இந்த கேஜெட்டில் பிழை உள்ளது.

திங்கள், 6 ஆகஸ்ட், 2007

இவர்களையெல்லாம் உங்களுக்கு ஞாபகமிருக்கா....??

ஆசிரியர் நம்மை கைபிடித்து எழுத வைத்து... இந்த காலசுழற்சியில் அறிவும்,சிந்தனையும் பெற அடிதளம் அமைத்தவர்கள். எனக்கு பாடம் சொல்லிதந்த ஆசிரியர்களை பட்டியலிட்டிருக்கிறேன், சிலருடைய பேர் மறந்து விட்டது ஆனால் அவர்களின் முகம் மனதில் இருக்கிறது. உங்களுடைய ஆசிரியர்களையும் பட்டியல் இடுங்களேன் பின்னூட்டமாக அல்லது தனிபதிவாக...

அப்பா - என்னுடைய முதல் ஆசிரியர் என்னை செதுக்கிய உளி!

வகுப்பு

ஓன்று - ?
இரண்டு - ??
மூன்று - ???
நான்கு
வகுப்பாசிரியர் ஆங்கிலம் - ஆசிரியர் ஏகாம்பரம்

ஐந்து

வகுப்பாசிரியை ஆங்கிலம் - ஆசிரியை மல்லிகா
கணிதம் - ஆசிரியை அன்புவல்லி
தமிழ் - ஆசிரியை சந்திரா
அறிவியல் - ?
வரலாறு - ?

ஆறு

வகுப்பாசிரியை ஆங்கிலம் - ஆசிரியை அன்பு வல்லி
தமிழ் - ?
கணிதம் - ஆசிரியர் மீனாட்சிசுந்தரம்
அறிவியல் - ?
வரலாறு - ?

ஏழு

வகுப்பாசிரியை ஆங்கிலம் - ஆசிரியை சந்திரா
தமிழ் - ஆசிரியர் வேணுகோபால்
கணிதம் - ?
அறிவியல் - ?
வரலாறு - ?

எட்டு

வகுப்பாசிரியர் தமிழ் - ஆசிரியர் வேணுகோபால்
கணிதம் - ஆசிரியை நாகவல்லி
ஆங்கிலம் - ?
அறிவியல் - ?
வரலாறு - ?

ஓன்றிலிருந்து எட்டு வரை கண்டியன்தெரு நடுநிலைபள்ளி,பட்டுக்கோட்டை அதன் தலைமையாசிரியை - ஆசிரியை நாகவல்லி கண்டிப்பும், கடமை உணர்ச்சியும் மிகுந்தவர். இவருடைய உழைப்பால் இந்த பள்ளி மாணவர்கள் பல சாதனைகளை செய்தார்கள்.

ஓன்பது

வகுப்பாசிரியர் ஆங்கிலம் - ஆசிரியர் கதிரேசன்
தமிழ் - ஆசிரியர் ?
கணிதம் - ஆசிரியர் பன்னீர்செல்வம்
அறிவியல் - ஆசிரியர் சுந்தரேசன் மற்றும் ஆசிரியர் காதர் ஷெரீப்
வரலாறு - ஆசிரியர் ?

பத்து

வகுப்பாசிரியர் ஆங்கிலம் - ஆசிரியர் காலிங்கராயன்
தமிழ் - ஆசிரியர் கலியமூர்த்தி மற்றும் ஆசிரியர் நாகராஜ்
கணிதம் - ஆசிரியர் சண்முகசுந்தரம்
அறிவியல் - ஆசிரியை சந்திரா மற்றும் ஆசிரியர் ?
வரலாறு - ஆசிரியர் பக்கிரிசாமி

பதினொன்று

வகுப்பாசிரியர் கணிதம் - ஆசிரியர் விஜயகுமார்
ஆங்கிலம் - ஆசிரியர் பினையாகபாணி
தமிழ் - ஆசிரியை ? மற்றும் ஆசிரியர் தெகா
இயற்பியல் - ஆசிரியர் சந்திரமோகன்
வேதியல் - ஆசிரியர் சஞ்சீவி
உயிரியல் - தாவரவியல் ஆசிரியர் சந்திரசேகரன்
விலங்கியல் ஆசிரியர் தங்கராஜ்

பனிரெண்டு


வகுப்பாசிரியர் கணிதம் - ஆசிரியர் விஜயகுமார்
ஆங்கிலம் - ஆசிரியர் பினையாகபாணி
தமிழ் - ஆசிரியை ? மற்றும் ஆசிரியர் தெகா
இயற்பியல் - ஆசிரியர் சந்திரமோகன்
வேதியல் - ஆசிரியர் சஞ்சீவி
உயிரியல் - தாவரவியல் ஆசிரியர் சந்திரசேகரன்
விலங்கியல் ஆசிரியர் தங்கராஜ்


ஓன்பதிலிருந்து பனிரெண்டு வரை அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி - தலைமையாசிரியர் ஏ.பி.டி.தேவாசீர்வாதம், இவருடைய கண்டிப்பும் (கொஞ்சம் கோபக்காரர்), உழைப்பும் இப்பள்ளி மாணவர்களை பல வரலாற்று சாதனை படைக்க வைத்தது.

