திங்கள், 29 டிசம்பர், 2008

வன்புணர்! கொலை செய்!! அழித்தொழி!!!

இறந்த பெண் போராளிகளின் உடல் மீதான வன்முறையை காணொளியாக கண்டப்பொழுது எழுகிற கோபம்... கட்டுபாடற்றதாக... கனன்று... கடைசியில் இதுவும் ஒரு செய்தியாக மூளைக்குள் பதிந்துவிடுகிற மோசமான வாழ்வியலே எனக்கானதாக இருக்கின்றபடியால்...

அங்கே பெண் போராளியின் இறந்த உடல் மீதான பாலியல் வன்முறையை நடத்தவும்... வெறிக்கொண்ட மிருகங்களாக நடந்துக்கொள்ளவுமான சிங்கள இராணுவத்தின் உளவியல் எத்தகையது?

இத்தேடல் 1950களில் தொடங்கி 1983ல் பெரும் வெடிப்பாக நடந்த இன படுகொலைக்கான பின்னணியில் தொக்கி நிற்கிறது!

சிங்கள பேரினவாத அரசியல் என்பது இன வெறியூட்டிய மனிதர்களின் மீதான அரசியலை முன்னெடுக்கிறது. அது சிங்கள வெறியாக மாறி... தமிழர்களை கொலை செய்! வன்புணர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைகிறது!

சிங்கள பேரினவாத அரசியல் இன்றைக்கு களத்தில் இறந்து போகிற இராணுவத்தினருக்கு பதிலாக இன்னும் வெறியூட்டிய சிங்கள காடையர்களை உற்பத்தி செய்துக்கொண்டே இருக்கும்!

இதன் இன்னொரு முகத்தை இந்திய துணைகண்டத்திலும்... பார்ப்பானிய(இந்துத்துவ) வெறியாக ஊட்டப்பட்டு குஜராத்தில் இசுலாமியர்களின் மீதும், ஒரிசாவில் கிருத்துவர்கள் மீதும் கொலை செய்! வன்புனர்!! அழித்தொழி!!! என்பதாக நீட்சியடைவதையும்... கண்டுக்கொள்ளலாம்!

இந்த பேரினவாத வெறியை அம்பலப்படுத்தி... மக்களை விழிப்படைய செய்வது ஒரு வழி...
எம்மீது வன்முறையை கைக்கொள்கிற சிங்கள குறியை அறுத்தெறிவோம் என்பது இன்னொரு வழி... (இது சிங்களத்தின் கடைசி குறியை நோக்கிய தேடலாக இருக்கும்!)

திங்கள், 10 நவம்பர், 2008

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!) - 2

தாய் மொழி வெறியா...? உணர்வா...? அறிவா...? (இந்தி எதிர்ப்பும்... சில சில்லறைகளின் ஜல்லிகளும்...!)

ஓரு சமூகம் தனக்கான உரையாடல் மொழியை எப்படி கட்டமைக்கிறது என்பதை விளக்குவதற்க்காக சிங்கப்பூர் சமூகத்தை எடுத்துக்கொள்கிறேன்.

அரசின் முக்கிய அதிகார மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. அதன் வழியாகவே தலைவர்கள் மக்களிடம் பேசுகிறார்கள். பெரும்பான்மை மக்களாகிய சீனர்கள் மாண்டரின் என்கிற சீன மொழியின் எளிமைப்படுத்தப்பட்ட பிரிவை பேசுகிறார்கள். மலாய், தமிழ் மொழிகளும் அதனதன் மக்களால் பேசப்படுகிறது.

ஆங்கிலம் அதிகார மொழியாக இருப்பதால் மக்கள் அப்படியே ஆங்கிலத்தை கரைத்துக்குடித்து ஆங்கிலேயர் போல் பேச முயற்சிக்கவில்லை. தங்களுக்கு ஏற்றார் போல் மொழியை வளர்த்தெடுக்கிறார்கள். "அங்கிள் டூ தே லா" என்பது சாதராண ஓரு கடைக்காரிடம் சிங்கப்பூர் வாசி உரையாடும் மொழி.

can என்கிற ஆங்கில வார்த்தை அதனுடைய மூல பொருளுடன் இங்கே கையாளப்படுவதில்லை. மாற்றாக இங்கே கேள்விச்சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.

இதை ஐரோப்பியர்கள் மிகத்தெளிவாக குறிப்பிடுகின்றனர் "singlish" என்று. ஓரு குறுகிய காலத்தில் உருவான சமூகம் தனக்கான உரையாடல் மொழியை தானாகவே கட்டமைக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் ன் அடித்தளம் ஆங்கிலமாகவும், இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் மொழியும். மூன்றாம் நிலையில் தமிழும், மாண்டிரினும் இருப்பதை உணர வேண்டியிருக்கிறது.

இந்த ஸிங்கிலீஷ் தான் சிங்கப்பூர் சமூகத்தின் உரையாடல் மொழியாக பரிணாமம் அடைகிறது. அரசு speak good english என்று நிகழ்வுகள் நடத்தி பார்த்தார்கள். ஓன்றும் வேலைக்காகவில்லை. சமூகத்தின் நகர்வை அதிகார மையத்தால் தடுக்க இயலாது. வேண்டுமானால் தள்ளிப்போடலாம்!

(இதனால என்ன சொல்ல வருகிறாய்! என்று நீங்கள் எதிரொலிப்பது புரிகிறது).

ஆங்கிலம் அடித்தளமாக இருப்பதால் இவர்கள் கற்றுக்கொள்கிற சொற்களின் வேர் லத்தீன், கிரேக்க மொழிகளின் அடித்தளத்தில் இருந்து வந்தது. இன்னும் கொஞ்சம் உள்ளாக சென்றால் கற்றுக்கொள்கிற ஓவ்வொரு சொல்லிலும், வழக்கு மொழிகளிலும், பழ மொழிகளிலும் ஐரோப்பியர்களின் வரலாற்று நிகழ்வுகளை, அறிவியலை, அனுபவங்களை மட்டுமே உள்வாங்குவார்கள்.

உதாரணத்திற்க்கு ஜீலை என்கிற மாதத்தின் பெயரை எடுத்துக்கொண்டால் உடனடி விளக்கமாக ஜீலியஸ் சீசர் பற்றிய வரலாறு விரியும்.

இரண்டாம் நிலை அடித்தளமாக மலாய் இருப்பதால் உள்ளூர் அறிவியலை உள்வாங்குவதற்க்கான வாய்ப்பு இரண்டாம் நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பலாம்...

இங்கே சிந்தனை என்பது ஐரோப்பியர்களிடமிருந்து தான் கடன் வாங்கப்படுகிறது. அதாவது லத்தீன், கிரேக்க மொழிகளிலிருந்து பரிணாமம் அடைந்த ஆங்கில மொழி அதன் மூல சமூகத்திற்க்கு அதிகமான பரிணாம வளர்ச்சியை கொடுக்கும். ஆனால் ஆங்கிலத்தை அடித்தளமாக கொண்டு தற்போது உருவாகும் சமூகம் இரண்டாம் நிலையில் தான் சிந்திக்க நேரிடும்.

அதாவது மறைமுகமாக ஐரோப்பிய சமூகத்தின் ஆளுமை என்பது சிங்கப்பூர் சமூகத்தின் மீது உறுதிச்செய்யப்படுகிறது.

சிங்கப்பூர் சமூகத்திற்க்கான அறிவியல் என்பது ஐரோப்பிய சமூகத்திடமிருந்து தான் பெற வேண்டிய சூழலுக்கு நகரும்.

ஏனென்றால் உரையாடல் மொழி என்பது அந்த சமூகத்தின் வரலாறு,அறிவியல், சிந்தனை, அனுபவங்களை தலைமுறைகளுக்கிடையில் கடத்தும் காரணி...

இதுவொரு கூட்டு,பொரியல் சமூகம், தனக்கென்ற சுயமான பரிணாம வளர்ச்சியை இப்பொழுது தான் தொடங்கியிருக்கிறது. ஆகையால் இதன் வளர்ச்சியின் அடித்தளம் ஆங்கிலத்தின் வழியாக ஐரோப்பியர்கள் இருப்பதில் நமக்கென்ன வந்தது :(

என்னுடைய கவலையெல்லாம் பல தலைமுறைகள் வரலாற்றையும், அறிவியலை, சிந்தனைகளையும், அனுபவங்களையும் தனக்குள் சேகரித்து வைத்திருக்கிற தமிழ் மொழியும் அதன் சமூகமும்... இரண்டாம் நிலை சமூகமாக நகர்த்தப்படுவதை பற்றியது....

தொடரும்...

வியாழன், 30 அக்டோபர், 2008

மண்ணும், மண்ணின் வளங்களும் யாருக்கு...?

கிராமத்தின் மாலைப்பொழுதில் ஊரின் முக்கியபுள்ளிகள் பஞ்சாயத்து அலுவலகத்தின் மரத்தடியில் கூடியிருக்கிறார்கள். ஆங்காங்கே மணியக்காரர் முத்து மீதான குற்றச்சாட்டு என்பதால் பரப்பரப்பு அதிகமாகவே இருக்கிறது. மூன்று தலைமுறைகளாக ஊரில் பெரியமனிதர் என்கிற தோரணையில் இருப்பவர். இப்பொழுதுக்கூட அவரின் அண்ணன் மகன் தான் பஞ்சாயத்து தலைவர்.

என்ன அப்படி அவர் குற்றம் செய்துவிட்டார் என்று இங்கே கூடியிருக்கிறார்கள்? ஊர் பொது பூவரசு மரம் 50 ஆண்டுகள் பழமையானது... நல்ல வைரம் பாய்ந்த மரம் என்று தன் மகள் வீட்டு வேலைக்கு வெட்டி பயன்படுத்தியிருக்கிறார். அவருடைய அப்பா காலத்தில் ஊரில் பொது இடத்தில் நட்டது.

பஞ்சாயத்து தலைவர் அண்ணன் மகன் தானே சொல்லிக்கலாம் என்று வெட்டி விட்டார். தன்னுடைய சிற்றப்பா தானே என்று தலைவரும் விட்டுவிட்டார். ஆனால் ஊர்மக்கள் சும்மா விடுவார்களா? கூட்டிவிட்டார்கள் கூட்டத்தை...

பஞ்சாயத்து தலைவரான தான் பஞ்சாயத்து உறுப்பினர்களை கூட்டி பேசுவதாக ராமலிங்கம் சொன்னதற்க்கு, நீ சின்ன பையன், அதோட இது ஊர் பொது சொத்து அதனால் பெரியவர்கள் கூடி பேசுவதாக முடிவு செய்து விட்டரர்கள்.

ராமலிங்கம் தன் சிற்றப்பாவுடன் கூடி ஓரு முடிவுடன் கூட்டத்திற்க்கு வந்திருந்தார்.

கூட்டம் ஆரம்பித்தது ஆளாளுக்கு ஊர் பொது சொத்தை மணியக்காரர் அனுமதியில்லாமல் வெட்டியதை கண்டிக்க ஆரம்பித்தனர்.

சில முக்கிய மணியக்காரரின் நண்பர்கள் சமாதானமாக " மூனு தலைமுறையா ஊருக்கு உழைத்த குடும்பம்... அதனால நாம அடுத்து என்ன செய்வது என்று பேசலாமே!" என்றனர்.

மாரியம்மன் கோயில் குருக்கள் "அய்யாவின் அப்பாதானே அந்த மரத்தை நட்டார்...! அவருக்கு இந்த ஊருல எவ்வளவு மரியாதை இருந்தது. மணியக்காரருக்கு இந்த மரத்தை கூட அனுபவிக்க உரிமை இல்லையா?" என்றார்.

பெரமையா : " யோவ்! குருக்கள் வெள்ளி, செவ்வாய் மணியக்காரர் தட்டுல போடுற பத்து ரூபாய்க்கு விசுவாசமா போசாதீர்... சொத்து ஊருக்கு சொந்தம்!"

பெரியவர் : "பெரமையா! ராமலிங்கம் எலக்சென்ல உன்னை தோற்க்கடித்த கடுப்பில் எதையாவது பேசாத!"
(பெரியவருக்கு தெரியாது, குருக்கள் மணியக்காரரிடம் கோயில் நிலத்தில் உள்ள பனைமரத்தை வெட்டி வீட்டு ஓடு போட கோட்டார். மணியக்காரர் அதுக்கு சரியின்னு தலையாட்டினது தனி விசயம். இப்போ குருக்கள் மனதில் தனக்கு இனி பனைசொத்து இல்லை என்பதாலேயே வலிந்து மணியக்காரருக்கு பேசினார்)

பெரியவர் 2 :" யப்பா ராமலிங்கம் நீதானே பஞ்சாயத்து தலைவர்! என்ன பண்ணலாமுன்னு சொல்லு"

ராமலிங்கம் : "சிற்றப்பா ஓன்னும் சும்மா வெட்டலையே...!"

மக்கள் அப்படியா...! என்று வாயை பிளந்தது..

(முன்பே திட்டமிட்ட படி ராமலிங்கம் லாவகமாக திசைமாற்றினார்....)

ராமலிங்கம் : "அப்பா! முழுசுமா வெட்டின பிறகு ஆசாரியை வைத்து மதிப்பு போட்டு காசு பஞ்சாயத்து போர்டுக்கு கட்டியராதா சொல்லியிருக்கிறார்!"

(ஏன் முன்னாடியே மரத்தை ஏலம் போடலை என்று சிலருக்கு கேள்வியிருந்தாலும், ஏதோ பஞ்சாயத்துக்கு காசு வந்தா சரி என்று கலைந்தார்கள். நாளைக்கோ அப்புறமோ ஆசாரியை வைத்து ஓன்றுக்கு பாதி மதிப்பிட்டு பஞ்சாயத்து போர்டுக்கு மணியக்காரர் காசு கட்டி விடுவார்கள். மக்களும் அவரு போல உண்டா என்று போயி விடுவார்கள்.)

கூட்டம் கலைந்தாலும் கணேசன் தன் நண்பர்களுடன் மரத்தடியில் உட்கார்ந்து இன்னும் பேசிக்கிட்டிருந்தரர். ரொம்ப ஆவேசமாக....

கணேசன் : 30 வருசத்துக்கு முன்னாடி இவன் அப்பன் ஊர் சொத்தை கொள்ளையடித்த போது யாரும் கேள்விக்கேட்கக்கூட திரணியற்று இருந்தார்கள். இன்றைக்கு ஏதாவது கொஞ்சமாவது கேள்வி கேட்கிறார்கள். தங்களுக்கும் அதில் உரிமையிருக்கு என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

நண்பர் 1 : அதான் முடிந்து விட்டதப்பா இன்னும் ஏன் கோபமாயிருக்கே...?

கணேசன் : நம்ம ஊரு சொத்து பஞ்சாயத்து போர்டுக்கு சொந்தம் என்று கேள்விக்கேட்க தெரிந்த மக்களுக்கு... நம் மண்ணில் கிடைக்கும் எல்லா வளமும் அரசுக்கும் அதன் மூலம் மக்களுக்கும் சொந்தம் என்பதை எப்போது உணர்வார்கள் என்பது தான் என்னுடைய கோபம்.

நண்பர் 2 : யப்பா கணேசா! நீ என்ன சொல்ல வருகிற தெளிவா சொல்லு!

கணேசன் : "மண்ணில் இருந்து எடுக்கிற எஃகு(இரும்பு தாது), பெட்ரோலியம், மைக்கா, டைட்டானியம் போன்ற இயற்கை வளமும், அதன் மூலம் கிடைக்கிற வருவாயும் நமக்கு தானே சொந்தம் ... ?"

நண்பர் 1 : அட! ஆமாமப்பா....

கணேசன் : எஃகு தாது வை டாடா, பிர்லா காரணும், மைக்கா வை காரைக்குடி செட்டியாரும், கோதாவரி பெட்ரோலியத்தை அம்பானியும், இப்போ டைட்டானியத்தை டாடா வுக்கும் கொடுத்து அவர்களை பணக்காரர்களாக ஆக்கி விட்டுட்டு நீயும், நானும் கழனியில கஞ்சிக்கு மாரடித்துக்கிட்டிருக்கோமே...!

"உனக்கும், எனக்கும், இந்த மக்களுக்கும் சேர வேண்டிய செல்வத்தை தனிமனிதர்கள் கொள்ளையடிப்பதை தட்டிக்கேட்க வேண்டாமா...!"

நண்பர் 2 : " அட போப்பா... இந்த கூட்டம் போடுறதுக்கே இங்கன அவ்வளவு பிரச்சினை... யாரு இதெல்லாம் கேட்கிறது...?"

கணேசன் : " 30 வருசத்துக்கு முன்னாடி இதே கிராம மக்கள் மணியக்காரரை கேள்விக்கேட்க வில்லை... இப்பொழுது கேள்வி கேட்கிற நிலைக்கு மாறியிருக்கிறார்கள்... மக்கள் சிந்திக்க தொடங்குவார்கள்... இந்த அதிகார மையங்களை தகர்த்து.. எறிவார்கள்..!

" இந்த மண்ணின் வளம், செல்வம் எல்லாம் மக்களுக்கு சொந்தமென்பதை உணர்ந்து தங்களின் உரிமைக்காக போராடுவார்கள்!"

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2008

புவி வெப்பமடைகிறது - எல்லோரும் ஒரு நாள் பட்டினி கிடப்போம்...!

வெப்பம் வெளிப்படுகிற எல்லா வழிவகைகளையும் கண்டறிந்த அமெரிக்க விஞ்ஞானிகள்... மனிதர்கள் உணவு உட்க்கொள்வதால் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றங்களால் மனித உடல் வெப்பத்தை வெளியேற்றுவதை கண்டறிந்துள்ளனர்.

இதனால் இந்தியா, சீனா மாதிரியான அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் உலகம் சூடாவதை தடுக்க எல்லோரும் ஒரு நாள் பட்டினி இருக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர்!

இதன் தொடர்பில் இந்தியாவில் உள்ள NGO - கள் ஒன்றிணைந்து வருகிற மாதம் முதல் தேதி பட்டினி கிடப்பது பற்றிய பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்...


மேலதிக தகவல்கள் விரைவில்....

புதன், 30 ஜூலை, 2008

நமது சமூகம் , வலைப்பதிவு சமூகம்...!

நமது சமூகத்தையும், வலைப்பதிவுலக சமூகத்தையும் பொருத்திப்பார்க்கும் எனது முயற்சி... இதில் அவரவர் பாத்திரங்களை அவரவர் கற்பனைக்கே விட்டுச்செல்கிறேன்!

முச்சந்தியில் அடித்த 50மிலி சாராயத்தின் போதையில் எவனவன் குடும்பத்தை சந்திக்கிழுக்க முடியும் என வாய்நிறைய வசவு வார்த்தைகளாக சவுண்ட் விடும்... ஏதோவொரு போதை தலைக்கேறிய முச்சந்தி முனியப்பன்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஆட்டைகடிச்சி, மாட்டைகடிச்சி கடைசியில் என் குடும்பத்தையே பேசுறான்டா என தடியெடுத்து தொடை தட்டி முனியப்பன்களை மென்னி முறிக்க புறப்படும் கிராமத்து சண்டியர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

அதிகாரத்துக்கும், ஆண்டைகளுக்கும் வாழ்த்து பா பாடுவது, கொல்லைப்புற கதவு திறப்பது என மாமா வேலைப்பார்க்கும் அதே கிராமத்து சகுனி மாமாக்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எல்லாம் அவன் செயல், விதி என்றெல்லாம் பிதற்றி தான், தனது காரியங்கள் என கண்ணாய் வாழும் முருகனடிமைகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதையாய் அவ்வப்போது கூடி சமூகத்தை புரட்டிப்போட புறப்படும் சமூக புரட்சியாளர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

முட்டாள்கள், தேடலற்றவர்கள் என சமூகத்தை காறி உமிழ்ந்து உலக தத்துவங்களை கரைத்துக்குடித்து வாழ்வின் தத்துவங்களை தேடிக்கொண்டிருக்கும் தத்துவ பித்தர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

தனது அறிவின் வீச்சின் புலம்பல்களை சாராயக்கடையில் ஆரம்பித்து... சந்து மூலையில் உருண்டுக்கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

சிற்றின்பமோ, பேரின்பமோ காமமத்தை கொண்டாடுவோம் என கிடப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எதையாவது செய்ய வேண்டும் என சிறு, சிறு கலகங்கள் செய்யவோர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

தனது வாழ்வு பாதுகாப்பாக இருக்கிறது என திருப்தியுற்றால் ஊருக்கு கருத்து சொல்லும் கந்தசாமிகள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

எவன் எக்கேடு கெட்டுப்போனால் எனக்கென்ன... இவனிடம் அதிகாரமிருந்தால் எனக்கு பயன்.... என சிலருக்கு அதிகார பீடமேற்ற நினைக்கும் சுயநல நாய்பிழைப்புகாரர்கள் அங்கேயும், இங்கேயும் உண்டு!

குஜராத்தில் இசுலாமியரின் குடிசைகளும், குடும்பங்களும் எரிக்கப்பட்டும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டப்போது கூட மோடிக்கு வாழ்த்துபா பாடுகிற மனித மிருங்கள்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்துக்கும் சிறு ஊறு எனும்பொழுது அலறிதுடிக்கும் அவலம் அங்கேயும், இங்கேயும் உண்டு!

