புதன், 23 ஜனவரி, 2008

வலைப்பதிவுகள் எப்படி இருக்கணும்...!

நீங்கள் நல்லபதிவராக சில கூறுகள்... நல்லா எழுதுறீங்க என்கிற பாராட்டு வேண்டுமா...

எத்தியோபியாவிலும், சோமலியாவிலும் பசி, பட்டினி என்று படம் காட்ட வேண்டும், தவறி உள்ளூர் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை என்றெல்லாம் எழுதி விடாதீர்கள்!.

வெள்ளை,கருப்பின மோதல்களை பற்றி வரலாறு எழுதலாம்... மறந்தும் திராவிட இனத்தின் மீதான ஆரிய அயோக்கிய தனங்களை எழுதி விடாதீர்கள்!.

அங்கே பார்... அவனவன் நடப்பதை எழுதுகிறான்... நீங்களெல்லாம் பார்ப்பான்,பறையன்,பள்ளன் என்று எழுதுகிறீர்கள்... ஆமாங்க! உங்க ஊர் சேரி பற்றியோ, அக்ரகாரத்தின் அதிகாரத்தை பற்றியோ எழுதுவதை மறந்து விடுங்கள்!

வளமாக எழுதுங்கள், இதுவல்லோ எழுத்து என்று புல்லரிக்க எழுதுங்கள் ஆனால் மறந்து மக்களின் வாழ்க்கையை எழுதி விடாதீர்கள்!

போரும், அமைதியும் படியுங்கள், நான் படித்த புத்தகங்கள் என்று பட்டியல் எழுதுங்கள்... உங்கள் மேன்மையை நிலைநாட்டுங்கள்... மறந்தும் உயிருக்கு போராடும் ஈழத்தமிழனை பற்றி எழுதி விடாதீர்கள்!

ஒரே நேர்க்கோடு நிகழ்வை, உண்மையை எழுதாதீர்கள்! கற்பனையை, அதிகார முதுகு சொறிதலை செய்யுங்கள்!

வலைப்பதிவுகள் எப்படி இருக்கணும், எப்படி எழுதணும்... என்று அப்பப்ப புல்லரிக்கிற சொறிதல்கள் வந்துக்கொண்டேயிருக்கும். அது உண்மையை மறைத்து கற்பனையில் உங்களை ஆழ்த்தி அவர்களின் சுயநலனை முன்னிறுத்தும்... அப்படி இருப்பதில் தான் ஆதிக்கம், அதிகாரம் எல்லாம் தக்க வைக்கப்படுகிறது.

பதிவுகள் பற்றியும், பதிவர்களின் நடத்தை பற்றியும் அப்பப்ப குறைப்பட்டுக்கொள்கிறவர்கள், இதெல்லாம் ரொம்ப நாள் தாங்காது என்று ஆருடம் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த நல்ல பதிவு, நல்ல பதிவர் பட்டம் கொடுப்பதில் முனைப்புடன் இருக்கிறார்கள்...

மகிழ்ச்சியாகவே இருக்கிறது! ஊடக அதிகாரத்தை வைத்து மக்களை, அவர்களுடைய பிரச்சினைகளை பற்றிய கதையாடல்களை,உரையாடல்களை, சொல்லாடல்களை வகையாய் தவிர்த்து விட்டு... தங்களுக்கு (அதிகாரத்திற்க்கு) சாதகமான கதையாடல்களை,உரையாடல்களை, சொல்லாடல்களை கட்டமைத்தவர்கள்... இன்றைக்கு வலைப்பதிவுகள் முரண்களை, மக்களின் அன்றாட உண்மை நிலை பேசுகிற போது... அஞ்சுகிறார்கள், பிதற்றுகிறார்கள்... இதெல்லாம் எழுத்தா! என்று.

பொங்கி பெருகும் காட்டாற்று வெள்ளத்திற்க்கு; காட்டாமணக்குகள் தடை சொல்ல முடியுமா!

தொடுப்புக்கு...

//கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிகையில் வளர்ச்சிகண்டிருக்கின்றன. ஆனால் உள்ளடகத்தின் கனத்தில் சரிவு கண்டிருக்கின்றன.திரட்டிகள் கவனம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருவதால், கவனம் பெறுகிறோம்என்ற மிதப்பே பாவனைகளை மேற்கொள்ளப் பதிவர்களை உந்துகிறது என்பதனால்பாவனைகளே பதிவாகிப் போகின்றன. கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துமகிழும் மனிதர்களைப் போல, பஸ்ஸில் பெண்களின் கவனத்தை ஈர்க்க முற்படும்மீசை அரும்பாத ஆண்களைப் போல, திருவிழாவில் ஆண்களின் கவனத்தை ஈர்க்கமுற்படும் வளர் இளம் பருவத்துச் சிறுமிகளின் செய்கைகளைப் போல பல பதிவுகள்இருந்து வருகின்றன. இவற்றோடு திரட்டிகள் குழு மனப்பான்மைக்குஉரமளிக்கவும் செய்வதால், கருத்துக்கள் மீதான விவாதங்களை நொடிப்பொழுதில்தனிமனிதர்கள் மீதான அவதூறுகளாகவும், துச்சமான எள்ளல்களாகவும்ஆக்கிவிடவும் செய்கின்றன. ஓர் ஆரோக்கியமான கருத்துலகு உருவாக இந்தப்பண்புகள் உதவாது. ....// - மாலன்
http://groups.google.com/group/tamil-blogs-open-opml/browse_thread/thread/bbe2a9c4ee241d0d#63eb5b8fcc834316


