புதன், 8 ஆகஸ்ட், 2007

சீனப்பெண்களும்... மகப்பேறும்...!

முன்பு வேலைபார்த்த சிங்கப்பூர் அரசு நிறுவனத்தில் எனக்கு மேலதிகாரியாக இருந்தவர் சீன பெண்மணி. மிகவும் நல்லவர். ஒருசமயம் நான் ஓரு அவசர குடும்ப வேலையாக போகணும் என்று சொன்ன போது, மிகத்தெளிவாக சொன்னார். "குடும்பம் ரொம்ப முக்கியம், நீ எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக்கொள், குடும்பத்திற்க்கு முக்கியத்துவம் கொடு" என்று. அவ்வளவு தெளிவான பார்வை உடையவர்.

தாய்மையடைந்து, கருவை சுமந்துக்கொண்டு வேலைக்கு வந்துக்கொண்டிருப்பார். தான் கருவுற்றிருக்கிறோம் என்று ஓரு சோர்வாகவோ அல்லது அதை ஓரு பாரமாகவோ கருதாமல், இயல்பாகவே வேலை பார்ப்பார். இப்படியாக நாட்கள் சென்ற போது...

ஓரு நாள் காலை பணிக்கு வந்தார். மதியம் காணவில்லை. மாலை அவருடைய சக தோழி குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார். எனக்கு ஓரே ஆச்சிரியம் என்னாடா! இது காலை வரை அலுவலகத்துக்கு வந்து வேலைபார்த்துவிட்டு மதியம் சென்று குழந்தை பெற்றுக்கொள்வது என்பது என்னை திகைக்க வைத்த நிகழ்வு. சரி! இவர்கள் மனத்துணிவு அதிகம் அதனால் இருக்கலாம் என்று எனது வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்தேன். சிங்கப்பூரில் இருக்கிற சீனப்பெண்கள் இவ்வாறு முதல் நாள் வரை வேலைக்கு வருவார்கள்.
அடுத்தநாள் குழந்தை பெற்றுக்கொள்வார்கள், ஓரே மாதத்தில் வேலைக்கு வந்து விடுவார்கள்.
அவர்கள் அவ்வாறு மன தைரியம் உள்ளவர்கள். அதோடு மிகச்சிறப்பான அவசரகால ஊர்தி சிங்கப்பூரில் இருப்பதால் அவர்கள் இதை பொருட்டாகவே மதிப்பதில்லை என்றார்.

நான் அப்படியே மலைத்து போனேன்! நம்ம மக்கள் கரு உண்டான நாளிலிருந்து ஆரம்பித்து, 7வது மாதம் வளைக்காப்பு,சீமந்தம், அப்புறம் கூடவே அம்மா துணை. நம்ம மக்கள் ஜொள்ளு விட மச்சினி துணை என்று அலம்பல் விட்டு, ஊரையே ரெண்டு பண்ணிக்கிட்டுயிருக்காங்க!

சிங்கப்பூரில் இருக்கிற தமிழர்களும் ஊரில் பண்ணுற அதே பழக்க,வழக்கம்தான் இங்கேயும்!.

இதைப்பற்றி அனுபவம் உள்ள மனிதர்கள், மருத்துவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கொஞ்சம் பின்னூட்டம் போடுங்களேன்.

21 comments:

ஜோ/Joe சொன்னது…

நீங்கள் சொல்வது உண்மை தான் .என் அலுவலகத்திலும் குழந்தை பெறுவதற்கு முதல் நாள் வரை வேலைக்கு வந்த சக சீன பணியாளரை அறிவேன்.

பெயரில்லா சொன்னது…

இதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது... ஆகையால் ஒரு அட்டெண்டன்ஸ் மட்டும் போட்டுக் கொள்கிறேன்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

மருத்துவர் டெல்பின் வருக!

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது உங்களிடம்,

இந்த அனஸ்தீசியா (மயக்க மருந்து ) கொடுத்து அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெறும் சிலர், நான்கைந்து நாட்கள் கழித்து, பிட்ஸ் வந்து இறக்கிறார்கள். அவ்வாறான ஒரு மரணத்தை நேரில் பார்த்தேன்.

