செவ்வாய், 1 ஜூன், 2010

வினவு தோழர்கள்

வினவு தோழர்கள்

ஆணாதிக்க, பார்ப்பானிய, பாலியல் வன்மத்தையும், வக்கிரத்தை கண்டிக்கவும் அதை எதிர்த்து குரல் கொடுக்கவும் மறுக்கிறவர்கள் மனித சமூகத்தின் விரோதிகள்.

செந்தழல் ரவியை பற்றி மதிப்பு பன்மடங்கு என்னளவில் உயர்ந்துள்ளது. வணக்கங்கள் ரவி!
பின்னூட்ட உரையாடல்களை வைத்து பார்க்கும்பொழுது நர்சிம்,கார்க்கி இருவரும் மிகவும் தெரிந்தவர்களாகவும், நண்பர்களாகவும் ரவிக்கு உள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் வன் கொடுமையை நிகழ்த்தும்பொழுது சப்பைகட்டு கட்டாமல் துணிந்து தவறு என்று உரத்து ஒலித்தற்கு வாழ்த்துகள்.

குழந்தையை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிற கார்க்கியின் தோழர்களும், தோழிகளும் அவருடைய மனநிலையை அறிந்து நடந்துக்கொள்வது எதிர்காலத்திற்கு நல்லது.

வினவு தோழர்களை பற்றிய பல்வேறு அவதூறுகளை ஒரு சில பார்ப்பன பாசிஸ்ட்டுகள் பதிவுலகில் பதிவு செய்துக்கொண்டிருப்பதால்...

சில தகவல்கள்...

பார்ப்பானிய பாசிஸ்ட்டுகள், இந்துத்துவ பாசிஸ்ட்டுகள், சமூக விரோதிகள் மட்டுமே மூகமூடி அணிந்துக்கொண்டு பதிவுலகில் மற்றவர்களை மிரட்டிக்கொண்டும், மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வினவு தோழர்கள் எந்த முகமூடியும் அணிந்து பதிவுலகில் உலவ வில்லை.
வினவின் கைபேசி தொடர்பு எண் அவர்களுடைய vinavu.com தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
வினவில் எழுதுகிற தனி மனிதர்களை பற்றிய குறிப்பும் அவர்களுடைய இணையத்தில் உள்ளது.

தோழர்களின் அரசியல் நிலைபாட்டில் மாற்றுகருத்து இருப்பவர்கள் கூட... தமிழகத்தை பொறுத்தவரை... மக்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளில் தோழர்களின் பங்களிப்பை மறுக்க இயலாது. மக்களோடு வாழ்பவர்கள். மக்களின் பிரச்சினைகளில் முன் நிற்பவர்கள்.

தோழர்கள் மிகப்பெரும்பாலோர் அன்றாட உழைப்பாளிகள், ஒரு சிலர் முழு நேர பணியாளர்கள்.

சிந்தனை, செயல், உழைப்பு அனைத்தையும் சமூக மாற்றத்திற்காக அர்ப்பணித்தவர்கள்.

தோழர்கள் உரையாட எளிமையானவர்கள்... அவர்களுடைய அலுவலகங்கள் சென்னையில் தான் இருக்கின்றன.

பதிவு எழுதுகிற பலர்...
பொழுதுபோக்கு
சுய அரிப்பை சொரிந்துக்கொள்ளுதல்
எதிர் பாலினரை ஈர்ப்பதற்காக எழுதுவது
கருத்து கந்தசாமிகளாக இருப்பது
காசு தேறுமா என்று எழுதுவது
சுய விளம்பரத்திற்காக எழுதுவது
பதிவில் எழுதி, வெகு மக்கள் ஊடாகத்திற்கு நகர்வது...

இப்படி பல்வேறு நிலைகளில் இருக்கிறார்கள்... விரல் விட்டு எண்ணக்கூடிய சமூக மாற்றதிற்கான எழுத்துகளில் வினவு குழுவினர் முக்கியமானவர்கள்.

வினவின் பணியினை ஆதரிப்போம்.
பார்ப்பானிய ஆணாதிக்கத்தை எதிர்ப்போம்.

வியாழன், 22 ஏப்ரல், 2010

பார்வதி அம்மையார் - உள்ளே வருவதில் நிகழ்ந்ததென்ன?

உயர்திரு பார்வதி அம்மையாரை விமானத்தை விட்டு இறங்க கூட அனுமதிக்காமல், திருப்பி அனுப்பிய மனித தன்மையற்ற காட்டுமிராண்டி தனமும், பாசிச வன்மமும் நிறைந்த நடவடிக்கையை கண்டு மனம் மிகவும் வேதனையடைகிறது.

80 வயதான அம்மையார் கிட்டதட்ட 4 மணிநேரம் விமான பயணம் செய்து வந்தவரை... உடல்நிலை சரியில்லாமல் இருந்த வயதான பெண்மணி கனிவோடு வரவேற்க வேண்டிய அதிகாரிகள்... இறங்காதே திரும்பி போ! என்கிற வன்மத்துடன் நடந்துக்கொண்டதை நினைத்து, நினைத்து வேதனையும், வெறுப்பும் எழுகிறது.

