திங்கள், 27 ஆகஸ்ட், 2007

தல... தல... தட்டுக்கெட்டு போன தமிழர்கள்...!

வலைப்பதிய ஆரம்பித்து... நிறைய நட்புக்கள், தோழமைகள் இணைய உரையாடலில் இணைத்துக்கொண்டு மனதிற்க்கு பிடித்த தாய்மொழியில் உரையாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கிறது...

ஆனால் சில நண்பர்கள் பேச ஆரம்பித்தவுடன் ...

"வணக்கம் தல!"

....
"சொல்லுங்க தல"
....
"அப்புறம் தல"

....

சொல்லுங்க தலைவரே...

இப்படிதான் ஆரம்பிக்கின்றனர், சிலரிடம் ஓருமுறை சுட்டிக்காட்டினால், புரிந்துக்கொண்டு தவிர்த்துவிடுகிறார்கள்.

ஆனால் சிலர் விடாப்பிடியாக தொடர்ந்து இதை சொல்லுவதால், இங்கே எழுத வேண்டிய அவசியமாயிற்று....

இந்த உரையாடலை எவ்வாறு நாம் அடிமை மனத்திலிருந்து பெறுகிறோம் என்பதை பாருங்கள்... முன்பு நாம் உயர்சாதியினரிடம், எவ்வாறு உரையாடினோமோ... அதையே இப்போதும் தொடர்கிறோம்....

"சாமி! எப்படியிருக்கீக சாமி"
"ஆமாமஞ் சாமி"
"வணக்கம் சாமி"
"நீங்க சொன்னா சரியாயிருக்கும் சாமி"

இப்படி நாம் உயர்சாதியினரை விளித்து நம்முடைய அடிமை தனத்தை நாமே உறுதிச்செய்துக்கொண்டிருந்தோம்!

ஆர்.எஸ்.எஸ் கூடராங்களில் இந்த அடிமைத்தனத்தை மறைமுகமாக போதிப்பார்கள்...

"வாங்க ஜீ"
"சொல்லுங்க ஜீ"
"எப்படியிருங்கீங்க ஜீ"

"சாமி" போயி "ஜீ" வந்தது.... அதையும் சில மானங்கெட்ட தமிழர்கள், மறக்காமல் எல்லோரையும் "ஜீ" போட்டு அழைத்து தங்களின் அடிமைத்தனத்திற்க்கு தாங்களே வழி அமைத்துக்கொண்டார்கள்...

"தல..." பெரும்பாலும் ஓன்று அடுத்தவரை உயர்த்தவோ அல்லது ஓரு வஞ்சகத்துடனும், எச்சரிக்கையுடனும் அணுகும் போதும் உச்சரிக்கபடுகிறது...

சமூகத்தில் சமதளத்தில் நின்று உரையாடுகிற போது, எப்படி உங்களை நீங்கள் தாழ்த்திக்கொண்டு அடிமைத்தனத்திற்க்கான எண்ணத்துடன் உரையாடுகின்றீர்!

அல்லது

வஞ்சகத்துடன் ஓருவரை அணுகியிருக்கிறீர்கள் என்றால்... எப்படி இந்த வஞ்சகமனப்பான்மை வளர விடுகிறீர்கள்!

தமிழிலில் மரியாதை சொற்கள் ஏராளம்...

"ஐயா","நண்பரே","தோழரே", "சகோதரரே","அப்பா","அம்மா" .... என்று விளிக்க ஏராளமான சொற்க்கள்யிருக்க...

ஏன் அடிமைத்தனத்துடன் "தல..." என்று விளிக்கிறீர்கள்.

"தலைவரே, சொல்லுங்க"
"நீங்க சொன்னா சரி! தலைவரே"

இப்படி கூழைக்கும்பிடு போடுவதை எப்போது தான் நிறுத்தப்போகிறோம்...?

நம்மை அடிமையாக்க நினைப்பவர்கள் எப்போதுமே, இந்த மாதிரியான உரையாடல்களை ஆரம்பித்து வைப்பார்கள்.
(ஓரு வகையில் உளவியலாக உங்களை அடிமை மனப்பான்மைக்கு வளர்த்தெடுத்தல்!)

நாளடைவில்... இதில் நீங்கள் வீழ்ந்து அடிமைப்பட்டு நிற்ப்பீர்கள்...


தமிழனிடம் அடிமைத்தனமும், வஞ்சகமும் தேவையில்லை...
மானமும், அறிவும் உள்ள சமூகத்தில் தலைவன் என்று எவனும் கிடையாது!

குறிப்பு : நான் சுட்டுவது அடிமைத்தனத்தை, வஞ்சகத்தை... நட்புகள் புரிந்துக்கொள்வார்கள் என்கிற நம்பிக்கையில்

பாரி.அரசு

17 comments:

PRINCENRSAMA சொன்னது…

இதில உள்குத்து எதுவும் இருக்கா?
சும்மா கேட்டேன்...
அருமையான கருத்து...

'ஜீ' கலாச்சாரம் பெருகி வரும் இன்றைய நாட்களில் சரியான சவுக்கடி...