அப்போது ஒரு மருத்துவரிடம் கேட்டபோது அவர், இந்த மயக்க மருந்து கொடுத்த தண்டுவடத்தில் தொற்று(infection) வரும், அதற்க்கு மருந்து எதுவும் கிடையாது. 1000த்தில் ஒருவருக்கு இவ்வாறு நிகழ்ந்து விடுகிறது என்று சொன்னார்.

இது உண்மையா? இல்லையென்றால் நான்கைந்து நாட்களுக்கு அப்புறம் பிட்ஸ் வர காரணம் என்ன?

TBCD சொன்னது…

என் கிட்ட கேளுங்க் கொடுமைய.... அத பத்தி..ஜி.டாக்குல சொல்லுறேன்..இதுல வேன்டாம்

//*7வது மாதம் வளைகாப்பு,சீமந்தம், அப்புறம் கூடவே அம்மா துணை*//

பிறைநதிபுரத்தான் சொன்னது…

சீனப்பென்களை நமது தமிழ்நாட்டு பென்களோடு ஒப்பிடுவது தவறு என்று நான் நிணைக்கிறேன். திருமணம் முடிந்ததில் இருந்து -மாமியார் - நாத்தனார் கொடூமைகளை தாங்கி - மாமனார்- மைத்துனர் - மற்றும் பூகுந்த வீட்டில் இருக்கும் வாண்டுகளிடம் 'நல்ல பேர்' எடுப்பதற்காக பிறந்த வீட்டிற்கே செல்லாமல்- சுய ஆசாப்பாச்சங்களை வெளிக்காட்டாமல்- மாடாய் உழைத்து -ஓடாய் தேய்பவர்கள் நம் பென்கள்.

கிணற்று தவளையாய் காலம் கழிக்கும் நமது பென்களுக்கு - கரு உண்டானதும் - அதை சாக்காக வைத்தாவது - அந்தப்பெண்ணின் மனம் மகிழ்வதற்காக பிறந்த வீட்டுக்கு அனுப்புதல் -உடல் நலமும் - கரு நலமும் தேர்வதற்காக- சில சடங்குகளை நம் முன்னோர்கள் ஏற்படுத்தியிருக்கலாம்.

சீனப்பெண்களை போல் - நாசி கண்டாரிலும் - உணவு விடுதிகளிலும் உண்டு - வீட்டில் உள்ளவர்களுக்கும் 'பார்சல்' வாங்கி செல்பவள் அல்ல நம் பெண்கள்.

பெரும்பாலான உழைக்கிற சீனப்பென்களுக்கு வீடு திரும்பி - நம் பென்கள் மாதிரி சமைக்கிற கஷ்டம் இல்லை என்பதுதான் எதார்த்தம்.

TBCD சொன்னது…

கன்னி பசங்களா..கேட்டுக்கோங்க 99% விகிதம் உன்மை...மீதி 1%- சத்தியமான நிச்சியம்...
ஆல் த பெஸ்ட்.... யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம்...

//*delphine said...
நம்ம பெண்களை கெடுக்கிறதே நம்ம தாய் குலம் தான்.*//

உன்மை...உன்மை...உன்மை...உன்மை...
//*பெரும்பாலான உழைக்கிற சீனப்பென்களுக்கு வீடு திரும்பி - நம் பென்கள் மாதிரி சமைக்கிற கஷ்டம் இல்லை என்பதுதான் எதார்த்தம். *//

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

இங்கு கூடப் பெண்கள் சீனப் பெண்போல் தான், இப்போதும் என் காரியாலயத்தில் 3 பெண்கள் நிறை மாதம் ;உயர்த்தி பழுது ஆறாம் மாடியைப் படியால் ஏறியே வந்தார்கள்.
தன்னம்பிக்கை...விசயஞானம்..
நம் பெண்களைப் பற்றி டாக்டரக்கா அனுபவத்துடன் அழகாகக் கூறியுள்ளார்.
நம் பெண்கள் ஒரு குழந்தையின் பின்னே உடல் பருமன் கூட அவர்கள் அதீத கவனிப்பால், உடல் உழைப்புக் குறைதலே!!
ஏனைய கேள்விக்கான டாக்டரக்காவின் பதிலை எதிர்பார்க்கிறேன்.