இந்த நிகழ்வையொட்டி யாரிடம் நம்முடைய எதிர்ப்பை காட்ட வேண்டும்... யார் மீது நம்முடைய கோபம் எழ வேண்டும் என்று புரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் நடந்த நிகழ்வை ழுமுமையாக அறிந்துக்கொள்வதின் வாயிலாக முடியும்.

பொருளற்ற சுயநல அரசியல் கூச்சல்களை ஓரம்கட்டி விட்டு... நடந்த நிகழ்வை புரிந்துக்கொள்ள முயற்சிப்போம்.

நான்கு நாட்கள் சில சென்னையில் ஊடகங்களில் வேலை பார்க்கும் நண்பர்கள் வாயிலாக சேகரித்த தகவல்களின் அடிப்படையில் இந்த நிகழ்வை எழுதுகிறேன். (நம்பக தன்மை என்பது வாசிப்பவரின் மனநிலையையும், பார்வையும் ஒட்டியது. என்னிடம் வந்து ஆதாரத்திற்கு தொங்க கூடாது)

1. உயர்திரு. வேலுபிள்ளை அய்யா அவர்கள் மரணத்திற்கு பிறகு இலங்கை அரசாங்கம் உயர்திரு பார்வதி அம்மையார் அவர்களை நாட்டை விட்டு வெளியேற அனுமதியளித்தது.

2. உயர்திரு பார்வதி அம்மையார் அவர்கள் தமிழகம் வருவதற்காக கொழுப்பில் உள்ள இந்திய தூதரகத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அங்கே அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

3. அதன்பிறகு உயர்திரு பார்வதி அம்மையார் மலேசியா சென்று அங்கிருந்து கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு செல்ல விசா விண்ணப்பித்துள்ளார்.

4. மலேசியாவில் சுற்றுலா விசாவில் வருபவார்கள் 30 நாட்கள் மட்டுமே தங்க இயலுமென்பதால்... மறுபடி மலேசியாவிலிருந்து தமிழகம் வருவதற்கு விண்ணப்பம் அளித்துள்ளார்கள்.

இந்த இடத்தில் சிலவற்றை நன்கு புரிந்துக்கொள்ள வேண்டும்...

2007க்கு பிறகு மலேசியா மற்றும் சிங்கப்பூர் இந்திய தூதரங்கள் இந்தியாவுக்கான விசா விண்ணப்பங்களை நேரிடையாக வாங்குவதில்லை. மூன்றாம் தரப்பு ஏஜெண்டுகள் வழியாகவே விண்ணப்பங்கள் வாங்கப்படும்.



இந்த ஏஜென்சிகள் கடவுசீட்டு(passport) உண்மையானதா? என்பதை சோதிக்கும் கருவி மட்டுமே வைத்திருப்பர். அவர்களிடம் யார், யார் எந்த, எந்த நாட்டில் உள் நுழைய தடை என்பதை பற்றிய பட்டியல் இருக்காது!.

இந்த ஏஜென்சிகள் அளிக்கும் விண்ணப்பத்தை வாங்கி 24 நான்கு மணி நேரத்துக்குள் விசா வழங்க வேண்டிய நிலையில் தூதரங்களில் வேலை பார்க்கும் அதிகாரிகள் உள்ள நிலையில், அதோடு மற்ற சான்றிதழ்கள் வழங்கும் பணி, வேறு பணிகள் என்று வேலை பளு சிங்கப்பூர் மற்றும் மலேசிய இந்திய தூதரங்களில் அதிகம். அதனால் Random Checking முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சோதிப்பார்கள்.

இவ்வாறு கொழுப்பில் நிராகரிக்கப்பட்ட விசா விண்ணப்பம், மலேசியாவில் விசா வழங்கப்பட்டுள்ளது.

திரு. நெடுமாறன் மற்றும் திரு.வைகோ இருவருக்கும் மிக நன்றாக தெரியும்... ஈழத்தமிழர்கள் பலர் மீது இந்தியாவில் உள் நுழைய தடை இருப்பது. அதில் குறிப்பாக புலிகளின் அமைப்பினர் சிலர் மீதும், பிரபாகரனின் பெற்றோர் மீதும் 2003ல் உள் நுழைய தடை வாங்கப்பட்டதை அறிவர். (திரு. நெடுமாறன் பழைய அறிக்கையென்றில் இதை எழுதியிருந்தார்... )

எப்பொழுதும் இந்திய மற்றும் இலங்கை உளவு துறையினர் கண்காணிப்பில் இருக்கிற உயர்திரு. பார்வதி அம்மையார். மலேசியாவில் விமானம் ஏறும்பொழுது தான் உளவு துறையினர் டெல்லிக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.

டெல்லியில் உள்ள உள்துறை அமைச்சு மற்றும் குடி நுழைவு (Immigration) அதிகாரிகள்... LTTE related person... don't deport, send back என்கிற உத்திரவை சென்னைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

யார் வருகிறார்கள்? என்ன நடக்கிறது என்று தெரியாமலேயே... சென்னை விமான நிலைய அதிகாரிகள் பாதுகாப்பு வேண்டும் என்று காவல் துறைக்கு தெரிவிக்க... சென்னை புறநகர் போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

குடிநுழைவு அதிகாரிகள் தங்களுக்கு வந்த ஆணையை நிறைவேற்ற... வழக்கம்போல உணர்ச்சியும், சுயநலமும் மட்டுமே எஞ்சியுள்ள திரு.வைகோ தனியாக கதறிவிட்டு வந்திருக்கிறார்.

