இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 1 ஆகஸ்ட், 2007

ஜப்பானிய மொழி கற்றுதராத... திராவிட ஆட்சியாளர்கள் ஓழிக!

எனக்கு ஓரே கோபம், கோபமாக வருகிறது இந்த செய்தியை கேட்ட பிறகு... செய்தி வேறென்றுமில்லை நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் தலைமையகம் ஜப்பானில் இருக்கிறது. இன்னும் சில மாதங்களில் நான் ஜப்பான் செல்ல வேண்டியிருப்பதால் ஜப்பானிய மொழி படிக்க செல்லிவிட்டார்கள். அதோடு ஏன் நான் அங்கே செல்ல வேண்டுமென்றால் ஜப்பானில் வர, வர தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஜப்பானிய சமூகத்தில் உள்ள பெரும்பான்மையோனர் வயதாகிவிட்டதால் மனித வள பற்றாக்குறை. ஜப்பானிய அரசு தீவிரமாக இயந்தர மனிதர்களை உணவகம், மருத்துவமனைகளில் பயன்படுத்த அனுமதியளித்தாலும் பற்றாக்குறை மிக அதிகம் வருகிற ஆண்டில் மட்டும் இரண்டு லட்சத்திற்க்கு அதிகமான தொழில்நுட்ப தொழிலாளர்கள் தேவை.

எனக்கு இதை நினைத்தால்தான் நம்ம திராவிட அரசுகளின் மீது கோபம்,கோபமாக வருகிறது. இவர்கள்தான் நம்ம இளைஞர்களை ஜப்பானிய மொழி கற்றுகொள்ள விடாமல் தடுத்துவிட்டார்கள்.

என்னய்யா காமெடி பண்ணுற என்று கேட்கிறீர்களா!

வருடத்துக்கு ஒரு ஆயிரம் பேருக்கு குறைவாக வட இந்தியாவுக்கு போகிறதுக்கே, நம்ம திராவிட அரசாங்கங்கள் இந்தி கற்றுக்கொடுக்கவில்லை என்று கூச்சல் போடும்போது, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு இருக்கிற ஜப்பானிய மொழி கற்றுதர வேண்டும் என்று நான் மட்டும் திட்ட கூடாதா? திராவிட அரசுகளை.

இந்தி கற்றுதரவில்லை என்று கதறுகிற வெண்ணைகளா! ஆறுகோடி தமிழர்களின் வாழ்வியலுக்கு எதற்க்கடா இந்தி!

தமிழ் மண்ணில் வாழ்வதற்க்கு, தமிழ் மொழியல்லாமல் வெறென்ன வெங்காயமடா தேவை?

ஆங்கிலம் படித்து ஐரோப்பவிற்க்கும்,அமெரிக்காவிற்க்கும் ஓடலாம். இந்தி படித்து வட இந்தியாவில் பிழைக்கலாம் என்று பிழைக்கவும், பிச்சை எடுக்கவும் கற்று தருகிறீரோ!

தாய் மொழி படித்து, தாய் மண்ணில் தன்மானத்துடன் வாழ சிந்தியுங்கள் தமிழர்களே.
கல்வி,வேலைவாய்ப்பு,அரசு, நீதிதுறை,வழிபாடு இன்னும் அனைத்து வாழ்வியலும் தாய் மொழியில் வேண்டும், அது நம்முடைய உரிமை.


இதற்க்கு மேலாக பல புதிய செய்திகளை கற்றுக்கொள்வதும்,உங்களுக்கு சுய தேவைகள்யிருந்தால் அதை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர!
ஓட்டுமொத்த தமிழ் மக்களின் தேவையல்ல அது!