ஈழத்து உறவுகளின் குடும்பங்களை கொலைச்செய்யப்பட்டப்பொழுதும், வல்லுறவுக்கும், வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டப்பொழுதும் விருது வாங்க நாயாய் அலையும் இழிபிறவிகள்... அதிகாரங்களுக்கு கொல்லைபுற கதவு திறந்து மாமா வேலைப்பார்ப்போர் அங்கேயும், இங்கேயும் உண்டு!

இன்னும் சொல்லாமல் விடுப்பட்ட பல... அங்கேயும், இங்கேயும் உண்டு!

சமூகமும், வலைப்பதிவும் ஒன்று மற்றொன்றின் பிம்பம்!

திங்கள், 21 ஜூலை, 2008

உறக்கத்தின் கதறல்...!

எப்பொழுதாவது சொல்லலாம் என்று சேகரித்து வைத்த உண்மைகள்! என்னைப்பற்றி முழுமையாக தெரிந்தவர்கள் யாரேனும் உண்டா? சுயவிசாரணை எந்தளவுக்கு சாத்தியமானது? நான் நெகிழ்ந்து, தளர்ந்து உணர்வுகளையும்... நினைவுகளிலும், மனத்திலும் சிறைப்பட்டுக்கிடக்கும் உண்மைகளை ஊருக்கு உரைப்பது எப்பொழுது?!

குற்றங்கள், குறைகள் இவை ஏதுமற்ற மனிதனாக அடையாளப்படுத்தப்படுகிற போலி பிம்பங்களை கண்டு எனக்கு எரிச்சலாக இருக்கிறது!

செயலற்ற மனிதன் இருக்க முடியுமா! செயல் என்று ஒன்று இருக்கும்பொழுது குற்றங்களும், குறைகளும் இயல்பல்லவா?!

இப்பொழுதெல்லாம் எதன்மீதும் எனக்கு பிடிப்பு வருவதேயில்லை! ஏனென்றால் பிடிப்பு என்பதே தொடர்ச்சியின் விளைவு! தொடர்ச்சியற்ற சிந்தனையும், செயலும் கொண்டவனுக்கு பிடிப்பு என்பது சாத்தியமற்றது!

எனக்கு மட்டும்தானா! இல்லை!! இல்லை!!! எல்லோருக்கும் இப்படிதான் நிகழ்கிறதா?

ஏதோவொன்று மண்டையோட்டுக்குள் குறு,குறுவென்று ஊர்ந்துக்கொண்டேயிருக்கிறது, எதிலோ தொடங்கி எந்தவிதமான இலக்குமற்ற சிந்தனைவோட்டங்கள்...

ஒவ்வொரு உறக்கத்தின் பொழுதும் நான் அனுபவிக்கிற வலி!

வியாழன், 10 ஜூலை, 2008

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் - வலைப்பதிவு வாசிப்பாளர்கள்=மிடில் கிளாஸ் மாதவன்கள்...!

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கம் எனக்கும் வருத்ததை தருகிறது... அதே நேரத்தில்...

ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கத்திற்கு இன்னும் தமிழ்மணம் விளக்கம் தராத நிலையில்... அறிவுஜீவி வளர்மதி அவர்கள்... பொதுஜன வாசிப்பாளர்களை மிடில்கிளாஸ் மாதவன் என்று விமர்சித்திருக்கிறார்... :(

முதலில் வாசிப்பாளன் முட்டாளாக கூட இருக்கட்டும்... குறைந்தபட்சம் அவனை நோக்கி இயங்க கற்றுக்கொள்ளுங்கள்...!

உனக்கு தெரியாது நீ! முட்டாள் என்பதும் ஒரு வகையில் பார்ப்பானியம்...


தமிழ்மணம் வெறும் அறிவுஜீவிகளுக்கு எழுதும் அறிவுஜீவிகளுக்கு மட்டுமான தளமல்ல... அது மிடில்கிளாஸ் மாதவன்களை வாசிப்பாளர்களாக உள்ளடக்கியதே... :)

நன்றி

செவ்வாய், 1 ஜூலை, 2008

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்! - ஒரு வரலாற்று தவறா?

இந்த விடயம் தொடர்பான வரலாற்று தொடர்ச்சி மற்றும் இதன் பின்னணி பகிர்ந்துக்கொள்ள இயலுமா?

இதன் மூலம் அடைய நினைக்கும் இலக்கு என்ன?

சிந்தனையாளர்களும், சமூக அக்கறையுள்ளவர்களும் இதை எப்படி நோக்குகிறார்கள்?

இன்னும் ஏகப்பட்ட கேள்விகள் இருக்கு...

உங்களுடைய கருத்துகளை வரவேற்கிறேன்...

வெள்ளி, 27 ஜூன், 2008

தசாவதாரம் - தமிழரசி - எரியிற நெருப்பில் கொஞ்சம் எண்ணெய்....!

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.

விரைவில்....

புதன், 25 ஜூன், 2008

பார்ப்பானியம் என்றால் என்ன?

உணவு, உடை, உறைவிடம், பிறப்பு, இறப்பு, பண்பு, குணம், தொழில், பொருளாதாரம், பழக்கவழக்கங்கள், வாழ்க்கைமுறை, பண்பாடு, கல்வி, அறிவு, சிந்தனை, பாராம்பரியம், பரம்பரை, குலம், இனம், மொழி, மதம், நிறம்... இன்னபிற இப்படி எந்தவொரு காரணிக்கொண்டும் ஒரு மனிதனை உயர்ந்தவன் என்றும் இன்னொருவனை தாழ்ந்தவன்(இழிந்தவன்) என்றும் சித்தரிப்பது, பேசுவது, எழுதுவது, நடைமுறையில் கடைபிடிப்பது, பிரச்சாரம் செய்வது, கலையின் ஊடாக பதிவு செய்வது, இன்னபிற செயல்களின் வழியாக சமூகத்தில் ஏற்ற, தாழ்வுகளை உண்டு பண்ணுவதும் அதன் மூலம் சமூக உளவியலை சிதைத்து மனிதர்களிடையே உயர்ந்தோர், தாழ்ந்தோர்(இழிந்தோர்) என்கிற பாகுபாட்டை உண்டாக்குவதுமான செயலே பார்ப்பானியம்!

எ.கா:

1. சைவ உணவை உண்ணுபவர்கள் உயர்ந்த மனிதர்கள், அசைவ உணவை உண்ணுபவர்கள் தாழ்ந்தவர்கள்(இழிந்தவர்கள்) என்று கூறுவது.

2. கற்பூரத்தை கொளுத்தி, தீயில் நெய்யை ஊற்றி வழிபாடு செய்கிற செயலை உயர்ந்ததென்றும், அதை செய்பவரை உயர்ந்தோர் என்பதும்... கோயிலுக்கு ஆடு,கோழி வெட்டி வழிபாடு செய்வதை இழிந்த செயலாகவும் அதை செய்வோரை தாழ்ந்தவர் (இழிந்தவர்) என்பதுமான செயல்.

3. ஒரு மொழியை(சமஸ்கிருதம்)யும், அதிலுள்ள சில நூல்களை கற்றோரை மட்டுமே கடவுளுக்கு நெருக்கமான உயர்ந்தோராக கொள்வதும், இன்னொரு மொழி (தமிழ்) பேசுவோரை தாழ்ந்தவராகவும் கொள்வதுமான செயல்.

(நா.கண்ணன் என்கிற பதிவர் வடமொழியை இறைதன்மையுள்ள மொழி என்கிறார்... இறைதன்மையுள்ள மொழி ஏன் இறந்துபோனது?)

குறிப்பு :
இங்கே குறிப்பிட்ட செயல்கள் மட்டுமல்ல... எதுவொன்று ஒருவனை உயர்ந்தவனாகவும், இன்னொருவனை தாழ்ந்தவனாகவும் சித்தரிக்கிறதோ அதெல்லாம் பார்ப்பானியமே! அதை செய்வோர் பார்ப்பானியவாதிகளே!

திங்கள், 23 ஜூன், 2008

தசாவதாரம் - அமெரிக்காவின் கோவணத்தை உருவிய கமல்...!

படத்தின் பார்ப்பானீய அரசியலை ஏற்கனவே நண்பர் பைத்தியகாரன் தசாவதாரம்: பாசிச, பார்ப்பனிய மலம் நார், நாராக கிழித்துவிட்டார்... தசாவதார விமர்சனம் எழுதாவிட்டால் தமிழ் வலையுலகின் பொது நீரோட்டத்தில் விலகிவிட்டதாக வரும் பழியிலிருந்து எப்படி தப்பிப்பது :)

குறுக்காலும், நெடுக்காலும் நடந்து... குப்புறப்படுத்து, மல்லாக்க விட்டத்தை பார்த்து யோசித்து, கழிப்பறையில் கக்கா போகும்போது கன்னம் தேய்த்து... கடைசியாக இந்த பதிவை எழுதுகிறேன்....

அன்றைய சோவியத் ரஷ்யாவையும், கொரியாவையும், கியூபாவையும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளையும் மனித இனத்தின் எதிரிகளாக சித்தரித்தும்... அங்கே உயிரி ஆயுதங்கள் (Bio Weapons) தயாரிக்கப்படுவதாகவும், வேதி ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாகவும் இடையறாது தனது ஊடகங்களின் வழியாகவும், ஹாலிவுட் படங்கள் வழியாகவும், நாவல்களின் வழியாகவும், இன்னும் பல்வேறு முறையிலும் பிரச்சாரம் செய்கிற அமெரிக்கா மற்றம் அதன் ஆதரவு ஏகாதிபத்தியங்கள். அதை அப்படியே உண்டு செரிக்காமல் வாந்தி எடுக்கிற முதலாளித்துவ கைக்கூலிகள் என்கிற நிலையிலிருந்து...

அமெரிக்காவின் அயோக்கிய தனங்களை அம்பலப்படுத்துவதில் படம் முக்கிய திசையில் பயணம் செய்கிறது. எய்ட்ஸ் கிருமி உருவாக்கத்திலிருந்து, இன்றைக்கு உயிரி ஆயுத தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கும் அமெரிக்கா, அதற்கு புஷ் அரசாங்கம் நிதி ஓதுக்கீடு செய்வது வரைக்கும்... அமெரிக்க அரசாங்கத்தின் மனித இன அழிப்பு வேலைகளை... மிக நுட்பமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல்!

பலராம நாயுடு என்கிற கதாபாத்திரத்தின் வழியாக விசாரணை என்று இரண்டு முறை இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை பட்டியலிட்டு நம்முடைய பொதுப்புத்தி சார்ந்த தீவிரவாதம் என்பது இஸ்லாமியர்களின் செயல் என்பதை எள்ளி நகையாடி இருக்கிறது படம்.

தனது சொந்தங்கள் சாகும் போது கோபப்படுகிற சராசரி மனிதர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைக்குத்தி சித்தரவதை செய்கிற அரசு... மனித இனத்தை அழிக்க கூடிய உயிரி ஆயுதத்தை தயாரிக்கிற அமெரிக்காவையும், அது இந்தியாவிற்கு வந்து சேர்ந்து விட்டது என்கிற பொழுதிலும் அமெரிக்க அதிகாரிகளுக்கு மாலைப்போட்டு, இளநீர் கொடுத்து வரவேற்கிற நமது அரசு அதிகார அமைப்பையும் இதைவிட சிறப்பாக எப்படி காட்சிப்படுத்த முடியும்!

புஷ்-ஐ இதைவிட மோசமான கோமாளியாக சித்தரிக்க முடியுமா?

அமெரிக்கா மனித இனத்திற்கு எதிரான ஆய்வுகளில் ஈடுப்பட்டிருக்கிறது என்கிற கதையை திரைப்படமாக எடுத்து அதை அமெரிக்காவின் 50 திரையரங்களில் வெற்றிகரமாக வெளியிட்டிருக்கிற கமலுக்கு நிச்சயமாக பாராட்டுகள் தெரிவிக்க வேண்டும்!

படம் ஆரிய கதையாடல்களின் வழியாக சொல்லப்பட்டிருக்கிறது என்கிற காரணத்திற்காக... கமலை விமர்சிக்கலாம்!

கடைசியாக நந்தாவுக்காக... அவருடைய பதிவில் கமல் கடவுள் எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடிக்கிறார்... அதனால் பார்ப்பானீயவாதி அல்ல என்று குறிப்பிட்டிருந்தார்....

நாத்திகம் என்கிற ஆயுதம் பார்ப்பானீயத்தை எதிர்க்க பெரியாரால் பயன்படுத்தப்பட்டது. அதனால் ஊரில் இருக்கிற அத்தனை நாத்திகவாதிகளும் பார்ப்பானீய எதிர்ப்பாளர்கள் அல்ல!

நிறைய நாத்திகர்கள் பார்ப்பானீயவாதியாக இன்றைக்கும் உலவிக்கொண்டிருக்கிறார்கள்! (மிகச்சிறப்பான எ.கா. பூணூல் மார்க்கிஸ்டுகள்)

நன்றி!

வெள்ளி, 20 ஜூன், 2008

இராமாணயம் - செந்தழல் ரவி - முகவை மைந்தன்

இராமாயணம் - ஒரு வெண்பா முயற்சி - அறிமுகம்

செந்தழல் ரவி said...

இராமாயணம் முதலில் தமிழனின் புராணமா ?

தமிழர்களை குரங்குகளாக சித்தரித்த ராமாயணத்தை எப்படி உயர்த்திச்சொல்ல முடிகிறது ?

அதனை வெறுத்து ஒதுக்குவதே சாலச்சிறந்தது....

முகவை மைந்தன் said...

வாங்க ரவி. இராமாயணம் தமிழரால் எழுதப் பட்ட கதை இல்லை. அவர்களுக்கு தென் பகுதி காட்டில் வாழ்ந்த குரங்குகளைத் தாண்டிச் சிந்திக்க முடியலையோ என்னவோ. ஜாம்பவான் ஒரு கரடி!

முன்பு அரசுத் துறை வண்டிகளின் ஊர்வலம் மாவட்டங்களின் அகர வரிசைப்படி நடந்தது. இராமநாதபுரம் மாவட்டம் முதலில் வந்தது. நிருபர்கள், அமைச்சர் தமிழ்குடிமகனிடம் 'உங்கள் மாவட்டம் முதலில் வரணும்னுங்கிறது தானே உங்கள் நோக்கம்?'னு கேட்டாங்க. அமைச்சர் 'எனக்கு தமிழ் முதலில் வரணும், அய்யா' என்றார். இந்த மறுமொழி உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

நான் ஆயத்தமாத் தான் இருக்கேன். வேணும்னா, இராவண காவியத்தை வலையில் பிரிச்சு வேயலாம், வாங்க.

இங்கே ரவி சொன்ன கருத்தை நீங்கள் சரியாக உள்வாங்கவில்லை என்று எண்ணுகிறேன்...

மற்றவர்களின் மீது அதிகாரம் செலுத்த முற்படுகிற ஓர் இனமோ, நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ நேரிடையாக போர் மட்டும் புரிவது கிடையாது.... தனது சமூகத்திடம் எதிரி சமூகத்தை பற்றிய தவறான கருத்துகளை உருவாக்கும், இழிவுபடுத்தலை செய்யும். அப்பதான் இந்த சமூகம் இன்னொரு சமூகத்தின் மீது கோவம் கொள்வார்கள்...

தன்னுடைய மக்களிடம் எப்படி பிரச்சாரம் செய்வது... கலை, படைப்புகள், ஊடகம் அனைத்தின் வாயிலாகவும் எதிரியை பற்றிய பிம்பத்தை கட்டமைப்பார்கள்... இந்த அரசியல் பிரச்சாரம் சில சமயங்களில் எதிரி மக்களிடமே அவர்களுடைய அரசியல் அதிகாரத்தை பற்றிய தவறான பிரச்சாரம் செய்யப்படும்!

சில எடுத்துக்காட்டுகளை பார்க்கலாம்...

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா குதிக்க வேண்டும் என்றால் அமெரிக்க மக்கள் ஆதரவு வேண்டும்... என்ன செய்வது யோசித்த அமெரிக்கா அரசாங்கம் அமெரிக்க மக்கள் பயணம் செய்த ஒரு பயணிகப்பலை மூழ்கடிக்கிறது! பல நூறு மக்கள் இறக்கிறார்கள்... அதை ஹிட்லர் செய்தார் என்று பிரச்சாரம் செய்து அமெரிக்க மக்களிடம் ஜெர்மனுக்கு எதிரான மனநிலையை உளவியல் ரீதியாக உருவாக்கினார்கள்.

ரஷ்யாவுக்கு எதிரான பனிபோரில் அமெரிக்கா ஈடுப்பட்டிருக்கும் போது ரஷ்யா வை பற்றிய தவறான பிரச்சாரம் மேற்கொள்கிறது எப்படி?

அமெரிக்க படங்கள் ரஷ்யா உலக மக்களுக்கு எதிரான செயலில் ஈடுப்பட்டிருப்பது போல படமெடுக்கப்பட்டது!

அந்த காலக்கட்ட புதினங்கள் பல ரஷ்யாவை எதிரியாக சித்தரித்து எழுதப்பட்டுள்ளன.

பின்னர் அது கொரியாவுக்கு எதிரானதாகவும், தற்பொழுது இஸ்லாமிய நாடுகளுக்கு எதிரானதாகவும் அந்த பிரச்சாரம் இருக்கிறது.

மிக எளிமையாக நம்மூர் ஊடகங்களும், சினிமாக்காரர்களும் பாகிஸ்தானில் இருப்பவன் எல்லாம் தீவிரவாதி என்று சித்தரிப்பது போன்ற பிரச்சாரம்!

இங்கே ஊடகமும், படைப்புகளும் ஒரு அரசியல் அதிகாரத்தை சார்ந்து இயங்குகின்றன! அவர்களிடம் சொன்று எப்படி சார்ந்தியங்கலாம் என்று கேள்வியெழுப்ப இயலாது!

நாம் நம்முடைய படைப்புகளை மக்களுக்காக என்ற தளத்தில் நகரலாமே!

ஆரிய இனம் 'த்ராவிட' இனத்தின் மீது ஆளுமை செலுத்த முற்பட்ட நேரத்தில் எழுதப்பட்டவைகளே இந்த புராணங்களும், ஆரிய கதைகளும்...
அவற்றில் மற்ற இனங்களை பற்றிய மதிப்பீடு உயர்வாக இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்பது மடமை!

ஆனால் அதே நேரத்தில் தமிழ் மொழியில் வந்த படைப்புகள் திருக்குறள், சிலப்பதிகாரம்... போன்றவை அரசியல் அதிகார சார்பின்மையை பேணியிருக்கின்றன.

கடைசியாக முகவை மைந்தன் உங்களுடைய வெண்பா எழுத வேண்டும் என்கிற முயற்சியை பாராட்டுகிற நேரத்தில்...
ஒர் இனத்தின் மீதான இழிவுப்படுத்தலை மையமாக கொண்ட புராணத்தை எடுத்துக்கொண்டு அதை செய்ய வேண்டாமே!

ஞாயிறு, 8 ஜூன், 2008

யார் பிச்சையெடுக்கிறார்கள்...?

கோவியின் அன்றாடம் காய்ச்சும் அர்சகர்களுக்கு சென்னை அண்ணா நகரில் 50 லட்சம் மதிப்புள்ள வீடு... !

பழைய நிகழ்வு ஒன்றை நினைவுக்கொண்டு வர வேண்டும்... ஆந்திர முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, முதல்வராக இல்லாதபொழுது சிங்கை வருகை தந்தபொழுது... முன்னாள் முதல்வர் என்கிற அடிப்படையில் சிங்கை அரசாங்கம் அவருக்கு ஒரு உயர்ரக மகிழ்வுந்து வழங்கியிருந்தார்கள் சிங்கையை சுற்றிப்பார்க்க மற்றும் அலுவல் பணிகளுக்காக... அந்தபயணம் முடிந்து கிளம்புகிற தருணத்தில் அதுவரை தனக்கு வாகன ஓட்டியாக இருந்தவருக்கு சந்திரபாபு அவர்கள் சிங்கை டாலர் நோட்டை வெகுமதிப்பாக அளித்துள்ளார்... அப்போது அந்த வாகன ஓட்டி வாங்க மறுத்து சொன்னது " நான் என்னுடைய வேலையை செய்கிறேன்... அதற்க்கு உரிய ஊதியத்தை அரசாங்கம் எனக்களிக்கிறது... சிறப்பான வாழ்வியலுக்கு என்னுடைய நாடு எனக்கு எல்லா வசதிகளையும் வழங்கியிருக்கிறது, அதனால் உங்களிடம் இருந்து எந்தவிதமான வெகுமதியும் எனக்கு தேவையில்லை!" என்று சொன்னதாக சந்திரபாபு அவர்கள் ஆந்திராவில் வந்து குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தொழிலாளியும் அல்லது உழைப்பை மூலதனமாக கொண்ட மனிதனும் தன்னுடைய உழைப்புக்கு தகுந்த ஊதியமும், அங்கீகாரமும் கிடைக்கிறபொழுது எந்தவொரு வெகுமதியையும் இரந்து பெறுவதை விரும்புவதில்லை என்பதை இந்த நிகழ்வு நமக்கு பாடமாக தருகிறது.