வெற்றி சொன்னது…

பாரி,
சுவாரசியமான பதிவு.

பெயரில்லா சொன்னது…

No women has responded - so none of this is true!! Except ofcourse what பிறைநதிபுரத்தான் said:-))

I don't know how many "brave" men (who commented) here who can put up with Everyday Take-out / Chicken Salad Diet! I've worked with many many Chinese women. It is a lot of peer-pressure in their community also. You have to see it to understand, many second-generation Chinese American are shapely, possibly due to lack of this peer pressure;-) BTW, I went to work until 5 days before my delivery (my non-Asian manager sent me home) and I worked from home until the day before my delivery (mine was induced normal delivery). I know too many Indian women who timed their deliveries to appease their in-laws.

You deprive women of other joys in life, then it will reflect in other ways ("அதை சாக்காக வைத்தாவது").

aravindaan சொன்னது…

என் நன்பி, மாலை வரை அலுவலகம் சென்றுவிட்டு, மலை அவரது கணவரை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் சேர்ந்து 20நிமிடங்களில் குழந்தை பிறந்தது..

ram சொன்னது…

இது அமெரிக்காவில் நடக்கும்
சகஜமான காரணம். நான் ஒரு
மெடர்னிடி வார்டில் அனெஸ்தடிஸ்டாக
வேலை செய்கிறேன். தினந்தோறும்
பிரசவத்திற்காக வரும் பெண்மனிகளுக்கு
அனெஸ்தீசியா கொடுப்பதுதான் என்
தொழில். மேலைநாடுகளில் பெரும்பாலான பெண்கள் வேலை செய்யவேண்டிய அவசியத்தில் உள்ளனர்
(இரண்டுபேரும் சம்பாத்தியம் பெற்றால்தான் உயர்தர வாழ்க்கை வாழமுடியும்) மேலும் அவர்களுக்கு வருடத்திற்கு இரண்டுவார லீவ்தான் கிடைக்கும். இங்கு பணியாற்றும் ஒரு பெண்டாக்டர் சனிக்கிழமை குழந்தைபெற்று திங்கள் கிழமைக்கு திரும்பி வேலைக்கு வந்துவிட்டார். இது அதிசயத்தக்க விஷயம் ஆனதால் நாளேட்டில் வெளிவந்தது.

இதெல்லா பழக்கம் தான்
நாளாவட்டத்தில் அமெரிக்கா சென்று வருபவர்கள் தொகை அதிகரிக்க இந்தியாவிலும் பழக்கங்கள் மாற ஆரம்பிக்கலாம்

ஆமாம் இதென்ன ஜொள்ளுவிட மச்சினி துணை . மச்சினி இல்லவிட்டால் ?? விளக்கம் அளிப்பீரா

இண்டி

Thekkikattan|தெகா சொன்னது…

பாரி,

நான் போட வேண்டிய பதிவு இது :-)) என்னடா இப்படிச் சொல்கிறேன் என்று நினைக்காதீங்க. காரணம் இருக்கு. நீங்களும், டாக்டரும் சொன்ன மாதிரியே நம் சமூகத்தில் இப்படி பெண்கள் நிறையவே உண்டு. மிகவும் வருத்ததத்துக்குறியது.

//You deprive women of other joys in life, then it will reflect in other ways ("அதை சாக்காக வைத்தாவது").//

இப்படி ஒரு அனானி சொல்லி முடித்திருந்தார். இதில் சிறிதளவு உண்மையிருந்தாலும். எல்லா சூழ்நிலையிலும் அப்படியே என்று நினைப்பதற்கு இல்லை. அது போன்ற deprived situation இல்லாத இடங்களிலும் அதே கதைதான் நடந்து வருகிறது.