உங்கள் அறிவின் வீச்சை அதிகரிக்க பிற மொழி கற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறீர்களா! இதோ பட்டியல்

இதயம் மற்றும் குருதி ஓட்டத்தை பற்றிய மருத்துவத்திற்க்கு - பிரெஞ்சு

எலும்பு முறிவு மற்றும் ஆர்தோ - ருஷ்யா

கணிதம் மற்றும் வானவியல் - ருஷ்யா

மரபு சண்டை பயிற்சி (Martial art) - சீனா (mantrin)

மின்நுண்ணுவியல் - ஜப்பான்

காகிதம் மற்றும் மை - ஜெர்மன்
...
...
....

மொழி வளமை மற்றும் செழுமை - தமிழ்


இப்படி உலகத்தின் பல நாடுகளில் பல மொழிகளில் அறிவியல் கொட்டிக்கிடக்கிறது... உங்களுக்கு எது தேவையோ அதை தேடி கற்றுக்கொள்ளுங்கள்.

26 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//இதற்க்கு மேலாக பல புதிய செய்திகளை கற்றுக்கொள்வதும்,உங்களுக்கு சுய தேவைகள்யிருந்தால் அதை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர!
ஓட்டுமொத்த தமிழ் மக்களின் தேவையல்ல அது!//

சூப்பர்.......!

பாரிக்கு 'ஓ'

செல்வநாயகி சொன்னது…

நல்ல பதிவு பாரி.அரசு. பதிவுகள் மட்டுமல்ல, உங்களின் பின்னூட்டங்கள் கூட ஆர்வமுடன் வாசித்துவருகிறேன்

ஜெகதீசன் சொன்னது…

நான் இதை ஆமோதிக்கிறேன்...

நந்தா சொன்னது…

//வருடத்துக்கு ஒரு ஆயிரம் பேருக்கு குறைவாக வட இந்தியாவுக்கு போகிறதுக்கே, நம்ம திராவிட அரசாங்கங்கள் இந்தி கற்றுக்கொடுக்கவில்லை என்று கூச்சல் போடும்போது, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு இருக்கிற ஜப்பானிய மொழி கற்றுதர வேண்டும் என்று நான் மட்டும் திட்ட கூடாதா? திராவிட அரசுகளை.

இந்தி கற்றுதரவில்லை என்று கதறுகிற வெண்ணைகளா! ஆறுகோடி தமிழர்களின் வாழ்வியலுக்கு எதற்க்கடா இந்தி!

தமிழ் மண்ணில் வாழ்வதற்க்கு, தமிழ் மொழியல்லாமல் வெறென்ன வெங்காயமடா தேவை?

ஆங்கிலம் படித்து ஐரோப்பவிற்க்கும்,அமெரிக்காவிற்க்கும் ஓடலாம். இந்தி படித்து வட இந்தியாவில் பிழைக்கலாம் என்று பிழைக்கவும், பிச்சை எடுக்கவும் கற்று தருகிறீரோ!

தாய் மொழி படித்து, தாய் மண்ணில் தன்மானத்துடன் வாழ சிந்தியுங்கள் தமிழர்களே.
கல்வி,வேலைவாய்ப்பு,அரசு, நீதிதுறை,வழிபாடு இன்னும் அனைத்து வாழ்வியலும் தாய் மொழியில் வேண்டும், அது நம்முடைய உரிமை.//

இதற்கு பேசாம அடிச்சிருந்திருக்கலாம். அவ்வளவு காரம்.

நல்ல பதிவு பாரி.அரசு.

ஸ்ரீசரண் சொன்னது…

நானும் இதை ஆமோதிக்கிறேன்


ஆதாயம் கிடைக்கும் என சமஸ்கிருதம் படித்து, தெலுங்கு படித்து, பின் ஆங்கிலமும் இந்தியும் படித்து
கொழுத்துக் கிடக்கிறது இங்கு ஒரு கூட்டம்

சிவபாலன் சொன்னது…

I AGREE WITH YOUR VIEW!

bala சொன்னது…

வாங்க வாங்க.... உங்கள் வரவு நல்வரவாகுக !!

குப்பையா சொன்னது…

இந்தி தெரிந்திருந்தால் நான் வட இந்தியாவில் ஒரு போஸ்ட்மேனாகி இருப்பேன்.கெடுத்துட்டீங்களேடா.

