இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

புதன், 1 ஆகஸ்ட், 2007

இவுக எல்லாம் எப்பதான் மாறுவார்களோ...?

நான் முன்பு வேலைபார்த்த நிறுவனத்தில் சீனர்கள்,மலேயர்கள்,பிலிப்னோஸ்,தமிழர்கள் இப்படி ஏகப்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் வேலைபார்த்தோம். பெரும்பாலும் சிங்கப்பூர் குடியுரிமை வாசிகள் வீட்டில் சமைப்பது கிடையாது, அவர்கள் உணவு அங்காடிகளுக்கு சென்று மதிய உணவு சாப்பிடுவார்கள்.
தமிழர்களும், பிலிப்னோஸ் மட்டுமே மதிய உணவு கொண்டு வருவோம். நம்ம மக்கள் கட்டி வருகிற சோற்று மூட்டை அளவை பார்த்து அவர்கள் மிரள்வார்கள்! ஆமாம் அரை கப் சாதம், சிக்கன் அல்லது வேறு ஏதாவது கறி என்று சாப்பிடும் அவர்களிடம், நம்ம மக்கள் பெரிய டப்பா நிறைய சோற்றையும் அதற்க்கு வக்கணையாக சம்பார்,கூட்டு,பொரியல்,ரசம்,தயிர் என்று ரவுண்டு கட்டி உண்பதை பார்த்து நம்ம மக்களை தனியா விட்டுடாங்க!

நாங்க எல்லாரும் ஓரு மேசையை இழுத்துப்போட்டு சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். கொஞ்சம் தூரமா நம்ம தமிழ் திருமதிகள் (இருந்ததே அஞ்சாறு கல்யாணமான கிழவிகள்) உக்கார்ந்து மதிய உணவு சாப்பிடுவார்கள். இப்படி நல்லாதான் போய்க்கிட்டிருந்தது. நாங்கபாட்டுக்கு உள்ளுர்,தமிழ்நாடு,உலகளவில் அரசியல் மற்றும் என்னென்ன தோணுதோ எல்லாம் பேசுவோம்.

இதில் ஒரு சிக்கல் வந்துவிட்டது, இந்த பிலிப்பைன்ஸ் மக்கள் ஆண்கள், பெண்கள் எல்லாம் ஒரே இடத்தில் அமர்ந்து கூடிதான் உணவு உண்ணபார்கள், நம்ம மக்கள் மட்டும் தனி,தனியாக அமர்ந்திருப்பதை பார்த்த எங்களுடைய நிறுவன அதிகாரி (அவர் சீனர்) நம்ம மக்களுக்கு ஏதோ நல்லது செய்வதாக நினைத்து... நம்ம திருமதிகளிடம் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடலாமே? ஏன் இப்படி தனியாக அமர்ந்திருக்கிறீர்கள் என்று கேட்டு வைக்க! அடுத்தநாள் எல்லா மேசைகளை ஓன்றாக்கி நம்ம மக்களும் திருமதிகளை ஐக்கியமாக்கினார்கள்.

எனக்கு ஓரே கொண்டாட்டம் (ஏதாதவது நல்ல குழம்பு,கூட்டு,பொரியல் கிடைக்குமில்லையா!) ரெண்டு நாள் நல்லாதான் எல்லாரும் ஓன்னா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க! மூனாவது நாள் வழக்கம் போல மேசைகள் தனி,தனியா இருந்தது!

நம்ம வாய்தான் சும்மாவே இருக்காது!... நம்ம திருமதிகளிடம் ஏன் எல்லாரும் பிச்சிக்கிட்டு போயிட்டிங்க? என்று கேட்டு வைக்க!
ஆளாளுக்கு நம்மல உண்டு,இல்லனுன்னு பண்ணிட்டாங்க! வேற ஓன்னுமே இல்ல நம்ம பசங்க எல்லாம் ஒரே அரசியல்,இலக்கியம் அல்லது ஊர் பிரச்சினைதான் பேசுறாங்களாம்! அவுங்கள பேசவிடுறதில்லை! அவுங்க பேசுறத கேட்டு நக்கல் பண்றாங்க! இதுதான் பிரச்சினை.

அப்படி என்னதான் இந்த பெண்கள் பேசுகிறார்கள் அதை நம்ம மக்கள் கண்டுக்கொள்ளவில்லை என்று பார்த்தால் பெரும்பாலும் உடைகள்,நகைகள் அல்லது குடும்ப கதைகள் இதையே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சமூகத்தில் சரி சமமான பங்களிப்புக்கொண்ட பெண்கள், தங்களுடைய சுய தேவைகளையும், குடும்பத்தையும் தாண்டி பேசக்கூட தயாராக இல்லை. அதில் குறைந்தபட்ச அக்கறையுமில்லை.