எங்களுடைய பள்ளி குழுவை பற்றி சொல்லியே ஆக வேண்டும். கிட்டதட்ட 400+ மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதினோம். சாதனையாக ஓரே வருடத்தில் எங்கள் பள்ளியை சேர்ந்த 4 மாணவர்கள் மருத்துவம், 40க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பும் தகுதி முறையில் சேர்க்கை கிடைத்தது. எங்கள் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மறுபடி இம்ப்ருவ்மெண்ட் எழுதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்கள். மாவட்டமே வியந்தது இந்த சாதனை அளவை பார்த்தது. கிட்டதட்ட 7 ஆண்டுகள் கழித்து பல மாணவர்கள் கணிதத்தில் 200/200 வாங்கினார்கள்.

நானும், எனது நண்பனும் பல்வேறு சிக்கல்களில் மாட்டி 80% மதிப்பெண் வைத்திருந்தும், எதையும் செய்யாமல் விட்டுவிட்டோம். எப்படியோ தத்தளித்து இங்கன வந்துட்டேன், என்னுடைய நண்பன் இப்பொழுது தான் ரஷ்யாவில் மருத்துவம் படிக்கிறான்.

உங்களுடைய பள்ளியையும், ஆசிரியர்களையும் பகிர்ந்துக்கொள்ளுங்களேன்.

13 comments:

நந்தா சொன்னது…

என்னங்க இது??? இப்போதான் பொற்கொடு ஆரம்பப் பள்ளிகளைப் பற்றி ஒரு பதிவு போட்டு கதி கலங்க வெச்சாங்க.

நீங்க இதை வேறு கேட்கிறீர்கள். ஆனால் ஃபீல் பண்ண வெச்சுடீங்க.

அந்த நாளும் வாராதோ??ன்னு பாடறதுதான் பாக்கி.... நீங்கள் கேட்ட விவரங்களை வைத்து ஒரு பதிவே போடலாம் போல இருக்கு.... அவ்வளவு இருக்கு நான் சொல்ல வேண்டியது.

TBCD சொன்னது…

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
எங்க இப்படி... ஆட்டோகிராப் நீங்க..பீலாகி...எங்களையும்...பீல் பன்ன வைக்கிறீங்க...
ஜனரஞ்சகமாக... எழுதுங்க.....
அப்புறம்...1 - 5 : உஷா, ரேவதி,லலிதா,வேணி,அஷா, அப்புறம்...கெட் மிஸ் : ஆன்டி மிஸ்.. அப்படித்தான் கூப்பிடுவோம்...

6 - 12 : துளசி,ராஜந்தர பிரசாத்,ஸ்டெல்லஸ் சார்லஸ்,
மிச்சம்..அப்பலிக்கா யோசிச்சு சொல்லுறேன்...

ஜீவி சொன்னது…

நண்பரே,
மிகுந்த நன்றியைச் சுமந்த நினைவுக்
குறிப்புகள்.
சிலர் படிப்பறிவித்த தங்கள் ஆசிரியர்களைப் பற்றிக் கொஞ்சமே
நினைத்துப்பார்த்தாலும், 'சிலவற்றை'
தூக்கி அடிக்க மனத்தாலும் நினைக்கும்
நினைப்பை விட்டு விடுவார்கள் என்று
நினைக்கிறேன்.

மங்கை சொன்னது…

பாரி...

பள்ளி நாட்களை நினைக்கும் போது வரும் சந்தோஷத்தைப் போல சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷ்யம் எனக்கு வேறொன்றும் இல்லை..

ஒன்று- ராஜாமணி - கணிதம்
ரெண்டு- லக்ஷ்மி- தமிழ்
மூன்று - அமிர்தம் - அறிவியல்
நான்கு - சரஸ்வதி- கணிதம்
ஐந்து - ஜோகி- கணிதம்
ஆறு - ரங்கநாதன்- கணிதம்
ஏழு - ஆள் நியாபகம் இருக்கு பேர் நினைவில் இல்லை
எட்டு - - do-
ஒன்பது - லோகசுந்தரம்- கணிதம்
பத்து - முகமது அலி- கணிதம்
+ 1 - சிவராஜ் -ஆங்கிலம்
+ 2- கோபால் தாஸ் - பொருளாதாரம்

ஒரே ஸ்கூல்..
தலைமை ஆசிரியர் - ஏகாம்பரம்

மணி மேல் நிலைப் பள்ளி - கோவை

ஆஹா..புத்துணர்ச்சி வந்துடுச்சு பாரி
நன்றி..:-))