ஈழ ஆதரவாளர்களுக்கு தகவலை பரப்பியிருந்தால்... குறைந்தபட்சம் விமான நிலைய முற்றுகை போராட்டம் நடத்தி... அம்மையாரை உள் நுழைய அனுமதி வாங்கியிருக்க முடியும்.

தான் மற்றும் தான் மட்டுமே செய்தாக பேர் வாங்க வேண்டும் என்கிற வைகோவின் சுயநலம்.. ஆதரவாளர்கள் அற்ற தனியாளாக நின்றிருக்கிறார்.

இப்பொழுது...

தங்களுடைய வேலையை மட்டுமே பார்த்த உளவு துறையினர் தொடங்கி... குடி நுழைவு அதிகாரிகள் வரை... வயதான, உடல்நலம் குன்றிய அம்மையாரை பற்றிய எந்தவிதமான கருணையும் காட்டவில்லை என்பதற்காக நோவதா?

உள் நுழைய தடையிருக்கிறது என்பது தெரிந்தும்... அதை நீக்க முயற்சியெடுக்காமல்... ரகசியமான மற்றும் தவறான முறையில் திருமதி பார்வதி அம்மையாரை அனுப்ப முயற்சித்த (அ) அலைகழித்த அவருடைய பயணத்தை ஏற்பாடு செய்தவர்களின் மீது எரிச்சலடைவதா?

முறையான அணுகுமுறையின்றி, சுயநலத்துடன் நடந்துக்கொண்ட திரு.நெடுமாறன், திரு.வைகோ போன்றவர்கள் மீது பாய்வதா?

சிக்கலான சூழ்நிலையில் போர்கால அடிப்படையில் செயல்பட்டு.. உடனடியாக நடவடிக்கை எடுக்காமல்... எனக்கு காலையில் செய்திதாள் பார்த்து தான் தெரியும் என்று சொல்கிற... ஒரு முதல்வர் மீது பாய்வதா?

மனித நேயமற்ற நடவடிக்கை என்பதை கண்டு... தமிழ்நாட்டில் பிறந்ததற்காக வெட்கி தலைகுனிய வேண்டிய தருணத்தில்... இதை வைத்தும் அறிக்கை அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர்களை என்ன செய்வது?

நன்றி
அரசு

திங்கள், 19 ஏப்ரல், 2010

பார்ப்பானியத்தின் பண்பியல்புகள்...!

தான், தனது, தான் சார்ந்தது என்கிற சுயநலமே பார்ப்பானியத்தின் பண்பியல்பாக உணரப்பட்டிருக்கிறது.

வரலாற்றையும், உண்மையையும் திரித்து... தனக்கு சாதகமாக மாற்றுவது.

ஆதிக்கத்திற்காக பொய், புரளிகளை சமூகத்தில் உலவ விடுவது.

அதிகாரத்திற்காக குறுக்கு வழிகளை ராஜதந்திரம்(குள்ளநரிதனம்) என்கிற பெயரில் செய்வது.

முட்டாள்தனத்தையும், மூட பழக்க,வழக்கங்களை சமூகத்தில் வளர்ப்பதன் மூலம்... சமூகத்தை அடிமையாக வைத்திருப்பது.

உழைக்காமல், அடுத்தவர் உழைப்பை சுரண்டி வாழ்வது.

அடுத்தவர் உழைப்பை தனதென்று கூசாமல் உரிமை கொண்டாடுவது.

பெண்ணடிமைதனத்தை போற்றுவது.

மனித இனம் சமூகமாக வாழ்வதற்கு தடையாகவும், தீமை விளைவிக்க கூடியதாகவும் இருக்கிற பண்பியல்புகளை பட்டியலிட்டால் அவையெல்லாம் பார்ப்பானியத்தின் பண்பியல்புகளாகவே இருப்பதை உணரலாம்!.

தொடர்புடைய இடுகைகள்

பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?
பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

புதன், 7 ஏப்ரல், 2010

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?

பார்ப்பனர் என்றோர் சாதியுமுண்டோ?
உண்டெனில்...
யார் அவர்?
நாம் பேசும் மொழியை "நீசபாஷை" என்று இழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நாம் உண்ணும் இறைச்சி உணவை பழித்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய இசையை ஒதுக்கி வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை கல்வி கற்க தடை செய்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்முடைய தோலின் நிறத்தை இகழ்ந்தாரே...
அவரே பார்ப்பனர்.
நம்மை நால் வர்ணமாக பிரித்து வைத்தாரே...
அவரே பார்ப்பனர்.
வேதமென்றும், மனு தர்மமென்றும் நம்மை ஒடுக்கினாரே...
அவரே பார்ப்பனர்.

தொடர்புடைய இடுகைகள் :
பார்ப்பானியம் என்றால் என்ன?
பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?

ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

ஜமாலனின் ஐந்தில் ஒன்று...

நச்சுனு நாலு கேள்விகள் என்று ஒரு சங்கிலி தொடரழைப்பு வலைப்பதிவுகளில் 2008-ல் ஆரம்பிக்கப்பட்டது, பலரிடம் சென்று ஜமாலனிடம் வந்த பந்தை என்னிடம் தட்டிவிட்டு விட்டு சென்றார்.

