வியாழன், 9 ஆகஸ்ட், 2007

தமிழ்மணம் வாசிப்பில்...

தமிழ்மணம் வாசிப்பில்... எழுத அழைப்பு வந்ததும் கொஞ்சம் எனக்கு தயக்கமாக இருந்தது, நாம் என்னத்த பெருசா வாசிக்கிறோம் என்று எண்ணினேன். பிறகு ஏதோ நான் வாசித்ததை சொல்லி வைக்கலாம் என்று முடிவெடுத்து... நான் வாசித்ததில் சிலவற்றை சொல்கிறேன்.

நான் முதன்முதலாக வாசிப்பிலே பகுதி எழுதுகிறேன். அதனால் தமிழ்மணம் ஓருவாரத்தில் வந்த இடுகைகள் என்று கொடுத்த வரையறையை கொஞ்சம் மீறி இருக்கிறேன், நிர்வாகிகள் அனுமதிப்பார்கள் என்கிற நம்பிக்கையில்....

அரசியல்/சமூகம் - பெரியாரை சிறுமை படுத்தவும், அவருடைய கருத்துகளை திரிக்கவும், புரட்டுகளை அள்ளி வீசித்திரி்கிற கூட்டத்திற்க்கு பதிலடியாக திரு அவர்கள் பெரியார் ஏன் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்? இந்த பதிவை எழுதியிருந்தார். பெரியார் யாருக்காக போராடினாரோ அவர்களே சில நேரம் இந்த புரட்டுகளுக்கு அடிதளமாக அமைவது மிகவும் வேதனையான நிகழ்வு.

செல்வநாயகி உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா மனதை கனக்க செய்த பதிவு சமூகத்தில் பெண் தாழ்வானவள் என்கிற பார்வை மாறுகிறவரை இந்த கொடுமை நிற்காது என்றே தோன்றுகிறது.

சிவபாலனின் வர்ணாசிரமம் - HOT PHOTO!! பதிவு பார்பானீயத்தின் ஆளுமையையும், நம்முடைய இழிநிலையையும் பதிவாக்கியது.


தழிழ் சசி யின் வாசிங்டனில் தமிழர் சுயநிர்ணய அமைதி பேரணி இந்தபதிவும்,
சிவபாலனின் இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு GRAND SALUTE! இந்தபதிவும் ஏற்படுத்திய தாக்கத்தை விட பதிவுகளின் பின்னூட்டங்களில் தமிழக தழிழர்களின் ஈழ விடுதலை போராட்டத்தின் ஆதரவு நிலையை பற்றிய கேள்விகள், சாடல்கள் என்று போனது.

காதல் - காதலாகி நிற்கிற அருட்பெருட்கோ நம்மை காதலில் நேரமிருந்தால்... உருக வைத்தார்.
நந்தா முத்தக்கவிதை சமாதானமாய் ஒரு முத்தம் தந்து அடுத்து காதல் எனப்படுவது யாதெனின்… என்று காதலின் இலக்கணத்தை அனுபவித்து எழுதிக்கொண்டிருக்கிறார்.(இவர் எங்கேயோ இந்திய வரலாறு எழுதப்போறேன் அப்படின்னு சொன்னதா ஞாபகம்!! )