தமிழகத்தில் ஏழை புரோகிதர்களை தட்டேந்த வைப்பது அரசு தான் என்கிறவர்களுக்கு...

ஆனால்! முறையான அனுமதி (வொர்க் பர்மிட்) பெற்று... நல்ல தங்குமிட வசதிகள், மற்றும் சிறப்பான இலவச உணவு வசதிகளுடன் சிங்கையில் கோயில்களில் புரோகிதம் செய்கிற பார்ப்பனர்கள் ஏன் தட்டேந்தி தட்சணை என்கிற பெயரில் பிச்சை வாங்குகிறார்கள்....

வொர்க் பர்மிட்-ல் வருகிறவர்கள் அந்த வேலையை தவிர வேறு வேலை செய்யக்கூடாது என்பது சிங்கையில் சட்டம்! ஆனால் இந்த கோயில் புரோகிதர்கள் வெளியில் வீடுகளுக்கு சென்று பூஜைகள் செய்து வேறு சம்பாதிக்கிறார்கள்!

சிங்கை, மலேசியா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் வாழ்கிற இடங்களில் புரோகித பார்ப்பனர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட முடியுமா?

ஏற்கனவே மலேசிய போராட்டத்தை மலேசியா மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழர்களே...! -5 பற்றிய பதிவில் ஏன்? ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க போன்றவை மலேசிய கோயில் இடிப்புக்கு மிகப்பெரிய எதிர்ப்பை காண்பிக்கின்ற என்று சொல்லியிருந்தேன்... அங்கே வேலைப்பார்க்கிற பார்ப்பனர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது என்கிற காரணமேயன்றி மலேசிய தமிழர்களின் மீதான அக்கறையல்ல!

உழைக்காமல் கடவுளின் பெயரைச்செல்லி ஏமாற்றி பிழைக்கிற புரோகிதர்களுக்கு வக்காலத்து வாங்குவதைவிட அயோக்கியதனம் வேறெதாவது உண்டா? வக்காலத்து வாங்குபவர்களின் சாதி பாசமா?

வீட்டு நிகழ்வுகளுக்கு புரோகிதர்களை அழைக்கும்பொழுது எவ்வளவு ரேட் என்று பேசி அழைத்து வந்தால் அந்த காசுக்கு மேலே வாங்குவதில்லை புரோகிதர்கள் என்று புளுகி தள்ளுகிறார்கள்...

சாமிக்கு தட்சணை வைத்தல் என்று கடைசியாக ஒரு நிகழ்வு வைத்திருப்பார்கள்... அதில் தனியாக பணம் வைக்க வேண்டும்...

இவர்களை சொல்லி எதுவும் நடக்கபோவதில்லை...

நாடு, நாடாக கூலியாய், அடிமையாய், அகதியாய் ஓடி, ஓடி உழைத்து... கோயில் கட்டி சாமிக்கு மணியடிக்க பார்ப்பானை அழைத்து, அவனை தேரில் உட்கார வைத்து தோளில் சூத்திரனாய் தூக்கி நடக்க கூமுட்டை தமிழன் இருக்கும்வரை... இவர்களுக்கு பிழைப்பு நடக்கும்! :(

புதன், 4 ஜூன், 2008

புள்ளியல் ஒரு அரசியல் வகையினம் - (ஜமாலனுக்கு மட்டுமல்ல...)

நண்பர் ஜமாலன் எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும் - இறுதி பகுதி. எழுதிய பதிவில் எது விளங்கியதோ இல்லையோ ஒன்று எனக்கு விளங்கியது! புள்ளியல் விவரங்கள் ஒரு பொய் அது அரசியல் வயப்பட்டது என்கிறார்!

இளங்கலை படிக்கும்பொழுது நமக்கு தண்ணிக்காட்டியது இந்த புள்ளியல் பாடம் தான்... ரொம்ப படுத்திவிட்டது... என்னோட தேர்வு படையெடுப்பை தடுத்து நிறுத்த பல்கலைகழகமே ஒரு கட்டத்தில் நீ தேர்ச்சி அடைந்துவிட்டாய் என்று 40மதிப்பெண்கள் கொடுத்தனுப்பிய பாடம் இது! அதுல போயி விவகாரம நாம பேசக்கூடாதில்லையா :)

புள்ளியலில் எண்ணுதல் அடிப்படை... எண்ணுதல் தோன்றிய வரலாறு பேசணும்! முதலில் மனிதன் எண்ணுதல் என்பதை அறிந்ததே குழுவாக வாழும்பொழுது தான் என்கிறது எண்ணியல்! தன்னோட குழுவில் எத்தனைபேர் என்பதை அடையாளப்படுத்திக்கொள்ள முயற்சியே எண்களின் வளர்ச்சி...

எண்ணுதல் இல்லாவிடின் வாழ்க்கையே இல்லை அந்தளவுக்கு எண்களுடனாக தொடர்பு சமூக வாழ்க்கையின் நெருக்கம் அதிகம்!

இப்ப நண்பரோட கருத்துக்கு போவோம்... ஒட்டுமொத்தமாக புள்ளியலே அரசியல் வகையினமா? இல்லை மனித உடல்களை எண்ணுதல் அரசியல் வகையினமா? தெரியவில்லை...

ஜமாலனோட பதிவிலிருந்து நான் புரிந்துக்கொண்டது... எண்ணுதல் பணியை செய்கிறவரின் அரசியல், அதை செய்ய உத்தரவிட்ட அதிகாரத்தின் அரசியல் இதெல்லாம் தாண்டி எண்ணப்பட்ட உடலின் அரசியல் இத்தனையும் புள்ளியல் விவரத்தில் உள்ளடங்கி வருகிறது... அதை பகுப்பாய்வு செய்வனின் அரசியலும், அதை ஆதாரமாக பயன்படுத்துவரின் அரசியலும் தனிக்கதை...

இப்படியே எல்லாவற்றின் அரசியல் பின்னணி பார்க்கபோனால் இந்திய துணைக்கண்டத்தை பற்றிய ஐரோப்பிய ஆய்வுகள் அனைத்தும் பொய்யானவை என்று இன்றைக்கு அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் சொல்வது உண்மையா?

இன்றைக்கு மேற்கோள் (உசாத்துணை) நூற்களாகவும், ஆய்வு ஆதாரங்களாவும் காட்டுபடுவை மிக பெரும்பான்மையானவை ஐரோப்பியர்களின் வழி வந்தவை! அப்படியானால் இவையெல்லாம் ஐரோப்பிய அரசியல் வகையினமா?

புள்ளியல் இல்லையேல் வணிகம் என்பதே சாத்தியமற்றது என்கிறது இன்றைய கார்ப்பரேட் உலகம்! வணிக புள்ளியல் எந்த வகை அரசியல்?

அப்புறம் இந்த மனித உடல்களை எண்ணுதல் பணியை இந்தியாவில் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை உள்ளாட்சி மன்றங்கள் பிறப்பு, இறப்பு அடிப்படையிலும்..., குடிமை வழங்கல் பிரிவு குடும்ப அட்டை வழியாகவும், இந்திய புள்ளியியல் துறை மக்கள் தொகை கணக்கெடுப்பு வழியாகவும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் வழியாகவும், இந்திய குடிமை மற்றும் இமிக்ரேசன் துறை கடவுச்சீட்டு வழியாகவும்... எண்ணிக்கிட்டேயிருக்காங்க... ஆனா யாருக்கிட்டேயாவது முழுமையான தரவுகள் இருக்கா என்று யாருக்கும் தெரியாது!

அய்யகோ! ஒரே மண்டையிடியாக இருக்கிறதே!

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (மனிதர்களை கூறுக்கட்டுதல்)

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (முகமிலிக்கு மட்டுமல்ல...)
மனிதர்களை கூறுக்கட்டுதல் அல்லது வகைப்படுத்துதல் என்பது ஆரிய இனத்தின் அடிநாதமாக இருக்கிறது! அதுவே அவர்களின் தத்துவமாக இருக்கிறது! ஆரம்பத்தில் ஆரிய இனத்தின் தத்துவமாக... பின்னர் வைணவ தத்துவமாக.... விடுதலை போராட்ட காலத்திற்க்கு பிறகு இந்துத்துவ தத்துவமாக மாறி நிற்கிற மனித வகைப்படுத்துதல் தத்துவம்!

அப்படியென்ன வகைப்படுத்துதல் தத்துவம் என்கிறீர்களா? இன்றைய பிறப்பினடிப்படையிலான சாதி முறையின் அடிதளமாகயிருக்கிற நான்கு வகையான மனிதர்கள்! அதாங்க வர்ணம்! அதாங்க மனுதர்மம்! இன்னும் ஏகப்பட்ட வார்த்தைகளில் விளிக்கப்படுகிற இந்த கூறுக்கட்டுதலை எதிர்ப்பதே நமது பார்ப்பானீய எதிர்ப்பின் முக்கிய நோக்கமாக இருக்கிறது!

பார்ப்பனர்கள் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் வேதங்கள் தொடங்கி, மனு நூல்,கீதை ஈறாக... உள்ளூர் குச்சுப்புடி பார்ப்பான் எழுதும் நூல் வரை இந்த நான்கு வர்ணத்தை பற்றி பேசுகிறது!

மனு முதலாக... ஆதி சங்கரர் தொடங்கி, இராமகிருஷ்ணர், விவேகானந்தர் உட்பட... இன்றைய கொலைகார கேடி சங்கராச்சாரியார் வரையும்...
அதிகார அத்வானி, குருதி குடிக்கும் மோ(கே)டி, இணையத்தில் சில்லறை தேத்தும் மாமாக்கள் உள்ளாக கடைக்கோடி சவண்டி பார்ப்பான் வரைக்கும் இந்த நான்கு வர்ணத்தை பற்றிய விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்கள்!

பிறப்பினடிப்படையில், தொழிலின் அடிப்படையில், குணத்தின் அடிப்படையில், செயலின் அடிப்படையில் என்று இந்த கூறுக்கட்டலை எவ்வளவு தூரம் சப்பைக்கட்டு கட்ட முடியுமோ அவ்வளவு தூரம் விளக்கிக்கொண்டிருக்கிறார்கள்!

இதில் இவர்களின் கேடி துறவி விவேகானந்தர் வர்ணத்துக்கு ஒன்று என்று தனி,தனியாக நூல் வேறு எழுதியிருக்கிறார்:( இவர் தனியாக புதுவிளக்கம் கொடுக்கிறார் யோகம் என்று!

ஆரிய பூமியில் பிறந்ததாக சொல்லும் பாரதி என்ன செய்கிறார் என்றால்... வர்ணத்தை நீக்க அவர் பூணூலை கழட்டவில்லை.. மற்றவர்களுக்கு பூணூல் மாட்டுகிறார்!

ஆனால் யாரும் மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதே கிடையாது!. இதை ஏன் பார்ப்பனர்கள் செய்கிறார்கள் என்றால்... இந்த வகைப்பாட்டில் அவர்கள் மேலே இருக்கிறார்கள்... ஆகையால் அவர்களுக்கு எது சாதகமாக இருக்கிறதோ... அதையே வலிந்து செய்கிறார்கள்.. அதையே பிரச்சாரம் செய்கிறார்கள்...

நான் உயர்ந்தவன் என்று பூணூலை மாட்டிக்கொண்டு திரிகிறவர்களை சராசரி மனிதனாக பூணூலை கழற்றி எறிய சொன்னால் செய்ய தயராக இல்லை! ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சூத்திரன் என்று சொல்லி ஒடுக்கப்பட்டவன் தன்னுடைய சாதியை சொல்லி உரிமை கோருவதால்... இவர்களுக்கு எங்கோ மிளகாய் சொருகியது போல் எரிகிறது!

மனிதர்களில் நான்கு வர்ணம் என்று கூறுக்கட்டுகிற பார்ப்பானீய தத்துவத்தை தூக்கி எறிய சொன்னால்... அய்யோ! சாதி சான்றிதழ் கொடுத்து உரிமை கேட்கிறார்கள் என்று கூப்பாடு போடுகிறார்கள்!

அன்றைய சீக்கிய போராளி ! "மேல் சட்டையின் உள்ளே அணிந்த பூணூல் என்கிற ஆயுதத்துடன் இந்திய மக்களை அடக்கி ஆள நாடாளுமன்றம் வர அனுமதியிருக்கும்போது! எங்களின் மத சின்னமான குறுவாளுடன் நாடாளுமன்றம் நுழைய தடையா?" என்று முழங்கினான் அல்வா!

இந்தநாட்டில் பூணூல் அணிந்துக்கொண்டு நாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களை தாழ்ந்தவர்கள் என்று சொல்கிற வரைக்கும்... சாதி சான்றிதழ்கள் தேவைப்படும் உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள!

செவ்வாய், 3 ஜூன், 2008

யாழ் கள அறிவுக்கொழுந்துகள்...!

இவர் தான் பெரியார்! என்ற தலைப்பில் பெரியாரை பற்றிய கருத்துகளை விவாதிக்கொண்டிருந்தார்கள்... நீண்ட நாட்களாக யாழ் களத்தை செய்திகளுக்காகவும், விவாதங்களுக்காகவும் படித்து வந்தாலும்... அதில் நான் அனுப்புகிற உறுப்பினர் விண்ணப்பம் மறுக்கப்பட்டு வருகிறதாலும்... இங்கே எழுதவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளேன்!

தூயவன், நெடுக்காலபோகிறவன் போன்றவர்கள் அடிக்கிற கூத்திற்க்கு அளவேயில்லாமல் இருக்கிறது!

தூயவன் போகிற போக்கில் தமிழகத்தில் சாதிபிரிவுக்கு காரணம் பெரியார் தான் அப்படின்னு சொல்கிறார்...

லக்கிலுக் பெரியார் போராட ஆரம்பித்த புள்ளியே சாதி மறுப்பு என்பதை சுட்டியவுடன்... பெரியாருக்கு முன்பே தமிழகத்தில் சாதி இருந்ததாக அறிந்தராம்! வேடிக்கையாகயில்லை... பெரியாரை பற்றிய வாசித்து அறிந்துக்கொள்ளுங்கள் என்கிற கோரிக்கைக்கும், நான் ஏன் வாசிக்கணும் என்கிறார்... தெரியாத வரலாற்றை பற்றி தன்போக்கில் இழித்தும்,பழித்தும் எழுதுகிறார்!

அவர் தமிழகம் வந்தபொழுது பள்ளியில் சேர்க்க சாதி என்னவென்று கேட்டார்களாம்... அதற்க்கு முன்பு அவருக்கு சாதி என்றால் என்னவென்றே தெரியாதாம்!

கேக்கிறவன் கேனையனாக இருந்தால்... வாயில் அசிங்கமாக வருகிறது! சாதி தெரியாமல் தான் ஈழத்தமிழர்களின் திருமணத்தளங்கள் அனைத்திலும் ஈழத்தமிழர் என்கிற ஒரே ஒரு அடையாளத்துடன் வருகிறதா? ஜப்னா வெள்ளாளர், ஜப்னா ப்யூர் வெள்ளாளர்... இதெல்லாம் என்ன? சாதி பார்க்காமல் தான் ஈழத்தமிழர் திருமணங்கள் நடைபெறுகிறதா? எங்கே இணையத்தில் வெளியாகியுள்ள ஈழத்தமிழர் திருமண விண்ணப்பங்களில் எத்தனை சாதி இல்லாமல் வந்திருக்கிறது என்று காட்டுங்கள் பார்ப்போம் தூயவன்:(

சிங்கள, தமிழ் இன முரணை ஒழிக்க நாளையிலிருந்து யாரிடமும் நீ என்ன இனம் என்று கேட்காமல் இருந்தால் மட்டும் போதும் :) இன முரண் பிரச்சினை தீர்ந்து விடுமா?

சாதியால் ஒடுக்கப்பட்டவர்கள் அந்த சாதியை சொல்லாமல் விட்டுவிட்டால் சாதி பிரச்சினை ஒழிந்துவிடுமா? பள்ளிக்கூடத்தில் சாதிக்கேட்டதால் தமிழ்நாட்டில் சாதி இருப்பதாக அறிந்தீர்களா? அய்யகோ!

தமிழ்நாட்டில் வந்து தான் உங்கள் சாதியை நீங்கள் தெரிந்துக்கொண்டீர்களா? யார் காதில் பூ சுற்ற பார்க்கிறீர்கள்? இன முரண் தீவிரமடைவதற்க்கு முன்பு ஈழத்தில் வழிபாடு என்பது தமிழில் இருந்ததா தூயவன்?, நாளை ஈழம் என்கிற நாட்டில் வழிபாடு தமிழில் இருக்குமா? இல்லை சமஸ்கிருததில் இருக்குமா தூயவன்?

அடுத்தாக சாதி பார்ப்பதால் தமிழர் என்கிற ஒற்றுமை குலைந்து போயிவிட்டதாகவும்... எதிர்கால இலக்கற்றதாகவும் இருக்கிறதாகவும் சொல்கிறார்!

சிங்களன் அடிக்க ஆரம்பித்தபொழுது தானே தமிழன், தமிழ் தேசியம் எல்லாம் ஈழத்தில் தோன்றியது! தூப்பாக்கியை தொண்டைக்குழியில் வைத்து தமிழனா என்று கேட்கிற வரைக்கும் தமிழர் என்கிற அடையாளத்தை பற்றிய விழித்தல் எத்தனை பேருக்கு இருந்தது! இல்லை அதற்க்கு முன்பு தமிழர் தேசியம் பேசிய ஈழத்தவர்களை அடையாளம் காட்டுங்கள் பார்ப்போம்!

நம்மை அடிக்கிறவன் எந்த அடையாளத்தைக்கொண்டு அடிக்கிறான் என்பது தான் அவனை திருப்பி அடிக்க பயன்படும் ஆயுதமாகவும் இருக்கிறது!

அன்றைய சென்னை மகாணத்தில் முதல் நிலை ஒடுக்கம் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதோர் என்பதாகவும், இரண்டாம் நிலை ஒடுக்கம் அதிகாரத்திலிருப்போர், இல்லாதோராகவும். மூன்றாம் நிலை ஒடுக்கம் பொருளாதாரமற்றோர் என்பதாகவும் இருந்தது.

ஆக இங்கே பார்ப்பனரல்லாதோர் என்கிற அடையாளம் ஒடுக்கப்பயன்பட்ட ஆயுதம், அதையே கையிலெடுத்தார் பெரியார்!

பாதிக்கப்படுகிறவன் தான் எதனால் பாதிக்கப்படுகிறானோ அதை வைத்து தானே போராட முடியும்!

தமிழர், தமிழர் தேசியம் என்று பம்மாத்து பேசுகிறவர்கள்... மும்பையில் வசிக்கிற தமிழர்களை துன்புறுத்திய, துன்புறுத்துகிற பால்தாக்கரேயின் ஈழப்போராட்ட ஆதரவை ஏன் வரவேற்றனர்?

மும்பையில் இருக்கிற தமிழ் பேசுகிறவர்கள் இவர்களின் தமிழ் தேசியத்தில் அடக்கமாயில்லையா?

உலகம் முழுவதும் இருக்கிற தமிழர்களுக்கு வருகிற பிரச்சினைகளையெல்லாம் தட்டையாக தமிழர் என்கிற அடையாளத்துடன் மட்டுமே அணுக முடியுமா?

ஆயிரகணக்கான ஆண்டுகள் நடைப்பெற்ற வர்ணசிரம ஒடுக்குமுறையை எதிர்க்கும் போராட்டத்தை... தட்டையாக இனக்குழு என்கிற அடையாளத்துடன் சிதைத்துவிட முடியுமா?

உலகில் எல்லாயிடங்களிலும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையெல்லாம் தேசிய இனக்குழு போராட்டமாக பார்க்கிற தட்டையான பார்வை எவ்வளவு மோசமானது?

அன்றைய சென்னை மகாணம் அல்லது ஆங்கிலேய ஏகாதிபத்திய இந்தியாவின் நிலைமை என்னவாகயிருந்தது? மக்கள் எதனால் ஒடுக்கப்பட்டார்கள்? அவர்களின் உரிமைகள் எதனால் பறிக்கப்பட்டன? அவர்கள் எதை எதிர்த்து போராட வேண்டியிருந்தது?

வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு பெரியார் என்கிற போராளியின் வாழ்க்கை எப்படி துவங்கியது எதற்க்காக போராடினார் என்பதையாவது புரிந்துக்கொள்ளுங்கள்? இல்லையென்றால் ஈழத்தமிழ் தேசியம் அல்லது சைவ வெள்ளாள தேசியம் இப்படி எதையாவது பேசிக்கொண்டேயிருக்கலாம்...

வியாழன், 29 மே, 2008

பார்ப்பான் என்ன செய்தான்? பார்ப்பான் என்று பேச வேண்டியதன் அவசியமென்ன? (முகமிலிக்கு மட்டுமல்ல...)