கோவி.கண்ணன் சொன்னது…

ஒன்று : முகம் தான் நினைவு இருக்கு
இரண்டு : நேசம்மா டீச்சர்
மூன்று : முகம் தான் நினைவு இருக்கு
நான்கு : ஹரிதாஸ் சார்
ஐந்து : சுப்பரமணியம் சார்
ஆறு : இங்கெல்லாம் பாடத்துக்கு ஒருவராக வருவாங்களே, தமிழ் : பட்டை பெயர் தான் நினைவு வருது ம் "சொட்டை சார்", டீச்சருங்க முகம் ஞாபகம் இருக்கு பெயர் வரவில்லை, பிலோமினா டீச்சர், நாகராஜ் சார், ஏழாவது : ராஜகோபல் சார்...
எட்டாவது : லாரன்ஸ் சார்
ஒன்பதாவது : இராஜமானிக்கம் சார்,
பத்தாவது : அரங்க.சுப்பையா, சோம சுந்தரம்,

-இதுக்கு மேல் ஞாபகம் வரலை

பாரி.அரசு சொன்னது…

நந்தா வருகைக்கு நன்றி!
சீக்கிரம் உங்கள் நினைவுகளை பதிவா போடுங்க!

பாரி.அரசு சொன்னது…

TBCD வருகைக்கு நன்றி! ஜனரஞ்சமாக உங்க அளவுக்க வரமாட்டேங்குது... நானும் தலைகீழா நின்னு முயற்சிக்கிறேன் பார்க்கலாம்...

பாரி.அரசு சொன்னது…

ஜீவி வருகைக்கும், கருத்திற்க்கும் நன்றி!

பாரி.அரசு சொன்னது…

மங்கை வருகைக்கு நன்றி!
மகிழ்ச்சியாய் உணர்ந்தால் நிச்சயமாய் எனக்கும் மகிழ்ச்சி!

பாரி.அரசு சொன்னது…

கோவி வருகைக்கு நன்றி!
இவ்வளவுதூரம் நினைவுப்படுத்தி எழுதியமைக்கு நன்றி

தஞ்சாவூரான் சொன்னது…

பாரி அரசு, உங்கள் ஆங்கில ஆசிரியர் பினாகபாணி எனக்கு ஒருவகையில் உறவினர்!!

என்னுடைய நினைவில்...
பள்ளி: ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, பரவாக்கோட்டை
1- பிரேமா (தமிழ்), கட்டை டீச்சர் (பெயர் நியாபகம் இல்லை!)
2. சோமசுந்தரம்
3. கலியமூர்த்தி
4. கலியபெருமாள், சாமிநாதன், தமிழழகன்
5. சாமினாதன், பழனிவேல்

அரசினர் மேனிலைப் பள்ளி, பரவாக்கோட்டை
6. மெய்யழகன், பாலசுந்தரம், கோபாலன்
7. சுந்தரவடிவேலு, வைத்தியனாதன், ஜெயராமன்(அறிவியல்)
8. 'மால்டோவா' வாசுதேவன், நடராஜன்
9. திரிபுரசுந்தரி, வைத்தியனாதன (கணக்கு)், வி.ஜி
10. பாலசுந்தரம், வி.ஜி, சாந்தி (கம்ப்யூட்டர்), ஏ.என், சம்பத், மகாலிங்கம், பாலசுப்ரமணியன்
11. பன்னீர்செல்வம், ராஜேந்திரன்
12. வேங்கடேசன(தமிழ்)், ராஜேந்திரன், , தாஜுன்னிசா (கணக்கு), சாந்தி, நடராஜன் (வேதியியல்)

ஃபீல் பன்னதான் வச்சுட்டீங்க ...

ஷாராவின் எழுத்துலகம் சொன்னது…

1. Arpudhasami
2. Arpudhasami
3. jumped to 4th.. (bypass)
4. A.Ramiah (my dad)
5. A.Ramiah (my dad)
6. Unnamalai (from Karaikudi)
7. Sridharan, Meyyappan
8. Meyyappan,Sridharan,Kennedy
9. Indira,Xavier,Meyyappan,Manivannan,Manoharan
10. Indira,Xavier,Meyyappan,Manivannan,Manoharan

DEEE --
1st year -- pattaipeyar dhaan ninaivu irukku sorry
2nd year - pazhanisamy,ramiah,kannadasan,
3rd year
pazhanisamy,ramiah,kannadasan

BCA
1st year - pazhanisamy (cobol)
appuram naanga padicchadhellam..
enna... yaaravadhu sollikoduthangala enna
namma padippai nammale padikka vendiyadhudhaan..
so i started self study..aahaa

நளாயினி சொன்னது…

ஓ அது ஒரு அற்புதகாலம். நான் தான் வகுப்பு எட்டுவரை எல்லாருக்குமே செல்லப்பிள்ளை. பின்னர் கிராமத்தில் இருந்து அம்மா மடி விட்டு அப்பா தோழ்விட்டு சகோதரர்களின் அன்புச்சண்டை விட்டு தூரம் தூரமாய். அதெல்லாம் இனிவராது. மனக்கிடங்குள் மூட்டை மூட்டையாய் அழகிய முத்துப்பொதிகள். இறக்கினா மனசு கனத்திடும்.கொஞ்ச நேரமாவது தலை சாய்த்து நினைக்க வைத்து விழிகளில் நீர் வர வைத்துவிட்டீர்கள்.

Related Posts with Thumbnails