சிங்கப்பூர் மாதிரியான சூழலில் வாழ்க்கையை தொடங்குகிற இளம்பெண்கள், குறிப்பாக தமிழ் பெண்கள் தங்களுடைய சிந்தனையின்,செயலின் எல்லையை விரிவு படுத்தாமல் இருப்பதென்பது மிக கேவலமான போக்காவே தெரிகிறது!
பெரும்பாலும் கணவன்,மனைவி இருவரை தவிர வேறு யாருமற்ற குடும்ப அமைப்பில்... முஸ்தபாவில் என்ன புதிய நகை வந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஆர்வம். நவீன ஆடைகளை வாங்கி அணிந்து தங்களை அலங்கரிந்துக்கொள்ள காட்டும் ஆர்வம், நம்முடைய தமிழ் சமூகத்தின் நிலையை பற்றிய அறிவையோ,சிந்தனையோ பெற நினைப்பதில்லை என்பது வேதனையான நிகழ்வாக இருக்கிறது.

திரையில் மின்னுகிற நட்சத்திரங்களிடம் பெண்ணுரிமை பார்க்கிற பெண்ணுரிமை போராளிகள் தயவு செய்து உங்களின் சமகாலத்தில் இருக்கிற பெண்களின் சமூக,அரசியல் அறிவை,சிந்தனையை மேம்படுத்த முயலுங்கள்.

ஆணுக்கும், பெண்ணுக்குமான அக வாழ்வியலில் உரிமை, ஆணாதிக்கம் என்று கொடிபிடித்து குடும்பம் என்கிற அமைப்பை சிதைக்கிற போக்கை விடுத்து. உங்களுக்கான சமூக,அரசியல் விடுதலையை பற்றி சிந்தியுங்கள்.

நீங்களாக உங்களுடைய சிந்தனையின் எல்லையை விரிவுப்படுத்தாமல்! உரிமை!உரிமை! என்று வெற்றுக்கோஷமிடுவது ஏன் என்று புரியவில்லை!

12 comments:

வடுவூர் குமார் சொன்னது…

நான் இங்கு தனியாளாகத்தான் சாப்பிடுகிறேன்,அதனால் பிரச்சனை இல்லை.சில சமயம் மட்டும் வாசனையை இழுத்து,கரி(சாம்பார்,ரசம்) வாசனை சூப்பர் என்று போவார்கள்.
நம் மக்களுக்கு என்ன பெயர் தெரியுமா?
அதாங்க செல்லப்பெயர்: டிபன் பாக்ஸ்.

anony munna சொன்னது…

பாரிஅரசு,

நல்ல கருத்தை நெத்தியடியாக சொல்லி இருக்கிறீர்கள்.

வாழ்துக்கள்.

அனானி முன்னா

பெயரில்லா சொன்னது…

போண்டா பதிவர் போலிக்கு எதிரிகளை உருவாக்கினால் அதன் மூலம் போலியின் எதிர்களாக மாறியவர்கள் தனக்கு நண்பர்களாகி தன் இழிசெயலுக்கெல்லாம் பின்னால் நிற்பார்கள் என்று கணக்கை போட்டு செயல்படுத்துகிறாராம்.

இதை மிகவும் குள்ள நரி குணத்துடன் செய்வதாக மோப்பம் பிடித்தவர்கள் சொல்லுகிறார்கள்.

அதாவது தன்னுடைய நண்பர்கள், மற்றும் போண்டா பார்டியில் தன்னுடன் கலந்து கொள்பவர்களின் புகைப்படங்களையும், விவரங்களையும் தனது மெயிலில் வழி அனுப்பாமல் வேறு ஒரு மெயில் ஐடி மூலம் போலிக்கு அனுப்பி வைப்பாராம்.

போலி விவரத்தை ஆராயாமல், யார் அனுப்பினால் என்ன தனக்கு தகவல் வந்தால் போதும் என்று அந்த படத்தையும் விபரங்களையும் வெளி இட்டுவிடுகிறாராம்.

போலியின் வலைதளத்தில் புகைப்பட்டத்தை பார்த்த போண்டா பார்டியின் நண்பர்கள் குறிப்பாக பார்பன நண்பர்கள் அதன் பிறகு வேறு வழியே இல்லாமல் போண்டா பார்டியுடன் சேர்ந்து போலி வேட்டை ஆட தயார் ஆகிவிடுகிறார்களாம்.

ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து தீவு அம்மாவின் புகைப்படம் போலி கையில் போனது இப்படித்தான் என்று விசயம் அமுக தொண்டர்கள் காதில் விழுந்துவிட்டது.

போண்டா பார்டியை சந்திக்க போகிறவர்கள் தனிப்பட்ட விபரங்களை கொடுக்காதீர்கள், புகைப்படம் எடுத்துக் கொள்ளாதீர்கள்.