சில குறிப்புகளை எழுதி ஜமாலனுக்கு மின்னஞ்சல் செய்து விட்டு, நான் என்னுடைய வாழ்க்கைதுணை நலன் ஏற்பு விழா துணைவியார் அப்புறம் எங்களுடைய மகவு இளவேனில் என்று காலம் பறந்தோடி விட்டது. திரும்பி பார்த்தால் இரண்டு ஆண்டுகள்.

ஜமாலனுக்கு அனுப்பிய குறிப்புகளை விரித்து ஒவ்வொரு வினாவுக்கும் தனி, தனி பதிவாக போட முயற்சிக்கிறேன். இந்த சங்கிலி தொடர் என்னிடம் அறுந்து போனதற்கு அதன் தொடர்ச்சியாளர்களிடம் மன்னிப்பு கேட்டபடி...

பழைய சங்கிலி... வாசிக்க...

சுகுணாவின் உடனடி கேள்விகளும் எனது தாமதமான பதில்களும். - ஜமாலன்
பதில்கள் + ?கள் - சுகுணா திவாகர்
பைத்தியகாரனி்ன் அரிவாளும் சுகுணாவின் கழுத்தும் - ஆடுமாடு
வளர்மதியின் கொலை வெறியும்... பலிபீடத்தில் தலையை வைக்கப்போகும் ஆடுமாடும் - பைத்தியக்காரன்
நறுக் கேள்விகளுக்கு சுருக்(கமான) பதில்கள் ...வளர்மதி (வலைப்பூ இப்பொழுது அழைக்கப்பட்ட வாசிப்பாளர்களுக்கு மட்டும்)
நாலு கேள்விகள், நாலு பதில்கள் - கென்
கேள்விக்கென்ன பதில் - ஜ்யோவ்ராம் சுந்தர்
ராமின் கேள்விகளும் சுந்தருக்கான கேள்விகளும் - அய்யனார்

நான்(அகம்)
ஆழமான வாசிப்போ, புரிதலோ அற்ற... அரை,குறை ஆர்ப்பரிப்பும், அகங்காரமும் கொண்ட, எல்லாவற்றையும் ஐயப்படுகிற, எதையும் ஏற்க மறுக்கிற நான்.

வலைச்சூழல்(புறம்)

வினா - விடை என்றே உருப்போட்டே பழகிப்போன கல்விமுறையில் வந்ததால் என்னவோ! எல்லா வினாக்களுக்கும் விடைகளை மட்டுமே வேண்டி நிற்கிற இடத்தில்...
ஐயங்கள், ஊகங்கள், கற்பனைகள் வழியாக குறுக்குவிசாரணை செய்யவோ, வினாக்களுக்கான வினாக்களை (நன்றி : வளர்மதி) நோக்கி பயணப்பட ஏன் முயற்சிக்கவில்லை?

தகவல்கள் தரவுகளாக்கப்பட்டு, தரவுகளும், மேற்கோள்கள் மட்டுமே விடைகளாக பரிணாமிக்கிற சூழலில்...

தகவல்களை தின்று தகவல்களாக வாந்தி,பேதி எடுக்கும் தகவல்களின் கிணற்றில் வாழும் தவளைகளாக சமூகம் பரிணாமித்துக்கொண்டிருக்கிறது!

ஒவ்வொரு வினாவும் உள்இயங்கியலை(நினைவு, சிந்தனை, மனம், எண்ணவோட்டங்கள், தர்க்கம், பின்னக்கம், குறுக்கோட்டுதல், இன்ன பிற) தூண்டுகிறது, அதில் பெறப்படும் பல பார்வைகளில் நான் முதன்மைப்படுத்த(priority) விழைகிற பார்வை... விடையாக...

5. சமீபத்தில் நீங்கள் படித்த நூல் பற்றி சொல்லமுடியுமா?

"புயலிலே ஒரு தோணி" - பா. சிங்காரம்.
இந்த தொடர் ஆட்டத்தில் வளர்மதி கேட்டு பைத்தியகாரன் பதிவில் சொன்ன பிறகு இந்த நூலை வாசிக்க ஆரம்பித்தேன்.

அறிதல், தெரிதல்,தேர்தல், கற்றல், பயிற்சி(அ)பட்டறிதல், ஆழ்தல், அகல்தல், ஆய்தல்,விடுபடல்...

கரி பல நூறாண்டுகள் சுழற்சிக்கு உட்பட்டு வைரமாக மாறுவது போல... படைப்பாளி என்பவன் மேற்கண்ட சுழற்சிக்கு (எந்தவரிசையில் வேண்டுமானாலும்) பலமுறை உள்ளாகி ஒரு படைப்பை வெளிகொணர வேண்டும்.

http://abcxyz.blogspot.com என்று பதிந்தவுடன் நானும்,நானும் படைப்பாளி என்று வண்டியேறுகிற...
யாராவது செத்தா உடனே அவர் இன்னார் பெத்த புள்ள என்று காகிதங்களை அச்சடித்து பொஸ்தகம் விற்கிற பதிப்பகங்களும் இருக்கிற சூழலில்...

நூலாசிரியர் மிகச்சிறந்த படைப்பாளியாக இருக்கிறார். படைப்பை பற்றிய விமர்சனங்களும், புகழுரைகளும் நிறைய வந்துவிட்டன.

என்னுடைய பார்வை... படைப்பு மக்களின் இலக்கியமாக இருக்கிறதா?