என்னை பொருத்த மட்டில் இதற்கு பாதிக் காரணம், கர்பம்தரித்தலைப் பற்றிய புரிந்துணர்வு அற்ற தன்மைதான். மூன்றாவது மாதம் கடந்தும் சாதரண வேலைகள் செய்வது கூட கூடாதென்று சாப்பிட்டு விட்டு, சாப்பிட்டு விட்டு அசையாமல் அமர்ந்திருந்தால் என்னவென்று சொல்வது. அறிவூட்டல் நடந்தால் எல்லாம் சரியாகி விடும்.

ram சொன்னது…

மருத்துவர் டெல்பின் வருக!

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது உங்களிடம்,

இந்த அனஸ்தீசியா (மயக்க மருந்து ) கொடுத்து அறுவைசிகிச்சை மூலம் குழந்தை பெறும் சிலர், நான்கைந்து நாட்கள் கழித்து, பிட்ஸ் வந்து இறக்கிறார்கள். அவ்வாறான ஒரு மரணத்தை நேரில் பார்த்தேன்.

அப்போது ஒரு மருத்துவரிடம் கேட்டபோது அவர், இந்த மயக்க மருந்து கொடுத்த தண்டுவடத்தில் தொற்று(infection) வரும், அதற்க்கு மருந்து எதுவும் கிடையாது. 1000த்தில் ஒருவருக்கு இவ்வாறு நிகழ்ந்து விடுகிறது என்று சொன்னார்.

இது உண்மையா? இல்லையென்றால் நான்கைந்து நாட்களுக்கு அப்புறம் பிட்ஸ் வர காரணம் என்ன?

எந்த ஊரில் இந்த டாக்டர் உள்ளார் என்பதை தெரிவிக்கவும்
நான் அவருக்கு சரியான தகவல்
தரவிரும்புகிறேன்

--------------------
ராமின் பதில்
--------------------------

எனது தொழில் அமெரிக்கா மருத்துவக்கல்லூரியில் மகப்பேறுவுக்காக
வரும் பெண்களுக்கு தின்ந்தோறும்
முதுகு நரம்புத்தண்டு (I am totally
at a loss as to how to write in
tamil My job is to give spinal and epidural anesthesia for vaginal delivery and cesarean section. I also teach the residents how to do it. Moreover both my wife and now my daughter (30 years) have both had regional anesthesia).Do you think I would do this and subject my wife and daughter to go through this if I knew that it would cause them to have infection at the rate of 1:1000 and have fits on account of it?


பிட்ஸ் வருவதற்கு முக்கிய காரணம்
பிரி ஏக்லாம்சியாங்கற கண்டிஷந்தான்

நீங்கள் குறிப்பிட்டுள்ள மாதிரி சில
கருவடைந்த பெண்டிர் பிட்ஸ்னால்
தாக்கப்பட்டு இறக்கலாம். ஆனால்
பெரும்பாலோர் சிகிச்சைபெற்று
குணமடைவர்

தமிழ் வளரவேண்டுமானால்
சிக்கலான அன்றாடதேவைக்கு அத்தியாவசியமான தகவல்களை
தமிழில் உள்படுத்தவேண்டும்

நாம் நாசூக்கு கருதி உடல் உறுப்புகளூக்கு தெளிவானப் பெயர்
வைக்காமல் எதோ சுத்திவளைத்து
தமிழில் பேசுகிறோம் எழுதுகிறோம்

இந்த பதிவில் பாருங்கள்

சுகப்பிரசவம் என்கிறோம்
அப்படி என்றால் ஆங்கிலத்தில்
vaginal delivery.
ஆங்கிலத்தில் அது தெளிவாக உள்ளது

ஆனால் நாசூக்கு கருதி vagina வை நாம் பிரசவா வாய் என்று சொல்லி வருகிறோம்.