ஜாலிஜம்பர் சொன்னது…

பாரி,நெத்தியடி பதிவு.

Binny சொன்னது…

உங்க ஊருக்கும் பக்கத்து ஊருக்கும் இடையில் ஆறு இருந்தால் பாலம் என்பது கண்டிப்பாக தேவை, அதுபோல் வேற்று மொழி நாட்டின் அறிவியல் வளர்ச்சியை நாம் பெற வேண்டும் என்றால் மொழி அறிவு அவசியம். ஜப்பான் நாட்டினர் வேறு மொழி தெரியாத காரணத்தினால் இன்னும் அமெரிக்க உலகத்தை அறிவியல் தொழிழ்நுட்பத்தை வைத்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. நாம் எல்லோரும் இந்தியர்னா ஹிந்தி அவசியம் தெரியனும் இந்தியர்கள் பல்வேறு மொழிகளால் பிரிக்கப்பட்டதால்தான் அடிமைகளாக பல வருடங்கள் இருந்தோம், என் மொழின்னு சொல்லி மனிதரின் வாழ்வு எல்லையை சுருக்காதிங்க....

பாரி.அரசு சொன்னது…

//நாம் எல்லோரும் இந்தியர்னா ஹிந்தி அவசியம் தெரியனும///

நான் தமிழன், இந்தியா என்கிற நாட்டுக்குள் வாழ்வதற்க்கு இந்தி தெரிய வேண்டும் என்கிற அவசியமுமில்லை. அப்படி கட்டாயபடுத்தபட்டால் இந்தியா என்கிற அடையாளத்தை எதிர்க்கவும் தயக்கமில்லை.

//
என் மொழின்னு சொல்லி மனிதரின் வாழ்வு எல்லையை சுருக்காதிங்க....
//

நான் உங்களுடைய வாழ்வு எல்லையை குறுக்க சொல்லவில்லை... நிறைய கற்றுக்கொள்ளுங்கள். உலகம் முழுவதும் அறிவியல் விரவிக்கிடக்கிறது தேடி கற்றுக்கொள்ளுங்கள்.

ஆப்பிரிக்க காட்டுக்கு ஆராய்ச்சி போற ஐரோப்பியர் அந்த மொழிக்கற்று தான் ஆராய்ச்சிக்கு போறார். அதற்க்காக அவர் ஐரோப்பியர் எல்லோரும் ஆப்பிரிக்க காட்டுவாசிகள் மொழி படிக்க சொல்லவதில்லை நண்பரே!

இந்தியால் உங்களுக்கு ஏதேனும் நன்மை இருக்கும்பட்சத்தில் நீங்கள் படியுங்கள்.

தமிழ் மக்கள் இந்தி படிக்க வேண்டும் என்று கேட்காதீர்கள்!

தமிழர்கள் பல மொழி கற்க வேண்டும். எங்கெல்லாம் அறிவியல் கொட்டிக்கிடக்கறதோ அதை தேடி,தேடி கற்க வேண்டும். அதை விடுத்து நான் இந்தியன் என்கிற புண்ணாக்கு தத்துவமெல்லாம் இங்கு வேண்டாம்.

ILA(a)இளா சொன்னது…

http://farmer.rediffiland.com//scripts/xanadu_diary_view.php?postId=1184863475

ஜெகதீசன் சொன்னது…

//இந்தியர்னா ஹிந்தி அவசியம் தெரியனும//
அப்ப நான் இந்தியனாக இருக்க விரும்ப வில்லை..

வெற்றி சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

பாரி.அரசு சொன்னது…

அய்யா இளா!

என்னங்க வேடிக்கையான ஒரு பதிவை எழுதி அதனால நான் இந்தி படித்தேன் என்றால்... எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை!