பரபரப்பான நிகழ்வுகள் - அமீரக பதிவர் சந்திப்பும் அதை தொடர்ந்து வந்த
"பூங்கா"வில் அபிஅப்பா!!
வலைப்பதிவர்கள் சந்திப்பு: பரிகசிக்கும் பார்வையில் பதிவுகளில் அபி அப்பாவின் அன்பு அடிபொடிகள் ஜெஸிலா வை உண்டு இல்லை என்று பண்ணிக்கொண்டிருந்தார்கள் இதில் அபி அப்பாவின் பொறுமை, மனித உறவுகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவம் பிடித்திருந்தது.(எங்க தஞ்சை மண்ணை சேர்ந்தவர் அதுதான் அந்த பக்குவம் :-))).
எப்போதும் கேலியும், கிண்டலுமாக எழுதுபவர்களை நாம் பெரும்பாலும் கண்டுக்கொள்வதில்லை அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டு போய் விடுகிறோம். எப்பொழுதும் அப்படியில்லாமல் திடீரென ஓருவர் கிண்டலாக எழுதும்போது... அது விளையாட்டாக இருந்தாலும் மற்றவர்களுக்கு அது மிக விபரீதமாக தெரிகிறது. இங்கேயும் ஜெஸிலா நான் விளையாட்டாக தான் எழுதினேன், மற்றவர்கள் மிகைபடுத்தி விட்டதாக சொன்னார், கடைசியாக சென்ஷி எல்லோருக்கும் அல்வா கிண்டி முடித்தார்...:-)))

நான் கதை படிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிறது... வரலாற்று கதைகள் சில மோசமான மாற்றங்களை எனக்குள் கொண்டு வந்ததால் நிறுத்திவிட்டேன். அப்படியே விட்டுவிட்டாலும் சமீபத்தில் படித்த இரண்டு வலைபதிவு கதைகள் இம்சை அரசியின் அத்தை மகனே! அத்தானே!! - III அதை தொடர்ந்து நாங்களும் முன்னாடி இது மாதிரி எழுதியிருக்கோம்ல என்ற மோகன்தாஸின் அக்கா பெண்ணே அழகே!!! இந்த கதையும் ரசித்தேன்.

சினிமா விமர்சனம் - தெகா வின் National Geography Vs Mel's Apocalypto!!!
இதுவும் இதற்க்கு முந்தைய பதிவில் அபோகலிப்டோ என் பார்வையில்: Apocalypto...! அப்படத்தின் விமர்சனமும் மிக ஆழமாக இருந்தது. ஜீராசிக் பார்க், டைடானிக் இப்படிதான் என்னுடைய ஹாலிவுட் படங்களின் எல்லை இதுவரையிருக்கிறது... அப்படியும் கொஞ்சம் எல்லைதாண்டினால் ஜாக்கிசான், ஜெட்லீ யோடு முடிந்து விடும். பதிவில் மக்கள் பிரிந்து மேய்ந்துக்கொண்டிருந்தார்கள். அதுவும் இளவஞ்சி பின்னி பெடலெடுத்திருந்தார். நான் ஒரு ஓரமாக குத்தவைச்சு ரசித்து படித்துவிட்டு ஓடி வந்துவிட்டேன்.

நகைச்சுவை - தமிழனின் நிலையை உள்வாங்கி அதை நகைச்சுவையாக குழலி எழுதியிருந்த புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது பதிவு எதிர்காலத்தில் பொய்த்துபோக நாம் போராட வேண்டும்.

உஷா வின் பிலாக்கோ போபியா இப்பதிவு வலைபதிவர்களுக்கு மனநிலையை சமநிலையில் வைக்க வேண்டிய எச்சரிக்கையாகவும் மிகவும் நேர்த்தியான படைப்பாகவும் வந்திருந்தது.

வ.வா.ச பழைய மொந்தையில் புதிய கள் என தங்கள் சட்டைகளை தாங்களே கிழித்துக்கொள்ளும் வழக்கமான நகைச்சுவை பதிவுகளை தந்திருந்தனர். நகைச்சுவையை பலகோணங்களில் வைக்க வேண்டும் நிறைவேற்றுவார்களா???

ப.பா.ச இவர்கள் எதிரணியின் வேகத்திற்க்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுகிறார்கள் வ.வா.ச மாதிரியே தங்களை சுற்றியே கருவை வைத்து நகைச்சுவை பதிவு எழுதுகிறார்கள் விரைவில் கடையை மூடிவிடலாம் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்கள்.