கருப்பு சொன்னது…

நெத்தியடி!

TBCD சொன்னது…

நன்பா,

நான் இப்படிக்கூட கூப்பிட்டதில்லை...வாங்க..போங்க..சொல்லுங்க..அப்படித்தான்..
சில சமயம் கலக்குறீங்க..என்று சொல்லுவதுண்டு...
அது என்னவோ..ஹிந்தி என்பதலே நான் "ஜி" யை உபயோகிப்பதில்லை..

உயர்வு நவிற்சிக்காக சில சமயம் நடிகர்களைக் கூறியதுண்டு...

மற்ற படி யாரையும்..உயர்த்திச் சொல்லவும் வேண்டாம்...தாழ்த்திச் சொல்லவும்..வேண்டாம்...

TBCD சொன்னது…

அப்படியே..அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ..ங்கொய்யால என்பதை சகஜமாக பயன் படுத்துவதைப் பற்றியும்..சொல்ல வேண்டும்...

கோவி.கண்ணன் சொன்னது…

பாரி,

நல்ல இடுகை,

பழகுபவர்களின் வயது பெரும்பாலும் சரியாக தெரியாததால், மரியாதைக்காக அவரவர்களுக்கு பிடித்ததைச் சொல்கிறார்கள்.

எல்லாம் காலப் போக்கில் சரியாகிடும்,

பள்ளிப்பருவத்தில் 'என்னடா மாப்ள, மச்சி' என்று கூப்பிடுவோம் அப்பறம் நெருக்கமான நண்பரென்றால் மச்சான் என்போம்.

இதில் வரையறை செய்ய முடியுமான்னு தெரியலை, 'ஐயா' போட்டால் பெருசுங்களா நினைச்சு சொல்றாங்களோன்னு நினைக்கத் தோன்றும்.

என்னைக் கேட்டால் பெயரை சொல்வது நல்லது. பெயரே கூப்பிடுவதற்குத்தானே. தனது வாரிசுகளைத் தவிர மற்றவர்களை நம் பெயரைச் சொல்லி அழைக்கச் சொல்வதில் தவறு இல்லை

TBCD சொன்னது…

காலப்போக்கிலே எல்லாமே சரியாகிவிடும்...!!!!!!
இப்படித்தான் பல விசயங்கள் சரியாகி..இப்பொழுது வேர் எங்கிருக்கு, விழுது எங்கிருக்கு என்று தெரியாதபடி வளர்ந்து இருக்கு...
வளர்ந்துட்டா...பிடுங்கி எறியுறது சிரமம்....
இப்பவும்..தமிழ் வளர்த்த மதுரையிலே..இந்த "ஜி" , "பாஸு" மொழியயைக் கேக்கலாம்..
கற்றுணர்ந்தவர்களாவது முதலில் நிறுத்த வேண்டும்...

நாடோடி இலக்கியன் சொன்னது…

மிகச் சரியாக சொல்லியிருக்கின்றீர்கள் பாரி.நல்ல பதிவுகளைத் தரும் சில நண்பர்கள் கூட தல என்று மற்றவர்களுக்கு பின்னூட்டம் இடும்போது கூறியிருக்கிறார்கள்,அவர்களிடம் எப்படி சுட்டிக் காட்டுவது என்று நினைத்திருந்தேன்,நேரம் பார்த்து உங்கள் பதிவு.

அ. இரவிசங்கர் | A. Ravishankar சொன்னது…

வழிமொழிகிறேன். தல, ஜீ, பாஸ் எல்லாமே ஒன்றுக்கு ஒன்று மொழிபெயர்ப்பாக இருக்கின்றன. எனக்கு செமையா எரிச்சல் ஊட்டும் விசயங்களில் இதுவும் ஒன்று.

மீறான் அன்வர் சொன்னது…

சரியான நெத்தியடி ஐயா ! நேற்றுவரை நானும் தல, தலைவா என்ன்றெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தவந்தான் பொதுவா வஞ்சகமில்லாமலும், தாழ்வுமனப்பான்மையில்லாமலும்தான். உணர்த்திவிட்டீர்கள் அப்புறமென்ன இனி சொல்ல மாட்டோம்ல, சொல்லவும் விடமாட்டோம்ல. நல்லாயிருங்கய்யா நன்றி

ஜெகதீசன் சொன்னது…

சரியான நெத்தியடி தல!! :)(கோவிச்சுக்காதீங்க.. இப்பத்தான் முதல் முதலா தல ன்னு சொல்லிப் பார்த்தேன்.. நல்லாவே இல்லை. இனிமேல் சொல்ல மாட்டேன்..)

பதிவுக்கு நன்றி.

அன்புடன்
ஜெகதீசன்

பெயரில்லா சொன்னது…

அருமையான பதிவு......

ஆனால் சிலர் சினிமா தலைவர்களைப்போல் நண்பர்களை அழைப்பதாக நினைத்துக்கொண்டு தல தல என்று விளிப்பது......எவ்வளவு தூரம் சினிமாவால் நாம் பாதித்திருக்கிறோம் என்பதின் எடுத்துக்காட்டு.