ஆங்கிலேயர் மலாய் தீவுகளை கைப்பற்றிய காலம் முதலே தமிழகம், வட இலங்கை பகுதிகளிலிருந்து தோட்ட தொழிலாளர்களாகவும், தொழிலாளர்களாகவும் கப்பலில் அழைத்து வரப்பட்டவர்கள் வாழ்ந்துள்ளனர்.

ஆசிரியர் ஒத்த வரி கூட அந்த தொழிலாளர்களை பற்றி தன்னுடைய படைப்பில் குறிப்பிடவில்லை.

ஆண்டைகளின்(செட்டியார்கள், பிள்ளைகள்) வாழ்க்கை, குடி, கூத்து, கும்மாளம், போராட்டம் எல்லாவற்றையும் வர்ணணை செய்ய முடிந்த படைப்பாளியால்...
அடிமைகளின் (தொழிலாளிகளின்) மூச்சுக்காற்றை கூட பதிவு செய்ய முடியாமல் போனதேன்?


பிரமிடுகளை தோண்டி...
அரசர்கள் அருங்காட்சியகத்தில்...
புதையுண்ட மக்களோ...
புழுதியாய்!

வியாழன், 1 ஏப்ரல், 2010

பலிகடா ஆக்கப்படும் உண்மைதமிழன்...

''எப்படியிருப்பினும் அமைப்போ, அல்லது சங்கமோ, அல்லது அஸோஸியேஷனோ எதுவோ ஒன்று அரசு அங்கீகாரத்துடன் அமைப்பதாக முடிவாகிவிட்டது. இந்த அளவுக்கு பதிவர்கள் கொடுத்த ஒத்துழைப்புக்கும், ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்..

Read more: http://truetamilans.blogspot.com/#ixzz0jpuKECk1
''
என்கிற வரிகளை படித்தவுடன் வந்த எரிச்சலில் ஒரு பதிவை எழுதியிருந்தேன்.

யார் இவர்கள் ? தமிழ் வலைப்பதிவர்களுக்கு அத்தாரிட்ட...

தனக்கு பின்னால் பம்மும் பார்ப்பானியத்தை பற்றிய விழிப்பற்ற உண்மைத்தமிழன்
முண்டாகட்டிக்கொண்டு எழுதிய பதிவை வைத்து பலர் தங்களுடைய அதிகார அரசியலை பூசி மொழுக முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள்.

உண்மைத்தமிழன் மாதிரியான அப்பாவிகளை பலிகடாவாக்கி தங்களுடைய அதிகார அரசியலை முன்னெடுக்கும் நபர்களை தொடர்ந்து அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

புதன், 31 மார்ச், 2010

பதிவர்கள் குழுமம் - ஏன் சாத்தியமற்றது? என்ன பாதிப்புகளை உருவாக்கும்?

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

இடுகையை வாசித்து சில நண்பர்கள் உரையாடியில் வறுத்தெடுத்து விட்டார்கள்... மிக கடுமையாக இருப்பதாக குறை கூறினார்கள்.

நிகழ்வுகளின் வழியாக எளிமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்.

வலைப்பூக்கள் பல்வேறு வகையில் இயங்கி கொண்டிருக்கின்றன.

ஒரு குழுமம்/சங்கம்/அமைப்பு என்று தொடங்கியவுடனே அதற்கு குறைந்தபட்ச அடிப்படை விதிமுறைகள் என்று ஒன்று உருவாக்கப்படும்.

முதலில் யாரெல்லாம் உறுப்பினர் என்பதிலேயே சிக்கல் தொடங்கி விடும்.

பாலியியல் கதை எழுதுகிற வலைப்பதிவருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
காமக்கதைகள் எழுதுகிற ஜ்யோவரம் சுந்தருக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
சுகுணா திவாகர் மாதிரி அடிக்கடி கெட்ட வார்த்தை (வார்த்தை எப்படி கெட்டு போகும்?) பயன்படுத்துகிறவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?
மத அடிப்படைவாத பதிவர்களுக்கு உறுப்பினர் தகுதி உண்டா?

இப்ப தகுதி அளவெடுப்பது யார்? அவருக்கென்ன தகுதி?

அடுத்து...
குழுமம்/சங்கம்/அமைப்பு விட்டு தனித்தியங்கும் பதிவரை... குழுமம்/சங்கம்/அமைப்பு சேர்ந்தவர்கள் கும்பலாக சேர்ந்து ஒடுக்குவார்கள்.

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவர் இந்துத்வ அரசியல் சார்பு உடையவர் என்றால்... அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்களின் தனிப்பட்ட தகவல்களுக்கு (முகவரி, தொலைபேசி எண்) என்ன பாதுகாப்பு?

குழுமம்/சங்கம்/அமைப்பு -ல் அதிகாரத்தில் வருகிறவரின் அரசியல் சார்ப்பும், அந்த அதிகாரத்திற்கு நெருக்கமாக ஒரு கும்பலும் உருவாகி விடும்பொழுது...

இங்கே தான் போன பதிவில் நான் எழுதியது...

இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

செவ்வாய், 30 மார்ச், 2010

பதிவர்களுக்கான குழுமம் / சங்கம் / அமைப்பு ஏன் தேவையில்லை?