நான் தினம், தினம் பல்வேறு மொழி பேசும் மனிதர்கள் உடன் வியாபார தொடர்பு கொள்கிறேன். அதற்க்காக அவர்கள் ஒவ்வொருவர் மொழியையும் நான் கற்க இயலாது. முக்கியமாக என்னுடைய க்ளையண்ட் கொரியாவை சேர்ந்தவர்கள்.

எங்களுக்கிடையில் மொழிபெயர்ப்பாளர்கள் தான் செயல்படுகிறார்கள்.

முதலில் உங்களுக்கு நடந்த நிகழ்வு பாரிஸில் அதற்க்கும் இந்திக்கும் என்ன தொடர்பு என்றே தெரியவில்லை.

இந்தி தெரியாதது தாழ்வான, இகழ்ச்சிக்குரியதா!

உங்கள் மனநிலையை முதலில் மாற்றுங்கள்.

தாய்மொழியை தவிர எந்த மொழியையும் தேவையின் அடிப்படையில் அந்தந்த மனிதன் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்தி தமிழ்மக்களின் வாழ்வியல் தேவையல்ல! உங்களின் தனிப்பட்ட தேவைகளை மக்கள் மீது திணிக்காதீர்கள்.

சுதாகரன் சொன்னது…

//என் மொழின்னு சொல்லி மனிதரின் வாழ்வு எல்லையை சுருக்காதிங்க....//

'பின்னி'ட்டிங்கன்னே. அப்பறம் ஏன்னே தொரமாரையெல்லாம் வெரட்டுனீங்க.. ஏதோ நாமல்லாம் ஆங்கிலத்த வச்சுத்தான் வயித்தகழுவிக்கிட்டு இருக்கோம்.. அதுக்காக.. நம்மல ஆலுரவன் மொழியெல்லாம் கத்துகனுமா?

ரவிசங்கர் சொன்னது…

அடி அடி நெத்தியடி :) எனக்கு இங்கு டச்சு மொழி தெரியாமல் திண்டாட்டமாக இருக்கிறது. இதை சொல்லித் தராத தமிழக அரசியல்வாதிகளைக் கண்டிக்கிறேன் ;)

உமையணன் சொன்னது…

அன்புள்ள இளா,

உங்கள் conuntry man பேசியது உங்களுக்குப் புரியவில்லை என்று மிகவும் வருந்தி இருக்கிறீர்கள். பல மொழிகளை பேசக்கூடிய ஒரு நாட்டில் இலகுவாக ஆட்சி செய்வதற்காக ஒரு மொழியை ஆட்சி மொழியாக்கி இருக்கிறார்கள். அந்த மொழியை பாமரர் முதற்கொண்டு அனைவரும் கண்டிப்பாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் என்ன இருக்கிறது. எனக்கு புரியவில்லை விளக்குங்கள். என் அப்பத்தாவுக்கு சாகும் வரை ஹிந்தி என்றொரு மொழி இருந்தே தெரியாது. அவரையும் ஹிந்தி கற்றுக்கொள்ள ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள். கற்றுக்கொள்ளாததை ashamed என்று ஏன் சொல்கிறீர்கள். எனக்கு இந்தி தெரியும். பள்ளிக்கூடத்தில் அல்ல வெளியில் புத்தகம் வாங்கி விருப்பபட்டே கற்றுக்கொண்டேன். பெங்களூரில் இருந்த போது விருப்பபட்டு கொஞ்சம் கன்னடம் கற்றுக்கொண்டேன். விருப்பப்படுபவர்கள் கற்றுக்கொள்வதை திராவிட அரசுகள் எதுவும் தடுக்கிற மாதிரி தெரியவில்லை.

கண்டிப்பாக பாரிசில் பிரெஞ்ச் தெரியாமல் திண்டாடி இருப்பீர்கள். அப்போது யாரை நொந்து கொண்டீர்கள்.