பார்ப்பானீய, பனியா சொல்லாடல்களும்... சில முட்டாள்களும்...!

என்கிற பதிவிலும் அப்புறம் சுந்தர் பதிவிலும் பெங்களூரிலிருந்து ஒருவர் முகமிலியாக வந்து எல்லாயிடங்களிலும் ஒரே கருத்தை பின்னூட்டமாக இட்டு சென்றிருக்கிறார்!


முதலில் நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது... என்ன நடந்தது? ஆளுமை, அதிகாரம இதெல்லாம் யாரிடமிருந்தது? யாரிடமிருக்கிறது? யாரிடம் போய் சேரணும்? இப்படி ஏகப்பட்ட கேள்விகள் இருக்கிறது!

இந்த பார்ப்பானீயம்... அதற்கும் பார்ப்பான் என்கிற ஒரு சாதியினருக்கும் உள்ள தொடர்பை புரிந்துக்கொள்ளுதல்... மிகவும் அவசியம்! சிலவற்றை நிகழ்வுகளுடன் சொல்லும்போது தான் அதனால் ஏற்ப்பட்ட பாதிப்புகள்... எதிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதே நமக்கு விளங்கும்!

பட்டுக்கோட்டை என்கிற நகரை எடுத்துக்கொண்டு... அதிலிருந்து நிகழ்வுகளை விளக்க முயற்சிக்கிறேன். ஆங்கிலேய ஆட்சியின் இறுதிகாலமும் திராவிட இயக்கங்களின் எழுச்சியும் கிட்டதட்ட சம காலத்தில் நடந்த நிகழ்வுகள்... அந்த காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை நகரமும், அதனை சுற்றிய பகுதிகளும் எப்படியிருந்தன... யார் ஆளுமை மற்றும் அதிகாரத்திலிருந்தது என்பதை தெரிந்துக்கொள்வோம்.

வி. நாடிமுத்து பிள்ளை என்பவர் தான் ஆங்கிலேய அதிகாரத்தின் பிரதிநிதியாக பட்டுக்கோட்டையிலிருந்தார்! அப்புறம் நகரை சுற்றி சில ஜமீன்கள்! அதிகாரத்திலும், ஆங்கிலேயரிடமும் செல்வாக்கோடு இருந்தவர்கள் பழனியப்பன், மன்னாங்காடு ஐயர், ராஜாமடம் ஐயர், வெங்கடரமைய ஐயர், இன்னும் ஏகப்பட்ட ஐயர்கள்! மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் அத்தனை பேரும் ஐயர்கள்!

கிராமபுறங்களில்ஆங்காங்கே சில பண்ணையார்கள் இருந்தார்கள் அவர்கள் இந்த ஆங்கிலேய அதிகாரத்தை எதிர்த்து காங்கிரஸில் இணைந்தார்கள்!

நகரத்தில் செட்டியார்கள், தெலுங்கு செட்டியார்கள், முதலியார்கள் அப்புறம் எஞ்சிய மராட்டிய வம்சாவழியினர் பொருளாதார செல்வாக்கோடு வாழ்ந்து வந்தனர்! இதில் சிலர் ஆங்கிலேய அதிகாரத்தை ஆதரித்தனர்! சிலர் சுதந்திர போராட்டத்தில் கலந்துக்கொண்டனர்!

இவ்வளவுதான் அன்றைய நகரமும், நகரைச்சுற்றிய கிராமங்களின் நிலை! மிக பெரும்பான்மை மக்கள் விவசாயத்தை நம்பிய கூலியாக, அடிமைகளாக வாழ்ந்து வந்தனர்! அவர்களுக்கும் கீழாக நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு தலித் மக்கள் வாழ்ந்து வந்தார்கள்!

இதே நிலை தான் அன்றைய சென்னை மகாணத்தில் எல்லாயிடங்களிலும் நிலவியிருந்தது! இங்கே தான் மக்களின் உண்மையான நிலையை பெரியார் தெளிவாக உணர்ந்து! மக்களை சமூக இழிவிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தை தொடங்கினார் என்பதை முதலில் உணருங்கள்!

வாடியக்காடு (மதுக்கூர்) ஜமீனை எதிர்த்த போராட்டம் தான் வாட்டாக்குடி இரணியன் வாழ்க்கை! இப்படி பட்டுக்கோட்டை நகரில் சுயமரியாதை இயக்கத்தில் தன்னை பிணைத்துக்கொண்டு பார்ப்பனர் என்கிற ஒரு சாதியினர் மட்டும் அதிகாரத்தில் உட்கார்ந்துக்கொண்டு மக்களை சுரண்டுவதை, இழிவு செய்வதை எதிர்த்த எத்தனையோ போராளிகளில் ஒருவர் தான் பட்டுக்கோட்டை அழகிரி!

திராவிட இயக்க போராட்டங்களால் என்ன நடந்தது? என்ன சாதித்தோம்?

ஒடுக்கப்பட்ட மக்கள் படிக்க, வேலைவாய்ப்புக்கு இடஒதுக்கீடு கிடைத்தது! அடுத்த தலைமுறையில் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் நிறையபேர் படித்து மருத்துவர்களாக, பொறியாளர்களாக உருவாகியிருக்கின்றனர்!

அதை ஒரு நண்பரின் கூற்றாக தருகிறேன் " என்னுடை சிற்றப்பா மட்டும் இடஒதுக்கீட்டில் காவல்துறையில் இன்ஸ்பெக்டராக வரவில்லை என்றால் எங்கள் குடும்பத்தில் இத்தனை பேர் படித்து முன்னேறி இன்றைக்கு என் சகோதிரி ஒரு மருத்துவராகவும், நான் ஒரு மென்பொருள் வல்லுநராகவும் உயர்ந்திருக்க முடியாது!" என்கிறார்.

இதுதான் சாதனை...

நீங்கள் நினைக்கலாம் யாராவது ஒருவர் ஒரு வேலையை செய்வதால் நமக்கென்ன வந்தது! அது பார்ப்பானாக இருந்தால் என்ன? பறையனாக இருந்தால் என்ன? அந்த வேலைக்கான தகுதியும், திறமையும் தானே முக்கியம் என்று?

பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள்? என்ன செய்வார்கள்? என்பதற்கு ஒரேயொரு எடுத்துக்காட்டை சொல்லி... சமூகநீதி போராட்டத்தின் அவசியத்தை புரிந்துக்கொள்ளுங்கள்... என்று கோரிக்கை வைக்கிறேன்!

சென்னையில் பத்ம சேஷாத்திரி என்று ஒரு பள்ளி ஓய்.ஜி.மகேந்திரன் என்கிற பார்ப்பானால் ரஜினி என்கிற சொறி நாயால் தமிழர்களின் தலையை தடவி சுரண்டப்பட்ட பணத்தில் நடத்தப்படுகிற பள்ளியில்...

60 லிருந்து 80 சதவிகித மாணவர்கள் பார்ப்பனர் வீட்டுக்குழந்தைகள்... அதையும் மீறி போராடிச்சேர்க்கப்படுகிற குழந்தைகள் யார் தெரியுமா பணக்கார, பார்ப்பன அடிவருடிகளின் குழந்தைகள்! தலித் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் குழந்தைகளின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணலாம்!

90 சதவிகித ஆசிரியர்கள் பார்ப்பனர்கள்!

இதை தான் செய்தார்கள் கடந்தகாலத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க முடியும் என்று தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நிறுவி வைத்திருந்தார்கள்! அவர்களுக்கு மட்டுமே பதவி, அதிகாரம் என்கிற நிலையை வைத்திருந்தார்கள்! அதை எதிர்த்து பெரியாரின் இயக்கம் வெற்றி கண்டது! அதுவே சமூக நீதியாக (இடஒதுக்கீடாக) நானும், நீங்களும் இன்றைக்கு கணினி பயன்படுத்துகிற நிலைக்கு வந்திருக்கிறோம்!

அன்றைக்கும், இன்றைக்கும் பட்டுக்கோட்டையில் எந்த ஐயரும் கடினமாக உழைக்கவில்லையா?
அதிகாரத்தில் இருந்த நாடிமுத்துபிள்ளை மாதிரியானவர்கள் என்ன ஆனார்கள்?
பொருளாதார செல்வாக்கோடு இருந்த மற்ற சாதிகாரர்கள் என்ன ஆனார்கள்?
பண்ணையார்கள் என்ன ஆனார்கள்? பொரியார் இயக்கத்தால் அதிகாரம் இழக்கிற பார்ப்பனர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சமூகத்தில் செய்கிற குள்ளநரிதனம் என்ன?

அடுத்து...

திங்கள், 26 மே, 2008

திட்டமிடா பயணம்...!

கடந்த வாரம் ஒரு நாள் அரசு விடுமுறை கிடைத்தது! சனி,ஞாயிறு, திங்கள் என்று மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கிறதே என்ன செய்யலாம் என்று மோட்டுவளையை உத்து, உத்து பார்த்து யோசித்துக்கொண்டிருந்த வேளையில்...

நண்பரின் மனைவி வெளியில் எங்கும் அழைத்து போவதேயில்லை என்று பிறாண்டியதால், நண்பர் எங்காவது அருகாமையில் இருக்கிற இடத்துக்கு அழைத்து போயிட்டு வந்தால் கொஞ்சம் புடுங்கல் குறையும் என்று "கல்யாணமான ஆண்களின்" கடினமான வாழ்க்கை சவால்களை பகிர்ந்துக்கொண்டதன் பேரில்...

கானா பிரபா -வின் இந்த பதிவை படித்துவிட்டு கம்போடியா போகலாம் என்று முடிவெடுத்து விமானச்சீட்டு கிடைக்காமையால் (விடுமுறை என்றால் சிங்கப்பூரர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் ஊர்ச்சுற்ற கிளம்புவதால்! என்னை மாதிரி கடைசிநேர பயணிக்களுக்கு இருக்கை கேள்விக்குறியாகவே இருக்கிறது?) லங்காவி போகலாம் என்று டிபிசிடி-யிடம் அனுபவங்களையும், அறிவுரைகளை வாங்கிக்கட்டிக்கொண்டு.... விடுதி கிடைக்காமையால் கடைசியாக கெண்டிங் ஹைலாண்ட்ஸ் (Genting Highlands) பயணப்பட்டோம்.

புறப்பட்ட நாளில் நம்ம ஜெகதீசன் இணைய அரட்டையில் வந்து என்ன முன்னேற்ப்பாடு ஏதுமில்லாமல் போகிறீர்கள்... விடுமுறை நாட்கள் விடுதிகள் கிடைக்காது என்று வாய்மொழிய (அந்த வாயில் அரைகிலோ சர்க்கரைய போட்டு குச்சிய வைத்துக்கிடிக்க வேண்டும்!...)

மாலை கிளம்புகிற நேரத்தில் நம்ம டேமேஜர் வந்து பயணத்தை டேமேஜ் பண்ணுகிற மாதிரி பேசிக்கொண்டிருக்க... விழுந்தடித்துக்கொண்டு புறப்பட்டதில் ஜெர்கின் எடுக்க மறந்து அலுவலக நாற்காலியில் விட்டுட்டு பயணப்பட்டுவிட்டேன்!

ஜோகூர் பாரு சென்று அங்கிருந்து பேருந்தில் கெண்டிங் புறப்பட்டோம்!

விடியற்காலை 5.30 மணிக்கு கொஞ்சமாய் எலும்புகள் குளிரை உணரத்தொடங்கிய நேரத்தில் கெண்டிங் மலையில் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. நம்ம நண்பர் கொஞ்சம் தராள மனதுக்காரர் அவருடைய மேல்கோட்டை எனக்கு தந்துவிட்டு குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தார்.

இறங்கி விடுதிக்கு வரிசையில் நின்றால்... எல்லா அறைகளும்,எல்லா விடுதிகளும் "Full House" என்று பலகை தொங்குகிறது!

அப்படியே வெளியில் எதிர்ப்பக்கத்தில் ஏதோ ரிசார்ட் என்று பலகை தெரிந்தது! அங்கே அறைக்கிடைகிறதா என்று பார்க்கலாம் என்று அங்கேயிருந்தவரிடம் வழிக்கேட்க! அவர் ரிசார்ட்-லும் அறைகள் இல்லை என்றார்! அவரே வேண்டுமானால் 18வது மாடியில் அறையிருக்கிறது 120ரிங்கட் எடுத்துக்கொள்கிறீர்களா என்று அரைகுறை ஆங்கிலத்தில் பேச! நாங்களும் ஒத்துக்கொண்டோம்! அவர் 'லீ' என்றொரு பயணவழிகாட்டியின் கையட்டை கொடுத்து அறைக்கு அனுப்பி வைத்தார்.

எப்படியோ குளிப்பதற்கு அறை கிடைத்தால் போதும் என்கிற எண்ணத்தில் 18 வது மாடியில் அறைக்கு சென்றோம்! அங்கே 'லீ' 12மணிக்கு செக்-அவுட் செய்ய சொல்லி சாவி யை கொடுத்து 120ரிங்கிட் வாங்கிக்கொண்டார்!

எந்த 12மணி என்று விசாரிக்கவும் இல்லை! அதைப்பற்றி கவலைப்படவும் இல்லை!

நண்பரின் மனைவி மட்டும் செக்-அவுட் இன்றைய தேதி போட்டிருக்கிறது. எதற்க்கும் வரவேற்ப்பு மேசையில் பேசிவிட்டு செல்வோம் என்றார்! நம்முடைய வறட்டு துணிச்சல் அதெல்லாம் ஹோட்டல் நிர்வாகம் அறையில் இருக்கிற பொருட்களை எடுத்து வெளியில் வீசி விடாது! வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி!

சுற்றிப்பார்க்க கிளம்பி விட்டோம்! தீம் பார்க் சுற்றிக்கொண்டிருந்த நேரத்தில் நண்பரும், அவருடைய மனைவியும் விடுதியறை ஏதேனும் கிடைக்கிறதா என்று அவர்களின் மலேசிய உறவினர்கள் வழியாக முயற்சித்துக்கொண்டிருந்தார்கள்!

ஒருவழியாக 3 மணிக்கு அறை எதுவும் கிடைக்காது என்று தெரிந்தவுடன்... நாங்கள் வைத்திருந்தது முதுகில் சுமக்கும் பை என்பதால்! அதை எடுத்துக்கொண்டே சுற்றலாம் என்று அறைக்கு திரும்பினோம்!

அறைக்கு வந்தால் அறை தானியங்கி பூட்டு திறக்க மறுக்கிறது! அது கணினி வழியாக கட்டுப்படுத்தப்பட்டு வரவேற்ப்பு மேசையில் பூட்டப்பட்டிருந்தது!

வரவேற்ப்பு மேசைக்கு சென்றால்! விடுமுறை என்பதால் செக்-இன் செய்ய வந்தவர்களின் வரிசை மிக நீளமாக...! சுமார் அரை மணி நேரம் வரிசையில் நின்று மேசைக்கு சென்றால் வரவேற்ப்பாளர் அறையை பதிவு செய்தவர் வந்தால் மட்டுமே பொருட்களை எடுக்க அனுமதிக்க முடியும்! இல்லையென்றால் நிர்வாக விதிகளின் படி பொருட்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என்றார் :(

தொடரும்...

விளையாட்டு விளையாட்டாய் இருக்கிறதா? (நந்தாவுக்கு மட்டுமல்ல...!)

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
///
விளம்பரங்களில் சந்தைப்படுத்துதலை மட்டுமே முன்னிறுத்துவதன் இன்னொரு வடிவமாய்த்தான் இதை என்னால் பார்க்க முடிகிறது. இதேபோல விளையாட்டுக்களிலும் சந்தைப்படுத்துதலை மட்டுமே முக்கியமானதாய் நாம் கருத ஆரம்பித்தால், நாளை விளையாட்டை நாம் மறந்து விட வேண்டியதுதான்.
///

ஒரு சிறிய அளவிலான பொருளாதார பார்வை... விளையாட்டுப்போட்டிகள் எவ்வாறு மிகப்பெரிய உற்பத்தி சந்தையாக மாறியிருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்.

பீஜிங் 2008 ஒலிம்பிக் போட்டிகளுக்காக செலவிடப்படுகின்ற தொகை 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள்...

280 billion yuan சீனாவில் ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு முதலீடு செய்யப்பட்டிப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.

கால்பந்தாட்டங்களை ஒட்டி உலகளவில் நடைப்பெறுகிற சூதாட்டங்கள், அவற்றில் புழங்கிற பண மதிப்பு தலையை சுற்ற வைக்கிறது.

சமீபத்தில் அடுத்த இளையர் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சிங்கப்பூருக்கு அனுமதி கிடைத்தது... அதன் தொடர்பில் சிங்கையில் நடைபெற்ற விழா... சிங்கப்பூர் இளையர் ஒலிம்பிக் போட்டியை நடத்த திட்டமிடுகிற செலவினங்கள் இதையெல்லாம் கவனித்து பார்த்தால்... எல்லாம் வணிக மயமாகிவிட்டதை உணரமுடியும்.

எதையும் பொருளாதார முதலீடாக கருதுகிற நாடுகள்... விளையாட்டு போட்டிகளுக்கு செலவிடுகிற தொகையை மீண்டும் வருவாயாக மாற்றுவதற்கு தயாராகி விடுகின்றன.

கால்பந்தாட்ட பிரீமியர் லீக் ஆட்டங்கள், டென்னிஸ், கூடைபந்தாட்டங்கள் போன்றவை குழு முறையில் விளையாட்டுப்போட்டிகள் நடைபெற ஆரம்பித்தபொழுது, நான் மிகப்பெரிய மகிழ்ச்சியை அடைந்தேன். காரணம் விளையாட்டுப்பேட்டிகளில் நிரம்பி வழிந்த தேசிய வெறி என்பது மிக மோசமானதாக இருந்தது. விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்ற நிலைமாறி தேசிய வெறியின் அடையாளமாக இருந்தது. ரஷ்யா வெல்கிற ஒலிம்பிக் பதக்கங்களை விட அதிகமாக வாங்க வேண்டும் என்று அமெரிக்காவை ஆப்பிரிக்க காடுகளில் வலுவுள்ள மனிதர்களை தேடியலைய வைத்தது!

கிரிகெட் போட்டிகளில் இந்தியாவை வென்றாக வேண்டும் இல்லையென்றால் நாட்டுக்குள் நுழைய முடியாது என்கிற நிலைக்கு பாகிஸ்தான் வீரர்களும்! பாகிஸ்தானை வெல்லாவிட்டால் இந்திய வீரர்களும் மிரட்டப்படுகிற நிலைக்கு விளையாட்டும், தேசிய வெறியும் பின்னிபிணைந்திருக்கின்றன!

குழு ஆட்டங்கள் வந்தபிறகு எந்தநாட்டு விளையாட்டு வீரரும் எங்கே வேண்டுமானாலும் விளையாடினார்கள் அதனால் தேசிய எல்லைகள் உடையும் என்று மகிழ்ந்தேன்! ஆனால் நடந்துக்கொண்டிருப்பதோ மிக மோசமான விளைவுகள்...

இன்றைக்கு விளையாட்டு என்பது உலகளவில் முதலாளிகள் முதலீடு செய்யும் தளமாகி விட்டது. விளையாட்டு வீரர்கள் உற்பத்தியாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள். ரசிகர்கள் நுகர்வாளர்களாக மாற்றப்பட்டுவிட்டார்கள்.

வீரர்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள், விற்கப்படுகிறார்கள்... அவர்களின் மீது முதலீடு செய்த முதலாளிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டவர்கள்... அவர்களுக்கு உற்பத்தியான (வருவாயை) ஈட்டுவதற்க்காக எதையும் செய்ய தயராகிவிட்டார்கள்.

முதலாளித்துவம் எப்பொழுதுமே அதனுடைய இலக்காக வருவாயை மட்டுமே கொண்டது! வருவாயை அதிகரிக்க அது என்ன வேண்டுமானாலும் செய்யும்! கால் பந்தாட்ட சூதாட்டங்களும், ஆட்டங்களை ஒட்டி நடக்கிற விபச்சாரம் மற்றும் மது விற்பனை பற்றிய விவரங்களை இணையத்தில் தேடிப்படித்துக்கொள்ளுங்கள்!

கிரிக்கெட் பிரீமியர் லீக் ஆட்டங்கள் மட்டுமல்ல! முதலாளித்துவத்தின் இலக்கு வருவாய்! அது தனது லாபம் என்கிற நோக்கில் பயணக்கிற பொழுது குடி, விபச்சாரம், சூதாட்டம் இவற்றை பயன்படுத்த தவறுவதில்லை!

கலாமின் கோமாளி கனவுகள் போல இந்தியா 2020ல் வல்லரசு ஆகிறதோ இல்லையோ! இதே வேகத்தில் முதலாளித்துவம் இந்தியாவில் அதிகரித்தால் இன்னும் பத்தாண்டுகளில் இந்தியாவில் 6 பெரு நகரங்கள் லாஸ்வேகாஸ் போல சூதாட்ட மற்றும் பாலியல் தொழில் விடுதிகளால் நிரம்பி வழிய போகிறது என்பது மட்டும் உண்மை :(

வெள்ளி, 9 மே, 2008

எமது அறியாமையை பயன்படுத்தி... உமது அதிகார கட்டமைப்பை... நிறுவ முயலுகிறாய்...!