முந்தைய இரண்டு இடுகைகளுக்கு பிறகான வலை உரையாடியில் தொடர்புக்கொண்ட பதிவுலக நண்பர்கள் மற்றும் நண்பர் குழலி ஆகியோர்...

கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களின் (வலைப்பூக்களின்) பன்மை தன்மை சிதையும் (அ) அழியும் என்பதை மேலும் விளக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்குவது என்பதை விட படிமமாக விளக்க முயற்சிக்கிறேன்.

கட்டற்ற வெளி (இணையம்) -(கட்டற்றதாக பெரு நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளமையால், வெளியின் மீதான பெரு நிறுவனங்களின் தாக்கங்களை நீக்கி வைத்துக்கொள்வோம்)

கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள்(objects) - வலைப்பதிவர்கள்.

பொதுவான இயங்கியல்...
கட்டற்ற வெளியில் இயங்கும் பொருட்கள் தனக்கென்ற தனித்த ஒழுங்கமைவும், இயங்கு தளமும் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு பொருளும் மற்றொன்றுடன் ஒத்திசைதல் அல்லது தொடர்பாடல் வழியாக தமக்குள்ளாக ஒரு ஒழுங்கமைவையும், இயங்கு தளத்தையும் கொண்டிருக்கும்.

கட்டற்ற வெளிக்கான பொதுவான ஒழுங்கமைவு என்ற ஒன்று இருக்காது. அவ்வாறு பொதுவான ஒழுங்கமைவு உருவானால்... பொருளின்(object) தனித்த அடையாளம் சிதையும் அல்லது பொதுவான ஒழுங்கமைவோடு முரண்பட்டு அழிந்து போகும்.

எ.கா :

X, Y, Z என்று மூன்று பொருட்களை எடுத்துக்கொள்வோம்.

x,y,z ஆனது தனக்கென தனித்த ஒழுங்கமைவையும், இயங்குதளத்தையும் கொண்டவை.

x ஆனது y யுடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும்... x ஆனது z உடன் கொண்டுள்ள ஒழுங்கமைவும், இயங்குதளமும் வெவ்வேறானவை.

அவ்வறாக ஒவ்வொரு பொருளும் இருக்கும்...

x,y,z... ஆக எண்ணிலடங்கா பொருட்கள் இயங்கும் கட்டற்ற வெளியில் ஒரு பொதுவான ஒழுங்கமைவும், இயங்குதளமும் இருக்க இயலாது.

அவ்வாறான பொதுவான (global) ஒன்று உருவாகும் பொழுது... பொருட்களின் ஒழுங்கமைவு முரணால் பல பொருட்கள் சிதையும் அல்லது அழியும்.


இணையம் என்கிற கட்டற்ற வெளியில் இயங்கும் வலைப்பதிவர்களுக்கான(பொருட்கள்) பொதுவான ஒழுங்கமைவு என்பது இயங்கியலின் படி சாத்தியமற்றது.

அவ்வாறு திணிக்கப்படும் பொழுது ஒரு குறிப்பிட்ட காலவெளியில் மாற்றுக்கருத்து, இடது சாரி பதிவர்கள் மெல்ல, மெல்ல அழிக்கப்படுவார்கள்.

ஒரு கணினி நிரலாளன் பார்வையிலும்...
பொருட்களுக்கு (objects) இடையிலான dependency மிக, மிக குறைக்கப்பட வேண்டும். சாத்தியமெனில் zero வாக வைக்கப்பட வேண்டும்.

பொருட்கள்(objects) எப்பொழுதும் தனக்குரிய பண்புகளையும், இயக்கத்தையும் தன்னகத்தே கொண்ட தனித்தியங்கும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

அவ்வாறு இருக்கும் பொழுது மட்டுமே நீடித்த நிலைத்தன்மையும், நீட்சியடைதல் (அ) வளர்தல் சாத்தியம்.

இன்னும் பல்வேறு கோணங்களில் தனிமனித உரிமை மற்றும் விடுதலை(சுதந்திரம்) என்று விரித்து விளக்கிக்கொண்டே போக முடியும்.

அடுத்த பதிவுகளில் சங்கம் அல்லது அமைப்பு வேண்டும் என்று கருதுகிற நண்பர் பைத்தியகாரன் மற்றும் தோழர் மாதவராஜ் ஆகியோருக்கு வினாக்களுடன் வருகிறேன்...

நன்றி
அரசு

ஞாயிறு, 28 மார்ச், 2010

பதிவர், பதிவர்கள், குழு, குழுமம்... இன்னபிற...

வெள்ளிகிழமை Buzz ல்
Arasu Paari - - Public - Muted
பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதின் அரசியல் என்ன?Edit
Jamalan Jahir - வேறென்ன கும்பலாக மாறுவதுதான் அரசியலின் முதற்படி பாரி...))

ஜமாலன் ஒற்றை சொல்லில் பல விளக்கங்களை தந்தார்.

எது படைப்பு? யார் படைப்பாளி? எதற்காக கலை, இலக்கியம்? இப்படி எந்த விழிப்பும், வினவும் அற்ற நிலையில் உள்ள மக்கள் சமூகத்தில் இருந்து வருகிற பதிவர் என்கிற தனிமனிதனை, பதிவர்கள் என்கிற கும்பலாக மாற்ற முனைவதன் ஊடாக...