வாழ்த்துக்கள் நண்பரே!!

ஆனால் இந்த சமூகம் ஒருவரை முத்திரை குத்துவதில் கில்லாடி......நண்பரே, தோழரே என்று கூறினால் இவன் கம்யூனிஸ்ட் என்று கூறும் அபாயம் இருக்கிறது.....

அதனால் வயதில் மூத்தோரை தவிர அனைவரையும் பெயரிட்டு அழைத்தல் சிறப்பாகவே இருக்கும்.

Unknown சொன்னது…

நல்ல இடுகை!!

அனைவரையும் பெயர் கூறி மட்டும்தான் அழைக்க வேண்டும். அரசியல்வாதிகளும், நடிகர்களும் முதலில் அவர்களின் பட்டங்களையும், தற்பெருமைக் குறியீடுகளையும் துறந்தால்தான் இது நடக்கும்.

ஆனா, இந்த பட்டம் அவருக்கு நாதான் குடுத்தேன், அந்தப் பட்டப் பேர நாந்தான் முதல்ல சொல்லிக் கூப்பிட்டேன் அப்டினு, பெருமை அடிச்சுகிற அடிமைகள் இருக்குறவரைக்கும் இது மாறாது!

இந்த விஷயத்தில் அமெரிக்காவுக்கு என் ஆதரவு உண்டு. இங்கு எல்லோரும் எல்லோரையும் பேர் சொல்லிதான் அழைக்கின்றனர்.

சார், மேடம் ன்னு கூப்புடறதப் பத்தி என்னோட புலம்பல் இங்கே ..

http://thanjavuraan.blogspot.com/2007/07/blog-post_5474.html

maruthamooran சொன்னது…

நண்பரே,
சரியான காலத்தில் பதிவிட்டிருக்கிறீர்கள்.
சில தவறுகள் தெரியாமல் செய்யப்படுபவை, சுட்டிக்காட்டும் போது திருத்தப்படும்….

பெயரில்லா சொன்னது…

rompa peeru thamiz maNaththila thala thalannu sangakam ellaam vassikkittu suththuRaangka.
avangkaLukkaakath thaan appadinnu ippadi ezuthi irukkiingkannu waan winaikkiReena...

Unknown சொன்னது…

Vanakkam!

Ungalin Padhivu Arumai Unmai!

Neengal Yaaraiyavadhu SIR Endru Koopidugindreergala?

SIR=JEE=THALA=BOSS

Palaneram Naanum Yosithadhu Undu!
Ennada Naamumkooda Oru Mariyadhai Kalandha Madhippai Edhir Paarkindroma Endru!

Poolithananmana Vaarthaigal Endru Unarndhadhum Undu!

Neengal Yaaraiyum Dhayaikoorndhu SIR Endru Koopiduvadhai Niruthungal!

Oru Theriyadha Nabarai Peyar Theriyumvarai Vendumaanal Thalai SIR endru Koopidungal!

Sila Nabaridam Naanum Sollivandhurukirean Ippadi Solladhingappanu Avargalil Silar Mariyadhum Undu, Silar Ennai Thootriyadhum Undu, Silar Marandhu Sonnadhum Undu.

Aanaal Kaalapokkil Ellam Maaripogum Endra Nambikkaiyum Enakku Irukindradhu!

SIR, Thalaivarey endru sonna nanbargaley Avana Avan Oru Paithiyamya Pugalukku Adimai Endru Sollavum Kettu Irukindrean!

Onnum Illa Oru Resume Forward Seiyurom Oru Consultantkittaa
Consultantum Enna Seiyudhu Sari Avar Sollitaar Andha Nabarukku Seiyanumnu Solludhu, Ana Vera Oru Resume Forward Seiyaponavar Nammai Patri Consultantkitta Avar Pugalukkaga Thiramai Illadha Nabaraikooda Forward Seidhu Pugal Thedugindraar Endrum Solli Irukindraar! Appadhaney Avar Eppodhum Thalaivara Irukkamudiyum Endrum Solli Irukindraar.

Nerla Pechula Solravanga, Silaneram Mailaiyum Thalaivareynu Adichuruvaanga Manasukku Kastama Irukkum Unmaidhaan!

Ana Indha Ulagathula Oruoruthanum Oru Thalaivardhaan!

Idhula Aanpaalaramattum Sollala Penpaalarumdhaan!

Indha Ulagathula Oruoruthiyum Oru Thalaividhaan!

Myakugindra Vaarthaigal Sollumpodhu Mayangama Irunga Adhudhaan Eppodhum Nalladhu!

Nandri
Manidhan

வெற்றி சொன்னது…

நல்ல பதிவு பாரி.

இந்த சார், தல இப்பிடியான சொற்களை யாராவது புழங்கும் போது சில வேளைகளில் வெறுப்புத்தான் வரும். :-))

பெயரில்லா சொன்னது…

Nice post and this mail helped me alot in my college assignement. Say thank you you for your information.

Related Posts with Thumbnails