குழுவலைபதிவுகள்
சற்றுமுன் - பிற செய்தி நிறுவனங்களின் செய்திகளை நகல் எடுத்து ஓட்டுவது என்று வேகமற்று காணப்பட்டது. செய்தி சேகரிப்பில் புதிய உத்திகள் தேவை!!!

வலைச்சரம் - பாலபாரதி வலைச்சரம் தொடுத்திருக்கிறார். பட்டறை வேலைபளுக்கு மத்தியில் நன்றாகவே செய்திருக்கிறார்.

அறிவியல் - பொன்வண்டு வின் இந்த
ஏடிஎம் எப்படி வேலை செய்யுதுன்னு தெரியுமா?
தொடர் பதிவு மிக முக்கியமான ஓன்று வலை அமைப்பில் வங்கி சேவைகள் ( Banking Services in Network Systems) பற்றி புரிந்துக்கொள்ள உதவியது. வங்கி சேவைகள் மட்டுமல்ல போக்குவரத்து, காவல் மற்றும் நீதிதுறை, குடிமை சேவைகள் (civil services) , மருத்துவம் என்று பல மக்களுக்கு தேவையான சேவைகள் இதுமாதிரியான வலை அமைப்பில் வர வேண்டிய அவசியம் இருக்கிறது (வளர்ந்த நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது) . இந்த அறிவியலை தமிழிலில் நிறையபேர் எழுத வேண்டும். வாசிப்பாளர்கள் கண்டிப்பாக ஊக்கபடுத்த வேண்டும்.

ஈழத்து எழுத்துகளில் வெற்றி யின் 1.கிறிஸ்தவர் - 2. முஸ்லிம்கள் - 3.மலையாளிகள் - 4. இந்தியத்தமிழர் - 5. இலங்கைத் தமிழர் => கறுப்பு யூலை '83 இந்தபதிவு கொஞ்சம் பழைய நிகழ்வுகளை ஆராய்ந்தது.

தூயாவின் தமிழீழத்தை ஒரு நாடாக அங்கீகரித்த உலக வலைப்பதிவர் ஒன்றியம்
இந்தபதிவும் அதில் வெளிபட்ட மகிழ்ச்சியும் என்னை நெகிழ செய்தது. இந்த மகிழ்ச்சி தமிழீழ விடுதலையாக விரைவில் நிகழ வேண்டும் வாழ்த்துகளுடன்.

இந்த மாதம் முழுவதும் கருப்பு ஜீலை பற்றிய நிறைய பதிவுகள் வருமென்று நினைத்தேன். ஈழத்துபதிவர்கள் பல ஆண்டுகளாக இதைபற்றி எழுதுவதால் கொஞ்சம் களைப்பாக இருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஏமாற்றமாக இருந்தது.
(நான் இடுகைகளை கவனிக்காமல் இருந்திருந்தால் மன்னிக்கவும்)

நான் வாசிக்கும் சிலர்...
பெரியாரின் பேச்சுகளையும், எழுத்துகளையும் நாள்தோறும் வாசிக்க தமிழச்சி
அரசியல் மற்றும் சமூக அவலங்களை அக்குவேறு ஆணிவேராக பிரித்து மேய்கிற அசுரன்
புரியுதோ இல்லையோ கண்டிப்பா வாசித்து விடுகிற சுகுணாதிவாகர்
(இவரிடம் எனக்கு ஒரு வேண்டுகோள் வாசிப்பவரின் வாசப்பின் தரம் நல்ல எழுத்துகளால் உயரும்.. ஆனால் வாசிப்பவருக்கு போய் சேராத எழுத்துகளால் எப்படி மாற்றம் வரும் என்று தெரியவில்லை!!)
விடுதலை போராளிகளை பற்றிய வரலாறு மற்றும் ஈழ விடுதலையின் நிகழ்வுகளை அறிய வன்னியன்

நான் வலைபதிவுகளில் வாசித்தபோது என்னை நிறுத்தி பழைய பதிவுகளையும் வாசிக்க வைத்த ஆசிப் அண்ணாச்சியின் பெங்களூரு போன கதை 1 பயணக்கட்டுரை கலகலப்பாக இருந்தது.
எழுத்துகளால் மட்டும் எனக்கு அறிமுகமான அண்ணாச்சியின் வாழ்க்கை துணை இழப்பு என்னை வாரத்தின் இறுதியில் அதிர்ச்சியை தந்து ஆடிப்போக செய்தது.