இப்போதைக்கு...
காசு இருக்கிறவன் அல்லது பதிப்பகத்தை/பதிப்பாளரை காக்காய் பிடிக்க தெரிந்த சிலர் எதையாவது எழுதி இது தான் 'எலக்கியம்' என்று.. விற்கலாம்.
நாமெல்லாம் பதிவர்கள் என்று இன்னொரு பதிவரை ஊக்கப்படுத்த வேண்டும் கும்பல் கூட்டி விற்கலாம்.

ஆனால் நாளை...

தனிமனித உளவியல் என்பது வேறு, கும்பலின் உளவியல் என்பது வேறு.

விடுதலையடைந்த தனிமனித பார்வைகள்... மாற்றப்பட்டு, கும்பலின் ஒற்றைப்பார்வையாக முன்வைக்கப்படும்.

வலைப்பூக்களின் விடுதலை தன்மையானது புறக்கணிப்பட்டு, ஒரு கும்பலின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாகவும், அதன் அதிகாரமே தமிழ் வலைப்பூக்களின் இயங்கியலை தீர்மானிக்கும் காரணியாகி விடும்.

இந்திய(பார்ப்பனி,பனியா) தேசியத்தின் ஊடகங்கள் மக்களின் அரசியலை, மக்களின் கலை, இலக்கியத்தை மறுத்தும்,நசுக்கியும் வருகின்றபொழுது... அதற்கு மாபெரும் மாற்றாக உருவாகிக்கொண்டிருக்கும் வலைப்பூக்கள்... கும்பல் அதன் அதிகார மையம் என்பது வலைப்பூக்கள் என்கிற ஊடகத்தை நசுக்கி தேசியத்தின் இன்னொரு ஊதுகுழலாக மாற்றப்படலாம்.

இங்கே கடந்து போன சில நிகழ்வுகளை புரட்டுவதன் மூலம்... கும்பலின் உளவியல் என்பது எத்தகையதாக இருக்கும் என்பதை உணரலாம்.

தமிழ்மணத்தை/வினவை புறக்கணி என்பது தனிமனித பார்வையாக/கருத்தாக இல்லாமல் கும்பலின் பார்வையாக மாற்றப்படும்.

மேப்படியான், குழு, குழுமம், அமைப்பு, அரசியல்... பற்றி எழுத வேண்டும் என்கிற நினைப்பு நீண்ட நாட்களாக இருக்கிறது. சூழல் அமைந்தால் இன்னொரு நாளில்...


நன்றி
அரசு.

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

பார்ப்பானியம் - பார்ப்பனர் தொடர்பென்ன?

.
.
சமூகத்தில் நிலவும் அடுக்குமுறை ஏற்றதாழ்வுக்கு பார்ப்பன சாதியில் பிறந்தவர்களை சுட்டிக்காட்டுவது போல பார்ப்பானியம் என்ற பெயரில் அழைப்பதை கண்டு, சிலர் வெம்பி மனம்குமறுகிறார்கள்.

முன்னோட்டமாக இந்த இரண்டு பதிவுகளை படித்துவிட்டு வாருங்கள்...

பார்ப்பானியம் என்றால் என்ன?

பார்ப்பனீயம் For Dummies !!!!



பார்ப்பானியம் பார்ப்பனர் என்கிற சாதியுடன் இணைத்து நோக்கபடுவதன் பின்னணி!

பார்ப்பானியம் பெயர் காரணத்தை புரிந்துக்கொள்ள சில வரலாற்று தொடர்ச்சிகளை பார்க்க வேண்டியுள்ளது.

அதிகாரத்துக்கு நெருக்கமானவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை முதலில் எதிர்த்தவர்கள் சித்தர்களே!

மக்கள் திரள் போராட்டமாக முதன் முதலில் நடத்தியவன் புத்தன்!

பெரியாருக்கு முன்பே மக்கள் பார்ப்பனர் என்போர் யார் என்பதை உணர்ந்திருந்திருதனர்.

பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்கிற பிரிவு வரலாற்றில் தொடர்ச்சியாக இருந்துக்கொண்டே இருக்கிறது.

சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை கண்டு வருத்தமடைந்த சமூக போராளிகள், சமூகத்தை உற்று நோக்கி பகுப்பாய்வு செய்து உணர்ந்துக்கொண்டது.

நிலவுடமையாளர்கள், பண்ணையார்கள், ஜமீன்கள், குறு நில மன்னர்கள், மன்னர்கள் பின்னர் ஏற்ப்பட்ட ஆங்கிலேய மற்றும் பிற ஐரோப்பிய அதிகாரங்களுக்கு நெருக்கமான நிலையில் ஒரு குறிப்பிட்ட கூட்டம் தொடர்ந்து இருப்பதையும், அவர்கள் தங்களுடைய அன்றாட வாழ்வியலுக்கு மற்றும் பிழைப்புக்கும் தேவையானதையெல்லாம் உயர்ந்து என்றும் மற்றவற்றை இழிந்தது என்றும் சமூகத்தில் கட்டமைத்திருப்பதை உணர்ந்தனர்.