அதை தெளிவாக ஒரே வார்த்தையில்
சொல்லிப் பழகுவதில்லை

சுகப் பிரசவம்

சுகம் = comfortable

ஒரு உறுப்பிற்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாமல் உள்ளதே


அதே மாதிரி
அறுவைப் பிரசவம்

அதற்கு வெறுமனே
சிசேரியன் என்று சொன்னல் தெளிவாகப்
புரிந்துகொள்ள முடிகிறது


To me cesarean section makes more
sense

Going a little bit away from the conversation here

தமிழ் பெண்டிர் எல்லாம் தங்கள்
பேச்சில் என் பிரண்டுக்கு பிரெஸ்ட் கேன்சர்னு டையக்னோஸ் பண்ணிட்டாங்க என்று சொல்லி வருத்தப்படுவாங்கள்

பழங் காலமாகத் தமிழில்
breast என்பதற்கு முலை, தனம்
என்று கூறி வந்தார்கள். ஆனால்
நாசூக்கு கருதி இப்போ எல்லாரும்
பிரெஸ்ட் என்று கூறி சகஜமாக
அன்றாடப் பேச்சில் சொல்லிவருகிறார்கள்.பலபேருக்கு
பிரெஸ்ட் என்பதற்கு தமிழ் வார்த்தைகள்
உண்டா என்றே தெரியாது



தமிழ் மொழி வளரவேண்டுமானால்
தமிழ் எழுத்தாளர்கள், வலைப் பதிவர்கள்,வலைப்பதிவு வாசிகள்
நாசூக்கை மறந்துவிட்டு சரியான
தமிழ் வார்த்தைகள் பிரயோகிக்கக்கேட்டுக்கொள்கிறேன்


ஆனால் தமிழ் மொழியில் எல்லா
எண்ணங்களையும் வெளிப்படுத்த முடியாது. குறிப்பாக டெக்னிகல்
எக்ஸ்பிரெஷன்

இப்ப பாருங்க நான் மருத்துவதான்
எனக்கு spinal anesthesia ,epidural anesthesia ஆகியவற்றை எப்படி
தமிழில் எழுதுவது என்பது தெரியவில்லை

ஈயடிச்சான் காப்பி

முது நரம்புத்தண்டு மயக்க மருந்து
என்பது சரியான பிரயோகமாகத் தென்படவில்லை

because it refers to the state of
becoming insensitive

There is the problem of most of the Indian languages not having the richness of vocabulary for the user to be able to express what he/she wants to say or write

Indy Ram

மங்கை சொன்னது…

பாரி..

நல்ல பதிவு...

இந்த விஷயத்தை பொறுத்த மட்டில் எனக்கு என் மேலேயே கொஞ்சம் சந்தேகம்...ஏன்னா..எனக்கு அந்த மாதிரி எந்த வித ஆசையோ, எக்ஸ்ட்ரா அட்டென்ஷன் சீக்கிங் பிஹேவியரோ இருந்ததில்லை.. அந்த சமயத்தில் ஆஸ்துமா பிரச்சனை உச்சத்தில் இருந்தது...அதனால் வீட்டில் இருப்பவர்களே கொஞ்சம் அதிகப்படியான அக்கறை எடுத்துக் கொண்டார்கள்..மற்றபடி எனக்கு பெரிதாக ஒரு பயமோ, செல்லம் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணமோ இருந்ததில்லை....சில நேரங்களில் என்ன நாம் இப்படி இருக்கிறோம் என்று நினைத்ததுண்டு..:-))) நண்பிகள் சிலர் கேட்டதும் உண்டு...
இந்த சமயத்தில் தான் சிலதை சாதித்துக் கொள்ள முடியும் என்ற எண்ணம் சில பெண்களுக்கு
ஹ்ம்ம்...

கிராமத்தில் இருக்கும் பெண்கள் பலர் இன்றும் கடைசி நாள் வரை வேலை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்..

இந்த முதுகு தண்டு ஊசி தான் நானும் போட்டுகொண்டேன்..எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை...