//.....தமிழ் தட்டச்சு தெரிந்து விட்ட மகிழ்ச்சியில், கிடைக்கும் பின்னுட்டபோதையில் நினைத்ததை எழுதி தள்ளுவது. இது அதிக நாட்கள் தாங்காது. பரபரப்பான தலைப்புகள், பின்னுட்டம் அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள், மத, சாதீய, அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகள் வாசகர்களால் ஓரம் கட்டப்படும். எழுத சரக்கு இல்லை என்றால் இந்த பதிவாளர்களும் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.....//ராமசந்திர உஷா
http://nunippul.blogspot.com/2008/01/2.html

13 comments:

வவ்வால் சொன்னது…

பாரி அரசு,
நீங்க வேற எங்கோ ஏதோ படித்துவிட்டு இந்தப்பதிவைப்போட்டு இருக்கிங்கனு மட்டும் புரியுது,ஹி ..ஹி ... ஆனால் எங்கே எதைனு தெரியவில்லை, ஒரு கோடிக்காட்டினா புடிச்சுப்பேன்!

//ரொம்ப நாள் தாங்காது என்று ஆருடம் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள்.//

அப்படி ஆருடம் சொல்பவர்கள் ரொம்ப நாள் தாங்குறாங்களா என்று பார்ப்போம்! :-))

கோவை சிபி சொன்னது…

இது வலைப்பதிவுக்கு மட்டுமல்ல.எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும்.

பெயரில்லா சொன்னது…

எதுக்கு இந்த கொலைவெறிப் பதிவு?

சந்திப்பு சொன்னது…

You are touching my Heart................ Keep it up

பெயரில்லா சொன்னது…

நல்ல குத்தல்..

சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்!

கார்க்கி

TBCD சொன்னது…

:)

நான் வேடிக்கைப் பார்க்கிறேன்..

பெயரில்லா சொன்னது…

அரசு,
ஒரு ஒற்றுமை கவனித்தீர்களா! ஒருத்தர் வெகுஜன ஊடகத்தில் இருப்பவர், இன்னொருவர் வெகுஜன ஊடகத்திற்க்கு போகணும் அப்படின்னு இலக்குள்ளவர்...

முன்னாடி மாதிரி இப்பயெல்லாம் அவுங்க சொல்லுறத யாரும் கேட்கிறதில்லை என்கிற வருத்தம்... அதான் நன்னடத்தை, தரம் என்று உளறுகிறார்கள்...

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாங்க வவ்வால்!
அசரமா அடித்து ஆடுகிற நீங்களே கோடு போட சொன்னா! :)

உங்களுக்காக தொடுப்புகள் இணைத்துவிட்டேன்.

நன்றி

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//
இது வலைப்பதிவுக்கு மட்டுமல்ல.எல்லா ஊடகங்களுக்கும் பொருந்தும்.
//

வாருங்கள் சிபி! வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நன்றி சந்திப்பு, கார்க்கி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் டிபிசிடி!
அதென்ன வேடிக்கை பார்க்கிறது!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் சுதாகர்!
நன்றி! மிகச்சரியாக சொன்னீர்கள்... வெவ்வேறு வார்த்தைகளில் இருவரும் ஒரே குரலில் எதிரொலிப்பது அதிகாரத்திற்க்கும், ஆதிக்கத்திற்க்குமான வேட்கை!

வவ்வால் சொன்னது…

பாரி,
நன்றி!

இங்கே பின்னூட்டம் போட்ட கையோடு கொஞ்சம் தமிழ்மணத்தில் அலசினேன் , அப்போவே நீங்கள் சொன்னப்பதிவைப்பார்த்து விட்டேன்.

எல்லாப்பதிவும் உடனே படித்து விட முடியாதில்லையா அதான் கொஞ்சம் பின் தங்கி விட்டேன்.
அவர்கள் எழுதி இருப்பது இயலாமையின் வெளிப்பாடு போன்று இருக்கு.

நாங்கலாம் அங்கே இங்கே எழுதி புகழ் வாங்கினவங்க எங்களை விட இப்போ புதுசா கணிப்பொறி கிடைத்த வேகத்தில் எழுதும் நீங்களாம் சும்மா என்று தற்போது எழுதுபவர்களின் வேகத்திற்கு ஈடுக்கொடுக்க முடியாமல் வரும் புலம்பல் ரகம் அது. வயதானால் இத்தகைய புலம்பல் அதிகரிக்கும்.

இதை எல்லாம் கண்டுக்காம லூஸ்ல விடனும் நீங்க பதிவாப்போட்டு விளம்பரம் வேற தந்துட்டிங்க!

Related Posts with Thumbnails