எ.கா: பரத நாட்டியம், வீணை போன்றவை உயர்ந்தாகவும், பறை, முரசு, மேளம், கூத்து போன்றவை தாழ்ந்தாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதிகாரத்துக்கு நெருக்கமாக தங்களுடைய பிழைப்பை முன்னிறுத்தி சமூகத்தில் ஏற்றதாழ்வுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தின் அடையாளத்தை உற்று நோக்கியபொழுது அவர்கள் பூணூல் அணிந்த பார்ப்பனர் என்கிற அடையாளத்துடன் இருப்பதை, சமூகத்தில் நிலவும் ஏற்றதாழ்வுகளை போக்க வேண்டும் என்று போராடுகிற போராளிகள் உணர்ந்தனர்.

பார்ப்பனர்கள் எவ்வாறு அதிகாரத்தை ஒட்டி வாழ்கின்றனர், என்பதற்கு சில எ.கா:

1. இந்தியாவின் குடியரசு மாளிகையில் உள்ள தொழிலாளி முதல் உயர் பதவி வரையிலான ஆயிரத்துக்கு அதிகமான பதவிகளில் 1990- ல் 20லிருந்து 30 பேர் வரை மட்டுமே பார்ப்பனரல்லாதோராக இருந்தனர்.

2. தேர்தல் ஆணையத்தின் முக்கிய பதவிகளில் 90சதவிகிதம் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

3. உச்சநீதிமன்றத்தின் முக்கிய பதவிகளும் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

4. ரிசர்வ் வங்கியின் 95 சதவிகித முடிவெடுக்கும் பதவிகள் பார்ப்பனர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறு ஐரோப்பியர்களின் நிறவெறி என்பது வெள்ளை நிறவெறி என்று அடையாளப்படுத்த படுகிறதோ! அதேபோல் இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் நிலவும் அடுக்குமுறை சமூக ஏற்றதாழ்வு பார்ப்பனர்களுடன் தொடர்படுத்தி பார்ப்பானியம் என்று அழைக்கபடுகிறது.

பெரியார் அவர்கள் நேரிடையாக பார்ப்பான் என்றழைத்தே இந்த ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக போராடினார்.

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

சந்தனமுல்லை - சிவப்பு தோல், வெள்ளை மேலாதிக்கம், பார்ப்பானியம்

.
.
.
கையேடு அவர்களின் வலைப்பக்கத்தை மேய்ந்துக்கொண்டிருந்தபொழுது பகிர்வுகள் பகுதியிலிருந்து உனக்குப் பிடித்த சாக்லேட் கூட.... இடுகைக்கு வந்தேன். சந்தனமுல்லை அவர்களின் பதிவுகளை சில மாதங்களாக வாசித்துக்கொண்டிருக்கிறேன். இந்த இடுகை 2007-ல் எழுதியிருக்கிறார்கள் அதனால் வாசிக்கவில்லை. இப்பொழுது வாசித்தபொழுது எழுந்த மனக்குமறல் அதிகம்.

உலகளவில் நிலவும் வெள்ளை மேலாதிக்கம்... கிழக்காசிய நாடுகளில் நிலவும் மஞ்சள் தோல் மேலாதிக்கம்... இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் நிலவும் சிவப்பு தோல் மேலாதிக்கம்... பற்றிய எந்த சமூக, அரசியல் காரணிகளையும் தொடாமல் வெறும் தன்னம்பிக்கை பயிற்சி என்கிற நிலையில் எவ்வாறு எழுத முடிகிறது.

குறிப்பாக இந்திய துணைக்கண்ட நிலப்பரப்பில் கட்டியெழுப்பப்பட்டுள்ள சிவப்பு தோல் உயர்ந்தது என்கிற பார்ப்பானிய சிந்தனையும்...

சிவப்பு தோல் மனிதர்கள் உயர்ந்தவர்கள் என்கிற சமூக உளவியல் கருத்துருவாக்கமும் எவ்வளவு மோசமான சமூக, அரசியல் விளைவுகளை உருவாக்கி இருக்கின்றன.

என் துணைவிக்கு சிகிச்சையாக சென்றபொழுது மருத்துவர் சொன்ன ஒரு நிகழ்வால் அதிர்ந்து போனேன்...

"கருப்பாக இருந்த ஒரு பெண் தன்னுடைய குழந்தை சிவப்பாக பிறக்க வேண்டும் என்று மிக அதிகமாக நாள்தோறும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தியதால், தண்ணீர் அளவு குறைந்துக்கொண்டே வந்து குழந்தை இறந்து விட்டது."

இந்த நிகழ்வு எதை நமக்கு படம் பிடித்துக்காட்டுகிறது. இதனுடைய சமூக, அரசியலை பேச வேண்டாமா!?

கருப்பு தாழ்வல்ல என்று நம்பிக்கை லேகியம் ஊட்ட முயலாதீர்கள்!
உங்கள் குழந்தைகளுக்கு போராட கற்றுக்கொடுங்கள்!
சிவப்பு என்பது உயர்வல்ல என்பதை கற்றுக்கொடுங்கள்!
நிறத்தால் கட்டியெழுப்பப்பட்டுள்ள பார்ப்பானியத்திற்கு எதிரான அறிவை ஊட்டுங்கள்!

அன்புடன்
அரசு

தொடர்புடைய இடுகை

வெள்ளை/மஞ்சள்/சிவப்பு/கருப்பு/அரக்கு (நன்றி : இராம.கி) தோலின் நிறத்தின் மீது கட்டமைக்கப்பட்ட பிம்பங்கள்...!

Related Posts with Thumbnails