செவ்வாய், 14 ஆகஸ்ட், 2007

விடுதலை கிடைத்துவிட்டதா...?

விடுதலை கிடைத்துவிட்டதா...?

இன்றைக்கு விடுதலை கிடைத்தநாள் என்று எல்லோரும் கொண்டாடி, அப்பாடி இன்றைக்கு விடுமுறை என்று வீட்டில் தொலைகாட்சிபெட்டியில் மூழ்கி கிடக்கும் அரசு அலுவலர்களுக்கும் (மற்றநாளில் மட்டும் என்ன வேலை பார்க்கிறார்கள் என்று கேள்வியெல்லாம் கேட்க கூடாது!) , நாட்டை அடகு வைக்கும் அரசியல்வாதிகள் ஓருநாளாவது நாட்டுப்பற்றோடு இருப்பது போல நடிப்பதற்க்கும் வாய்ப்பான நாளாகதான் எனக்கு தெரிகிறது.

விடுதலை கிடைத்து 60 ஆண்டுகளில் நாம் என்ன சாதித்திருக்கிறோம்?

தனிமனித பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
நீங்களும் கொலை செய்யப்படுவீர்கள்...!

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதா?
ஓரு நாட்டின் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் மக்களின் பாதுகாப்பாக முதலில் இருக்க வேண்டாமா? இதுவரை சிங்கள, பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட மீனவர்களுக்கும், இன்னும் கொல்லப்படயிருக்கும் மீனவர்களுக்கும் இந்தியா என்கிற நாடு என்ன பாதுகாப்பை வழங்கியிருக்கிறது.

தீண்டாமை முற்றிலும் ஓழி்க்கப்பட்டுள்ளதா?
டீக்கடையில் கிழியுதுன் தேசியப் பொய்மை

கல்வி,மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளதா?
இன்னும் குழந்தை தொழிலாளர்களை நம்மால் முற்றிலும் ஓழிக்க முடியவில்லை.

நமது அரசாங்கம் சுதந்திரமாக செயல்படுகிறதா?
சமீபத்தில் BBC வானொலியில் இந்தியா ஓளிர்கிறது என்கிற நிகழ்ச்சியை நடத்தினார்கள், அப்போது மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் , இந்தியா பயன்படுத்தம் எரிப்பொருட்களின் அளவைப்பற்றி BBC வானொலிக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். இதுதான் நமது அரசாங்கத்தின் சுதந்திர நிலைமை.

ஏகாதிபத்தியங்கள் சொல்கிற இடத்தில் கையெழுத்து போடுவதும், அவர்கள் இடுகிற பிச்சைக்கு வாலாட்டும் நாயாக தான் நமது அரசாங்கங்கள் இருக்கின்றன.

இங்கே பாருங்கள் அமெரிக்காவுக்கு இந்தியா வச்ச ஆப்பு! தஞ்சாவூரான் எப்படி சொல்கிறார் நமது நிலையை என்று.

இலங்கையில் போர் நடக்கிறது, அதனால் அங்குள்ள மக்கள் அகதியாக வெளியேறுகின்றனர். ஆனால் தஞ்சை மாவட்டத்தில் என்ன நடக்கிறது, ஏன் தஞ்சை விவசாயிகள் நிலங்களை அடகு வைத்து எங்களை அகதியாக ஐரோப்பாவில் இறக்கி விடுங்கள் என்று மஞ்சள்பையில் பணத்துடன் சென்னை வீதிகளில் ஏஜெண்ட்டுகளிடம் கெஞ்சிக்கொண்டிருக்கின்றனர்.

ஒரு நாட்டில் விவசாயிகள் தங்களை அகதிகளாக அனுப்புங்கள் என்று அலைவதை எப்படி சகித்துக்கொள்ள முடிகிறது?
இதுதான் விடுதலையடைந்த நாடா?

ஆண்டுதோறும் ஆயிரகணக்கான ஓரிசா மக்கள் அகதிகளாக அண்டை மாநிலங்களின் வீதிகளில் தஞ்சம் புகின்றனர். இதுதான் இந்த நாட்டின் விடுதலையா?

ஏகாதிபத்தியங்கள் எரிகிற எச்சில் பருக்கைக்கு வாலாட்டும் நாய்க்குட்டியாக மாறி போன தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏதோ தங்களுக்கு நாட்டுப்பற்று ஏகபோகமாக இருப்பதுபோல மின்னஞ்சலும், இரவு விருந்துமாக சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழலாம்.

மக்களுக்கான அரசாங்கமும், அவர்களுக்கான தலைமையையும் அமையாத வரை விடுதலை என்பது கானல்நீரே!

இடுகைகள் தொடுப்பு நன்றி : சுகுணா திவாகர், தஞ்சாவூரான்

3 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

//ஏகாதிபத்தியங்கள் எரிகிற எச்சில் பருக்கைக்கு வாலாட்டும் நாய்க்குட்டியாக மாறி போன தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏதோ தங்களுக்கு நாட்டுப்பற்று ஏகபோகமாக இருப்பதுபோல மின்னஞ்சலும், இரவு விருந்துமாக சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழலாம்//

ஹூம்
:(

சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.

வெற்றி சொன்னது…

பாரி,
நியாயமான ஆதங்கங்கள். யதார்த்தமான பார்வை.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

நன்றி கோவி, வெற்றி!

Related Posts with Thumbnails