சரி சரி.. TBCD ஏன் இவ்வ்வ்வ்ளோ உணர்ச்சிவசப்படறார்.. சின்ன பசங்கள பயமுறுத்தாதீங்க சாமி.:-)))

Unknown சொன்னது…

பாரி, அது அங்கே (சிங்கப்பூரில்தானே இருக்கிறீர்கள்?) ரொம்ப சாதாரண விஷயம்தான். அமெரிக்காவிலும் இது சகஜம்தான். இப்படி காலையில் வேலைக்கு வந்து விட்டு, மதியம் குழந்தை பெற்று, ஒரு வாரத்தில் குழந்தையை child care-ல் விட்டு விட்டு வேலைக்கு செல்லும் பெண்கள் ஏராளம். இதற்குக் காரணம், அவர்கள் வாழும் சூழல்தான் என்பது என் எண்ணம்.

இந்த மாதிரி நாடுகளில், இருவர் உழைத்தால்தான் குடும்பத்தை ஓட்ட முடியும். தாய்ப் பாசம் எல்லாம் 'அன்னையர் தினம்' அன்று மட்டும்தான். மாமியார் பாசம் பற்றி சொல்லவேண்டியதில்லை. கண்டிப்பாக மாமியாரை C section செய்யும் இடத்துக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது இங்கு உள்ள பெண்களின் முதல் விருப்பம்.

privacy என்ற பெயரில் இங்கு எல்லோருமே தனித் தீவுகளாகத் தான் வாழ்கிறார்கள்.

இவர்களுடன் நமது பெண்களை ஒப்பிடக் கூடாது என்பது என் தாழ்மையான கருத்து!

அதே சமயம், நமது பெண்களுக்கு தாய்மார்கள் ரொம்பவும் மகப்பேறு காலத்தில் செல்லம் கொடுக்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

பிறைநதிபுரத்தான் சொன்னது…

பென்களுக்கு செல்லம் கொடுத்து - தாய்க்குலங்களால் நமது சகோதரிகள் கெடுக்கப்பட்டுவிட்டதாக கூறும் சகோதரர்களே!

தயவு செய்து நம் வீட்டில் தாய்மார்களிடம் கொஞ்சம் கேட்டுப்பாருங்கள் - 'கரு சுமப்பது' எவ்வளவு சிரமமானது.

2020 ல் வல்லரசாக போவதாக மார்தட்டி - கணவு கண்டுகொண்டிருக்கும் நமது நாட்டில்தான், ஆண்டுக்கு சராசரியாக 1,36,000 பெண்கள் மகப்பேறு தொடர்பான காரணக்களால் இறக்கிறார்கள். வெட்கக்கேடு.

இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் மகப்பேறு தொடர்பான மரணங்களின் எண்ணிக்கை - வளர்ந்த நாடுகளை விட 50 மடங்கு அதிகம். உண்மை!

இந்திய அரசால் 2004-ல் நடத்தப்பட்ட Reproductive and Child Health Survey II சேகரித்த புள்ளிவிவரப்படி இந்தியாவில் தாய்மையடையும் 100,000 மகளிரில் 301 மகளிர் மரணம் அடைகிறார்களாம்.

Millenium Development Goals -களில் ஒன்றான 2007 க்குள் - மகப்பேறு தொடர்பான இறப்புக்களை 100,000 தாய்மார்களுக்கு - 200 இறப்பாக குறைக்கவேண்டும் என்ற இலக்கை அடைவதில் நமது இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது.

தாய்மையடைந்த சிங்கபூர் பென்களுக்கு கிடைக்கும் மருத்துவ - சுகாதார- ஊட்டச்சத்து எதுவும் கிடைக்காத நமது சகோதரிகளுக்கு - கர்ப்பம்டைந்ததும், பிறந்த வீடு மூலம் கிடைக்கும் 'தற்காலிக' செல்லமும்-கொஞ்சலும்-கவனிப்பும் - ஓய்வும் கிடைத்துவிட்டு போகட்டுமே!

TBCD சொன்னது…

//*மங்கை said...
TBCD ஏன் இவ்வ்வ்வ்ளோ உணர்ச்சிவசப்படறார்.. சின்ன பசங்கள பயமுறுத்தாதீங்க சாமி.:-)))*//

சரிப்பா...நான் ஒன்னும் சொல்லல...அவங்க அவங்க...அனுபவிச்சு தெரிஞ்சிகிக்கோங்க.... ;-)

கருத்து ஒன்னு தான்..நம் நாட்டுல பெண்களப் பேம்பர் பண்ணிக்கெடுக்கிறாங்க....