ஐரோப்பாவில் உள்ள பல நாட்டினருக்கு ஆங்கிலம் தெரியாது. அது உலக மொழியென்றாலும் அதை கற்றுக்கொள்ளாததை அவர்கள் அவமானத்திற்குரியதாக கருதவில்லை. bloody communication-க்கு கூட அவர்கள் ஒரு மொழியை வைத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அது ஒரு மொழி வெறியாக தெரியவில்லை. bloody language என்பது வெறும் communication-க்காக மட்டுமல்ல என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நாம்தான் வரலாற்றையும், தனித்தன்மையையும் இழந்து கொண்டிருக்கிறோம்.

வெளிநாடுகளில் இந்தியர் அனைவரும் பொதுமொழியாக இந்தி பேசிக்கொள்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இலண்டன் போனதாக சொல்லி இருக்கிறீர்கள். அங்கே மூன்றாம் நான்காம் தலைமுறை பாகிஸ்தானியரும், பஞ்சாபியரும், குஜராத்திகளும் இந்தியில் பேசியதைப் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எந்த பள்ளிக்கூடத்தில் படித்தார்கள்? அவர்கள் பள்ளியில் படிக்காவிட்டாலும் இந்தி கற்றுக்கொள்வார்கள். இந்தி அவர்களுக்கு வாழ்க்கையோடு பின்னி பிணைந்த ஒன்று. அவர்களோடு இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு மேலாக பெரும்பாலும் தமிழையே ஆட்சி மொழியாக கொண்டிருந்த தமிழர்களை ஒப்பிடாதீர்கள்.

பெயரில்லா சொன்னது…

ஃபார்மர் இளா அவர்களே,

கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுந்தம் போன கதையா இருக்கே. என்னை கூரை ஏறி கோழி பிடிக்க விடமாட்டேங்கிறாங்க திராவிட கட்சிகள்னு சொல்லிடவேண்டியது தானே. ஆகாத மாமியாருக்கு கை பட்டா குத்தம் கால் பட்டா குத்தம் என்பது மாதிரி எத்தனை காலத்துக்கு சாமி ஹிந்தி ஃபிகருகள் கூட கடலை போட முடியலை, பஜாருல அயிட்டங்களை பேரம் பேச முடியலைன்னு இதே டியூனை போடுவீங்க?

ILA(a)இளா சொன்னது…

//இதற்க்கு மேலாக பல புதிய செய்திகளை கற்றுக்கொள்வதும்,உங்களுக்கு சுய தேவைகள்யிருந்தால் அதை நீங்கள் தான் கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர!
ஓட்டுமொத்த தமிழ் மக்களின் தேவையல்ல அது//
இந்த கருத்தைதான் சாமி சொல்லி இருக்கேன். என்னமோ நான் தமிழ் படிக்கக்கூடாதுன்னு சொன்னா மாதிரி எல்லாரும் சொல்றீங்க?


//உங்களின் தனிப்பட்ட தேவைகளை மக்கள் மீது திணிக்காதீர்கள். //
பாரி, நான் சொன்னது திணிக்கிற மாதிரியா இருக்கு?
This is my suggestion” learn Hindi, if you want to come out of the state for any reason”.
Suggestionக்கு எந்த ஊர்லங்க திணிக்கிறதுன்னு பேரு?
நெறைய வார்த்தைகள் திரிக்கப்பட்டு வருது. அதனால இதுக்கு மேல சொல்ல ஒன்னும் இல்லே.

மங்கை சொன்னது…

நல்ல பதிவு பாரி...

செல்வநாயகி சொன்னதையே வழிமொழிகிறேன்

ILA(a)இளா சொன்னது…

//ஹிந்தி ஃபிகருகள் கூட கடலை போட முடியலை//

நன்றிங்க பாரி

அனானி முன்னா சொன்னது…

Parry Arasu,

I concur with your views.

I dont know Hindi, and dont intend to learn it unless required.
Consider the amount of effort, manhours and money required to teach Hindi to 60 million people when only a few thousands go to Hindi speaking states every year. I do not think it is worth the effort.