பார்ப்பானீயத்தின் கோரப்பற்கள் குருதியின் ருசியறிய ஆவென்று வாய்பிளக்கிறது! தலித்களே கிளர்ந்தெழுங்கள் என்றழைக்கிறது! ஆகா! தலித் சகோதரர்கள் மீது என்னவொரு அக்கறை!

மலம் அள்ளுவது பிறவிக்கடன் என்றவனுக்கு முதலமைச்சர் நற்காலி! நான்கு வர்ணம் என்பவனுக்கு அதிகாரம்!

உத்தபுரமல்ல இன்னும் பல இடங்களில் அறியாமையில் இருக்கிற மக்களுக்கும், சாதி எனும் நோய் பிடித்த மக்களுக்கு தேவையானது எல்லாம் அறிவு புகட்டல் மட்டுமே! சாதி பிணிக்கு மருத்துவம் மட்டுமே!

ஆண்டாண்டு காலமாய் சாதி பிணி பரப்பும் கிருமிகளாய்... வலம் வரும் மோடி வகையறாக்களுக்கும், பார்ப்பானீய அதிகார வர்க்கங்களுக்கும் தேவையானது கருவறுத்தல்(அழித்தொழித்தல்)!

வியாழன், 8 மே, 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -4

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

ஆடை அணிவதில் மிகப்பெரிய சிக்கல் எது பண்பாடானது (cultured)? எது நாகரிகமானது(civilized)? என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது?

மனிதன் தொடர்ந்து எல்லாவற்றையும் பற்றிய தேடல் உள்ளவனாக இருக்கிறான்... எல்லாவற்றிலும் பரிணாமம் அடைகிறான்... தொடர்ந்து வளர்ச்சியை நோக்கிய பயணத்தை தொடர்கிறான்.

தைக்காத ஆடைகளை நூற்பாலைகளில் தயாரித்த மனிதன். அவற்றுக்கு வண்ணம் கொடுக்க கற்றுக்கொண்டான். வண்ண,வண்ண ஆடைகள் போதவில்லை... அவற்றை தன் உடலின் அமைப்புக்கு தைத்து அணிவதை கண்டறிந்தான்.

தைக்காத கோவணம் தைத்த பிறகு ஜட்டி. தைக்காத வேட்டி... தைத்த பிறகு அரைக்கால்,முக்கால்,முழுகால் டவுசர்களாக! மேல் துண்டு தானய்யா மேல்சட்டையானது. தைக்காத சேலை... தைத்த பிறகு சுடி, மிடி யாக வருகின்றன.

உலகத்தின் எல்லாப்பாகங்களிலும் மனிதன் ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் தைக்காத உடையை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு தான் தைத்த உடைகளை பயன்படுத்த ஆரம்பித்திருப்பான்.

விலங்குகளிலிருந்து உரிக்கப்பட்ட தோல்கள் கூட ஆரம்பத்தில் தைக்கப்படாமலேயே தான் பயன்படுத்தியதாக வரலாறு கூறுகிறது. இன்றைக்கு தைத்த தோலாடைகள் பயன்படுகின்றன.

இந்த வளர்ச்சியை புரிந்துக்கொள்வதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று எனக்கு விளங்கவேயில்லை?

வேட்டியும், சேலையும் தான் எமது பண்பாட்டு உடைகள் என்றால்... மனிதனின் தேடலில் விளைந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளாத முட்டாள்தனம் தானே தவிர வேறென்ன சொல்ல முடியும்!

பண்பாட்டு உடைகள் பற்றி பேசுகிற போது எல்லாம் எனக்கு தோன்றுவதெல்லாம் ஒன்றேயொன்று வரலாற்றின் எந்த பக்கத்திலாவது மக்கள் (உழைக்கும்வர்க்கம்) என்ன மாதிரியான உடைகள் உடுத்தியிருந்தார்கள் என்று பேசியிருக்கிறதா? அதிகாரவர்க்த்தின் அடையாளங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருக்கிறது!.

இந்த அதிகாரவர்க்கங்கள் எல்லாம் ஒரே மாதிரியான ஆடை உடுத்தியிருந்தார்களா? பார்ப்பனர்கள் வேட்டி, சேலை கட்டுவது ஒரு மாதிரியும்... செட்டியார்கள் வெறொரு மாதிரியும், முதலியார்கள், நாயக்கர்கள்... இன்னும் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு மாதிரியும் வேட்டி, சேலை கட்டியிருந்தார்கள் இல்லையா?

அதிகாரவர்க்கங்கள் அணிகிற உடையமைப்பே பண்பாடானது அல்லது நாகரிகமானது என்று அடித்தட்டு மக்களிடம் உருவாக்கி வைத்திருக்கிறோம். பெரும்பான்மை மக்கள் என்ன விதமான ஆடை உடுத்தினார்கள் என்று நாம் பண்பாடு பேசுவதில்லை! ஏனென்றால் நாம் பேசுகிற பண்பாடு என்பதே மேட்டுக்குடி தனமானதல்லவா?

ஆடைகளின் தேடலில் மனிதன் தொடர்ந்து பயணப்பட்டுக்கொண்டேயிருக்கிறான்... தைத்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் என்பதாகயிருந்தது... மாறியது காலம் ஆயத்தஆடைகள் (ReadyMades) வந்தன.

பயணம் நிற்கவேயில்லை... தொடர்கிறது ஆடை வடிவமைப்பு என்று புதிய பாதையில் பயணிக்கிறான். தனித்த ஆடைவடிவமைப்பு (unique designed dress) வருகிறது.

நிற்க, இந்த தேடல்கள்... எதனோடும் தொடர்ப்பற்று நிற்கவில்லை... ஒரு காலத்தில் இந்த தேடல்கள் மேட்டிமை தேடல்களாக இருந்திருக்கலாம். இன்றைய தேடல்கள் வணிக தேடல்களாக இருக்கிறது.

வணிக தேடலாக வருகிற போது உற்பத்தி-நுகர்வு என்கிற நிலை வந்து விடுகிறது. உடனே சந்தைப்படுத்துதல் முன்னணியில் வந்து நிற்கிறது. வணிக உலகம் தைத்த ஆடைகளையும், ஆயத்த ஆடைகளையும், வடிவமைக்கப்பட்ட ஆடைகளையும் தயாரித்து சந்தைப்படுத்துகிறது.

முதலாளித்துவமும், வணிகமும் கைக்கோர்க்கின்றன... சந்தைப்படுத்துதலில் எளிய வழி பாலுணர்ச்சியை மையப்படுத்தி சந்தைப்படுத்துதல்... பாலின்ப உடைகள் (sexy fit dresses)... வளைய வருகின்றன.

ஆடையை பற்றிய தேடலும், அதனுடைய வளர்ச்சியும் மனிதனை பாதிக்கவில்லை... ஆடைகளில் எந்த சிக்கலுமில்லை.... முதலாளித்துவமும், வணிகமும் தவறான திசைகளில் நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கின்றன!

பயனாளர் கையேடும், தமிழும்....!

குறிப்பு : கொஞ்சம் பழைய பதிவு, மீள்பதிவு செய்யப்படுகிறது! இதன் தேவை இன்னுமிருப்பதால்!

ஆசை, ஆசையாய் நாம் நம் வீட்டுக்கோ, உறவினருக்கோ அல்லது நண்பருக்கோ ஒரு மி்ன்னணுவியல் கருவி (electronics equipment) வாங்கி கொடுக்கிறோம். இப்பொழுது வருகிற நவீன கருவிகள் ஏகப்பட்ட பயன்பாடுகளுடன் வருகிறது ஆனால் அவற்றுக்கான பயனாளர் கையேடுகள் (user manual) பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.

நாம் வாங்கி தருகிற பொருட்களை நம் பெற்றோரோ அல்லது உறவினரோ பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கலை தீர்க்க முடியாமல் அருகில் இருக்கும் யாரவது ஒருவரை உதவிக்கு அழைக்கும் போது அவர்கள் தங்களுடைய அறிவு திறமைகளையெல்லாம் அதில் காண்பித்து கடைசியில் பேரீச்சை பழத்திற்க்கு விற்க்கும் நிலைக்கு பொருள் வந்துவிடுகிறது.

எளிய தமிழிலில் பயனாளர் கையேடு மிக அவசியமாகிறது.

அதற்க்காக நாம் என்ன செய்யலாம்? சீனா மாதிரி நமக்கு ஒரு நாடோ அல்லது அரசியல் அதிகாரமோ இருந்தால் நாம் கட்டாயம் சந்தைக்கு வருகிற பொருட்களின் நிறுவனங்களை மறைமுகமாக நம்முடைய தமிழ் மொழியில் கையேடு வேண்டுமென்பதை அறிவுறுத்தலாம்.

நதிநீர் வேண்டுமென்று கேட்டாலே நாய்களை விட கேவலமாக அடித்துக்கொல்லபடும் அளவுக்கு அரசியல் அனாதைகளாக இருக்கிற நிலையில்...

தமிழிலில் கையேடா!
முடியும்! இதற்க்காக நீங்கள் வீதியில் கொடிபிடிக்க வேண்டாம்! போராட்டங்கள்! தீக்குளிப்புகள் தேவையில்லை!

ஒரு எளிய வழி இருக்கிறது!

இன்றைய நிலையில் மின்னணு கருவிகள் பயனாளர் சந்தையில் உலகளாவிய அளவில் மிகப்பெரிய நுகர்வோர் எண்ணிக்கையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

ஓவ்வொரு மின்னணு கருவி நீங்கள் வாங்கும்போதும், உங்களுக்கு அப்பொருளின் உத்திரவாதத்தை பதிவு (warranty card) செய்ய ஒரு விண்ணப்பமும், ஒரு கருத்து கணிப்பு படிவம் (feed back form) -ம் தரப்படுகிறது.

நீங்கள் பதிவு செய்யும் போது உங்களுக்கு ஒரு கேள்வியாக மேலதிக சேவையாக அந்நிறுவனத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறார்கள், அப்பொழுது நீங்கள் தவறாமல் எங்களுக்கு தமிழிலில் பயனாளர் கையேடு இருந்தால் நலம் என்றும், அப்படி இல்லாததால் அவர்களின் கருவிகளை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது எனவும், விரைவில் தமிழிலில் பயனாளர் கையேடு தருகிற நிறுவனப்பொருட்களையே வாங்க விருப்பபடுவதாக குறிப்பிடுங்கள்.

கருத்து கணிப்பு படிவம் இல்லாத நிலையில் நீங்கள் அந்நிறுவனத்திற்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து உங்களுடைய பதிவு எண்ணை குறிப்பிட்டு நீங்கள் விரும்புகிற மேலதிக சேவைகளை குறிப்பிடலாம்.

என்னுடைய நண்பர் 'சாம்சங்' நிறுவனத்தில் நிர்வாக பிரிவில் இருக்கிறார், அவருடைய கூற்றுப்படி இவ்வாறு வருகிற பயனாளர் கோரிக்கைகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் அந்நிறுவனம் உடனடியாக அதற்க்கான நடவடிக்கைகள் எடுக்கும் என்கிறார்.மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும்பட்சத்தில் மிக அவசரமாக நடவடிக்கை எடுக்கப்படுமென்கிறார்.

இதனால் நமக்கு என்ன பயன் கிடைக்கும்?

1. தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
2. நமக்கு எளிய தமிழிலில் பயனாளர் கையேடுகள் கிடைக்கும்.

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -3

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2
உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

ஆடை தேர்வுகளை பற்றி ஏற்கனவே பேசியிருந்தாலும்... சூழலின் பங்களிப்பை இன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டியதிருக்கிறது. ஜீன்ஸ் என்கிற ஆடையின் கண்டுபிடிப்பு என்பது குளிர் பிரதேசங்களில் தோலாடைக்கு மாற்றாக, தோலாடைகளின் பற்றாக்குறையாலும், தோலாடைகளின் வேறுசில சிக்கல்களாலும் கண்டடைந்த மாற்று தீர்வாக தான் பார்க்க இயலுகிறது.

இந்த ஜீன்ஸ் ஆடையை வெப்பமண்டல நாடுகளிலும் பயன்படுத்துவது என்பது அறியாமை என்று சொல்லிவிடலாம்... ஆனால் எதையும் செய்து பார்க்க துடிக்கிற இளையர்கள் (youths) ஜீன்ஸ் பயன்படுத்துவதில் குறையொன்றும் இல்லை... சிறிது காலத்தில் பருத்தியிலான உடைகளுக்கு மாறிய நிறைய நண்பர்களை பார்க்க முடிகிறது. உள்ளே வெந்து புழுங்கினால் பவுடர் அடித்து மேலே ஜீன்ஸ் மாட்டுகிற கனவான்களை பற்றிய கவலை நமக்கெதற்கு :)

காற்றுக்கு காசு கேட்கும் சென்னையின் அறைகளில் தங்கியிருந்த போது.. உள்ளாடைகளுடன் உறங்கிய இரவுகள்... இன்னும் சில நண்பர்கள் கட்டிய ஈரிழை துண்டு அக்கடா என்று கிடக்க காற்றோட்டமாக உறங்குவார்கள்!

பல நேரங்களில் நண்பர்களின் வாயிலாக அறிந்திருக்கிறேன் விடுதிகளில் நிர்வாணமாக அலைவதை விரும்பியிருக்கிறார்கள் பலர்! (ஆண்கள், பெண்கள் என்கிற பாகுபாடு இதில் இல்லை!)

பல ஐரோப்பிய நாடுகளில் கோடை காலங்களில் டூ பீஸ் அல்லது சிங்கிள் பீஸ் உடைகளுடன் மக்கள் கடற்கரைகளில் கூடுவதை காணலாமே!

ஆடை மட்டுமல்ல பல்வேறு பயன்பாடுகள் சூழலின் அடிப்படையில் தான் அமையும். வறட்டு பண்பாட்டு கூச்சல்களை மக்கள் தானாகவே உடைந்தெரிந்து பயணப்படுவார்கள்!

இங்கே ஒரு குடும்பத்துடன் பகிர்வு அடிப்படையில் தங்கியிருந்த போது அந்த வீட்டிலுள்ள பெண் எப்போதும் காலணி(sleeper) அணிந்து தான் நடமாடுவார்! ஏன் மேற்கத்திய நாடுகளில் வீட்டில் காலணி அணிகிறார்கள் என்பதை பற்றிய புரிதலில்லாமல் இப்படி வாழ்வது மேம்ப்பட்ட வாழ்க்கை என்று நினைத்துக்கொள்வதால் ஏற்ப்படுகிற சிக்கல் இது!

கடுமையான குளிர் நாடுகளான ஐரோப்பிய நாடுகளில் வெற்று காலுடன் வீட்டுக்குள் நடமாட இயலாது. அதனாலயே காலணி தேவைப்படுகிறது. இரண்டாவது பல ஐரோப்பியர்கள் அடிக்கடி பயணங்கள் மேற்க்கொண்டு கண்ட இடத்திலும் தங்குவார்கள். அதனால் கால்கள் வழியாக பரவும் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்ளவும் காலணி பயன்படுத்துகிறார்கள்!

ரஷ்யாவில் குளிர்காலங்களில் கையுறை, காலறை அணிந்து தான் நாள் முழுவதும் வாழ்கிறார்கள். உறைகளை கழற்றினால் குருதி உறைகிற குளிர்!

வெப்ப மண்டல நாடுகளில் வாழ்கிற நாம் நமது வீட்டை தூய்மையாக வைத்துக்கொள்வதற்கு பதிலாக வீட்டுக்குள் காலணி அணிய வேண்டிய அவசியமென்ன? புரிதலில் ஏற்ப்படுகிற சிக்கல்! அறியாமை! இப்படி வாழ்வதை மேம்ப்பட்ட வாழ்க்கை! தான் உயரத்தில் இருப்பதாக எண்ணவோட்டம் போன்றவையே காரணங்கள்!

செவ்வாய், 29 ஏப்ரல், 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) -2

குறிப்பு : கலாச்சாரம் (பண்பாடு) என்பதைப்பற்றிய விளக்கம் கொடுப்பதோ! பெண்ணியத்திற்கு போராடுவதாக ஜல்லியடிப்பதோ இப்பதிவின் நோக்கமல்ல! எனக்குள் எழுந்த, எழுகிற முரண்களின் குழப்பங்கள் மட்டுமே... இனி!


கலாச்சாரம் (பண்பாடு) என அறியப்பட்டயெல்லாம் சமூகத்தின் (இனக்குழு, ஓரிடத்தில் வாழ்ந்த மனிதக்குழுவினர், ஒரு குறிப்பிட்ட நாகரிகத்தை சேர்ந்ததாக அறிப்படுகின்ற குழு) வளர்ச்சியில் (process) இருக்கின்ற போது இதுதான் கலாச்சாரம் (பண்பாடு) என்று வரையறுத்துக்கொண்டு வாழ்ந்ததாக அறியப்படவில்லை. இன்னொரு சமூகத்தால் அவதானிக்கப்பட்டு இதுதான் இன்னொரு சமூகத்தின் கலாச்சாரம்(பண்பாடு) என அறியப்பட்டிருக்கிறது.

அதாவது ஒரு சமூகம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் போது எந்த கலாச்சார சட்டக வரையறைக்குள்ளும் அடங்கிடாமல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. பின்னாளில் வரலாற்றில் அது வரையறைச்செய்யப்பட்டிருக்கிறது.

அப்படியாக நம்முடைய கலாச்சாரம் என்று கட்டியழுகிற எல்லாவற்றையும் வளர்ச்சியின் போக்கில் விட்டுவிட்டு நாம் மாறிக்கொண்டேதான்யிருக்கிறோம். இந்த மாற்றங்களின் காரணிகளாக (சூழல், அரசியல் அதிகாரங்கள், தேவைகள், இன்ன பிற) இருக்கின்றன!

ஆனால் இன்றைக்கு கலாச்சாரம் என்று கத்திதீட்டப்படுகின்ற நிகழ்வு ஒன்றேயொன்றாக தான் இருக்கிறது!. அது பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாடு.

கையால் சாப்பிடுவது கரண்டியால், குச்சியால் சாப்பிடுவதாக மாறினால் ஏற்றுக்கொள்கிறோம். தைக்காத ஆடைகள், தைத்த ஆடைகளாக (அரைக்கால், முழுக்கால் உடை) மாறுவதையோ, கைலியாக மாறுவதையோ மறுக்கவில்லை. தென்னைவோலை!, பனவோலை குடிசைகள் நவீன கன்கிரீட் கட்டிடங்களாக மாறுவதை மறுக்கவில்லை!

ஆக வாழ்வியலின் எந்ததெந்த கூறுகள் மாறினாலும் நாம் கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடவில்லை!

நம்முடைய கூச்சல் எல்லாம் பெண்ணின் பாலுணர்வு வெளிப்பாட்டின் மீது மட்டுமே! இதை வெளிப்படையாக நாம் பெண் திருமணமான தனது கணவருடன் மட்டுமே பாலுறவு வைத்துக்கொள்ள வேண்டும்... அதற்க்காக காத்திருக்க வேண்டும். அவளுடைய காதல் என்பது நான்கறைக்குள் மட்டுமே இருக்க வேண்டும். இன்னும் வலிந்து தனக்கு காதல் என்கிற உணர்வு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக்கூடாது! இப்படிச்சொல்ல வெட்கப்பட்டு கலாச்சாரம் சீரழிவதாக கூச்சல் போடுகிறோம் :(

இப்படிப்பட்ட உடைகள் தான் நமது சமூகத்தின் கலாச்சாரத்திற்கானது என்று எந்த வரையறையும் கிடையாது. உடையின் தெரிவுகளை பற்றிய உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...) பதிவை வாசிக்கவும்.

டிபிசிடி-ன் பதிவில் கல்வெட்டு சொன்னது "
1.ஆடை எப்படி உடுத்த வேண்டும் என்பது தனி ஒருவரின் உரிமை.

2. உடுத்தப்பட்ட ஆடை மறைக்காத பாகங்களை அவர்களே விரும்பி பார்வைக்கு வைக்கிறார்கள் என்பதுதான் எனது புரிதல். உதாரணம். ஜாக்கெட்டின் முது பாகம்/ஜன்னல் மினி ஸ்கர்ட் காட்டும் கால், தாவணி மறைக்காத இடுப்பு.... etc.. .

3.ஆடைகளால் மறைக்கப்பட்ட பாகங்களை ஆடையை விலக்கி பார்க்க முனைவதும், நேர் பார்வையில் படாத பாகங்களை கோணல் பார்வையில் பார்க்க முற்படுவதும் கேவலம் என்பதறிக.

"

உடலின் பாகங்கள் மற்றவரின் பார்வைக்கு வருவதை மறைப்பது நம்முடைய சொந்த அளவுகோலாக இருக்கிறது! சில சமயங்களில் இடம்,பொருளை பொருத்தாக அமைகிறது.

தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்யும்போது மேலாடை அணிவதில்லை! அதே சமயம் வீட்டிற்கு வெளியாட்கள் வருகின்ற போது குறைந்தபட்சம் துண்டை எடுத்து தோளில் போட்டுக்கொள்கிறோம்! நமது சொந்தங்களுடன் வீட்டிற்குள் இருக்கும் போது உடைகள் எப்படியிருந்தாலும் நாம் கவலைப்படுவதில்லை!

இடுப்பில் அள்ளிச்சொருகப்பட்ட சேலையுடன் வேலைப்பார்க்கும் பெண்ணும்... பாலியியல் தொழிலாளி பெண்ணும் உடலின் பாகங்களை மற்றவர்களின் பார்வைக்கு வைக்கிறார்கள்... ஆனால் இரண்டின் நோக்கம் வெவ்வேறானவை!


ஆனால் பொது இடத்தில் வருகின்ற பொழுது எப்படிப்பட்ட உடையணிய வேண்டும் என்பது சொந்த விருப்பம் மற்றும சமூக ஒழுங்கு இரண்டையும் உள்ளடக்கியதாக இருக்கிறது.

குற்றாலத்தில் ஜட்டியுடன் குளிப்பதை நாம் தடை செய்கிறோம். ஜட்டியுடனோ அல்லது தொடை தெரிய ஏற்றிக்கட்டிய கைலியுடனோ ஒரு ஆண் பொதுவளாகத்தில் உலவுவதை நாம் கண்டிக்கிறோம்.

இங்கே இயல்பான கேள்வி எழுகிறது நமது சட்டங்கள் எந்த மாதிரியான உடையமைப்புடன் பொது இடங்களில் உலவுவதை தடைச்செய்கின்றன.

பாலுணர்வை தூண்டாத உடைகள் என்றால்... எந்தந்த உடைகள் பாலுணர்வை தூண்டாது என்பதற்கான வரையறை என்ன?

எ.காட்டிற்கு: இடுப்பில் இருந்து எத்தனை அடி உடை பாலுணர்வை தூண்டும் (தூண்டாது) :(

இதில் இன்னொரு இடியாப்ப சிக்கல் இருக்கிறது பாலுணர்வின் இருக்கூறுகளாக இருக்கின்றன... அழகுணர்ச்சியும், ஆபாசமும்....

எதை அழகுணர்ச்சி என்பது? எதை ஆபாசம் என்பது?

பி.கு: நீங்க ஜனரஞ்சகமாக எழுத(குழப்ப)மாட்டீர்கள் என்று சொன்ன டிபிசிடிக்கு இப்பதிவு அர்ப்பணிப்பு!

வியாழன், 24 ஏப்ரல், 2008

உடை கலாச்சாரம் (டிபிசிடி யின் உவ்வ்வே...)

பார்வை ஒன்று!

நான் கலாச்சாரக் காவலனா .....? :புதசெவிபதிவில் கலாச்சாரத்தை பற்றிய கேள்வியெழுப்பியிருக்கிறார்... கலாச்சார கண்றாவியை பற்றி பிறகு பேசிக்கொள்ளலாம். பதிவின் பின்னூட்டத்தில் கல்வெட்டு ஒரு அற்புதமான விவாதத்தை கட்டமைத்து சென்றிருக்கிறார்.

உடையை தீர்மானிக்கும் காரணிகளாக எவை,எவையிருக்கின்றன இன்றைக்கு என்பது முக்கியமான விவாதப்பொருளாக இருக்கிறது.

நிர்வாணமாக அலைந்த மனிதன் உடையை தேர்ந்தெடுக்கும் காரணிகளாக பாலுணர்வும், இயற்கையும் (சூழலும்) இருந்திருக்கலாம்!

மனித இன வளர்ச்சியில் உடையை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இயற்கை(சூழல்) இருந்திருக்கிறது... எ.கா (சவுதி அரேபியாவின் வெள்ளையுடை தேர்வு, ராஜஸ்தான் தான் போன்ற பகுதிகளில் தலைபாகை, துருவப்பகுதிகளின் தோலாடை தேர்வு... போன்றவை...)

மனிதனின் உடையை தீர்மானிக்கும் காரணிகளாக சமூக, அரசியல் இருந்திருக்கலாம் எ.கா( குறிப்பிட்ட இனக்குழு ஒரே மாதிரியான உடையணியும் பழக்க, வழக்கத்தை பின்பற்றி இருக்கிறார்கள் ரோமானியர்களின் உடையமைப்பு, கிரேக்கர்களின் உடையமைப்பிலிருந்து வேறுப்பட்டிருந்தது.)

மனிதனின் உடையை தீர்மானிக்கும் காரணியாக மதங்கள் ஆளுமை செலுத்துக்கின்றன... எ.கா (இசுலாமியர்கள் உடை, பெளத்தர்களின் உடை...)

இவையெல்லாம் கடந்த காலங்களாக ஆகிக்கொண்டிருக்கின்றன... சூழல், சமூக, அரசியல், மத காரணிகள் உடை தேர்வை பாதிக்கும் என்பது மேற்கத்திய நாடுகளில் 16ம் நூற்றாண்டு பிறகும், இரண்டாம் நிலை நாடுகளில் 19ம் நூற்றாண்டு பிறகும் மாறிக்கொண்டிருக்கின்றன.

உடை தேர்வை தற்பொழுது நுகர்வு கலாச்சாரம் தீர்மானிக்கிறது.

இங்கே உற்பத்தி - நுகர்வு பற்றிய ஒரு புதிய பார்வை தேவைப்படுகிறது (இதன் தொடர்பில் நண்பர் ஜமாலன் உடன் மேற்க்கொண்ட உரையாடலில்... ஒரு நீண்ட பட்டியல் நூற்களை கொடுத்து வாசிக்க சொல்லியிருக்கிறார்! அந்த கச்சேரியை இன்னொரு நாள் பார்க்கலாம்!)

விளைப்பொருட்கள் உற்பத்தியும், அதன் நுகர்வும் பண்டமாற்று முறையில் தொடங்கி வணிக முறையில் தொடர்கின்றன...
அதே மாதிரி பயன்பாட்டு பொருள் உற்பத்தியும், அதன் நுகர்வும் வணிக முறையில் தொடர்கின்றன...
ஆனால் பொழுதுபோக்கு (Entertainment) மற்றும் கலை (arts) என்பது வணிக முறையில் வருகின்ற போது... படைப்பாளி உற்பத்தியாளனாகவும், அதில் கிடைக்கும் பொருள் (money) உற்பத்தியாகவும் ஆகி... பார்வையாளனுக்கு (பயனாளி) அதில் கிடைக்கும் மகிழ்வு நுகர்வாகவும் மாறி நிற்கிறது...

16 ம் நூற்றாண்டு பிறகு மேற்கத்திய நாடுகளிலும் , 19 நூற்றாண்டுக்கு பிறகு இரண்டாம் நிலை நாடுகளிலும் கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு என்பது மூன்றாம்நிலை என்கிற நிலையிலிருந்து முதல்நிலை உற்பத்தி-நுகர்வுக்கு வந்திருக்கிறது.

இன்றைக்கு பேச்சாளர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் அனைவரும் பொருளீட்டும் முதல்நிலை உற்பத்தியாளர்களாக மாறியிருக்கிறார்கள். அதன் நுகர்வாளர்கள் பொருள் செலவழித்து நுகர தொடங்கி விட்டார்கள்.

இதில் எங்கிருந்து உடை கலாச்சாரம் வந்தது என்கிறீர்களா? முதல் நிலை உணவுப்பொருட்கள் (விளைப்பொருட்கள்) உற்பத்தியும், நுகர்வும் பயனாளர்களுக்கு அடிப்படை தேவையாக இருக்கிறது. இரண்டாம் நிலை பயன்பாட்டுப்பொருட்களின் உற்பத்தியும், நுகர்வும் பயனாளர்களுக்கு தேவையினடிப்படையில் அமைகிறது. ஆனால் மூன்றாம் நிலையில் இருக்கிற கலை, விளையாட்டு, பொழுதுபோக்கு உற்பத்தி, நுகர்வு என்பது மிக குறைந்த அளவில் இருக்கிறது.

இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை உற்பத்தி-நுகர்வு என்பதை முதல்நிலைக்கு நகர்த்த அல்லது அதிகப்படுத்த சந்தைபடுத்துதல் தேவைப்படுகிறது. இந்த புதிய நுகர்வு கலாச்சாரம் பாலுணர்வை தூண்டுவதன் மூலம் சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்கிறது.

ஒரு yamaha வண்டியோட்டுகிற ஆணுடன் பெண் வந்து ஒட்டிக்கொள்வது போல் விளம்பரங்கள் அமைக்கப்படுகிறது. பால்இனக்கவர்ச்சியை முக்கியப்படுத்தி சந்தைபடுத்துதல் என்பது தற்போதைய நிலை...

இப்படிப்பட்ட பால்இனக்கவர்ச்சியை தூண்டுகிற சந்தைப்படுத்துதல் இசைநிகழ்ச்சிகளில் அதிகளவு மேற்கத்திய நாடுகளில் கடந்த இரண்டு, மூன்று நூற்றாண்டுகளாக உண்டு.

விளையாட்டு என்பது பொழுதுபோக்கு என்கிற நிலை மாறி உற்பத்தி-நுகர்வு என்கிற வணிக நிலைக்கு மாறியதால் பால்இனக்கவர்ச்சியை தூண்டுகிற சந்தைப்படுத்துதல் தேவைப்படுகிறது. அதனாலயே சியர்லீடர்ஸ் நடனக்குழுவின் இறக்குமதி!

இந்த விளம்பர சந்தைப்படுத்துதல் என்பது பருப்பு வகையறாக்களை கூட ராதிகா வந்து நடனமாடி விற்பனை செய்ய வேண்டிய சூழலுக்கு நகர்ந்திருக்கிறோம்.

இந்த புதிய நுகர்வு கலாச்சாரம் என்பது உடை தெரிவை தீர்மானிக்கும் காரணிகளாக மாறியிருக்கிறது. sexy dresses என்பது இன்றைக்கு சந்தையில் அதிகளவு விற்பனையாகும் உடைகள். பாலுணர்வை மறைக்க உடைகள் என்கிற நிலை மாறி... பாலுணர்வை வெளிப்படுத்த உடைகள் என்கிற புதிய நுகர்வுக்கலாச்சாரம் நம்மிடையே வந்திருக்கிறது.

இது நூற்றாண்டுகால மாற்றம்... இதை தீர்மானிக்கும் காரணிகளாக வணிக உலகமேயிருக்கிறது! உடையை தீர்மானிக்கும் சூழல், சமூக, அரசியல். மதக்காரணிகள் உடைப்பட்டு நிற்கின்றன!

பார்வை இரண்டு!
பெண்ணியத்தின் அடிப்படையில் இந்த பார்வை வைக்கப்பட வேண்டியதிருக்கிறது! தொடர்வேன் என்கிற நம்பிக்கையில்...

செவ்வாய், 15 ஏப்ரல், 2008

வாழ்க்கை துணைநலன் ஏற்பு விழா... (நண்பர் குசும்பன் இனிற இல்லறத்திற்க்கான வாழ்த்துக்கள்)


ஒவ்வொரு விடியலும்... "இவர் என்னை காதலிக்கிறார்! இவள் என்னை காதலிக்கிறாள்" - விழிமொழிகளாக இருக்கட்டும்.




குறிப்பு:
குசும்பரின் இல்லறத்தின் துணைவியாரே! அன்பு சகோதரி மஞ்சு அவர்களே! எங்கள் வலையுலக குசும்பை உங்களின் கரம் சேர்க்கிறோம். அவர் இன்று போல கண் கலங்காமல் என்றும் குசும்புடன் வாழ! உம்மின் அன்பெனும் குளத்தில் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துக்கள்!.

குசும்பரின் சிற்சில பிழைகள் பொறுத்து, கத்தி, ஜல்லி கரண்டி, மேசை கரண்டி, தோசை கரண்டி போன்ற வன்மையான ஆயுதங்கள் தவிர்த்து... மத்து, பூரிகட்டை போன்ற மென்மையான ஆயுதங்கள் உபயோகித்து... வாழ வாழ்த்துகிறேன்!

வாழ்த்துக்களுடன்...
பாரி.அரசு

திங்கள், 14 ஏப்ரல், 2008

Incredible India வா! இளிச்சவாயன் தமிழன் தலையில் மிளகாய் அரைக்கும் இந்தியாவா!

கோவி யின்

Incredible India !

இடுகையை வாசித்தவுடன்... தன்னை சுற்றி நிகழும் நிகழ்வில் நாம் என்ன பாடம் படிக்கிறோம் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக நிற்கிறது! ஆயிரகணக்கான ஆண்டுகளாக பரப்புரை செய்யப்பட்ட பார்ப்பானீய பிதற்றல்களால் நாலஞ்சாதியாய் நலிந்த மக்கள் ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் தோட்ட தொழிலாளர்கள் தேவையென்று அழைத்தபோது... சொந்த மண்ணை, உறவுகளை விட்டு,விட்டு... சமூக, பொருளாதார இழிநிலைகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புறப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் தான் இன்றைய சிங்கப்பூர், மலேசிய தமிழ் மக்களின் ஆணிவேர்.

மூன்று தலைமுறைகளாக உழைத்து உருவாக்கிய சமுதாயம் தான் சிங்கப்பூர், மலேசியா தமிழ் மக்கள் சமூகம்.
இவர்களை சொந்த மண்ணிலே வாழவிடாமல் விரட்டிய இந்திய பார்ப்பானீய,பனியா அதிகார மையங்கள். தமிழர்கள் தங்கள் உழைப்பால் உருவாக்கிய சமூகத்தின் ஊடாக தனது அதிகார பரவலாக்கத்தை தொடங்கி இருக்கிறது.

மதம், கலை, கலாச்சாரம் (பண்பாடு) என்கிற போர்வையில் இவர்கள் தமிழர்களின் தோளில் ஏறி நடக்க தொடங்கியிருக்கிறார்கள்.

இந்திய தேசிய அடையாளத்துடன் இருக்கிற மக்களில் 95 சதவிகிதத்திற்க்கு மேலாக தமிழர்கள் வாழ்கிற நாட்டில் இந்திய அரசாங்கம் நடத்துகிற கலை, கலாச்சார விழாக்களில் எல்லா விளம்பரங்களும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் வருகிறது. தமிழ் ஒரு அதிகாரபூர்வமான அரசாங்க மொழி இந்தியாவில்! சிங்கப்பூரில் தமிழ் அதிகாரபூர்வமான அரசாங்க மொழி! இங்கேயிருக்கிற மக்களுக்கு தமிழில் விளம்பரங்களும், நிகழ்வுகளும் நடத்துவதில் இந்திய கலை மற்றும் கலாச்சார துறைக்கு என்ன கேடு வந்தது. நடத்தமாட்டார்கள் தமிழன் இளிச்சவாயனாயிற்றே! தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கிற சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு இந்திய அரசாங்கம் தமிழில் தொடர்புக்கொள்ளாமல் மக்களுக்கு புரியாத இந்தியில் ஏன் தொடர்புக்கொள்கிறது?

இந்திய பார்ப்பானீய, பனியா அரசாங்கம் சிங்கப்பூர், மலேசியா அல்லது எங்காவது பிழைக்க ஓடிய தமிழனை பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை... அவனிடமிருந்து ஏதாவது சுரண்ட முடியுமா என்று பார்ப்பதே இலக்காக கொண்டது.

இன்றைக்கு சிலோன் ரோட்டில் இருக்கிற தமிழ் இசைப்பள்ளிக்கு மரியாதை குறைந்து. கிட்டதட்ட 10க்கு மேற்ப்பட்ட கர்நாடக இசைப்பள்ளிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.

காவேரியில் தண்ணீர் இல்லாமல் 2 லட்சம் பேர் விவசாய குடும்பங்களிலிருந்து சிங்கப்பூர், மலேசியா விற்கு கூலி தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் முறையான விசா ஏதுவுமின்றி ஒளிந்து மறைந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஆயிரகணக்கானோர் சிங்கப்பூர், மலேசிய சிறைகளில் வாடுகின்றனர். தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 10,000 இளைஞர்கள் தங்களை இலங்கை அகதிகள் என்று அறிவித்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

இவர்கள் செத்தால் பிணம் கூட அவர்கள் வீட்டுக்கு வராது. தன்னுடைய முகவரியை தொலைத்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்காவில் 3 தலைமுறைக்கு முன்னால் போன பூணூல் போட்டவனின் பேரப்புள்ளைக செய்கிற சாதனைக்கெல்லாம் விழா எடுக்கிற இந்திய பார்ப்பானீய, பனியா அரசாங்கங்கள். மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிற பார்ப்பானீய ஊடகங்கள். எத்தனை சிங்கப்பூர், மலேசிய, தென்னாப்பிரிக்க தமிழர்களின் சாதனைகளை கொண்டாடியது. ஏனென்றால் இவர்கள் குறுக்கே நூல் போடாதவர்கள். எத்தனை பேரை இந்திய அரசாங்கம் கெளரவித்திருக்கிறது.

அட! விமான சேவை என்று ஒன்று இருக்கிறது. மற்ற நாடுகளியெல்லாம் விமான சேவை என்பது சேவை துறை (service industry) அதனால் அதில் பயணம் செய்கிற மக்களின் நலனுக்கு உகந்ததை செய்வார்கள். இந்தியாவில் இரண்டு விமான சேவை நிறுவனங்கள் இருக்கிறது 'இந்தியன் ஏர்லைன்ஸ்', 'ஏர் இந்தியா' என்று சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கோ, திருச்சிக்கோ போகிறவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள்... அவர்களுக்கு புரியுதோ இல்லையோ ஆங்கிலத்திலும், இந்தியிலும் அறிவிப்புகள் செய்துக்கொண்டிருப்பார்கள். ஏண்டா வெண்ணைகளா! பயணம் செய்கிறவனுக்கு புரியாத மொழியில் எதற்க்கடா அறிவிப்பு? புரியுதோ இல்லையோ! அவ்வளவு கொழுப்பெடுத்த இந்தி திமிர்! மற்ற விமான சேவை நிறுவனங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், மலேசியா ஏர்லைன்ஸ், மிகினி லங்கா எல்லோரும் தமிழில் அறிவிப்புகள் கொடுக்கும்போது, இவர்களுக்கு மட்டும் ஏன் வர மாட்டேங்கிறது. ஏனென்றால் தமிழன் இளிச்சவாயன் எவ்வளவு அடித்தாலும் தாங்குவான் :(

செவ்வாய், 1 ஏப்ரல், 2008

பார்ப்பானீய, பனியா தேசியமும், அல்லல்படும் மக்களும்...!

பஞ்சாப், காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா தொடங்கி நாளை தமிழகத்தையும் ஆட்க்கொள்ள போகிற பிரச்சினை என்னவென்றால் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்வுரிமை என்பதாகும்...

சில நிகழ்வுகளை இங்கே பதிவுச்செய்துவிட்டு அதன் தொடர்ச்சியாக உரையாடுவோம்... 10 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு வட்டத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது... பெரும்பாலும் விவசாய கூலித்தொழிலாளர்களில் தலித் தொழிலாளர்கள், பிற்ப்படுத்தப்பட்ட தொழிலாளர்கள் என பிரிவு இருக்கும். தலித் தொழிலாளர்களுக்கு கஞ்சியும், தலித் அல்லாதவர்களுக்கு குழம்பு சோறும் வழங்கப்படும். அதே கூலியிலும் சிறிது வேறுபாடு இருக்கும். யாரோ ஒருவர் இதென்ன? தனி, தனியாக சமையல்... எல்லோருக்கும் குழம்பு சோறு என்று வழங்க... உடனே நாட்டு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதை கூட்டியவர் ஒரு அயோக்கிய மார்க்கிஸ்ட் என்பது தனிக்கதை... அதே நேரத்தில் சில கிராமத்தில் தலித், கள்ளர் பிரச்சினை தலைதூக்க, உடனே நாட்டு பஞ்சாயத்து கட்டுப்பாடு என்று தலித்களுக்கு வேலை மறுத்தல்! மாற்றாக பீகார், ஒரிசாவில் இருந்து லாரிகளில் தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு விவசாய வேலைகள் நடந்தன. தலித்கள் மீதான கட்டுப்பாடு நீக்கிய பிறகும், பிற மாநில தொழிலாளர்களை வரவழைத்தல் நிகழ்கிறது. ஏனென்றால் குறைந்த கூலி, ஒப்பந்த அடிப்படையில் வேலை வாங்குவது. உள்ளூர் விவசாய தொழிலாளர்களை விட நீண்ட நேரம் வேலை பார்க்கிறார்கள் போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. இது தொடரும் போது உள்ளூர் தொழிலாளர்கள் நிச்சயமாக நாளை அவர்களை தாக்குவார்கள் என்பதே உண்மை!

