர்க்கம் குறித்தான உங்கள் கருத்துக்கள் உண்மையே, ஊடலில் தெம்பு இருக்கும் வரை தான் அவர்களுக்கு உணவு எல்லாம், வயதான காலத்திற்கு என்று கையிருப்பு என்று எதுவுமே இருக்காது. பலரின் ஜீவனம் எப்படி நடக்கிறது என்பது மேல்தட்டு மக்களுக்கு தெரியாத ஒன்று.
சிங்கப்பூரில் 1000 வெள்ளி சம்பாதித்தால் சுகமான வாழ்க்கை வாழலாமா, உலக அளவில் சராசரி வருமானம் என்பது வாழத்தேவையான வருமானத்தை விட குறைவாக தானே இருக்கும்.
நம்ம ஊர் தினக்கூலி அல்லது கடை நிலை ஊழியர்கள், மற்றும் சிங்கப்பூர் கடை நிலை ஊழியர்கள் இடையேயான வருமான ஒப்பீடு தெரிந்தால் சொல்லுங்கள்.
உதாரணமாக தனியார் நிறுவனத்தில் ஒரு ஆபிஸ் பாய் இங்கெ 2,500 சம்பாதித்து குடும்பம் , குழந்தை என்று இருக்க முடிகிறது(கஷ்டப்பட்டு தான், 10-15 கி.மீ தூரம் சைக்கிளில் செல்கிறார், பேருந்து பணத்தை மிச்சம் செய்ய)மாதாந்திர பாஸ் வைத்து இருக்கும் பலரின் வயிற்றில் அடிப்பது போல அலுவலக நேரங்களில் பார்த்தால் வரிசையாக டீலக்ஸ் நகரப்பேருந்தாக வரும்!
சென்னையில் போக்குவரத்து ரீதியாக மறைமுகமாக கீழ்தட்டுமக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.100 பேரின் நலனுக்காக 1000 பேருக்கு ஆப்பு வைக்கிறது அரசு!
அதே நிலை ஊழியருக்கு அங்கே எவ்வளவு வருமானம் தேவைப்படுகிறது.
//
நம்ம ஊர் தினக்கூலி அல்லது கடை நிலை ஊழியர்கள், மற்றும் சிங்கப்பூர் கடை நிலை ஊழியர்கள் இடையேயான வருமான ஒப்பீடு தெரிந்தால் சொல்லுங்கள்.
//
பெரும்பாலும் கடைநிலை ஊழியர்களாக சிங்கைக் குடிமகன்கள் யாரும் இருப்பதில்லை.. இந்தப் பணிகளில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களே இருப்பார்கள்...
இவர்களுக்கு 600 முதல் 1000 வெள்ளி வரை ஊதியம் கிடைக்கும்..உணவு மற்றும் இருப்பிடம் நிறுவனங்கள்ளே தந்து விடுவதால், அந்தப் பணம் அவர்களுக்குப் போதுமானதாகவே இருக்கும்...
சிங்கைக்குடியுரிமை பெற்றவர்களைப் பொருத்தவரை, அவர்களுக்கு வீடு வாங்குதல் / வீட்டு வாடகை உட்பட அனைத்திலும் சலுகை உண்டு.. எனவே அவர்களுக்கும் 1000 வெள்ளி வாழ்க்கைக்குப் போதுமானதாகவே இருகிறது(தினமும் ஃபுட்கோர்ட்டுகளில் சாப்பிட்டாலே, ஒருநாளுக்கு 10 முதல் 15 வெள்ளி தான் சாப்பாட்டு செலவு ஆகும்)....
நன்றி,
பாரிஅரசு,
நான் பத்திரிக்கைகளில் வரும் மலேசியா, சிங்கப்பூர் வேலைக்கு சென்று குறைந்த ஊதியத்தில் தமிழர்கள் கஷ்டப்படுவதாக வரும் தகவல்களை வைத்து அங்கேயும் நிலமை மோசமாக இருக்கும் என்று நினைத்தேன்.
நீங்கள் சொல்வதைப்பார்த்தால் கடை நிலை ஊழியராக வேலை செய்தால் கூட திருப்தியாக அங்கே வாழலாம் என்று தோன்றுகிறது.
நம் நாட்டில் அது சாத்தியம் இல்லையே! உயர் வருமான மக்களுக்கு தான் இங்கே திருப்தியான வாழ்க்கை சாத்தியம்!