ஆம்பிளைங்களையும்..ஒரு சில விசயத்தில்..இப்படி பேம்பர் பண்ணிக் கெடுத்தது தான் வச்சி இருக்காங்க..ஆனா அது விவாத மேடைக்கு வருவது இல்லை...

Unknown சொன்னது…

என் தங்கமணி வாயும் வயிறுமாக இருந்தப்ப, என் பக்கத்து வீட்டில் ஒரு பாகிஸ்தானி பெண்ணும் (தங்கமணிக்கு தோஸ்த்) கர்ப்பமாக இருந்தது. என் தங்கமணிக்கு ஏழு மாதமாயிருக்கும்போது அவர்களுக்கு நிறைமாதம். ஒடிசலான தேகம். மதியம் வரை ரொட்டி சுட அடுப்படியில் நின்றார்கள். என் தங்கமணிக்கு இரட்டைக்குழந்தை (அதனால் எனக்கு பயம்) என்பதால் நானும் அடிப்படியில் சும்மா பேச்சுத் துணைக்கு.

அந்தம்மா சாயுங்காலம் மருத்துவமனைக்குப் போய் பிள்ளைப் பெற்றுக் கொண்டு, அடுத்த மதியத்துக்கு ரொட்டி சுட அடுப்படியில் ஆஜர்.

எனக்கும் என் மனைவிக்கும் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

என் தங்கமணி சொல்லுது: என்னப்பா பிள்ளை பெக்க போனாங்களா! எங்காயாவது வாங்கிட்டு வரப்போனாங்களா? ஏதோ டாய்லெட் போய்ட்டு வந்த மாதிரி அசால்ட்டா இருக்காங்களே?

அதைப்பார்த்து தைரியம் வந்து என் தங்கமணியும் இரட்டைப் பிள்ளையைப் பெற்று நான்கு நாளில் மருத்துவமனையிலிருந்து வீடு வந்து ரொம்ப தைரியமாய் என்னை அலுவலகம் அனுப்பி வைத்தது.

இதற்கெல்லாம் காரணமாக நான் நினைப்பது: பெண்களின் உடல் வாகும் மனோ தைரியமும்தான்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக ஜோ,
நம்ம பக்கம் இதுதான் முதல்தடவையின்னு நினைக்கிறேன்.
நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நந்தா நன்றி!

மருத்துவர் டெல்பின் என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஆங்கில பதிப்பின் கருத்துகளை தமிழிலில் எழுதியமைக்கு நன்றி!

தொடர்ந்து எல்லோரும் கருத்துகளை பகிர்ந்துக்கொள்வே... என்னுடைய பின்னூட்டத்தை தாமதமாக எழுதுகிறேன்.

முகவை மைந்தன் சொன்னது…

பிறைந்திபுரத்தான் நகர்மன்றச் செயலாலர் தேர்தலுக்கு ஆயத்தமாகிறார்னு நினைக்கிறேன்;-)

மத்த படி, நான் டிபிசிடி கட்சி. பெண்களுக்காக வருந்துவது அவர்களின் அடிப்படை உரிமையை மறுப்பதற்கான சாக்கு. நூறாயிரம் பெண்களுக்கு 301 பேர் மகப்பேறு காலத்தில் இறக்கிறார்கள் என்பதற்காக தற்காலிகத் தாங்கல் என்பது வெட்கக் கேடு. உண்மை சுடுகிறது.

நாம் அளவுக்கதிகமாக உணர்ச்சி வசப்பட்டு தாய், தங்கைனு உளறுவதை விட்டு விட்டு அவர்களும் பெண்கள், மனிதர்கள் என்று பார்க்க வேண்டும்.

ஆனால் பாவம், பெண்களுக்கும் தீர்வை விட தங்களைப் பார்த்துப் பிறர் கண்ணீர் விடுவது தான் பிடித்திருக்கிறது. நல்ல தங்காள் பிறந்த மண் ;-(

Related Posts with Thumbnails