நான் ஏதோ நல்ல பிள்ளையா எனக்கு தெரிந்ததை அங்கங்கே மொக்கை போட்டு பதிவா எழுதிக்கிட்டிருந்தேன். திடீரென்று நம்ம TBCD தொடர்புக்கொண்டு இப்படியே எழுதிக்கிட்டிருந்தால் ஒருத்தரும் உன்னை சீண்டமாட்டார்கள். மொக்கை அல்லது கும்மி எழுதி மக்களோட ஐக்கியமாகிவிடு என்று அறிவுரை கூறியதன் பேரில்... நான் என்னுடைய இருக்கிற நான்கு முடியையும் பிய்த்தெறிந்து சிந்தித்ததில் கும்மியடிக்க யாரை இழுக்கலாம் என்று தேடினேன்.
வழக்கம்போல மோகன்தாஸ் யை இழுக்கலாம் என்று எண்ணினேன், அவர் உடனே 'இங்க பாருங்க' ஏற்கனவே நான் வரலை இந்த விளையாட்டுக்கு சொல்லிட்டேன், என்னை ஏன் வம்பிழுக்கிறீர்கள் என்று அனுப்பிய மின்னஞ்சலுக்கு பதிலே அனுப்பல :-)
சரி! எப்படியாவது மொக்கை போட்டாவது மேட்டர் தேற்றியே ஆகணும் அப்படின்னு நந்தா வை பிடித்தேன், கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேசி உங்க நந்தினி யாருங்க அப்படின்னு கேட்டா! 'நான் அவன் இல்லை' அப்படின்னுட்டார்!
பிறகு பல பேரிடம் கலந்து ஆலோசித்து கும்மி குடும்பத்தின் தலைவி கண்மணி யக்காவை கூப்பிடலாம் கூகுள் டாக்கில் என்று நினைத்தால், திடீரென்று ஒரு சந்தேகம் அக்கா பதிவு ஏழுதுற மாதிரி அமைதியா இருந்துட்டா நல்லது! அப்படியில்லாமல் வேப்பிலை எடுத்து ஆடிட்டா :-) என்ன பண்ணுறதுன்னு... உடனே அந்த எண்ணத்தை அழித்து விட்டேன்!
பதிவெல்லாம் கடைசியா தேடி ஓரு நல்ல மனிதர், எங்க மாவட்டத்துக்கு சொந்தக்காரர் அபிஅப்பா வை பிடித்தேன், மின்னஞ்சல் வழியாக கூகுள் டாக் அழைத்தவுடன் வந்தார்.
நான் "நீங்க ரொம்ப நல்லா எழுதுறீங்க, நிறைய வாசித்திருக்கிறேன்!" உங்க அளவுக்கு நம்மால வர முடியாது அப்படியின்னு ஐஸ் வைக்க...
மனிதர் உருக ஆரம்பித்தார்...
அரை மணி நேரம் அப்படியே பேசியிட்டே போயி....
எல்லா உண்மைகளையும் எடுத்துவிட ஆரம்பித்துவிட்டார்... யார், யார்? என்ன பண்றாங்க. அமீரக பதிவர்களின் வண்டவாளங்கள் என்று தண்டவாளம் ஏற்றினார்.
அப்பாடா மேட்டர் தேத்தியாச்சு என்று நினைக்கும் போது சுதாரித்துக்கொண்டார்... அரசு! நான் சொன்னதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு என்று பல்டி அடித்தார்!
எனக்கு அப்பவே பிடிப்பட்டது மனிதர் உளறிட்டார் என்று!
படுத்துவிட்டு நடு இரவில் எழுந்து ஏதாவது பின்னூட்டம் வந்திருக்கா பப்ளிஷ் பண்ணலாம் என்று பார்த்தால்...
மனிதர் ஆன் லைன்ல ஏங்க தூங்கலையா? என்றால்...
அரசு ! ரெண்டு பெக் எகஸ்ட்ரா போட்டும் தூக்கம் வரலை அப்படியின்னார்...
சரி! காலையில ஆறு மணிக்கு பார்த்தால் அப்பவும் ஆன் லைன்ல என்னங்க அப்படியின்னா...
கூகுள் டாக் ஐ விட்டு ஓடிட்டார்!
( குறிப்பு : கொஞ்சம் கற்பனை கலந்த நிகழ்வு அதனால யாராவது மனம் புண்பட்டிருந்தால், அதற்க்கு என்ன மருந்து என்று சொன்னால் ??? அதை வாங்கி சரி செய்து விடுகிறேன்)
திங்கள், 6 ஆகஸ்ட், 2007
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
5 comments:
அட மனுஷா பர்மிஷன் வாங்கிட்டு ஆப்பு வக்கிறீங்களே! இது அடுக்குமா:-))
போட்டு தாக்குங்க..நான் என்ன சொன்னேன்...நீங்க என்ன சொன்னீங்க...இப்ப என்ன எழுதியிருக்கீங்க..அப்படிங்கிறத பாத்தா...பதிவுலகில குப்பக் கொட்ட தயாராகிட்டீங்க,....அப்பறம் எப்படி இப்படி எல்லாம்ன்னு எனக்கு சொல்லி குடுங்க...
//மொக்கை அல்லது கும்மி எழுதி மக்களோட ஐக்கியமாகிவிடு என்று அறிவுரை கூறியதன் பேரில்... //
அடப்பாவிகளா,
நல்ல புள்ளைங்களையெல்லாம் இப்படித்தான் கெடுக்கிறாங்களா ?
பாரிஅரசு... பாரிஅரசு காப்பாத்த ஆண்டவனாலும் முடியதப்பா...!
நல்லா இருங்க சாமி.....!
:))
இப்பவாவது தெரிஞ்சிக்கோங்கப்பா... எனக்கு நந்தினின்னு யாரையும் தெரியாது.......
இவராவது நம்பினாரே
//நந்தா said...
இப்பவாவது தெரிஞ்சிக்கோங்கப்பா... எனக்கு நந்தினின்னு யாரையும் தெரியாது.......
இவராவது நம்பினாரே
//
பாவம் நந்தா.நான் அவன் இல்லை என்றாலே நான் அவனேதான் என்று அர்த்தம்.இதை அவர் நாசுக்காக சொல்லி இருக்கின்றார்.சரிதானே பாரி;)
நந்தினி யார் என்றே தெரியாது என்று நீங்கள் நழுவினாலும் உண்மை ஒரு நாள் வெளிப்படும் என்று உறுதியாக கூறுகின்றேன் :D
கருத்துரையிடுக