இரண்டாவது இந்த ஒட்டர்கள் என்ப்படும் சாலை பராமரித்தல் மற்றும் தார்சாலை அமைத்தல் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் நிலைமையை பற்றியது... 800 மீட்டர் தார் சாலை 8 மணி நேரத்தில் அமைத்தால் மட்டுமே ஒப்பந்தகாரர்கள் சம்பாதிக்க முடியும். லாபத்தை கூட்ட வேண்டும் என்கிற நோக்கத்தில் அதிக தூரம் சாலை அமைக்க ஒப்பந்தகாரர்கள் முயற்சிப்பதற்க்கு தார்சாலை அமைக்கும் தொழிலாளர்கள் ஒத்துவராதால், வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் ஒப்பந்த கொத்தடிமைகளாக இறக்கப்படுகின்றனர். (இதில் கொதிக்கும் தாரில் வேலை பார்க்கும் முறையை மாற்ற வேண்டும், இயந்திரங்களின் உதவியுடனே சாலைகள் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை அடுத்த நிலை...)

இதன் நீட்சியை கல்லுடைக்கும் தொழிலாளர்கள், சூளை தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள் மற்றும் பல்வேறு நிலைகளில் காணலாம்...

தொடரும்...

செவ்வாய், 11 மார்ச், 2008

மரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...!-2

மரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...!...
மரணத்தின் மூலம் புனிதப்பட்டம் கட்ட நினைக்கும் கோமாளிகளுக்கு...
சிலவற்றை தவிர்த்து விட்டு... செயல்பாடுகளில் நகர்வதையே விரும்பினாலும்... சிலர் விடுவதாக இல்லை... முகமே பார்த்திராத ஒருவரை எதிர்க்கிறோம்... அவருடைய மரணத்தை கொண்டாடுகிறோம் என்றால், அதற்க்கான காரணம் என்ன?

இந்தியா என்ற நாட்டில் 40 கோடி மக்கள் சேரிகளில் தீண்டதகாதவர்களாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்னும் பல இடங்களில் சாலைகளில் நடமாட முடியாது... தோளில் துண்டு போட முடியாது, வேட்டியை இறக்கி கட்ட வேண்டும். உடையிலிருந்து, உணவு, உறைவிடம் அனைத்தும் அளந்து இது தான் உனது வாழ்க்கை என்று கூனி குறுகி நாயினும் இழிந்து வாழ்கிறார்கள், அவர்களுடைய பெண்கள் பால் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களுடைய குடிசைகள் ஆண்டு முழுவதும் தீக்கிரையாகிறது. அவர்கள் இன்னும் மனிதர்களாக நடத்தப்படவில்லை... இதற்க்கு காரணமென்ன?

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வர்ணாசிரம முறையை இந்த நாட்டில் பிரச்சாரம் செய்த அதிகார வெறி பிடித்த பொறுக்கிகளே காரணம்!

இதில் நேரிடையாக பார்க்கப்போனால் சாதிய ஒடுக்குமுறையை செய்பவர்கள் சாதி எனும் நோய் பீடித்தவர்களாக இருக்கிறார்கள் (நன்றி : ஆதவன் தீட்சண்யா)... இவர்களுக்கு சாதி எனும் நோய் போக்க அறிவு எனும் மருத்துவம் தேவைப்படுகிறது.

ஆனால் பார்ப்பானீயம் (சாதிய ஒடுக்குமுறை) பிரச்சாரம் செய்பவர்கள் இந்த நோயின் மூலமாக (நச்சு கிருமியாக) இருக்கிறார்கள். இவர்களை அழிப்பதை தவிர வேறெந்த வழியும் கிடையாது.

ஒருபுறம் விழிப்புணர்வும் இன்னொரு புறம் எதிர்ப்பும்(அழித்தலும்) என்ற இருமுனை நகர்வாக சாதிய எதிர்ப்பு இருக்கிறது.

சுஜாதா யாரென்றே தெரியாது... அவருடைய புத்தகங்களை வாசித்திருக்கிறேன்... அசைப்போட்டேன்... கட்டாயம் எதிர்க்க வேண்டிய ஆள் மட்டுமல்ல... இவர் எழுதினால், பேசினால் பார்ப்பானீயத்தை வலுவாக முன்னிறுத்துகிறார் என்பதை புரிந்துக்கொண்டேன்...

சுஜாதா மட்டுமல்ல பார்ப்பானீயத்தை முன்னிறுத்துகிற(பிரச்சாரம் செய்கிற) அனைத்து நாய்களையும் எதிர்க்க(அழிக்க) வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அப்புறம் நிறைய பேர் மனிதநேயம், நாகரிகம், பண்பாடு பற்றி மின்னஞ்சல் எழுதியிருக்கிறார்கள்... ஊடக வெளிச்சத்தின் பிரபலங்களுக்கு அஞ்சலி செலுத்தி தங்களுடைய மனிதநேயத்தையும், நாகரிகத்தையும், பண்பாட்டை கட்டிக்காக்கிற கனவான்களே! கோடிக்கணக்கான மக்களை நாலாந்தர மனிதர்களாக நடத்துகிற பார்ப்பானீயத்தை ஆதரித்த சுஜாதாவை முதலில் மனிதனாகவே ஏற்றுக்கொள்ளவில்லை...

முதலில் மனிதநேயம் என்றால் என்னவென்று கற்றுக்கொள்ளுங்கள்! அப்புறம் அடுத்தவனுக்கு இருக்கா என்று அளவெடுக்கலாம்!

அழகாக எழுதினார், கவர்ச்சியா எழுதினார், விறுவிறுப்பாக எழுதினார் சுஜாதா என்று புளாங்கிதமடைகிறவர்களுக்கு... வாசித்தீர்களே! எதை வலியுறுத்துகிறார், எதை பிரச்சாரம் செய்கிறார் என்று யோசிக்க ஏன் மறுக்கிறீர்கள்?

பதிவர் மாயாவுக்கு,

சுஜாதா பார்ப்பனர் என்பதற்க்காக எதிர்க்கவில்லை அய்யா! அவருடைய பார்ப்பானீய பிரச்சாரத்திற்காக எதிர்க்கிறேன். அதனாலேயே அவருடைய மரணத்தை கொண்டாடுகிறேன்.

அவருடைய புத்தகங்கள் வாசித்திருக்கிறீர்களா! அவருடைய பார்ப்பானீய பிரச்சார எழுத்துகளை இங்கே வைத்து விவாதத்திற்க்கு அழைக்கிறேன்! தயாரா?

வியாழன், 28 பிப்ரவரி, 2008

மரணத்தின் அரசியல் (நண்பர் வவ்வால் அவர்களுக்கு)...!

//
பாரி,

சுஜாதா புனித பிம்பம் என்றெல்லாம் சொல்லவரவில்லை, ஆனாலும் சக மனிதன், எழுத்தாளர் (சித்தாந்தம் பிடிக்கலைனாலும்) இறந்த அன்றே அவர் மீதான விமர்சனங்களை வைக்க வேண்டும் என்று ஒன்றும் இல்லையே, பின்னர் கூட விமர்சனத்தை வைக்கலாம், எப்படி இருப்பினும் அவர் படிக்கப்போவதில்லை, பின்னர் ஏன் இப்படி?
//

இந்த பதிலை அங்கயே எழுதியிருக்கலாம்..., ஆனால் நிறையபேர் வாசிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தனி இடுகையாக எழுதுகிறேன். சுஜாதாவின் மீதான விமர்சனத்தை பல்வேறு இடங்களில் எழுதியிருக்கிறேன்.

நேற்று அவர் மரணத்தின் மூலம் நடந்த அரசியல் என்பது முக்கியமானது. பார்ப்பானீயத்தின் மீது பிடிப்புள்ளவர்கள் (அது பூணூல் போட்டவர்கள், போடாதவர்கள் யாராக இருந்தாலும் சரி!) அவருக்கு இரங்கல் எழுதியது என்பது முக்கியமல்ல... இந்த நிகழ்வை பயன்படுத்தி அவருக்கு அரியணையும், புனிதப்பட்டமும் தர தயாரானவர்களுக்காகவே, விமர்சனம் எழுத வேண்டியதானது.

கடந்த காலக்கட்டங்களில் நாம் தவறிழைத்த புள்ளியும் இதுவே, மரணித்தால் பண்பாடு காக்கிறோம் என்று, நாம் அடக்கி வாசிக்க அந்த சந்தில் புகுந்து மேடைப்போட்டு புனிதப்பட்டம் கட்டி விடுகிறார்கள்.

இரண்டாவது இப்ப நடுநிலை வேடம் போடுகிறவர்களை பற்றியது... அப்பா! ஆசாமிகளே! சில மாதங்களுக்கு முன்பு சுப.தமிழ்செல்வன் அவர்கள் குண்டுவீச்சில் மரணமடைந்த பொழுது, ஆசிப் பதிவிலும், ரங்கன் பதிவிலும் சிலர் கேள்வி எழுப்பினார்கள்... அப்போ இவர்கள் ஏன்? நாகரிகமற்ற செயல் என்று குரல் கொடுக்கவில்லை?

பார்ப்பானீய அரசியல் என்பது வளர்வதற்க்காக காட்டி(கூட்டி) கொடுப்பது, வளர்ந்த பிறகு பார்ப்பானீயத்தை தாங்கி பிடிப்பது, செத்த பிறகு மேடைப்போட்டு புனிதப்பட்டம் அளிப்பது. அதை அந்தந்த கணத்திலேயே எதிர்ப்பதை தவிர... நாகரிகம், பண்பாடு என்று பம்ம முடியாது!

வலிந்து பீடமேற்றல் நடக்கிற வேளையில், உறங்கிக்கொண்டிருக்க இயலாது நண்பரே!

நன்றி!

இலவசங்களை பற்றிய சில பினாத்தல்கள்...!

சிங்கை ஒரு முதலாளித்துவ நாடு என்பதன் ஊடாக ஏகப்பட்ட விமர்சனங்களை கொண்ட நாடு. ஊடக சுதந்திரம் கிடையாது. உலகளாவிய மனித நேய ஆர்வலர்கள் உள் நுழைய தடை, மிக அதிகமாக மரணதண்டனை நிறைவேற்றுகிற நாடு, இன்னும் மனிதனை இயந்திர மயமாக்கி அவனுடைய சுயத்தை இழக்க செய்வதாக குற்றச்சாட்டுகள் உண்டு. இதையெல்லாம் தாண்டி மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். பயம் அப்படின்னு ஒற்றை சொல்லை பதிலாக பலர் சொல்வார்கள். ஆனால் அதையும் தாண்டி பல்வேறு காரணங்கள் உள்ளுறைந்து கிடக்கிறது...

அதிலொன்று சமூகத்தில் பாதிக்கப்படுகிறவர்களை கண்டுணர்ந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலையும், உதவிகளையும் வழங்குவது, அதன்மூலம் சமூகத்தின் நிலைதன்மையை கட்டிகாப்பாற்றுவது.

1. நான் சிங்கை வந்த புதிதில் ஒரு குடும்பத்தில் அதன் குடும்பதலைவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, குடும்பம் அள்ளாடியது... குழந்தைகள் படிக்க முடியாமல் வறுமையில் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள். அந்த குடும்பத்தை பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே SINDA என்கிற அமைப்பின் மூலம் அரசு உடனடி கடன், மாற்று ஏற்பாடு, இன்னும் என்ன, என்ன வசதிகள் செய்து தர முடியுமோ அத்தனையும் செய்துக்கொடுத்து அவர்களை மீள் கட்டமைத்தார்கள்.

2. இன்னொரு குடும்பம் வசிக்க வீடு இல்லாமல் MRT நிலைய பாதையில் தஞ்சம் புகுந்தார்கள், உடனடி நடவடிக்கையாக குறைந்த வாடகை வீடு அரசு வழங்கி அவர்களை பாதுகாத்தார்கள்.

3. நிகழ்ந்து முடிந்த சீன புத்தாண்டு நிகழ்ச்சிக்கு குறைந்த வருவாய் உள்ள 3000 குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு சிங்கை டாலர் 5000 (ஏறக்குறைய 1,40,000 இந்திய ரூபாய்கள்) மதிப்புள்ள பை ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் அமைச்சர் பெருமக்களும், எம்.பி களும் நேரிடையாக ஒவ்வொரு வீடாக சென்று வழங்கினார்கள்.

இப்படி எண்ணற்ற உதாரணங்களை காட்ட முடியும். எந்தவொரு பிரிவினருக்கும் எந்த பிரச்சினை என்றாலும் அருகிலுள்ள சமுதாய மையத்தை அணுகினால் குறைந்தபட்ச உதவி கிடைக்க வழிவகை செய்திருக்கிறார்கள்.

அரசு என்பது முதலாளித்துவமாக இருக்கிறதா, பொதுவுடமை அரசாக இருக்கிறதா என்பதை விட அது மக்கள் நலனில் அக்கறையுள்ளதாக இருக்கிறதா என்பதே முக்கியமானதாக இருக்கிறது.

இங்கே இதை குறிப்பிடுவதற்க்கு காரணம், இலவசங்களையும், உதவிகளையும் பற்றிய தவறான கருத்துக்களை பரப்புவதில் காட்டுகிற அக்கறையை, அது சரியான ஆட்களுக்கு போய் சேருவதற்க்கான நடவடிக்கையை நாம் விரிவுப்படுத்த வேண்டும்.

ஒன்னுமே புரியல... உலகத்திலே...!

இந்த இடுகையை நான் எழுதிய நோக்கமே... இதுவே!

எந்தவொரு காலக்கட்டத்திலும் சமூகத்தில் பாதிப்படைந்தவர்கள் இருந்துக்கொண்டேயிருப்பார்கள். அவர்களுக்கு உதவது என்பதும், அவர்களை மறுகட்டமைப்பது என்பதும் மிக முக்கியமானது. அதன் மூலமே மனிதன் சமூகமாக வாழ தலைப்பட்டதன் உண்மையான பலனை அடைய முடியும்.

வலுத்ததே வாழும் என்கிற பிழைப்புவாதத்தை முன்னிறுத்துவது என்பது விலங்கியலுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம். மனிதன் சமூகமாக வாழுவதின் பொருளே வலுவிழந்தோரை அரவணைத்து செல்வதில் தான் இருக்கிறது.

புதன், 27 பிப்ரவரி, 2008

மரணத்தின் மூலம் புனிதப்பட்டம் கட்ட நினைக்கும் கோமளிகளுக்கு...!

எம்மக்களின் மீது எச்சிலை உமிழ்ந்து, அதையே புனிதம் என்று வழித்து பருக சொல்லும்... அவலம்...!
சுஜாதா மட்டுமல்ல... நாளை 'சோ' வகையறாக்கள் மரணித்தாலும் அதையும் மகிழ்ந்துக்கொண்டாடவே எண்ணம் கொண்டுள்ளோம்....!

செவ்வாய், 26 பிப்ரவரி, 2008

தமிழ்மண நிர்வாகத்திற்க்கு வேண்டுகோள்...! தமிழச்சி பதிவை திரட்டியில் இருந்து நீக்க கோரிக்கை...!

தமிழச்சி பதிவுகளை திரட்டுவதை நிறுத்த கோரிக்கை பொது தளத்தில் வைக்க வேண்டியிருக்கிறது...:( தமிழச்சி என்ன எழுத வேண்டும் என்பதை கட்டுப்படுத்த எனக்கோ, இங்கே வலைபதியும் யாருக்கும் உரிமை இல்லை.... ஆனால் ஒரு வலைப்பதிவு வாசிப்பாளனாக உங்களுடைய திரட்டியை பயன்படுத்துகிற ஒரு பயனாளராக இந்த கோரிக்கை வைக்கிறேன்...

அன்புள்ள வலைபதிவர்களே, வாசிப்பாளர்களே!
உங்களுடைய எதிர்ப்பை ஒரு இடுகை எழுதியோ அல்லது ஒரு பின்னூட்டமிட்டோ பதிவு செய்யுங்கள்... தமிழ்மணம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவோமாக...!

நன்றி

வியாழன், 24 ஜனவரி, 2008

தமிழ் புத்தாண்டு - கேள்வி கேட்பதன் நோக்கமென்ன...?

தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்திற்க்கான செயல்திட்டங்கள் என்றால் நம்ம அதிமேதாவிகளுக்கு எட்டிக்காயை கடித்தது போல துள்ளிக்குதிக்கிறார்கள். தங்களுடைய வழக்கமான குள்ளநரி தனத்தால் கேள்விகள் கேட்பது போல எல்லோரையும் திசைமாற்றுகிறார்கள்.

திருவள்ளுவருக்கு சிலை!

இத்தன கோடி செலவு பண்ணி வள்ளுவருக்கு சிலை வைப்பதற்க்கு பதிலா மக்களுக்கு நல்ல திட்டங்கள் தீட்டலாமே! என்று கேள்வி கேட்டார்கள். ஏன்டா வெங்காயங்களா விவேகானந்தருக்கு மண்டபமும், சிலையும் வைத்தப்போது அதைக்கேட்க வேண்டியது தானே! சரி! விட்டு தள்ளு கோடிக்கணக்கில் பணத்தைக்கொட்டி விவேகானந்தர் பாறையை பாராமரித்தலை நிறுத்த சொல்லுவியா! ஆண்டு தோறும் கோயில் திருப்பணி என்று செலவிடப்படும் மக்கள் பணத்தில், வேறு ஏதாவது செய்யலாமே! மணியாட்டுற ஐயருக்கு கொடுக்கிற மாத சம்பளத்தை நிறுத்தி விட்டு வேறு உழைப்பாளிகளுக்கு ஊதியம் வழங்கலாமே!

இதையெல்லாம் சொல்ல மாட்டீர்கள்! ஏனென்றால் இ(ஐ)ந்து என்கிற அடையாளத்தை கட்டிக்காப்பதனுமே! ஆனால் தமிழன் தன் அடையாளத்தை காப்பாற்ற எதையாவது செய்தால் அதற்க்கு நொட்டை சொல்வீர்கள்!

தமிழ் செம்மொழி என்கிற அறிவிப்பு!

இதை செய்து என்னத்த கிழிக்க போகிறார்கள். இதனால் என்ன பயன் என்று பட்டியல் போட்டார்கள். அட! ஒன்னுமே இல்லையே! அப்புறம் எதுக்கு அவசர, அவசரமா சமஸ்கிருதத்தை செம்மொழி என்று அறிவித்தீர்கள்? ஏன்னா அது உங்க மொழி ஆனா தமிழ் தீண்டதகாதவர்களின் மொழி அப்படிதானே!

தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு அறிவிப்பு!

கிட்டதட்ட 86 ஆண்டுகள் கழித்து தமிழறிஞர்களின் கோரிக்கையான தமிழ் புத்தாண்டு என்பது நிறைவேற்றப்பட்டால்... அது இந்து நம்பிக்கைக்கெதிரானது என்று திசை மாற்றுகிற கேள்விகளை எழுப்புகிறார்கள்.

இதன் நோக்கத்தை பற்றிய விளக்கமெல்லாம் தேவைப்படுவதில்லை...

புதன், 23 ஜனவரி, 2008

உங்களுடைய ஒவ்வொரு டாலரும் உங்களுக்கெதிரான ஆயுதமாக...!

எங்கே போனாலும் இந்த சாமியை கட்டிக்கொண்டு அழுகிற தமிழர்களால்... அவர்களுடைய உழைப்பே, அவர்களின் இனத்திற்க்கெதிரான நடவடிக்கைகளுக்கு துணை போவதை உணராமல் இருக்கிறார்கள்.

புலம் பெயர் தமிழர்களின் உழைப்பை உறிஞ்சி வளர்கிற இந்த புல்லுருவிகளால்... இன்றைக்கு மிகப்பெரிய ஆபத்து தமிழனத்திறக்கெதிராய் கட்டமைக்கப்படுகிறது.

கோயில்கள், இசைப்பள்ளிகள், கலை மற்றும் விழாக்கள் வழியாக பார்ப்பானீயத்தின் ஊடுருவல் மெல்ல, மெல்ல புலத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. அதே நேரம் தமிழகத்தில் இவர்களின் ஆதிக்கத்திற்க்கெதிரான போராட்டத்திற்க்கும் மிகப்பெரிய சவாலை உருவாக்குகிறது.

இங்கிலாந்தில் இருக்கிற புலம் பெயர் தமிழர்களுக்கு குங்குமம், திருநீறு போன்றவற்றை ஏற்றுமதி செய்தே, சென்னை கே.கே.நகரில் ஓருவர் கோடிகளுக்கு சொந்தகாரராக ஆகியுள்ளார்.

மிக எளிமையாக கேள்வி கேட்கலாம் இது தொழில் தானே என்று... நீங்கள் யாருடன் தொழில் செய்கிறீர்கள் என்பது மிக முக்கியம். உங்களுடைய இனத்திற்க்கெதிரான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளும் நபர்களுடன் நீங்கள் தொழில் செய்கிறீர்கள். அதற்க்கான பொருளாதார வளத்தை நீங்களே தருகிறீர்கள்.

தினமலர், விகடன் குழுமம் போன்றவற்றிக்கு இணையத்தில் சந்ததாரர்களாக புலம் பெயர் தமிழர்கள் ஆகியிருப்பதன் மூலம், உங்களுக்கெதிரான அரசியல் ஊடகத்திற்க்கு நீங்களே நீர் விட்டு வளர்க்கிறீர்கள்!

ஒரு இனத்திற்க்கான அரசியல் என்பது ஊடகம், தொழில் துறை, சமயம், கலை, பண்பாடு இப்படி எல்லா நிலைகளிலும் முன்னெடுக்கப்பட வேண்டும்!