போண்டா பார்டியின் சூழ்ச்சி அறியாத சின்ன மாமா சல்மாவாக மாறியது இப்படித்தான்.

கோவி.கண்ணன் சொன்னது…

பாரி,

எங்கள் அலுவலகத்தில் நான் மட்டும் தான் வீட்டு சாப்பாடு.

TBCD சொன்னது…

இங்கு மலேசியாவில், தமிழர்கள் யாரும் வீட்டில் இருந்து உணவு எடுத்து வருவதில்லை... ஆனாலும் இது கொஞ்சம் அதிகம் தான், தினமும் புல் மீல்ஸ் மொக்கிக்கிட்டு இருக்கீங்க..
நான் கூட என் தோழிகளிடமும், சுற்றத்தாரிடமும் இதை பார்த்திருக்கின்றேன்.. அவர்கள் விருப்பு வெறுப்புகள் தனிப்பட்டவை... ஆனால் அவர்களும் நாம் செய்வதையே செய்ய வேன்டும் என்பது ஆனாதிக்க வெளிபாடாக்கூட இருக்கலாம்...

செல்வநாயகி சொன்னது…

இந்தப்பதிவை இன்றுதான் படித்தேன். நல்ல பதிவு.

/////சமூகத்தில் சரி சமமான பங்களிப்புக்கொண்ட பெண்கள், தங்களுடைய சுய தேவைகளையும், குடும்பத்தையும் தாண்டி பேசக்கூட தயாராக இல்லை. அதில் குறைந்தபட்ச அக்கறையுமில்லை.

சிங்கப்பூர் மாதிரியான சூழலில் வாழ்க்கையை தொடங்குகிற இளம்பெண்கள், குறிப்பாக தமிழ் பெண்கள் தங்களுடைய சிந்தனையின்,செயலின் எல்லையை விரிவு படுத்தாமல் இருப்பதென்பது மிக கேவலமான போக்காவே தெரிகிறது!
பெரும்பாலும் கணவன்,மனைவி இருவரை தவிர வேறு யாருமற்ற குடும்ப அமைப்பில்... முஸ்தபாவில் என்ன புதிய நகை வந்திருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ள எடுத்துக்கொள்ளும் ஆர்வம். நவீன ஆடைகளை வாங்கி அணிந்து தங்களை அலங்கரிந்துக்கொள்ள காட்டும் ஆர்வம், நம்முடைய தமிழ் சமூகத்தின் நிலையை பற்றிய அறிவையோ,சிந்தனையோ பெற நினைப்பதில்லை /////


உங்கள் அலுவலகத்தில் மட்டுமில்லை. பரவலாகப் பல இடங்களிலும் இதை நீங்கள் பார்க்கமுடியுமே வலைப்பதிவுகள் உட்பட:))

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் வடுவூர் குமார்!
வருகைக்கும்,கருத்திற்க்கும் நன்றி

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் முன்னா!
வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் கோவி!
தங்களுடைய ஆதரவிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் TBCD!
வருகைக்கு நன்றி
//
ஆனால் அவர்களும் நாம் செய்வதையே செய்ய வேன்டும் என்பது ஆனாதிக்க வெளிபாடாக்கூட இருக்கலாம்...
//

எல்லா நிலைகளிலும் நாம் எதிர்ப்பார்க்கவில்லை... குறைந்தபட்ச சமூக, அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ளலாமல்லவா!

பாரி.அரசு சொன்னது…

வாருங்கள் செல்வநாயகி!

வருகைக்கு நன்றி!

//உங்கள் அலுவலகத்தில் மட்டுமில்லை. பரவலாகப் பல இடங்களிலும் இதை நீங்கள் பார்க்கமுடியுமே வலைப்பதிவுகள் உட்பட:))//

உங்களை போல ஓரிருவரை தவிர மற்றெல்லோரும்... வழக்கம் போல கவிதை,காதல், கதை யோடு தங்கள் எழுத்துகளை முடித்துக்கொள்கிறார்கள்.

சமூகம், அரசியல் என்பதெல்லாம் ஆண்களுக்கானதா????

பெண்கள் பங்களிப்பற்ற எந்த சமூக மாற்றமும் நிலைப்பதில்லை என்பதை எப்பொழுதுதான் புரிந்துக்கொள்வார்களோ!
நன்றி

சுதாகரன சொன்னது…

//இருந்ததே அஞ்சாறு கல்யாணமான கிழவிகள்//

அப்படியா? நல்லா தெரியுமா? ஏன் கேக்குறேன்னா.....?

அந்த 'குல்ட்டி' நல்லாதானப்பா இருந்துச்சு...

Related Posts with Thumbnails