Following is a joke I took from the net. In this context read "e-mail/internet" as "Hindi"

A jobless man applied for the position of "office boy" at Microsoft. The HR manager interviewed him then watched him cleaning the floor as a test. "You are employed" he said. "Give me your e-mail address and I'll send you the application to fill in, as well as date when you may start. The man replied "But I don't have a computer, neither an email."I'm sorry", said the HR manager,"If you don't have an email, that means you do not exist. And who doesn't exist, cannot have the job.The man left with no hope at all.

He didn't know what to do, with only $10 in his pocket. He then decided to go to the supermarket and buy a 10 Kg tomato crate. He then sold the tomatoes in a door to door round. In less than two hours, he succeeded to double his capital. He repeated the operation three times, and returned home with $60. The man realized that he can survive by this way, and started to go everyday earlier, and return late Thus, his money doubled or tripled every day.Shortly, he bought a cart, then a truck, then he had his own fleet of delivery vehicles. 5 years later, the man is one of the biggest food retailers in the US.

He started to plan his family's future, and decided to have a life insurance. He called an insurance broker, and chose a protection plan. When the conversation was concluded,the broker asked him his email. The man replied, "I don't have an email". The broker answered curiously, "You don't have an email, and yet have succeeded to build an empire. Can you imagine what you could have been if you had an email?!!"The man thought for a while and replied, "Yes, I'd be an office boy at Microsoft!"


Moral of the story:

1) Internet is not the solution to your life.
2) If you don't have internet, and work hard, you can be a millionaire.
3) If you received this message by email, you are closer to being an office boy, than a millionaire.


அனானி முன்னா

அனானி முன்னா சொன்னது…

Parry Arasu,

Following is a translated speech of Late Mr. AnnaDurai in parliament:
Source:wikipedia.

In an address in 1962, former Tamil Nadu Chief Minister C N Annadurai made the following statements opposing Hindi imposition: "It is claimed that Hindi should be common language because it is spoken by the majority. Why should we then claim the tiger as our national animal instead of the rat which is so much more numerous? Or the peacock as our national bird when the crow is ubiquitous?"
Annadurai also said, "Since every school in India teaches English, why can't it be our link language? Why do Tamils have to study English for communication with the world and Hindi for communications within India? Do we need a big door for the big dog and a small door for the small dog? I say, let the small dog use the big door too!" [2]

Most of the people in tamilnadu feel that if hindi enters their land, their culture and tradition would be no more[citation needed], this is fact, cities like Mumbai , Kolkata, Bangalore, Hyderabad lost their uniqueness due to hindi and hindi speaking peoples domination.


அனானி முன்னா

எதுக்கும் ஜகா வாங்காதவன் சொன்னது…

தமிழர்கள் பல மொழி கற்க வேண்டும். எங்கெல்லாம் அறிவியல் கொட்டிக்கிடக்கறதோ அதை தேடி,தேடி கற்க வேண்டும். அதை விடுத்து நான் இந்தியன் என்கிற புண்ணாக்கு தத்துவமெல்லாம் இங்கு வேண்டாம்
சூப்பர்.......!
சூப்பர்.......!
சூப்பர்.......!

மக்கள் தளபதி சொன்னது…

//வருடத்துக்கு ஒரு ஆயிரம் பேருக்கு குறைவாக வட இந்தியாவுக்கு போகிறதுக்கே, நம்ம திராவிட அரசாங்கங்கள் இந்தி கற்றுக்கொடுக்கவில்லை என்று கூச்சல் போடும்போது, லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு இருக்கிற ஜப்பானிய மொழி கற்றுதர வேண்டும் என்று நான் மட்டும் திட்ட கூடாதா? திராவிட அரசுகளை//

இதை நான் வழி மொழிகிறேன். (இதப் பத்தி மத்திய அரசுகிட்ட பேசவா.. இல்லை மாநில அரசுகிட்ட பேசவா?)

மேட்டர் என்னன்னா? நானும் இப்போ ஜப்பானிய மொழி தெரியாம ஜப்பான்ல வாயிருந்தும் ஊமையா வாழ்ந்துகிட்டு இருக்கேன்..

Related Posts with Thumbnails