///நான் இங்கே ஓரு கேள்வி வைக்க விரும்புகிறேன்!. ஏ! படித்த கூறுக்கெட்ட முண்டங்களா ஓரு வேலைக்கான உத்தரவு கிடைத்தவுடன் வாரத்தில் எத்தனை நாட்கள் வேலை, வருடத்தில் எத்தனை நாட்கள் மருத்துவ விடுப்பு, வருடாந்திர விடுப்பு எத்தனை நாட்கள் என்று கணக்கு பார்க்கிற நீங்கள். இந்த தொழிலாளர்கள் என்றைக்காவது ஓய்வு எடுத்தால் உங்களுக்கு சேம்பேறிகளாக தெரிகிறார்களா?///
என்றைக்காவது ஓய்வு எடுக்க என்றால் பரவாயில்லை ஒழுங்காக வேலைக்கு வந்து கொண்டு இருந்தவர்கள் விவசாயம் பார்கவருவது இல்லை என்பதுதான் பிரச்சினை!
ஊரில் விவசாயம் பார்க யாரும் இப்பொழுது தயாராக இல்லை என்பதே நிஜம். என் பதிவிலும் வேலை பார்காமல் இல்லை என்று சொல்லவில்லை ஒரு நாள் கல் அறுக்க போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருக்கிறார்கள்.
தென்னை மரம் ஏற கூட ஆள் தட்டுபாடாக இருப்பதுதான் நிஜம். தினமலர் என்ன எழுதினாங்க என்பது எனக்கு தெரியாது, நான் எழுதி இருப்பது என்(ங்கள்) அனுபவம்.
//ஊரில் விவசாயம் பார்க யாரும் இப்பொழுது தயாராக இல்லை என்பதே நிஜம். என் பதிவிலும் வேலை பார்காமல் இல்லை என்று சொல்லவில்லை ஒரு நாள் கல் அறுக்க போகிறார்கள் ஒரு மாதம் வீட்டில் இருக்கிறார்கள்.//
குசும்பன்,
வேலை செய்ய வரவில்லை என்று சொன்னால் போதுமா ஏன் என்று சொல்லுங்கள், விவசாயக்கூலி வேலைக்கான சம்பளம் குறைவாக இருப்பது தான், சம்பளத்தை உயர்த்த வேண்டும் எனில் விவசாயம் செய்பவனுக்கு அதிக லாபம் வர வேண்டும், ஆனால் இல்லையே!
எனவே தான் அதிக சம்பளம் கிடைக்கும் நகர்ப்புற வேலைக்கு போய்விடுகிறான். அதுவும் அவ்வப்போது தான் கிடைக்கும். ஒரு மாதம் சும்மா இருக்கிறான் என்றால் , அவன் வேலை செய்கிற இடத்தில் வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கலாம். காரணம் ஒரு இடத்தில் , ஒரு குழுவாக என்று தான் தினக்கூலி வேலைக்கு செல்வார்கள், கங்காணி , மேஸ்திரி என்று இருப்பார்கள், அவர் அழைத்து செல்லும் இடத்தில் தான் வேலைக்கு செல்ல முடியும். இது போல நடைமுறை சிக்கல்கள் நிறைய இருக்கு.
உங்களுக்கு சம்பளம் குறைவாக கிடைக்கும் வேலையை செய்வீர்களா? எனவே அவர்களும் அதிக ஊதியம் தேடுகிறார்கள். உங்க வீட்டு தென்னை மரத்தில் ஏற ஆள் கிடைக்கவில்லை என்றால் அவர்களை சோம்பேறி என்பீர்களா?
உடல் உழைப்பிற்கு முன்னுறிமை கொடுக்காத நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் (அது சரி! ஒத்துப்போனால் என்ன, போகாவிட்டால் என்ன?).
ஆனால், இதை சாக்காக வைத்து மற்றொரு முறை திட்டியாயிற்று. இதன் பலன், நீங்கள் சொல்லவந்தது திசை திரும்பிவிடும்...
வாருங்கள் ஜெகதீசன்!
வருகைக்கும் & கருத்துக்களுக்கும் நன்றி!
வாருங்கள் வவ்வால்!
ஃஃ
சிங்கப்பூரில் 1000 வெள்ளி சம்பாதித்தால் சுகமான வாழ்க்கை வாழலாமா,
ஃஃ
1000 வெள்ளி என்பது அடிப்படை வாழ்வியலுக்கு பேதுமானதாக இருக்கும்!
ஃஃ
உலக அளவில் சராசரி வருமானம் என்பது வாழத்தேவையான வருமானத்தை விட குறைவாக தானே இருக்கும்.
ஃஃ
ஓரு சமகாலத்தில், பொதுவுடைமை சமூகத்தில்... தனியுடைமை மறுக்கப்பட்டால் நீங்கள் கூறியிருப்பது தான் உண்மை...
அடுத்த பின்னூட்டத்தில் ஜெகதீசன் குறிப்பிட்டுள்ள ஊதிய விவரங்கள் கொஞ்சம் சிக்கலானது...
ஏனென்றால் தமிழ் மற்றும் வங்கதேச கூலி தொழிலாளர்கள் நேரிடையாக நிறுவனங்களுக்கு வரும் போது அவர்களுக்கு தேவையான அளவு ஊதியம் கிடைக்கும். அதை சிங்கை அரசே உறுதி செய்கிறது.