வாசிக்கிறேன்... ஆனால் இந்த எழுத்துக்களும், வாசிப்பும் எனக்கு என்ன மாற்றத்தை தந்தது என்பதை சிந்திக்கும்போது புதிய நட்புகள்... கருத்துபறிமாற்றங்கள் என்று போனாலும்... தமிழினத்தின் பெரும்பான்மை மக்களின் சிந்தனையும், செயலையும் தீர்மானிக்கிற சக்திகளாக சினிமா நட்சத்திரங்களும், சினிமாவும் இருக்கிற சூழலில் நானும் உங்களோடு சேர்ந்து என்னை மீண்டும் சொறிந்துக்கொள்கிறேன்... குருதி வடியும்வரை...

நன்றி!
உங்களன்பு
பட்டுக்கோட்டை பாரி.அரசு

14 comments:

TBCD சொன்னது…

கலக்கல் தொகுப்பு.....நான் இதில் உள்ளதில் 50% தான் படித்திருப்பேன்...மீதமுள்ள 50% படிக்க..பாரி அரசு நீங்க தான் காரனம்..நல்லதோ பொல்லதோ..நீங்க தான்...அதுக்கு பொறுப்பு... :)))))

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக TBCD

படிங்க நிச்சயமாய் நல்ல தொகுப்பாக இருக்கும்.

நன்றி

ramachandranusha(உஷா) சொன்னது…

நன்றி பாரி.அரசு.

அபி அப்பா சொன்னது…

நல்ல வலைச்சரம் பாரி.அரசு, நன்றி!!

வெற்றி சொன்னது…

பாரி.அரசு,
சுட்டிகளுக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட முழுப்பதிவையும் இன்னும் வாசிக்கவில்லை. இனித்தான் மிச்சத்தை வாசிக்க வேணும்.

பெயரில்லா சொன்னது…

நல்லா கதம்ப மாலையாவே தொகுத்து இருக்கீங்க.

//(இவர் எங்கேயோ இந்திய வரலாறு எழுதப்போறேன் அப்படின்னு சொன்னதா ஞாபகம்!! )//

இதை இன்னும் மறக்கலைங்க. அதுக்காகத்தான் நிறைய்ய படிச்சுக்கிட்டிருக்கேன். தொடரா ஆரம்பிச்சதுக்கப்புறம் ரொம்ப கேப் விட்டு விட்டு வரக் கூடாதில்லையா... அதான் சில முன்னேற்பாடுகள் பண்ணிட்டிருக்கேன்.

எப்படியும் படிக்கிறதுக்கு நீங்க எல்லாம் இருக்கீங்களே அப்புறம் என்ன... :-)

ஆளவந்தான் சொன்னது…

நல்ல தொகுப்பு... இதையும் படிங்களேன்
http://amarkkalam.blogspot.com/2007/08/blog-post.html

பெயரில்லா சொன்னது…

நல்லதொரு விமர்சனம்.

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

//நல்ல வலைச்சரம் பாரி.அரசு, நன்றி!!//

வருக அபிஅப்பா!

பதிவ படிக்காமலேயே பின்னூட்டம் போடாதீங்க அப்படின்னு சொன்னா கேட்க்கிறீர்களா!

இது வலைச்சரமல்ல தமிழ்மணம்வாசிப்பில்...

நன்றி

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக உஷா!
நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக வெற்றி!
வாசியுங்கள் நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக நந்தா!
விரைவில் எழுதுங்கள்!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக அழகர்!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

வருக திகிலன்!
வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி!

Related Posts with Thumbnails