வலைப்பதிவுகள் எப்படி இருக்கணும்...!

நீங்கள் நல்லபதிவராக சில கூறுகள்... நல்லா எழுதுறீங்க என்கிற பாராட்டு வேண்டுமா...

எத்தியோபியாவிலும், சோமலியாவிலும் பசி, பட்டினி என்று படம் காட்ட வேண்டும், தவறி உள்ளூர் விவசாயிகள் பட்டினியால் தற்கொலை என்றெல்லாம் எழுதி விடாதீர்கள்!.

வெள்ளை,கருப்பின மோதல்களை பற்றி வரலாறு எழுதலாம்... மறந்தும் திராவிட இனத்தின் மீதான ஆரிய அயோக்கிய தனங்களை எழுதி விடாதீர்கள்!.

அங்கே பார்... அவனவன் நடப்பதை எழுதுகிறான்... நீங்களெல்லாம் பார்ப்பான்,பறையன்,பள்ளன் என்று எழுதுகிறீர்கள்... ஆமாங்க! உங்க ஊர் சேரி பற்றியோ, அக்ரகாரத்தின் அதிகாரத்தை பற்றியோ எழுதுவதை மறந்து விடுங்கள்!

வளமாக எழுதுங்கள், இதுவல்லோ எழுத்து என்று புல்லரிக்க எழுதுங்கள் ஆனால் மறந்து மக்களின் வாழ்க்கையை எழுதி விடாதீர்கள்!

போரும், அமைதியும் படியுங்கள், நான் படித்த புத்தகங்கள் என்று பட்டியல் எழுதுங்கள்... உங்கள் மேன்மையை நிலைநாட்டுங்கள்... மறந்தும் உயிருக்கு போராடும் ஈழத்தமிழனை பற்றி எழுதி விடாதீர்கள்!

ஒரே நேர்க்கோடு நிகழ்வை, உண்மையை எழுதாதீர்கள்! கற்பனையை, அதிகார முதுகு சொறிதலை செய்யுங்கள்!

வலைப்பதிவுகள் எப்படி இருக்கணும், எப்படி எழுதணும்... என்று அப்பப்ப புல்லரிக்கிற சொறிதல்கள் வந்துக்கொண்டேயிருக்கும். அது உண்மையை மறைத்து கற்பனையில் உங்களை ஆழ்த்தி அவர்களின் சுயநலனை முன்னிறுத்தும்... அப்படி இருப்பதில் தான் ஆதிக்கம், அதிகாரம் எல்லாம் தக்க வைக்கப்படுகிறது.

பதிவுகள் பற்றியும், பதிவர்களின் நடத்தை பற்றியும் அப்பப்ப குறைப்பட்டுக்கொள்கிறவர்கள், இதெல்லாம் ரொம்ப நாள் தாங்காது என்று ஆருடம் கூறிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த நல்ல பதிவு, நல்ல பதிவர் பட்டம் கொடுப்பதில் முனைப்புடன் இருக்கிறார்கள்...

மகிழ்ச்சியாகவே இருக்கிறது! ஊடக அதிகாரத்தை வைத்து மக்களை, அவர்களுடைய பிரச்சினைகளை பற்றிய கதையாடல்களை,உரையாடல்களை, சொல்லாடல்களை வகையாய் தவிர்த்து விட்டு... தங்களுக்கு (அதிகாரத்திற்க்கு) சாதகமான கதையாடல்களை,உரையாடல்களை, சொல்லாடல்களை கட்டமைத்தவர்கள்... இன்றைக்கு வலைப்பதிவுகள் முரண்களை, மக்களின் அன்றாட உண்மை நிலை பேசுகிற போது... அஞ்சுகிறார்கள், பிதற்றுகிறார்கள்... இதெல்லாம் எழுத்தா! என்று.

பொங்கி பெருகும் காட்டாற்று வெள்ளத்திற்க்கு; காட்டாமணக்குகள் தடை சொல்ல முடியுமா!

தொடுப்புக்கு...

//கடந்த சில ஆண்டுகளில் தமிழ் வலைப்பதிவுகள் எண்ணிகையில் வளர்ச்சிகண்டிருக்கின்றன. ஆனால் உள்ளடகத்தின் கனத்தில் சரிவு கண்டிருக்கின்றன.திரட்டிகள் கவனம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பைத் தருவதால், கவனம் பெறுகிறோம்என்ற மிதப்பே பாவனைகளை மேற்கொள்ளப் பதிவர்களை உந்துகிறது என்பதனால்பாவனைகளே பதிவாகிப் போகின்றன. கண்ணாடி முன் நின்று முகம் பார்த்துமகிழும் மனிதர்களைப் போல, பஸ்ஸில் பெண்களின் கவனத்தை ஈர்க்க முற்படும்மீசை அரும்பாத ஆண்களைப் போல, திருவிழாவில் ஆண்களின் கவனத்தை ஈர்க்கமுற்படும் வளர் இளம் பருவத்துச் சிறுமிகளின் செய்கைகளைப் போல பல பதிவுகள்இருந்து வருகின்றன. இவற்றோடு திரட்டிகள் குழு மனப்பான்மைக்குஉரமளிக்கவும் செய்வதால், கருத்துக்கள் மீதான விவாதங்களை நொடிப்பொழுதில்தனிமனிதர்கள் மீதான அவதூறுகளாகவும், துச்சமான எள்ளல்களாகவும்ஆக்கிவிடவும் செய்கின்றன. ஓர் ஆரோக்கியமான கருத்துலகு உருவாக இந்தப்பண்புகள் உதவாது. ....// - மாலன்
http://groups.google.com/group/tamil-blogs-open-opml/browse_thread/thread/bbe2a9c4ee241d0d#63eb5b8fcc834316


//.....தமிழ் தட்டச்சு தெரிந்து விட்ட மகிழ்ச்சியில், கிடைக்கும் பின்னுட்டபோதையில் நினைத்ததை எழுதி தள்ளுவது. இது அதிக நாட்கள் தாங்காது. பரபரப்பான தலைப்புகள், பின்னுட்டம் அதிகரிக்க செய்யப்படும் முயற்சிகள், மத, சாதீய, அரசியல் காழ்புணர்ச்சி பதிவுகள் வாசகர்களால் ஓரம் கட்டப்படும். எழுத சரக்கு இல்லை என்றால் இந்த பதிவாளர்களும் எழுதுவதை நிறுத்தி விடுவார்கள்.....//ராமசந்திர உஷா
http://nunippul.blogspot.com/2008/01/2.html

வியாழன், 17 ஜனவரி, 2008

ஏமாளிகளும்... ஏமாற்று வித்தைகாரர்களும்...!

தகவல் தொழில்நுட்ப துறையில் நம் இளைஞர்கள் உழைத்து முன்னேறிக்கொண்டிருக்கிற நிலையில்... உழைக்காமல் இந்தியாவில் உண்டுக்கொழுத்த கூட்டம் இப்போது உலகளவில் ஏமாற்றுவது என்று கிளம்பியிருக்கிறது.

1. உழைப்பை சுரண்டவது ...

2. வேலைவாய்ப்பை ஏற்ப்படுத்தி தருவதாக செல்லி பணம்பறிப்பது.

GrapeVyne Technologies - வெங்கி சார் இவனிடம் ஏமாந்த எத்தனையோ இளைஞர்கள் இந்தியா முழுவதும் இருக்கிறார்கள்.
ஆதம்பாக்கம் புவனேஸ்வரி
அப்புறம் சிங்கையில் ஒரு கன்சல்டன்ட் மிகப்பெரிய அளவில் ஏமாற்றி விட்டு கிட்டதட்ட 600 தகவல்தொழில்நுட்ப ஊழியர்களின் 6 மாத ஊதியத்தை சுருட்டிக்கொண்டு ஓடினான்.


இதெல்லாம் கடந்த காலம் என்றால் 3 மாதத்துக்கு முன்பு மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக ஆந்திராவை சேர்ந்த 40 இளைஞர்களிடம் ஆளுக்கு 2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சம் வரை வசூலித்திருக்கிறான் கேரளாவை சேர்ந்த கேடி மாத்யூ.

சிங்கையை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் கூட்டு ஒப்பந்தம் செய்து... இந்த பொறியியல் இளைஞர்களுக்கு 3 மாதம் microcontroller programming அதன் பின் மலேசியா அல்லது சிங்கப்பூரில் வேலை என்று சொல்லி பணம் வசூலித்திருக்கிறான்.

சிங்கை அரசாங்கம் இந்த நிறுவனத்திற்க்கு அனுமதி தராமல் ப்ளாக் லிஸ்ட் -ல் ஏற்றி விட்டது.

கேடி மலேசியாவில் இந்த மாணவர்களுக்கு பயிற்சி தருவதாக வர சொல்லி அவர்களின் வாழ்க்கையில் இனிமேல் மலேசியாவிற்க்கே வர இயலாத நிலைக்கு அவர்களுடைய கடவுச்சீட்டில் ஒரு தில்லுமுல்லையை செய்திருக்கிறான்.

மலேசியாவில் 1 மாத காலமே தங்க இயலும் என்கிற நிலையில்... அந்த மாணவர்களை 45 நாட்கள் தங்க வைப்பதற்க்காக லஞ்சம் கொடுத்து... மலேசியாவின் விசா வை போலியாக அவர்களுடைய பாஸ்போர்ட் ல் அச்சடித்திருக்கிறான்.

மாணவர்களுக்கு உண்மை தெரிந்து மலேசிய ஊடகங்களை வரவழைத்து பிரச்சினையை பெரிதாக்கும் போது... அவர்களை மிரட்டி, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து விமானம் ஏற்றி அனுப்பி விட்டான்.

மாணவர்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியேவும் சொல்லவும் முடியாமல் தங்களுடைய கடவுச்சீட்டு இனி பயன்படுத்த பட முடியாத படி சட்டசிக்கல் ஆனதை கண்டு கொதித்து போயியுள்ளனர்.

இவன் தற்போது தமிழகத்தை சேர்ந்த கருத்து கந்தசாமி உடன் கூட்டணி அமைத்து அடுத்த கட்டமாக தமிழகத்திலும், பெங்களுரிலும் இளைஞர்களுக்கு வலை விரித்திருக்கிறான்...

புதன், 16 ஜனவரி, 2008

ஒன்னுமே புரியல... உலகத்திலே...!

எனக்கு இரண்டு வாரமா ஒரே மண்டைக்குடைச்சல்... நானும் புள்ளிவிவரங்களை தேடி, தேடி களைத்துப்போயிட்டேன்... சரி பதிவுலக மக்களிடம் சொல்லிட்டா... அவுங்க பாத்துக்க மாட்டாங்களா என்ன:(

இந்த இலவச வேட்டி, சேலை அப்படின்னு ஒரு அறிவிப்பை பார்த்ததும் தாங்க... நமக்கு இந்த மண்டைக்குடைச்சலே வந்தது... சரி! உள்ளற போறதுக்கு முன்னால கொஞ்சம் தகவல்களை இந்த தளத்திலிருந்து எடுத்து பார்த்துக்கலாம்...

http://www.census.tn.nic.in

மொத்த மக்கள் தொகை (2001) - 6,24,05,679
0 வயதிலிருந்து -4வயது வரை - 5098462
5 வயது -9வயது வரை 5600086
10வயது -14வயது வரை 6012326
மொத்தம் 1,67,10,874

2005 - பொங்கல் - 175 கோடி -1 கோடியே 11 லட்சம் வேட்டிகள்,1 கோடியே 1 லட்சம் சேலைகள்
மொத்தம் 2 கோடியே 22 லட்சம் .

2006 - பொங்கல் - 256 கோடி -1 கோடியே 64 லட்சம் வேட்டிகள்,1 கோடியே 64 லட்சம் சேலைகள்
மொத்தம் 3 கோடியே 28 லட்சம் .

2007 - புள்ளி விவரம் கிடைக்கவில்லை...

2008- கிட்டதட்ட மொத்தம் 250 கோடி செலவில் 3 கோடி மேல் மக்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதாக சொன்னார்கள்...

அட ஒரு தோராயமாக வைத்துக்கொண்டாலே 6.5 கோடி தமிழ்நாட்டு மக்கள், ஒரு குடும்பத்துக்கு 3 பேர் என்றால் 2.17 கோடி குடும்பம் தான் இருக்கும். ஒரு வீட்டுக்கு ஒரு வேட்டி, ஒரு சேலை தானே...

சரி அதை விடுங்க... தமிழ் நாட்டில் 1.67 கோடிக்கு மேல் வேட்டி, சேலை கட்டாத வயதுக்கு கீழே உள்ளவர்கள்...

அப்புறம் நடுத்தர, மத்திய தர, பணக்கார, ராயல் வர்க்கங்கள் நியாயவிலை கடைக்கு போய் வேட்டி, சேலை வாங்க போவதில்லை...

சரி! அப்படியெல்லாம் வேண்டாம் தோராயமாக 2 கோடி குடும்பத்தில் 1.5 கோடி குடும்பத்துக்கு வேட்டி, சேலை வழங்க வேண்டிய நிலைமைக்கு இருக்கு என்றால்... தமிழ்நாட்டுல 50 லட்சம் குடும்பம் தான் வேட்டி, சேலை வாங்கி கட்டுற நிலைமையில் இருக்கா ?

என்னய்யா... நடக்குது நாட்டுல...

குறிப்பு : குறுக்கால, நெடுக்கால எப்படி கணக்கு போட்டாலும் டேலி ஆகமாட்டேங்குது... ஒன்னு வேட்டி, சேலை கொடுத்தாங்களா? இல்லை நமக்கு எல்லாம் வேட்டி போர்த்திட்டாய்களா ன்னு விவரமா சொல்லுங்க மக்கா!

திங்கள், 14 ஜனவரி, 2008

நினைவுகளிலிருந்து...1

பட்டுக்கோட்டை, கரிக்காட்டிலிருக்கும் குட்டைக்குளம். குளத்திலிருந்து 5 நிமிட நடை வீடு, 8 வயது வரை அங்கே தான் வசித்தது. வீட்டின் பின்னாலிருந்து எட்டிப்பார்த்தால் சுடுகாடு தெரியும், அவ்வப்போது பிணம் எரியும்போதெல்லாம் வரிசையாகயிருக்கிற காலணியில் எல்லா வீட்டிலும் பயந்துக்கொண்டு பின்கதவை 6 மணிக்கு மேல் திறக்கமாட்டார்கள்.

பிணம் எரித்துவிட்டு வருகிற எல்லோரும் குட்டைக்குளத்தில் குளிப்பார்கள். காலை, மாலை கை,கால் அலம்புவார்கள். சிறார்கள் எப்போதும் தண்ணீரில் நீந்திக்கிடப்பார்கள். எருமைகள் உள்ளேயே ஊறிக்கிடக்கும். அருகில் சிறிய கல்லணைக்கால்வாயின் கடைமடை கிளையொன்று போகும்... அது எப்போதவது மழை நீரிலோ அல்லது ஏகப்பட்ட போராட்டங்களுக்கு பிறகு கன்னடகாரர்கள் கொடுத்த கொஞ்சம் தண்ணீரை கொண்டு புதுமணப்பெண்ணை போல் குதுகலிக்கும்.

ஆண்டுகள் ஓடிப்போயின... வீடு வேரிடத்திற்க்கு மாறியாகிவிட்டது. ஆனால் குட்டைக்குளத்துடனான பந்தம் மாறதது. அதற்க்கு எதிரில் தான் நியாயவிலை கடையிருக்கும். சர்க்கரையோ, கோதுமையோ, மண்ணெண்ணையோ வாங்க மாதத்திற்க்கு இரண்டு முறையேனும் போக வேண்டும்.

கல்லணைக்கால்வாயின் கிளை காணாமல் போயிவிட்டது. குட்டைக்குளத்தில் நகர சாக்கடை நீரை இணைத்திருந்தார்கள். இது நடந்தது 90களில்... ஏன்? கேள்வி எப்போதும் நெஞ்சைக்குடையும்.... நகர விரிவாக்கம்... மக்கள் நெருக்கடி கழிவு நீரை வெளியேற்ற வேறு வழியில்லை என்று சொன்னார்கள். கொஞ்ச நாளில் இதுவும் போதாமல் நாடியம்மன் கோயில் குளத்திலும் கழிவு நீர் இணைக்கப்பட்டது. அதிலே குளித்து, அதையே வாழ்க்கையாக கொண்ட அண்ணாநகர் மக்களுக்கு கழிவு நீர் இணைந்ததைக்கூட பொருட்ப்படுத்தாமல் குளிப்பார்கள், துணி துவைப்பார்கள்.

திருவிழாவிற்க்கு சிலநாட்க்களுக்கு மட்டும் கழிவு நீர் மடை மாற்றுவார்கள். 80களில் இந்த குளத்து நீர் தீர்த்தமென்று மாவிளக்கு பிசைந்தவர்கள். இப்போது கால் நனைப்பதற்க்கு கோயிலில் குழாய் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

இந்த நீர் மாசுப்படுத்தலை கண்டு வெம்பிய மனமே என்னை கணினி உலகிற்க்கு நகர்த்தியது. கழிவு நீரை மறுசுழற்சி செய்யலாம் என்று படித்தேன். அதற்க்கு நீரை பகுப்பாய்வுச்செய்ய வேண்டும். அப்போது படித்துக்கொண்டிருந்த +1 ல் வேதியியல் ஆய்வுசாலையில் எங்களையெல்லாம் சோதனைக்குழாய் துடைக்க, கழுவ மட்டுமே விடுவார்கள். +2 ல் பொதுத்தேர்வு என்பதால் அதற்க்கான செய்முறை தேர்வுகளுக்கு தயாராகணும். நண்பன் சலீம் மிகுதியாக ஆங்கில புத்தகங்கள் படிப்பவன். அவுங்க அப்பா ஆங்கில பேராசிரியர். அவனுடன் உரையாடுவது. விநோதமாக பார்ப்பான்.. ஆனாலும் எதாவது குறிப்புகள் எடுத்துக்கொடுப்பான்.

ஆய்வுச்சாலையில் மட்டுமே மறுசுழற்ச்சியை பற்றிய ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று சொன்னான். வெடிக்கும் குழாய்கள், எரியும் அமிலங்கள் பார்த்தாலே குலை நடுக்கம்.

இயல்பாக கேள்வியெழுந்தது பெரும்பான்னை அணுக்களின் பண்புகளை அட்டவணைப்படுத்தியிருக்கிறார்கள். இந்த வெப்பநிலையில், இந்த அழுத்ததில் இந்த வினை இப்படித்தான் நிகழும் என்பது ஏற்கனவே தெரிந்தது தான், பிறகு ஏன் திரும்ப, திரும்ப சோதிக்கிறார்கள்?

அப்பொழுது தான் சொன்னார்கள் இதெல்லாம் கணினி இருந்தால் மிகவும் எளிது. அதில் எல்லாமுமே செய்யலாம் என்றார்கள். கட்டிங் அண்டு டெய்லரிங் படி வீட்டில் வறுமை வாட்டியெடுக்கிறது... ஏதாவது தொழில் செய்தாவது பிழைக்கலாம் என்று கூறிய அறிவுரையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு ஐ.டி.ஐ கணினி போய் படித்தேன்.

படிக்க ஆரம்பித்த பிறகு தெரிந்த விசயங்கள் இரண்டு... கணினி எதுவும் செய்யாது. இன்னொன்று நம் மக்களுக்கென்று ஏதேனும் ஆய்வுகள் நடக்கிறதா என்கிற ஏக்கம்? ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும், ரஷ்யாவும், ஜப்பானும் சாப்பிட்டு விட்டு மிச்சம் வைக்கிற எலும்புத்துண்டுகளையே நாம் பொறுக்கி எடுத்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தேன்.

வாழ்க்கையில் வீசிய பொருளாதார புயலில் சிக்கி சின்னாபின்னமாகி... எங்கோ நிற்கிறேன்... அடையாளம் தெரியாமல்...

இன்றைக்கும் கூவமோ அல்லது வேறெந்த கழிவு நீர் கால்வாயை பார்க்கும் போதெல்லாம் தோன்றுகிற எண்ணம் என்றைக்காவது ஒரு நாள் இது மறுசுழற்ச்சி செய்யப்படும். ஒன்று சாலையோர பூங்காவுக்கு பயன்படுத்தி நிலத்தடி நீராக மாறணும். மற்றொன்று மக்களுக்கு பயன்படுகிற நீராக மாறணும். குளமோ, ஏரியோ, கடலோ மாசுப்படக்கூடாது என்ற ஏக்கம் இருக்கு....

நமக்கான ஆய்வுகள் வர வேண்டும். நம்முடைய தேவைகளை நிறைவுச்செய்கிற திட்டங்கள் வேண்டும். அதற்க்கான சிந்தனையெழுச்சி வேண்டும். அப்படி தேவையெனில் தாய்மொழி சார்ந்த திட்டங்களால் தான் 6 கோடி மக்களை சென்றடைய முடியும். அதுவரை ஆங்கிலத்தில் படித்த அடிமைகளை அயல்நாட்டுக்கு அனுப்பி காசுப்பார்ப்போம்...
Related Posts with Thumbnails