ஆனால் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள்(ஏஜெண்ட்) மூலம் வேலைப்பார்க்கும் போது மிகக்குறைந்த தினக்கூலியா 14-18 வெள்ளியே பெறுகின்றனர்.
இந்த இடைத்தரகு முறையை அரசு மிகக்கடுமையான சட்டங்கள் மூலம் ஓழிக்க முயற்சிக்கிறது. ஆனால் நம்மூர் இடைத்தரகர்கள் பலே கேடிகளாக இருக்கின்றனர்.
இதன் தொடர்பாக விழிப்புணர்ச்சி ஏற்ப்படுத்த சிங்கை அரசு Hotline வசதி செய்திருக்கிறார்கள்.
நண்பர்களுடன் இணைந்து அடுத்தாண்டில் நாங்களும் சில விழிப்புணர்வு செயல்களில் இறங்க இருக்கிறோம்.
மற்றபடி அரசு குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியத்திற்க்கு உறுதிச்செய்கிறது.
இலவசம், இனாம் என்றால் இந்தியர்களுக்கு ஏகப்பட்ட குஷி. பத்து ரூபாய்ப் பேனா வாங்கினால், ஒரு யானை இலவசம் என்று அறிவித்துப் பாருங்கள். ஆயிரம் பேர் உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பார்கள்.
உழைப்போம் உயர்வோம் என்ற சிந்தனையைத் தான் அரசும் பிறரும் வளர்க்கவேண்டும். இதுதான் இன்றையத் தேவை.
முழுக்க முழுக்க உண்மை... எந்த உழைப்பாளியும் சோம்பேறி இல்லை.. ஓய்வு என்பது சோம்பேறித்தனம் இல்லை என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...!
வாருங்கள் சீனு!
ஃஃ
உடல் உழைப்பிற்கு முன்னுறிமை கொடுக்காத நாடு முன்னேறியதாக சரித்திரம் இல்லை. அந்த விஷயத்தில் உங்கள் கருத்தோடு ஒத்துப்போகிறேன் (அது சரி! ஒத்துப்போனால் என்ன, போகாவிட்டால் என்ன?).
ஃஃ
கருத்துக்களுக்கு நன்றி!
ஃஃ
ஆனால், இதை சாக்காக வைத்து மற்றொரு முறை திட்டியாயிற்று. இதன் பலன், நீங்கள் சொல்லவந்தது திசை திரும்பிவிடும்...
ஃஃ
ஓ! இதுவரை திசைதிருப்பல்கள் அல்லாத ஓன்று இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா:)
வாருங்கள் லக்கி!
நன்றி!
வாருங்கள் சுந்தரா!
ஃஃ
இலவசம், இனாம் என்றால் இந்தியர்களுக்கு ஏகப்பட்ட குஷி. பத்து ரூபாய்ப் பேனா வாங்கினால், ஒரு யானை இலவசம் என்று அறிவித்துப் பாருங்கள். ஆயிரம் பேர் உங்கள் வீட்டு வாசலில் காத்துக் கிடப்பார்கள்.
உழைப்போம் உயர்வோம் என்ற சிந்தனையைத் தான் அரசும் பிறரும் வளர்க்கவேண்டும். இதுதான் இன்றையத் தேவை.
ஃஃ
இலவசம் என்பதை பற்றிய பார்வை என்பது, இரண்டு வகையிலானாது...
ஓன்று வணிக நோக்கம் கொண்டது... ஓன்றை வாங்கினால் அது இலவசம், இது இலவசம் என்பது! (இந்த வணிக நடவடிக்கை உலகளவில் எல்லாயிடங்களிலும் இருக்கிறது!).
என்னுடைய பார்வையில் இலவச இல்லாத வணிக விளம்பரம் சிங்கையில் மிகக்குறைவு:)
இரண்டாவது சூதாட்டம் (lucky draw) இல்லாத வணிகம் என்பதே சிங்கையில் செல்லுபடியாகது!
இன்னொரு வகை இலவசம் என்று சொல்வதை விட பாதிக்கப்படுகிற சமூக அலகான குடும்பங்களுக்கு, அரசு அளிக்கும் சலுகை என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
உழைப்பு சுரண்டலை கட்டுப்படுத்த இயலாத அரசு இயந்திரம். இந்த மாதிரியான சலுகைகள் கொடுப்பதன் மூலம் சமூகத்தை ஓரளவுக்கு சமன் செய்ய முயற்சிக்கிறது!
வாருங்கள் ஜெயகணபதி!
ஃஃ
முழுக்க முழுக்க உண்மை... எந்த உழைப்பாளியும் சோம்பேறி இல்லை.. ஓய்வு என்பது சோம்பேறித்தனம் இல்லை என்பதை தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்களும் நன்றிகளும் நண்பரே...!
ஃஃ
வாழ்த்துக்களுக்கு நன்றி!
கருத்துரையிடுக